|
பிரணிதா |
‘சகுனி‘ படத்தில் நடித்தவர் பிரணிதா. இப்படத்துக்கு பிறகு புதிய படங்களில் நடிக்காமல் பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் பட வாய்ப்புகள் வந்தும் ஏற்காமல் ஒதுங்குவதாக கூறப்படுகிறது. இது பற்றி பிரணிதா கூறியதாவது: தமிழில் உருவான ‘சகுனி‘ தெலுங்கில் ‘ஷக்குனி‘ என்ற பெயரில் வெளியானது. ‘தமிழ் படங்களைவிட்டு ஒதுங்கி இருப்பது ஏன்?‘ என்கிறார்கள். கன்னடத்தில் ‘மிஸ்டர் 420‘ படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். மேலும் 2 கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். தமிழில் வாய்ப்புகள் வருகிறது. தற்போது நடித்து வரும் படங்களை முடித்தபின் அதை ஏற்பேன். எனது தாய்மொழி கன்னடம். கன்னட படங்களில் நடிப்பது சவுகரியம்.
தெலுங்கு படங்களில் ரீ என்ட்ரி ஆகிறேன் என்று தகவல் வெளியானதும் நிறைய படங்கள் வருகிறது. தெலுங்கில் ‘பாவா‘ படம் ரிலீஸ் ஆகி நல்ல பெயர் கிடைத்துள்ளது. ‘இணைய தள டுவிட்டர் பக்கத்தில் அதிக ஆர்வம் காட்டுவது ஏன்?‘ என்கிறார்கள். அந்த பக்கத்துக்கு நான் அடிமையாகிவிட்டேன். இதன் மூலம் ரசிகர்களிடமும், திரையுலகினருடனும் நேரடியாக தொடர்புகொள்ள முடிகிறது. அவர்களின் கருத்துக்கள் உடனுக்குடன் கிடைக்கிறது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக