பக்கங்கள்

26 மார்ச் 2013

நடிகை சுகுமாரி மரணம்!

பிரபல திரைப்பட நடிகை சுகுமாரி சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74. நாகர்கோவிலில் கடந்த 1940 ஆம் ஆண்டு பிறந்த சுகுமாரி, தமிழில் ஓரிரவு என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். மறைந்த பிரபல திரைப்பட இயக்குநர் ஏ பீம்சிங்கை திருமணம் செய்து கொண்ட சுகுமாரிக்கு சுரேஷ் என்ற மகன் உள்ளார். பாசமலர், பட்டிக்காடா பட்டணமா உள்ளிட்ட 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். இதில் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்கள் அடங்கும். நடிப்பில் தனி முத்திரை பதித்துள்ள சுகுமாரிக்கு, கடந்த 2003 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இது தவிர தேசிய திரைப்பட விருது, கேரள மாநில அரசின் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். திரையுலகில் புகழுடன் வலம்வந்த லலிதா,பத்மினி, ராகினி சகோதரிகளின் உறவினராவார் சுகுமாரி. தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்.மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். சுகுமாரியின் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக