பக்கங்கள்

26 பிப்ரவரி 2013

கார்த்திக்காக காத்திருக்கும் பிரியாணி!

புதுச்சேரியில் மும்முரமாக நடந்து வந்த பிரியாணி படத்துக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் அவரது படக்குழுவினர் தற்போது சற்று ஓய்வு எடுத்து வருகின்றனர். புதுச்சேரியில் சில கார் மோதல் சண்டைக் காட்சிகளும், ஒரு பாடலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதில் கார்த்தி இடம்பெறும் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதால் கார்த்தியின் வருகைக்காக படக்குழுவினர் காத்திருக்கின்றனர். பிரியாணி படத்தில் பிரேம்ஜி அமரன் கார்த்தியின் பள்ளிக் காலத்தில் இருந்து உடன் இருக்கும் நண்பனாக வருகிறார். அது பற்றி பிரேம்ஜி கூறுகையில், உண்மையிலேயே நானும் கார்த்தியும் பள்ளிக் கால நண்பர்கள்தான். அவரும் நானும் ஒரே பள்ளியில் தான் படித்தோம். ஆனால் அவர் வெளிநாடு சென்றுவிட்ட பிறகு, அவ்வளவாக எங்களுக்குள் தொடர்பில்லை. ஆனால் இந்தப் படம் மூலமாக எங்கள் நட்பு வளர்ந்துள்ளது. எங்களது நட்பு வளர்வது, படத்துக்கும் உதவிகரகமாக இருக்கிறது. நாங்கள் இருவரும் வரும் காட்சிகள் நன்றாக வந்துள்ளன என்கிறார் மகிழ்ச்சியோடு. பிரியாணி படத்தில் கார்த்திக்கு ஹன்சிகா ஜோடியாக நடிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக