பக்கங்கள்

30 ஜனவரி 2013

இஸ்லாமிய சகோதரர்கள் பகடைக்காய் ஆகிவிட்டனர்!

'அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்கள் பகடைக்காய் ஆக்கி விட்டனர். இந்த அரசியல் விளையாட்டை ஆடுவது யார் என்பது எனக்குத் தெரியவில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான சர்ச்சை குறித்து இன்று தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் கமல்ஹாசன் இன்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியுள்ளதாவது, 'இந்த ஒரு திரைப்படம் எப்படி ஒட்டுமொத்த தேசத்தின் ஒற்றுமையையும் பாதிக்கும் என்று எனக்குப் புரியவில்லை. இப்போது நடந்து வருவது அரசியல் விளையாட்டு. இந்த அரசியல் விளையாட்டை நடத்துவது யார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்களை பகடைக்காய் ஆக்கிவிட்டனர். யாருக்கும் நான் கடன் வைக்கவும் இல்லை, வரி ஏய்ப்பும் செய்யவில்லை, வரி பாக்கியும் இல்லை. கடன்காரர்களை நான் தவிக்க விட மாட்டேன். இந்த எனது வீட்டை அடமானம் வைத்துள்ளேன். வட்டிக்கடைக்காரர் 2 மாதமாக அமைதியாக உள்ளார். சென்னையில் உள்ள எல்லா சொத்துக்களையும் அடமானம் வைத்துள்ளேன். திரைப்படம் வெளியாகாவிட்டால் எல்லா சொத்துக்கும் என்னை விட்டு போய்விடும். நான் இடதுசாரியும் அல்ல, வலதுசாரியும் அல்ல. நடுநிலையானவன். எனது எல்லா சொத்துக்களையும் வைத்து படம் எடுத்தேன். படம் வெளியாகாவிட்டால் வீடு உட்பட எல்லா சொத்துக்களையும் இழக்கும் நிலை வரும். எனது விஸ்வரூபத்துக்கு எதற்கு தடை என்றே தெரியவில்லை' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக