பாலிவுட் நடிகை ராணி முகர்ஜிக்கு வாய்ப்பு குறைவதால் அவர் அய்யா படத்தில் ஓவராக கவர்ச்சி காட்டியுள்ளார் என்று பேசப்படுகிறது.
பாலிவுட் நடிகை ராணி முகர்ஜிக்கு 34 வயது ஆகிறது. அவருக்கும் தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆதித்யா சோப்ராவுக்கும் இடையே நீண்ட காலமாக காதல். அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் பேசப்படுகிறது. பாலிவுட்டில் கரீனா, கத்ரீனா, பிரியங்கா ஆகியோர் கலக்கிக் கொண்டிருக்கையில் ராணிக்கு வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளது.
இந்நிலையில் அடுத்த மாதம் 5ம் தேதி ரிலீஸாகவிருக்கும் அய்யா படத்தில் ராணி சகட்டு மேனிக்கு கவர்ச்சி காட்டியுள்ளார். அப்படியாவது சான்ஸ் கிடைக்காதா என்று பார்க்கிறாரோ என்னவோ. மேலும் இந்த படத்தில் அவர் பெல்லி டான்ஸ் வேறு ஆடியுள்ளாராம். படத்தில் மகாராஷ்டிரா பெண்ணாக நடித்துள்ள ராணிக்கு ஜோடி நம்ம மலையாள நடிகர் பிரித்விராஜ் தான்.
ஒரு பாட்டில் ராணி குட்டி குட்டியாக டிரஸ் போட்டு பிரித்விராஜுடன் ரொம்பவே ரொமான்டிக்காக டான்ஸ் ஆடியுள்ளார். பாலிவுட் நடிகைகளுக்கு ஐட்டம் டான்ஸ் அதாவது குத்தாட்டம் போடுவது என்றால் அல்வா சாப்பிடுகிற மாதிரி ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நடிகை ஒரு படத்தில் கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டால் அதைப் பார்த்துவிட்டு இன்னொரு நடிகை தன் படத்தில் அதைவிட படுகவர்ச்சியாக ஆடுகிறார். இந்தக் கொடுமையை எங்க போய் சொல்ல?27 செப்டம்பர் 2012
கவர்ச்சிக் கடலில் குதித்த ராணி முகர்ஜி!
பாலிவுட் நடிகை ராணி முகர்ஜிக்கு வாய்ப்பு குறைவதால் அவர் அய்யா படத்தில் ஓவராக கவர்ச்சி காட்டியுள்ளார் என்று பேசப்படுகிறது.
பாலிவுட் நடிகை ராணி முகர்ஜிக்கு 34 வயது ஆகிறது. அவருக்கும் தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆதித்யா சோப்ராவுக்கும் இடையே நீண்ட காலமாக காதல். அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் பேசப்படுகிறது. பாலிவுட்டில் கரீனா, கத்ரீனா, பிரியங்கா ஆகியோர் கலக்கிக் கொண்டிருக்கையில் ராணிக்கு வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளது.
இந்நிலையில் அடுத்த மாதம் 5ம் தேதி ரிலீஸாகவிருக்கும் அய்யா படத்தில் ராணி சகட்டு மேனிக்கு கவர்ச்சி காட்டியுள்ளார். அப்படியாவது சான்ஸ் கிடைக்காதா என்று பார்க்கிறாரோ என்னவோ. மேலும் இந்த படத்தில் அவர் பெல்லி டான்ஸ் வேறு ஆடியுள்ளாராம். படத்தில் மகாராஷ்டிரா பெண்ணாக நடித்துள்ள ராணிக்கு ஜோடி நம்ம மலையாள நடிகர் பிரித்விராஜ் தான்.
ஒரு பாட்டில் ராணி குட்டி குட்டியாக டிரஸ் போட்டு பிரித்விராஜுடன் ரொம்பவே ரொமான்டிக்காக டான்ஸ் ஆடியுள்ளார். பாலிவுட் நடிகைகளுக்கு ஐட்டம் டான்ஸ் அதாவது குத்தாட்டம் போடுவது என்றால் அல்வா சாப்பிடுகிற மாதிரி ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நடிகை ஒரு படத்தில் கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டால் அதைப் பார்த்துவிட்டு இன்னொரு நடிகை தன் படத்தில் அதைவிட படுகவர்ச்சியாக ஆடுகிறார். இந்தக் கொடுமையை எங்க போய் சொல்ல?18 செப்டம்பர் 2012
இனி ஓவியா கூட நடிக்கமாட்டேன்!
![]() |
| ஓவியா-விமல் |
16 செப்டம்பர் 2012
டூயட் பாட தூது!
![]() |
| தமன்னா |
15 செப்டம்பர் 2012
ஜப்பான் செல்கிறார் ஸ்ரேயா.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தின் 3டி பிரீமியர் ஷோவில் கலந்து கொள்ள ஸ்ரேயா சரண் டோக்கியோ செல்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஸ்ரேயா ஜோடி சேர்ந்த படம் சிவாஜி. தற்போது சிவாஜி படம் 3டியில் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரீமியர் ஷோ தமிழகம் தவிர்த்து ரஜினிகாந்த் ரசிகர்கள் அதிகம் உள்ள ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியி்ல் கலந்து கொள்ள ஸ்ரேயா டோக்கியோ செல்கிறார்.
ஷங்கர் இயக்கத்தில் 2007ம் ஆண்டு ரிலீஸான சிவாஜி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அந்த படத்தை தயாரித்த ஏவிஎம் ஸ்டுடியோஸ் அதை 3டியில் வெளியிட முடிவு செய்தது. இந்த 3டி படம் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சல்மான் ருஷ்டியின் மின்நைட் சில்ட்ரன்ஸ் நாவலைத் தழுவி தீபா மேத்தா எடுத்த மிட்நைட் சில்ர்ட்ரன்ஸ் படத்தில் ஸ்ரேயா நடித்திருந்தார். அந்த படத்தின் பிரீமியர் டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஸ்ரேயா கலந்து கொண்டார்.
ரஜினிகாந்தின் படத்திற்கு ஜப்பானில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்நிலையில் தமிழ் ரசிகர்கள் தவிர, ஜப்பான் ரசிகர்களும் சிவாஜி 3டி படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளனர்.12 செப்டம்பர் 2012
மணிக்கணக்கில் கட்டிப்பிடித்த த்ரிஷா- ராணா!
திரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் சமீபத்தில் நடந்த விருந்தில் பங்கேற்றனர். இருவரும் தனிமையில் நெருக்கமாக அமர்ந்தபடி பல மணி நேரம் பேசிக் கொண்டிருந்ததை தெலுங்கு பத்திரிகைகள் படங்களுடன் வெளியிட்டுள்ளன.
ராணாவுக்கும் த்ரிஷாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியுள்ளன.
நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த நிச்சயதார்த்தத்தில், த்ரிஷாவுக்கு ராணா மோதிரம் அணிவித்தாராம். ஆனால் த்ரிஷா இதை மறுத்ததோடு, நாங்க இன்னும் ப்ரெண்ட்ஸ்தான் என்று கூறி வருகிறார்.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடந்த பிறந்த நாள் விருந்து நிகழ்ச்சியொன்றில் இருவரும் அருகருகே நெருக்கமாக அமர்ந்து கொஞ்சிக் கொண்டிருந்தார்களாம்.
இந்த விருந்துக்கு திரிஷாவும், ராணாவும் ஒரே காரில் ஜோடியாக வந்தார்கள். வந்ததும் ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு, தனியாகப் போய் கட்டி அணைத்தபடி உட்கார்ந்து பல மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
விருந்துக்கு வந்தவர்கள், இந்த ஜோடியின் நெருக்கத்தைப் பார்த்து, அருகில் செல்லாமல் தூரத்திலிருந்தே ஒரு ஹாய் சொல்லிவிட்டுக் கிளம்பினார்களாம்!
06 செப்டம்பர் 2012
சல்மான் கானுடன் ரொமான்ஸ் செய்ய மறுத்த இலியானா!
நடிகை இலியானா போக்கிரி படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கானுடன் நடிக்க வந்த வாய்ப்பை தட்டுக் கழித்துள்ளார்.
தெலுங்கு முன்னணி நடிகைகளில் ஒருவரான இலியானா பர்பி படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். நீண்டடடட காலமாக எடுக்கப்பட்ட பர்பி ஷூட்டிங் முடிந்து படம் வரும் 14ம் தேதி ரீலீஸ் ஆகிறது. இந்த படத்தை இலியானா பெரிதும் நம்பியுள்ளார். இந்நிலையில் அவரைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.
தெலுங்கு போக்கிரியில் நடித்த இலியானா அதன் இந்தி ரீமேக்கில் சல்மானுடன் நடிக்க மறுத்துவிட்டாராம்.
இது குறித்து இலி கூறுகையில்,
தெலுங்கு போக்கிரியில் நான் நடித்தேன். அதன் பிறகு அதன் தமிழ் மற்றும் இந்தி ரீமேக்கில் நடிக்க என்னை அணுகினர். நான் தான் மறுத்துவிட்டேன். இந்தியில் வாண்டட் என்ற பெயரில் எடுத்த படத்தில் நடிக்க மறுத்தேன். அப்போது நான் பாலிவுட்டில் நுழைய தயாராக இல்லை. பாதி மனதோடு நடிக்க வேண்டாமே என்று நினைத்து தான் வாண்டட்டில் நடிக்கவில்லை. ஆனால் அந்த படத்தில் சல்மான் கான் உடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டேன். இருப்பினும் வருத்தமில்லை.
பர்பி மூலம் பாலிவுட்டில் நுழைகிறேன். சல்மானுடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்றார்.04 செப்டம்பர் 2012
உச்சத்திற்குப் போனார் ஷெர்லின்!
02 செப்டம்பர் 2012
ஒரு வழியாக 'கிளைமேக்ஸை' எட்டினார் சிம்பு!
சரத்குமார் மகள் வரலட்சுமியுடன் இணைந்து ரொம்ப நாளாக நடித்து வரும் போடா போடி படத்தை ஒரு வழியாக முடிவுக்குக் கொண்டு வருகிறார் சிம்பு. படம் கிளைமேக்ஸ் காட்சியை எட்டி விட்டதாம். சீக்கிரம் முடித்து விடுவார்கள் என்று நம்பப்படுகிறது.
சரத்குமாரின் மகள் வரலட்சுமி நாயகியாக அறிமுகமாகும் படம்தான் இந்த போடா போடி. ரொம்பகாலமாக இந்தப் படம் இழுத்துக் கிடக்கிறது. வரலட்சுமியே நொந்து போய் விட்டார். அந்த அளவுக்கு ஜவ்வாக படத்தை இழுத்து விட்டார் சிம்பு.
வருடக் கணக்கில் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது வேகம் பிடித்துள்ளதாம். படத்தின் கிளைமேக்ஸ் காட்சி வரை முடித்து விட்டார்களாம். எனவே எப்படியும் இந்தப் படம் வெளியாகி விடும் என்று நம்புகிறார்கள்.
படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை ஒரு நடனத்துடன் கூடிய பின்னணியில் படமாக்கியுள்ளனராம். இந்த நடனத்தில் சிம்பு, வரலட்சுமியுடன், பழைய நடிகை ஷோபனாவும் கால்களை ஆட்டியுள்ளாராம்.
செப்டம்பர் 6ம் தேதி டிரெய்லரை வெளியிட்டு விட்டு படத்தை சீக்கிரமாக கொண்டு வரும் திட்டம் உள்ளதாம்.!
31 ஆகஸ்ட் 2012
சேச்சே...ராணாவுடன் எதுவும் நடக்கலே... திரிஷா
எனக்கும், ராணாவுக்கும் நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார் திரிஷா.
திரிஷாவும், அவரது திருமண செய்திகளும் என்று தனியாக ஒரு புக்கே போடலாம். அந்த அளவுக்கு அவருடைய திருமணம் குறித்து ஏகப்பட்ட செய்திகள் வந்து விட்டன.
கட்டக் கடைசியாக தெலுங்கு நடிகர் ராணா டகுபதியுடன் திரிஷா நெருக்கமாக பழகி வருகிறார். அவர்கள் திருமணம் செய்து கொள்வது உறுதி என்று செய்தி வந்தது.
இந்த நிலையில், இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும், அதில் இரு வீட்டாரும் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதுதொடர்பான புகைப்படங்களும் கூட வெளியாகியுள்ளன. நிச்சயதார்த்தத்தையொட்டி திரிஷாவுக்கு, ராணா, பிளாட்டினம் மோதிரமும், நகைகளையும் கொடுத்தார் என்றும் செய்திகள் கூறுகின்றன. ஆனால் இதை அப்படியே மறுத்துள்ளார் திரிஷா.
இதுகுறித்து திரிஷா சொல்லும்போது, இது அடிப்படையே இல்லாத செய்தி. நானும், ராணாவும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம். எங்களைப் போய் சேர்த்து வைத்துப் பேசுவது... சேச்சே... நல்லாவே இல்லை.
மேலும் எங்களுக்கு நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை. நான் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறேன். திருமணத்தைப் பற்றி நினைத்துக் கூட பார்க்கவில்லை. இப்போது 3 தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
25 ஆகஸ்ட் 2012
அருந்ததி, நந்தகியுடன் ஏழு ஹீரோக்கள்!
அம்முவாகிய நான் படத்துக்குப் பிறகு பத்மா மகன் இயக்கும் புதிய படத்துக்கு கூத்து என்று பெயரிட்டுள்ளனர்.
அடர்ந்த காட்டுப் பகுதி பயணத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாகும் த்ரில்லர் இது.
'26699 சினிமா' எனும் நிறுவனம் சார்பில் எஸ். மாலதி தயாரிக்கும் இந்தப் படத்தில் விமல், பிரசன்னா, ரிச்சர்ட், ஹரீஷ், பரணி, நிதிஷ், ஜெமினி பாலாஜி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள்.
அருந்ததி, நந்தகி ஹீரோயின்கள். தினேஷ் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை - ரெஹான் இசை. பாடல்கள், யுகபாரதி.
அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் நடக்கும் பயணத்தை மையமாக வைத்து இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு, கேரளா, ஆந்திர, கர்நாடக வனப்பகுதிகளில் சிறப்பு அனுமதி பெற்று 160 கிமீ பயணித்து காட்சிகளைப் படமாக்கினார்களாம்.
கேரள காடுகளில் இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகிறது.21 ஆகஸ்ட் 2012
தமன்னாவை மிரட்டும் தயாரிப்பாளர்!
ரொம்ப வருடங்களுக்கு முன் ரஜினி நடித்த ப்ரியா படத்தில், நடிகை ஸ்ரீதேவியுடன் ஆண்டு கணக்கில் ஒப்பந்தம் போட்டு பணம் கறப்பார் மேஜர் சுந்தரராஜன். கிட்டத்தட்ட அதே போன்ற சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளார் முன்னணி நடிகை தமன்னா.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட்டில் சாந்து ஷா ரோஷன் செஹ்ரா என்ற படத்தில் தமன்னா அறிமுகமானார்.
அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சலீம் அக்தர் என்பவர் அப்போது தமன்னாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம், 2005 முதல் 2010 வரை தமன்னா நடிக்கும் படங்களில் அவர் வாங்கும் சம்பளத்தில் 25 சதவீதத்தை தனக்கு தரவேண்டும் என்பது. இதுகுறித்த எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தில் தமன்னா கையெழுத்திட்டுள்ளாராம்.
இப்போது அந்த ஒப்பந்தத்தை தமன்னா மீறி விட்டதாக அவர் மீது வழக்கு தொடர இருப்பதாகவும் சலீம் அக்தர் கூறியுள்ளார்.
"தமன்னாவுக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்ததுடன் மேற்கண்ட ஒப்பந்தமும் செய்து கொண்டோம். பின்னர் தமன்னா தென்னிந்திய சினிமாவுக்கு சென்று விட்டார். ஒப்பந்தம் பேசிய நான் அவரை தொடர்பு கொண்டபோதிலும் அவர் கண்டுகொள்ளவில்லை. ஒப்பந்தப்படி எனக்கு பணமும் தரவில்லை. தனது பெயரில் எழுத்துக்களையும் திருத்தம் செய்து கொண்டார்.
அவரது குடும்பப் பெயரான ‘பாட்டியா' வை விலக்கிவிட்டு வெறும் தமன்னா என கூறிக்கொள்கிறார். தற்போது இந்தியில் ‘ஹிம்மத்வாலா' என்னும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். என்னோடு ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கு தமன்னா பதில் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது நான் வழக்கு தொடர முடிவு செய்திருக்கிறேன்," என்று மிரட்டியுள்ளார்.
தமன்னா கேடி படத்தில் நடிக்க வந்தபோது தனக்கு 16 வயதுதான் என்று கூறியது நினைவிருக்கலாம். அப்படியெனில் இந்திப் படத்தில் இன்னும் முன்பாகவே அறிமுகமாகியிருப்பார். அப்போது அவர் வயது 14 அல்லது 15 இருக்கும்.
இந்த வயதில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது செல்லுமா...?16 ஆகஸ்ட் 2012
'இப்படிக்கு தோழர் செங்கொடி'
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி உயிர் நீத்த செங்கொடியின் நினைவாக 'இப்படிக்கு தோழர் செங்கொடி' ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் உணர்வாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த ஆவணப்படம் ஆகஸ்ட் 19 அன்று வெளியிடப்படுகின்றது.
ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டும் எனக்கோரி கடந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தைத் சேர்ந்த செங்கொடி என்ற இளம் பெண் மூவரின் தண்டனை செய்ய வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த பெண்ணின் வாழ்க்கை வரலாறு "இப்படிக்கு தோழர் செங்கொடி" என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் உணர்வாளர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ஏஸ் சினிமாஸ் என்ற நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் "பொன்னுசாமி" என்ற புனை பெயரில் எழுதி வரும் வெற்றிவேல் சந்திரசேகர் என்பவர் இந்த ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இவர், இயக்குநர் "பாலை" ம.செந்தமிழனிடம் துணை இயக்குநராக பணியாற்றிவருகிறார்.
இப்படத்தின் வெளியீட்டு விழா, வரும் 19 அன்று சென்னை கீழ்ப்பாகத்தில் அமைந்துள்ள டான் போஸ்கோ அரங்கில், மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவில் திரைப்பட நடிகர் சத்யராஜ் படத்தை வெளியிட, பேரறிவாளின் தாயார் அற்புதம் அம்மையார் முதல் சிடியினை பெற்றுக் கொள்கிறார். விழாவின் போது, படம் திரையிடப்பட உள்ளது.
08 ஆகஸ்ட் 2012
என்னத்தே கண்ணையா மரணம்!
பிரபல நகைச்சுவை நடிகர் என்னத்தே கண்ணையா நேற்று மாலை திடீர் மரணமடைந்தார். அவருக்கு வயது 87.
1950ம் ஆண்டில் வெளியான நாகையா நடித்த 'ஏழைபடும் பாடு' படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் என்னத்தே கண்ணையா. தொடர்ந்து எம்ஜிஆருடன் நம்நாடு படத்தில் ரங்காராவின் உதவியாளராக நடித்திருந்தார்.
நான், முன்றெழுத்து உட்பட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவருக்கு, பெரும் புகழ் கிடைத்தது ரஜினியின் தம்பிக்கு எந்த ஊரு படத்தில். யானைப்பாகனாக அவர் நடித்த காட்சிகள் எண்பதுகளில் பிரபலம்.
தொடர்ந்து ரஜினி, கவுண்டமனியுடன் மன்னன் படத்தில் நடித்தார்.
வடிவேலுவுடன் அவர் நடித்த தொட்டால் பூ மலரும் படத்தின் 'வரூம் ஆனா வராது' நகைச்சுவை காட்சி மிகப் பிரபலமானது.
'தம்பி நீங்க எம்ஜிஆர் மாதிரியே தகதகன்னு மின்றீங்க', என அவர் வடிவேலுவைப் பார்த்து சொல்லும் வசனம் இன்றும் பலரால் பல அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது.
வயதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உழைத்து வந்தார் கண்ணையா. தனது தள்ளாத வயதிலும் கூட, பல படங்களில் நடித்து வந்தார். சமீப வருடங்களில் வந்த வேதம், படிக்காதவன், எம்டன் மகன் போன்ற படங்களிலும் அவர் நடித்திருந்தார்.
வசனம் பேசும்போது, அடிக்கடி என்னத்தே என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது இவரது பாணி. அதனால் இவர் பெயருடன் அந்த என்னத்தே-வும் ஒட்டிக் கொண்டது.
இந்த வயதிலும் நகைச்சுவையாக பேசி சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். செவ்வாய்க்கிழமை பிற்பகல் சாப்பிட்டு படுத்தவர் மாலை 4 மணிக்கு காலமாகிவிட்டார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.
கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு அவரது மனைவி ராஜம் காலமானார். இவர்களுக்கு அசோகன், சாய்கணேஷ் என இரு மகன்களும், அமுதா, தனலட்சுமி, மகேஸ்வரி, சண்முகப்பிரியா என நான்கு மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டார்.
ராயப்பேட்டை ராயிட் காலனியில் உள்ள அவர் வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை மாலை 4 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.
மேலும் விபரங்களுக்கு அவரது மகன் சாய்கணேஷ் அலைபேசி எண் - 80156 1553505 ஆகஸ்ட் 2012
விஜயுடன் சேரத் துடிக்கும் ஆன்ட்ரியா!
நடிகை ஆன்ட்ரியாவுக்கு விஜய் படத்தில் நடிக்க ஆசை வந்துள்ளது.
பச்சைக்கிளி முத்துச்சரம் மூலம் பிரபலமானவர் ஆன்ட்ரியா ஜெரிமியா. நடிகையாக மட்டுமின்றி தன்னை ஒரு பாடகியாகவும் நிலை நிறுத்தியுள்ளார். கமல் ஹாசனுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட மாட்டோமா என்று முன்னணி நடிகைகள் எல்லாம் ஏங்க அந்த வாய்ப்பு ஆன்ட்ரியா வீட்டு வாசலுக்கே வந்தது. இதையடுத்து அவர் கமலின் விஸ்வரூபம் படத்தில் நடித்துள்ளார்.
ஏற்கனவே அவர் கமலின் மன்மதன் அம்பு படத்தில் நாயகன் அறிமுகமாகும் பாடலை பாடியுள்ளார். இந்நிலையில் விஜயின் துப்பாக்கி படத்தில் அவருடன் சேர்ந்து ஒரு பாடலை பாட அழைத்துள்ளனர். ஆன்ட்ரியாவும் சென்று பாட்டை பாடிக் கொடுத்துவிட்டு, விஜயுடன் நடிக்கை ஒரு வாய்ப்பு கொடுங்களேன் என்று வாய்விட்டே கேட்டுவிட்டராம்.
இப்படித் தான் லக்ஷ்மி ராய் இயக்குனர் விஜயிடம் நடிகர் விஜயுடன் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை தெரிவித்தார். அதற்கு அவரும் தான் விஜயை வைத்து எடுக்கும் படத்தில் நடிக்கை வைக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் ஆன்ட்ரியாவுக்கு அப்படி யாரும் வாக்கு கொடுத்தது போன்று தெரியவில்லை.
01 ஆகஸ்ட் 2012
அடடா!கதை அப்படிப்போகுதோ!!!
தூத்துக்குடி, ஆடுபுலி ஆட்டம், வீரமும் ஈரமும் பொன்ற கொடூரமான ஆக்ஷன் காட்சிகள் கொண்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்தவர் இயக்குனர் சஞ்சய்ராம். ‘ரோசா’ என்ற படத்தை பாதியிலேயே நிருத்திவிட்டிருந்த சஞ்சய்ராம், ரோசா படத்தை மறுபடியும் ‘குற்றாலம்’ என்ற பெயரில் குற்றால அருவியின் மழைச்சாரல்களுக்கிடையே எடுத்துக்கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் வெளிவந்த ‘படப்பிடிப்புத் தளத்தில் நடிகையை சூழ்ந்த ரசிகர்கள்’ என்ற பரபரப்பான செய்தி குற்றாலம் படப்பிடிப்பில் நடந்தது தான். படப்பிடிப்புக் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் தவறாக நினைத்துக் கொண்டு அங்கு வந்து கலாட்டா செய்ததாகவும் பேசிக்கொள்கின்றனர்.
ஏனென்றால் படத்தின் கதைக்கருவே ஒரு விதமானதாம். புதுமுக நடிகர் வாலியின் மனைவி சௌகந்தி. சஞ்சய்ராமின் மனைவி மீனுகார்த்திகா. சௌகந்தியும், மீனு கார்த்திகாவும் சகோதரிகள். மீனுகார்த்திகா தனது தங்கை கணவருடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற காட்சியை படமாகிக்கொண்டிருப்பதை பார்த்து
என்ன சார் இது’ என யூனிட் மெம்பர்கள் கேட்க, இவர்களின் சந்தேகத்தை உண்மையாக்கும் விதத்தில் தலை ஆட்டிவிட்டு “நடைமுறையில் நடக்கும் விஷயங்கள் தான் கதைக்கரு.
ஆங்காங்கே நடக்கும் விஷயங்கள் தான் அலசப்பட்டு கோடம்பாக்கத்தில் படமாக எடுக்கப்படுகிறது. காம உண்ர்வு அதிகமாக உள்ளவர்கள் பெண்கள் தான். அதைத்தான் படமாக்கிக்கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
25 ஜூலை 2012
நான் கவர்ச்சியா நடிக்கப் போறேன்!'
சுனேனா... காதலில் விழுந்தேனில் அசத்தாலாக அறிமுகமானார். வம்சம் படத்தில் அட, பரவாயில்லையே.. பாப்பா நல்லா நடிக்குது என பாராட்டும் பெற்றார்.
அத்தோடு காணாமல் போனவர்தான். யாரோ ஒரு நடிகரின் கஸ்டடியில் இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசு வேறு.
கொஞ்சநாள் கழித்து, இப்போது நீர்ப்பறவை, கதிர்வேல், பாண்டி ஒலிபெருக்கி நிலையம் போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் சுனேனா.
தன் உடல் அமைப்புக்கு கவர்ச்சி ட்ரெஸ், பிகினி போன்றவை செட் ஆகாது என்று இதுவரை கூறி வந்தவர், இப்போது 'நான்தான் சின்னப் பொண்ணு, ஏதோ சொல்லிட்டேன். அதுக்காக அப்படியே விட்டுடுவீங்களா... கொண்டாங்க அந்த பிகினியையெல்லாம்.. ஒரு கை பாத்துடறேன்," எனும் அளவுக்கு இறங்கிவிட்டாராம்!
நிசமாவா? என்றால், "ஆமா.. " என்றவர், தமிழ் நடிகைகள் எப்போதும் வைத்திருக்கும் அந்த ரெடிமேட் வாக்கியத்தை ஒப்பித்தார்.
"கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நான் நடிக்கத் தயார்!"
ஹப்பாடா... தமிழ் சினிமா ரசிகன் கட்ட வேகாம போயிடுமோங்கிற கவலை தீர்ந்ததம்மிணி!!
22 ஜூலை 2012
கமல் மகள் அக்ஷரா காதல்?
இந்தி நடிகர் நசிருதீன் ஷாவின் இளைய மகன் விவானுக்கும், கமல்ஹாசனின் மகள் அக்ஷராவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக இந்தி மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருவரும் நீண்ட காலமாக நட்புடன் இருந்து வருவதாகவும், இது காதலாக உருவெடுத்திருப்பதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. அக்ஷராவுடன் விவான் அதிக நேரம் செலவிடுவதாகவும் இத்தகவல்கள் கூறுகின்றன.
இவர்கள் நட்புடன் இருப்பது அனைவருக்கும் தெரிந்தாலும், காதல் புரிந்து வருவது வெகு சிலருக்கே தெரியுமாம். இருப்பினும் இதை விவான் மறுத்துள்ளார். இதுகுறித்து மிட்டேவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நிச்சயம் இது காதல் அல்ல. நாங்கள் இருவருமே சிறு வயது முதல் பழகி வருகிறோம். எங்களது வாழ்க்கையில், ரொமான்ஸ் இல்லை என்று கூறியுள்ளார்.
15 ஜூலை 2012
ரீமா சென் மீது கணவர் கோபம்!
![]() |
ரீமா சென் |
10 ஜூலை 2012
நயன்,த்ரிஷா கட்டிப்பிடி நட்பு!
அவர் வாய்ப்பை இவர் பறித்தார்... இவர் வாய்ப்பை அவர் தட்டிவிட்டார்... அவருடைய ஆளை இவர் கரெக்ட் பண்ணிட்டார்.... இவருடைய லவ்வரை அவர் லவட்டிக் கொண்டார்....
-நயன்தாரா மற்றும் த்ரிஷா பற்றி மீடியாவில் தொடர்ந்து வந்த செய்தி மற்றும் கிசுகிசுக்கள் இவை. அதற்கேற்ற மாதிரிதான் இருவரும் நடந்து கொண்டனர். தத்தமக்கு வேண்டப்பட்ட நிருபர் & நிருபிகளை ரகசியமாக அழைத்து இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் போட்டுக் கொடுத்ததெல்லாம் நடந்தது!
அட ஏதாவது விழாக்களில் கூட இருவரும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்ப்பதையே தவிர்த்தார்கள்.
ஆனால் நேற்று முன்தினம் நடந்த தனியார் அவார்ட் ஷோவில் இருவரும் அப்படி இழைந்தார்கள். திடீரென்று இருவரும் 'நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க' என்ற ரேஞ்சுக்கு கட்டிப் பிடித்து கூடிக் குலாவினார்கள்.
விழா முடிந்ததும் வழக்கமாக நடக்கும் சரக்கு பார்ட்டியில் வழிந்த சரக்குகளை விட 'செம ஹாட் மச்சி' எனும் அளவுக்கு இவர்களின் ஷோ நடந்ததாம்.
இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டு, ஒருவருக்கொருவர் முத்தமழை பொழிய, 'த பார்றா கூத்தை' என்று வேடிக்கைப் பார்த்தார்களாம் சக கலைஞர்கள்.
நயன்தாரா - த்ரிஷா சண்டை முட்டிக் கொண்டது விஜய் நடித்து சிறகொடிந்து போன குருவியிலிருந்துதான் என்பது கோலிவுட்டை அக்குவேறாகப் பிரித்து மேயும் வாசகர்களுக்கு தெரியும்தானே!04 ஜூலை 2012
சூர்யாவுடன் டூயட் பாடும் பிரணீதா!
![]() |
| பிரணீதா |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







