பக்கங்கள்

03 மே 2010

நினைத்தேன் வலிக்கிறது!!!


எங்கள் ஊர் அழகான சிறுகிராமம்,

விவசாயக்கிராமம்

என்பதால்தோட்டங்களும்

வயல்வெளிகளும் நிறையவே உண்டு,

மாரிகாலமென்றால்

வயல்வெளி எங்கும்

வெள்ளம் நிரம்பி ஓடும்,

மீன்கள் எல்லாம் ஓடிவிளையாடும்,

பறவைகளினதும்,

பூச்சிகளினதும் ரீங்காரம்ஒலி

எழுப்பிக்கொண்டேயிருக்கும்,

சிறுவர்களாகிய நாம்

ஓடி விளையாடி

வெள்ளங்களில் வெடி அடித்து

குதூகலித்துக்கொண்டிருப்போம்,

அப்பா,அம்மா,சகோதரங்கள்உறவினர்,

ஊரவரென எமதூரே ஒரு வீடு போல்தான் இருக்கும்,

அந்தவாழ்க்கையையும் சந்தோசத்தையும் இன்று நினைக்கத்தான்முடிகிறதேதவிர

அனுபவிக்க முடிவதில்லை,

வாழ்க்கையும்எப்படி

எப்படியெல்லாமோ ஆகிவிட்டது,

ஒவ்வொருவரும்ஒவ்வொரு

திக்காய் ஆகிவிட்ட அவலம்,

எந்த இனமுமே கண்டிராதமாபெரும்

கொடூரத்தை எம்மினம் சந்தித்தது,

எம்மை தாலாட்டி சீராட்டி

கண்போலகாத்த எம் தந்தையும்

எமை விட்டு பிரிந்து விட்ட மாதுயரம்,

கொள்ளியிடக்கூட செல்ல முடியாத

பாவியானேனே எனும் ஏக்கம்,

இப்படி இன்னுமின்னும்

எத்தனையோ

துன்பங்களுள் தவிக்கும் எம்மினம்,

எங்கே செல்ல யாரிடம் சொல்ல?.

கேள்விகளுடனே எமது பயணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக