குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் முழு வேகத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார் கோபிகா. சமீபத்தில் தொடங்கிய மலையாளப் பட ஷூட்டிங்குக்கு தனது கைக்குழந்தையுடன் வந்து கலந்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார் கோபிகா. ஆனாலும் அவரைத் தேடி பல வாய்ப்புகள் வந்தன. குழந்தை பெற்ற பிறகு, மலையாளத்தில் ஜெயராம் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்துக்கு ‘பரயா அத்ரா போரா' என தலைப்பிட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் கொச்சியில் துவங்கியது. இதில் பங்கேற்க வந்த கோபிகா, தனது 2 வயது மகளையும் அழைத்துக் கொண்டு படப்பிடிப்புக்கு வந்தார். குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஒரு பெண் உடன் இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் தானே குழந்தையை கவனித்துக் கொண்டார். மீண்டும் படங்களில் நடிப்பதை தன் கணவரே ஆதரிப்பதால், நடிக்க ஆரம்பித்துவிட்டதாக கோபிகா தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக