பக்கங்கள்

21 மே 2010

பெட்டிக்குள் படுத்தது சுறா,திண்டாடுகிறது சண் குழுமம்!


வேட்டைக்காரன் வசூலில் கோட்டைவிட்டதை ஈடுகட்டத்தான் சுறாவை வாங்கியது சன் பிக்ஸர்ஸ். ஆனால் சுறாவோ முதல் வாரமே பெட்டிக்குள் போகத் தொடங்கிவிட்டது. புறநகர்ப் பகுதிகளில் பல திரையரங்குகளில் சுறா தூக்கப்பட்டுவிட்டது. கோபி போன்ற நகரங்களில் நான்கைந்து திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்ட சுறா, சரியாக 7 நாட்களில் ஒரு தியேட்டரில் மட்டுமே ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே படு தோல்வியைச் சந்தித்ததை சன் பிக்சர்ஸும் மவுனமாக ஒப்புக் கொண்டு, அதை ஈடுகட்ட சிங்கம் படத்தை விநியோகஸ்தர்களுக்குத் தர முடிவு செய்துள்ளது. இன்னொரு பக்கம் விஜய்யுடன் மல்லுக்கு நிற்பதாக, மிக நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தந்துள்ளன. இந்தப் படத்தில் நடித்த விஜய்க்கு சம்பளமாக சில கோடிகள் இன்னும் தர வேண்டுமாம் சன் பிக்சர்ஸ். இந்தத் தொகையை இன்னமும் தராமல் இழுத்தடிக்கிறதாம். விஜய்யின் தந்தையே நேரடியாகப் போய் சன் பிக்ஸர்ஸ் மேலிடத்திடம் பேசியம் ஒன்றும் பலனில்லையாம். சன் பிக்ஸர்ஸ் நேரடியாகத் தயாரிக்கும் படத்துக்கு கால்ஷீட் வேண்டுமானால் தந்துவிடுகிறோம், பேலன்ஸை செட்டில் செய்யுங்கள் என விஜய் தரப்பு கேட்டுள்ளனராம். சிங்கம் ரிலீஸாகி, எங்கள் பிரச்சினை தீர்ந்த பிறகு மற்றதைப் பேசலாம் என சன் தரப்பில் கூறியுள்ளார்களாம். இந்த நிலையில், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் நஷ்டத்துக்காக ஹீரோக்களின் சம்பளத்தைப் பிடிக்கக் கூடாது என்ற பிரச்சினையை நடிகர் சங்கம் மூலம் எழுப்பத் திட்டமிட்டுள்ளதாம் விஜய்யின் தந்தை தரப்பு...! அடடா.. தனக்கு வந்தாதான் தலைவலியும் திருகுவலியும் தெரியுது. இதுவே குசேலன் பிரச்சினையின்போது எவ்வளவு குதூகலமாக வேடிக்கைப் பார்த்தார்கள் மற்ற தமிழ் நடிகர்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக