குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த பழம்பெரும் நடிகை பானுமதி தன்னுடைய 67வயது வயதில் மரணம் அடைந்தார். காதல் ஜோதி என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பானுமதி. அவர் வியட்நாம் வீடு, திருநீலகண்டர், தில்லானா மோகனாம்பாள், கலாட்டா கல்யாணம் உள்பட 75க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவர் சின்னத்திரையில் மெகா தொடர்களில் நடித்து வந்தார். சென்னை தேனாம்பேட்டை போயஸ் ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வந்த அவரை மஞ்சள் காமாலை நோய் தாக்கியது. இதனால் அவர் கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவரது உடல் நிலை மோசமானது. உடனே அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 2.50 மணிக்கு காலமானார். அவருக்கு லட்சுமி என்ற மகள் உள்ளார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக