பக்கங்கள்

23 மே 2010

ஐந்து கரங்களாலும் கணக்கு எழுதினாலும் அடங்காது போலிருக்கு நஷ்டக்கணக்கு!



ஐந்து கரங்களாலும் கணக்கெழுதினாலும் அடங்காது போலிருக்கு நஷ்டக்கணக்கு! இப்படி ஐங்கரன் நிறுவனம் நமுத்துப் போயிருந்த நேரத்தில்தான் 'அங்காடி தெரு' வந்து ஆறுதல் அளித்தது.
துண்டு துக்கடா ஊர்களில் கூட இப்போதும் கலெக்ஷனை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த படத்தால் அகமகிழ்ந்து போயிருக்கிறார்கள் இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள். அதில் ஒருவர் சொன்ன கமென்ட்தான் திரையுலகம் கேட்டு மகிழ வேண்டிய செய்தி.
அங்குசம் சிறுசுதான். ஆனால் அதுதான் மலைய புரட்டி மல்லாக்க போட்டிருக்கு என்றாராம் அந்த தயாரிப்பாளர். கொஞ்சம் விளக்கமா பார்ப்போமோ? வில்லு படத்தை எடுத்த வகையில் கோடிக்கணக்கான நஷ்டம் ஐங்கரனுக்கு. அடுத்தடுத்த படங்களில் அந்த தொகையை இழப்பீடு செய்ய வேண்டும் என்பது கட்டாயம். இந்த நேரத்தில் அங்காடி தெருவின் வசூல், வில்லு கடனை அடைத்துக் கொண்டிருக்கிறதாம்.
அவ்ளோ பெரிய விஜய்யோட கடனையே நேத்து வந்த சின்னப் பையன் மகேஷ் அடைக்கிறான். என்ன ஒரு விந்தை பாருங்க என்கிறாராம் அவர். இவரு சொல்றதை பார்த்தா விஜய்யும் மகேஷ§ம் ஒண்ணு. இதை விளங்கிகிட்டா வின்னுன்னு ஒரு புதுமொழி எழுதலாம் போலிருக்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக