
படம்: பாண்டவர் பூமி,
பாடியவர்கள்:யுகேந்திரன்,சுஜாதா.
தோழா தோழா கனவுத் தோழா,
தோழா தோழா தோள்கொடு
கொஞ்சம் சாஞ்சிக்கணும்
நட்பைப்பற்றி பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கணும்
உன்னை நான் புரிஞ்சுக்கணும்,
ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்,
ஆணும்
பெண்ணும் பழகிக்கிட்டால் காதலாகுமா?
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்
நட்பு மாறுமா?நட்புக்குள் பொய்கள் கிடையாது,
நட்புக்குள் தவறுகள் நடக்காது,
நட்புக்குள்
தன்னலம் இருக்காது,
நட்புக்கு ஆண் பெண் தெரியாது,
நட்பு என்னும் நூலெடுத்துபூமியில் கட்டி நீ நிறுத்து,
நட்பு நட்புதான் காதல் காதல்தான்,
காதல் மாறலாம் நட்பு மாறுமா?
காதல் ஒன்றும் தவறே இல்லை,காதல் இன்றி மனிதன் இல்லை,
நண்பர்களும் காதலராகமாறிய பின் சொல்லியதுண்டு,
இப்போ நீயும் நானும் பழகுறோமே காதலாகுமா?
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா?
தோழா தோழா கனவுத் தோழா,
தோழா தோழா தோள்கொடு கொஞ்சம்
சாஞ்சிக்கணும்,நீயும் நானும் வெகுநேரம்
மனம்விட்டுப் பேசிச் சிரித்தாலும்,
பிரியும் பொழுதில் சில நொடிகள்
மெளனம் கொள்வது ஏன் தோழி
புரிதலில் காதல் இல்லையடி,
பிரிதலில் காதலைச் சொல்லி விடு,
காதல் காதல்தான் நட்பு நட்புதான்,
நட்பின் வழியிலே காதல் வளருமே!
பிரிந்து போன நட்பினைக் கேட்டால்,
பசுமையான கதைகளைச் சொல்லும்,
பிரியமான காதலும் கூடபிரிந்த பின்னே
ரணமாய்க் கொள்ளும்
ஆணும்
பெண்ணும் காதல் இல்லாமல்
பழகிக்கலாம்ஆ... இது correctஆயுள் முழுதும்
களங்கப்படாமல் பார்த்துக்கலாம்தோழா தோழா
கனவுத் தோழாதோழா தோழா தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்நட்பைபப் பற்றி
நாமும் பேசித் தீர்த்துக்கணும்.
உன்னை நான் புரிஞ்சுக்கணும்
ஒன்னொண்ணா தெரிஞ்சிக்கணும்ஆணும்
பெண்ணும் காதலில்லாமல் பழகிக்கலாம்
அது ஆயுள் முழுதும் களங்கப்படாமல் பார்த்துக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக