ரஜனிகாந்த் & ஸ்ரேயா ஆட்டம்.
30 மே 2010
29 மே 2010
28 மே 2010
பையா படத்தில் இடம் பெற்ற பாடல்.
இப்பாடலை சுதா விரும்பிக் கேட்டுள்ளார்.அவரின் விருப்பத்தை நிவர்த்தி செய்கிறது அன்பு நண்பன்.கொம்
27 மே 2010
ஆதிபகவன் மூலம் மீண்டும் வருகிறார் மம்தா!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpLFAyGcYPgAqzRsZAFp37LvKOnKAgyLJ_MG5ZOU18lMM6csv-ChzhB1cIXD5fM1GI3qLHX2SYbREw5dJatfPnQtEqcWTNgK-aquEmlrdRBlhLfw4Ud2aYQ5SF9Uu4e5oxg6MmMU4aNUjZ/s320/mamtha-1.jpg)
சிவப்பதிகாரம், குரு என் ஆளு படங்களுக்குப் பின் காணாமல் போயிருந்த மம்தா ஆதிபகவன் படம் மூலம் மீண்டும் வருகிறார்.அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ஆதிபகவன் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, பாங்காக் நாடுகளில் சத்தமில்லாமல் ஒரு ஷெட்டியூல் முடிந்திருக்கிறது. கதாநாயகி கிடைக்காமல் தவித்த அமீர், கடைசி நேரத்தில் கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் சமீபகாலமாக கோலோச்சிவரும் மம்தா மோகந்தாஸைத் தேடிப்பிடித்து நாயகியாக்கியிருக்கிறார். இவரை பாங்காக் கூட்டிப்போய் ஒரு ஷெட்டியூலை முடித்துத் திரும்பியிருக்கிறார். பருத்தி வீரனில் நடித்த ப்ரியாமணியே மீண்டும் அமீர் இயக்கத்தில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பு இப்போது மம்தாவுக்குப் போய்விட்டது.
25 மே 2010
படிக்காதவன் படப் பாடல்.
தமன்னாவின் அழகு இப்பாடலை மீண்டும் மீண்டும்
பார்க்க தூண்டுகிறது,நடனமும் மிகவும் நன்றாக இருக்கிறது,
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.உங்களுக்கும் பிடித்திருக்கும் என
நினைக்கிறேன்.உங்கள் விருப்பப் பாடல்களையும் எழுதி அனுப்புங்கள்,நாங்கள்
உங்கள் விருப்பத்தை நிவர்த்தி செய்வோம்.
அனுப்பவேண்டிய மின்னஞ்சல்:ravies152415@yahoo.de
சுறா படப்பாடல்,தஞ்சா ஊரு ஜில்லாக்காரி.
சுறா படத்தில் இடம்பெற்ற இப்பாடலை சுபோ அவர்கள் தனது விருப்பமாக
தெரிவு செய்துள்ளார்,தனக்கு பிடித்த நடிகர்களுள் விஜயும் ஒருவர் எனக்குறிப்பிட்டுள்ள அவர்,விஜய்க்காகவே இப்பாடலை தேர்வு செய்ததாகவும்
குறிப்பிட்டுள்ளார்.
நீங்களும் விரும்பிய பாடலை மின்னஞ்சல் மூலமாக எழுதி அனுப்புங்கள்.
வியர்வை நாற்றம் தீர ஒரு ஆலோசனை!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhadBCmbXu1xvFbshD40DXZ9DIAhuNrteVyEwJPEulaZB1OEJqFzF0CVfpxB7z2UuB4s-7gL6C7sVa3O_FYrDexpPLtg90Lv6jskhIlaFg0WUCu2eUvRlRiVNvOvwOmUo-D5Hn1JOhEco7I/s320/Ragasiya_Sinegithi-32.jpg)
குளிர்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பிக்கும் போது. கோடை என்றால் சட்டென நம் நினைவுக்கு வருவது வெயிலின் சூடும், அதனால் உண்டாகும் வியர்வையும். வியர்வை அதிகம் சுரக்கும் ஒருசிலரது உடலில் நாற்றமும் ஏற்படும். வியர்வையினால் உண்டாகும் இந்த நாற்றம் நமது அருகில் இருப்பவரை முகம் சுழிக்க வைக்கும். அத்தகைய நிலை உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்திலிருந்து பிழியப்பட்ட சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும். இந்த நீரில் குளித்து வந்தால், வியர்வை நாற்றம் அறவே நீங்கிவிடும். இன்னுமொரு குறிப்பு : 2 தேக்கரண்டி சீயக்காய் தூள், 2 தேக்கரண்டி வெந்தயத் தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து களி போல் தயாரிக்கவும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளித்து வரவும். இரண்டே வாரத்தில் உடலில் நிரந்தமாக குடிகொண்டிருக்கும் வியர்வை நாற்றம் ஓடிவிடும். தலையும், உடலும் சுத்தமாகி மணம் வீசும்.
23 மே 2010
ஐந்து கரங்களாலும் கணக்கு எழுதினாலும் அடங்காது போலிருக்கு நஷ்டக்கணக்கு!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihWJZhOayjFse1W27FoaQd7E-lxIVD3_NKzZtNGe-3THAaYQv-lmH0Oa4BO-Kt83GYFjl7icUGVbkzmpUmzy1XU-4PfD1aM_dmD8NPaUBZWC8HBNT4_9caBgoL_zh6HvtsR0tiFejBRc6m/s320/angaditheru002.jpg)
ஐந்து கரங்களாலும் கணக்கெழுதினாலும் அடங்காது போலிருக்கு நஷ்டக்கணக்கு! இப்படி ஐங்கரன் நிறுவனம் நமுத்துப் போயிருந்த நேரத்தில்தான் 'அங்காடி தெரு' வந்து ஆறுதல் அளித்தது.
துண்டு துக்கடா ஊர்களில் கூட இப்போதும் கலெக்ஷனை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த படத்தால் அகமகிழ்ந்து போயிருக்கிறார்கள் இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள். அதில் ஒருவர் சொன்ன கமென்ட்தான் திரையுலகம் கேட்டு மகிழ வேண்டிய செய்தி.
அங்குசம் சிறுசுதான். ஆனால் அதுதான் மலைய புரட்டி மல்லாக்க போட்டிருக்கு என்றாராம் அந்த தயாரிப்பாளர். கொஞ்சம் விளக்கமா பார்ப்போமோ? வில்லு படத்தை எடுத்த வகையில் கோடிக்கணக்கான நஷ்டம் ஐங்கரனுக்கு. அடுத்தடுத்த படங்களில் அந்த தொகையை இழப்பீடு செய்ய வேண்டும் என்பது கட்டாயம். இந்த நேரத்தில் அங்காடி தெருவின் வசூல், வில்லு கடனை அடைத்துக் கொண்டிருக்கிறதாம்.
அவ்ளோ பெரிய விஜய்யோட கடனையே நேத்து வந்த சின்னப் பையன் மகேஷ் அடைக்கிறான். என்ன ஒரு விந்தை பாருங்க என்கிறாராம் அவர். இவரு சொல்றதை பார்த்தா விஜய்யும் மகேஷ§ம் ஒண்ணு. இதை விளங்கிகிட்டா வின்னுன்னு ஒரு புதுமொழி எழுதலாம் போலிருக்கே!
22 மே 2010
பயமறியான்,திரைக் கண்ணோட்டம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEA34CaQaB3XSKZliCudmzk8ixg4_-NOI4p5XfzCM6Ejew8MSkgvYCDrYozAPRtSeGJsmNI-dWqw3cyTaXI05VJ9Z2kkGIzMF3XeJIcclC24U-h3np_YiL5uVR8X3GcsAXYgirXtcl3LSw/s320/7149_L_galvpf.gif)
வீட்டு வேலை செய்து பிழைக்கும் சரண்யா மகன் மகேஷ் ராஜா. குடித்து ஊதாரியாக சுற்றுகிறார். ஆனாலும் மகன்மேல் பாசம். அவரை திருத்த எவ்வளவோ முயன்றும் தோல்வி அடைகிறார்.
ரவுடிகளுக்கு உதவி கோடியாய் சம்பாதிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிஷோர் எதிரிகளை தீர்த்துகட்ட மகேஷ் ராஜாவை பயன்படுத்துகிறார். தாதா பொன்னம்பலத்தை வீழ்த்தி அவரிடம் இருந்த பல லட்சங்களை கொள்ளையடித்து வரவைக்கிறார். கடையில் இருந்து காலி செய்ய மறுக்கும் ஒருவனை மிரட்டி வெளியேற்ற ஏவுகிறார். அப்போது கடைக்காரரின் அடியாட்களுக்கும் மகேஷ்ராஜா கோஷ்டிக்கும் அடிதடி நடக்கிறது. இந்த மோதலில் ரமேஷ்ராஜா வீசும் பாட்டில் உடைந்து கண்ணாடி பறந்து போய் அவ்வழியாக வரும் சரண்யா கழுத்தை சீவுகிறது. அதே இடத்தில் பலியாகிறார். தாய் இறந்த அதிர்ச்சியில் இருக்கும் மகேஷ்ராஜாவை என் கவுண்டரில் தீர்த்துகட்ட கிஷோர் போலீஸ் படையுடன் புறப்படுகிறார். அவர் தப்பினாரா என்பது கிளைமாக்ஸ்.
ஆக்ஷன், காதல், தாய்ப்பாசத்தின் மீது கதையை நகர்த்துகிறார் இயக்குனர் பிரதீஷ்... மூன்றிலும் தாய் மகனுக்கான பாசபோராட்டமே முதல் இடம் பிடிக்கிறது. மகன் கெட்டவனாக இருந்தும் அவன் மேல் காட்டும் தாயின் அன்பும் அவளது மகத்துவத்தை சாவுக்கு பின் உணரும் மகனின் பாசமும் போட்டி போட்டு மனதை பிழிகின்றன.
மகேஷ்ராஜா ஆக்ஷன் கேரக்டரில் பொருத்தமாக பதிகிறார். பார்வை, முறைப்பு, நடை, பேச்சு எல்லாவற்றிலும் அதிரடி. உதயதாரா காதலியாக வந்து போகிறார். அவருக்கும் மகேஷ்ராஜாவுக்கும் இடையிலான காதலில் ஜீவன் இல்லை. கிளைமாக்சில் துப்பாக்கியுடன் விரட்டும் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடி உதய தாராவிடம் என்னை மறந்து வேறு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள் என்று கண்ணீருடன் விடைபெறும் போது நெஞ்சு கனக்கிறது. அழுக்கு உலகம் கல்லறை, குடி என நாயகனை ஒரே களத்தில் நகர்த்துவது சலிப்பு..
ரவுடிகளை மோத விட்டு பணம் பறிக்கும் வித்தியாசமான போலீஸ் வில்லனாக கிஷோர் மிரட்டுகிறார். சரண்யா தாய் பாசத்தின் சின்னமாக நிற்கிறார். முடிவு பரிதாபம். மணிகண்டனும் ஆக்ஷன் வேஷம் கட்டியுள்ளார். கிஷோர் மனைவியை பலவந்தம் செய்வதும் அதனால் சித்ரவதை செய்து கொல்லப்படுவதும் பரபர... பொன்னம்பலம், தேவிகிருபா, அஸ்வதி, காதல் சுகுமார், கொட்டாச்சி ஆகியோரும் உள்ளனர்.
பி.சி. சிவன் இசையும் ஆர்.சரவணன் ஒளிப்பதிவும் கை கொடுக்கிறது.
21 மே 2010
ஐஸ்வர்யா ராய் எப்போ குட்டிபோடுவது?பார்த்தீபனின் நக்கல் பேச்சு!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheBzNz6P9iZh9ruAPk7St9tLSt95W3gpi_9K0zj4LiN1siRnrDa_yOY4MN-AklS-lkl_rYjjLBw5qMnfKAlSKg8dJ9SdywFqa_kFoPfFwxrK-NWof85cRFicpp5XApgl7Jo7YIJZWi28_N/s320/20100316101947.jpg)
ஷங்கர் தயாரிப்பில் உருவாகியுள்ள ரெட்டைச்சுழி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ஐஸ்வர்யா ராயை புகழ்ந்து பேசுவதாகக் கூறிக் கொண்டு தத்துப் பித்தென்று உளறி வைத்தனர் மூத்த இயக்குநர்கள் முதல் நேற்றைய இயக்குநர்கள் வரை. ஐஸ்வர்யாவுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்தது சந்தோஷமாக இருந்தது. அவரது அழகை ஆராதித்தேன். இந்த கிழவனுக்கு என்ன ஆசைன்னு நினைக்காதீங்க. அழகை ஆராதிக்க வயசு ஏது? ஆனா... ஆராதிக்கிறதோட நிறுத்திக்கணும், என்றார். அதற்கு முன் பேசிய பார்த்திபன் வரம்பு மீறினார். ஐஸ்வர்யா ராய் குட்டி போடுவது எப்போது? என்றெல்லாம் பேசி முகம் சுழிக்க வைத்தார். மேலும் அவர் பேசுகையில், "சுமாரா ஒரு பொண்ணு வந்தாலே ஐஸ்வர்ய ராய் மாதிரி அழகா இருக்கான்னு சொல்லுவேன். ஐஸ்வர்யா ராயே இங்கு வந்திருக்கிறார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு சுனாமியே ஸ்டேஜ்ல வந்து உட்கார்ந்திருக்கிறது. ஐஸ்வர்யா ராய் சிரிக்கும்போது கன்னத்தில் விழுகிற கன்னக்குழியை ரெட்டைச்சுழி என்றும் சொல்லலாம் என்று கூறிய பார்த்திபன், கொஞ்சம் விவகாரமாகவும் பேசினார். "விழா அழைப்பிதழில் ஆடியோ சி.டி.,யை ஐஸ்வர்யா ராய் வெளியிட வைரமுத்து பெற்றுக் கொள்வார் என்று போட்டிருந்தார்கள். நாங்களும் அவர் எப்போ பெற்றுக் கொள்வார்... பெற்றுக் கொள்வார் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த 50 கே.ஜி. தாஜமஹால் குட்டி போட்டால் அந்த குட்டி 5 கிலோ தாஜ்மஹாலாகவாவது இருக்கும் அல்லவா? அந்த குட்டி எப்போன்னுதான் எதிர்பார்த்திட்டு இருக்கோம்..." என்று ஏடாகூடமாக பேசினார். அதற்கும் பலமாகவே கையைத் தட்டி உற்சாகம் காட்டினார்கள் ரசிப்புத் திலகங்கள். பாரதிராஜா பேசும்போது, எனக்கு சீட் கொஞ்சம் தூரமா போட்டுட்டாங்க. ஐஸ்வர்யா ராய்க்கு அற்புதமான கண்கள் இருக்கிறது. சிரிப்பில் கர்வம் இல்லை. கர்வம் இல்லாத பொண்ணு. அதுதான் அவருக்கு சொத்து, என்றார். வைரமுத்து பேசுகையில், "ஐஸ்வர்யா ராயை கண்ணியமாகப் பார்க்க வேண்டும்" என்று பேசியவர், பின்னர் பார்த்திபன் பாணிக்குப் போய்விட்டார்... "ஐஸ்வர்யா ராயின் கூந்தல் அழகா, நெற்றி அழகா, கன்னம் அழகா, இதழ் அழகா, கழுத்து அழகா (அதுக்கும் கீழே இறங்கித் தொலைப்பாரோ என்ற சங்கடம்...), இடை அழகா... என்று பார்க்கையில், அவரது கண்ணியம்தான் அழகு" என்று கூறி முடித்தார். மேடையில் ஒரு அழகான பெண்ணைப் பார்த்துவிட்டால் இப்படியா கட்டுப்பாடிழந்து போவார்கள்... கடவுளே கடவுளே!
பெட்டிக்குள் படுத்தது சுறா,திண்டாடுகிறது சண் குழுமம்!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRTMNzwKq1wLi3fd3-m-tAcbmONETlZ9lH7pV29pxH3Qt31y00A16LZJTE4Ll5mmk1NuE4g6iS99vplPMlpN5yh8-4VxKrCiPoYsuNvJqOLMY9HAgbGpgo03Vypk1L1wD7jkLBOBYYkUCe/s320/20100510123824.jpg)
வேட்டைக்காரன் வசூலில் கோட்டைவிட்டதை ஈடுகட்டத்தான் சுறாவை வாங்கியது சன் பிக்ஸர்ஸ். ஆனால் சுறாவோ முதல் வாரமே பெட்டிக்குள் போகத் தொடங்கிவிட்டது. புறநகர்ப் பகுதிகளில் பல திரையரங்குகளில் சுறா தூக்கப்பட்டுவிட்டது. கோபி போன்ற நகரங்களில் நான்கைந்து திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்ட சுறா, சரியாக 7 நாட்களில் ஒரு தியேட்டரில் மட்டுமே ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே படு தோல்வியைச் சந்தித்ததை சன் பிக்சர்ஸும் மவுனமாக ஒப்புக் கொண்டு, அதை ஈடுகட்ட சிங்கம் படத்தை விநியோகஸ்தர்களுக்குத் தர முடிவு செய்துள்ளது. இன்னொரு பக்கம் விஜய்யுடன் மல்லுக்கு நிற்பதாக, மிக நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தந்துள்ளன. இந்தப் படத்தில் நடித்த விஜய்க்கு சம்பளமாக சில கோடிகள் இன்னும் தர வேண்டுமாம் சன் பிக்சர்ஸ். இந்தத் தொகையை இன்னமும் தராமல் இழுத்தடிக்கிறதாம். விஜய்யின் தந்தையே நேரடியாகப் போய் சன் பிக்ஸர்ஸ் மேலிடத்திடம் பேசியம் ஒன்றும் பலனில்லையாம். சன் பிக்ஸர்ஸ் நேரடியாகத் தயாரிக்கும் படத்துக்கு கால்ஷீட் வேண்டுமானால் தந்துவிடுகிறோம், பேலன்ஸை செட்டில் செய்யுங்கள் என விஜய் தரப்பு கேட்டுள்ளனராம். சிங்கம் ரிலீஸாகி, எங்கள் பிரச்சினை தீர்ந்த பிறகு மற்றதைப் பேசலாம் என சன் தரப்பில் கூறியுள்ளார்களாம். இந்த நிலையில், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் நஷ்டத்துக்காக ஹீரோக்களின் சம்பளத்தைப் பிடிக்கக் கூடாது என்ற பிரச்சினையை நடிகர் சங்கம் மூலம் எழுப்பத் திட்டமிட்டுள்ளதாம் விஜய்யின் தந்தை தரப்பு...! அடடா.. தனக்கு வந்தாதான் தலைவலியும் திருகுவலியும் தெரியுது. இதுவே குசேலன் பிரச்சினையின்போது எவ்வளவு குதூகலமாக வேடிக்கைப் பார்த்தார்கள் மற்ற தமிழ் நடிகர்கள்!
இருக்கா இல்லையா?நழுவும் அசின்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsJn9s53BqX51xLDrxCqGrSTIh6_yjN3iQaCXNWUjD5orGmEVYR21px04bHi2uqR3j4QwOTFQUvFmrjHmsaNou2MtJHajwQ2XZxdAQOWnL-gHQeTypMed5ZTgk64DsJFqVw_D613OREnTq/s320/20100506101253.jpg)
தங்களைச் சுற்றி எப்போதும் ஒரு கிசுகிசு இருக்கும்படி பார்த்துக் கொள்வதை முன்னணி நடிகைகள் ஒரு கலையாகவே கற்று வைத்திருக்கிறார்கள். அப்படி வரும் கிசுகிசுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை அவர்கள் ஒரு போதும் விரும்புவதுமில்லை. படங்களே இல்லாவிட்டாலும் தொடர்ந்து பல கிசுகிசுக்கள், வதந்திகள் என தலைப்புச் செய்திகளில் இடம்பெறுபவர் அசின். இப்போது டோணியுடன் நெருக்கம் காட்டுகிறார். காதலா என்றால் 'இல்லையில்லை நட்பு... அதை களங்கப்படுத்தாதீர்கள்' என்கிறார். ஆனால் 'இந்த நட்பு தொடரும்... அவர் மிகச் சிறந்த ரசிகர்' என்று அந்த கிசுகிசுவுக்கு ஒரு கமாவும் போடுகிறார். இப்படித்தான் முன்பு சல்மானுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றார். ஆனால் அசின் படுக்கையறையில் சல்மான்கான் படம் மாட்டப்பட்டிருப்பதையும், இருவரும் நள்ளிரவுப் பார்ட்டிகளுக்கு ஒன்றாக வந்ததையும் பாலிவுட் பத்திரிகைகள் புகைப்படத்துடன் வெளியிட்டன. ஆனால் அசினோ, 'எனக்குப் பார்ட்டிகளே பிடிக்காது' என்று முழு ஆதாரத்தையும் பொய்க்குள் மறைத்தார்!
20 மே 2010
சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே?
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCSlF0u03u3F8Pre_VebEvdai440SfinZPl4mb4TegaF2TsVHb_HktqFt5EBWbYnTBqcd3_QQFOMlpF6z1kHNNQoJQooNKPxHLORS6xOVvItQVNDnDq6pm1hANFjcvJDYpPRPs7D3DEnRH/s320/vidiyal_13_43201010439123.jpg)
சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே?
பள்ளிக்கு சென்றாளோ படிக்கச் சென்றாளோ ?
வாடா மருமகா
என் அழகு மன்மதா பள்ளிக்கு தான் சென்றாள்
படிக்கத் தான் சென்றாள்
ஐயோ மாமி அவளை அங்கே விடாதே
அவளை என்னும் படிக்கவென்று கெடாதே
ஊர்
சுழலும் பெடியளெல்லாம்
கன்னியரை கண்டவுடன் கண்ணடிக்கும் காலமல்லவோ -
( சின்ன மாமியே) ஐயோ தம்பி அவளை ஒன்றும் சொல்லாதே
அவள்
வந்தால் உதைத்திடுவாள் நில்லாதே
அடக்கமில்லா பெண்ணிவள் என்றாஎன்மகளை நினைத்து விட்டாய்இடுப்பொடியத் தந்திடுவேனே -( சின்ன மாமியே)
ஏநனை
மாமி மேலே மேலே துள்ளுறியேபாரணை மாமி படுகுழியில்தள்ளுறியேஏனணை மாமி அவளெனக்குதெவிட்டாதவள் எனக்குபாரணை மாமி கட்டுறன் தாலியை.
அழகியாக மாற்றி திருமணம் செய்த மருத்துவர்!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkMoW0-oDME5WS-fdtuMYTuc5euTRjSsYPEq3xDnxBh9xyYpl4u1jfVCZo5qqmTrDf-ux3dTsI-pOAVc2jzD2L5m5fICC0bimBy5Deerme8Aqu7nePiiiiSjQFPUgMrSiOneC6tQFkm6LA/s320/leah-dizon-006.jpg)
வறுமையில் வாடும் பெண்ணிற்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொள்ளும் மணமகன் வீட்டாரைப் பார்த்துள்ளோம். இங்கு, ஒரு பெண்ணிற்கு 8 முறை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து அழகியாக மாற்றிக் கொண்டு அவரையே திருமணம் செய்து கொண்ட ஒரு மருத்துவரைப் பற்றிப் பார்க்கலாம். ஜெர்மனி நாட்டை சேர்ந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ரெசா வோசவ் (48), ஒரு பெண்ணை சமீபத்தில் சந்தித்தார். அவர் பெயர் கேனி. 33 வயதான இவர் ஒரு ஓட்டலில் பணியாற்றி வந்தார். கேனியைப் பார்த்ததுமே ரெசா வோசவ்க்கு பிடித்து விட்டது. ஆனால் அவரது அழகில் ஒரு சில குறைபாடுகள் இருப்பதாக நினைத்த ரெசா வோசவ் அவரை அவரை முழு அழகியாக மாற்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டார். ஒரு முறை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய, அதுவே தொடர்ந்து அங்கங்கே சில டச் அப்கள் போல சுமார் 8 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டியதாகிவிட்டது.அதாவது கேனியின் மார்பகத்தையும், தொடைகளையும், கண்களையும், முகத்தையும் மாற்றி அமைக்க அவர் அறுவை சிகிச்சை செய்தார். இது குறித்து வோசவ் கூறுகையில், நான் முதல் முறையாக கேனியை சந்தித்தபோது, அவர் உடல் அமைப்பில் சில குறைபாடுகள் இருப்பதை நான் கவனித்தேன். இருந்தபோதிலும் அவரிடம் இருந்த அழகு என்னை கவர்ந்தது. அவர் இடுப்பும் தொடைகளும் பெரிதாக இருந்தன. அதனால் சில திருத்தங்கள் செய்தேன். பிறகு மேலும் சில திருத்தங்கள் என 8 முறை அறுவை சிகிச்சை செய்தேன் என்று கூறினார்.கேனியின் மார்பகத்தையும், உதடுகளையும் பெரிதாக மாற்றினார். கண்ணிமைகளை கொஞ்சம் உயர்த்தினார். நெற்றியை சமப்படுத்தினார். இதன் மூலம் கேனி இன்னும் அழகான பெண்ணாக மாறினார். இந்த அறுவை சிகிச்சைக்கு 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவு ஆனது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு முழு அழகியான கேனியை வோசவ் திருமணம் செய்து கொண்டார்.
06 மே 2010
பிடித்ததால் ரசித்தது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitedTz37xU3vFeaJIkkSi1mOwwCKac10aP4kdntxsoOER290R0BxVncS8GWZsMVLglpwxB-gnhoMNJgHeP59G6jHXif4nlb0X4IeqyzFpW3oUGDTXBCPeozvj07M10PR95HJ-z6_kJi4fz/s320/untitled.bmp)
குரல்: ஹரிகரன்.
கவிவரி: கலைக்குமார்.
படம்: உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்,
இசை :S.A.ராஜ்குமார்,ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்கேட்கும்போதெல்லாம்
உன் ஞாபகம் தாலாட்டும்என் கண்களின்
இமைகளிலே உன் ஞாபகம்
சிறகடிக்கும்நான் சுவாசிக்கும்
மூச்சினிலே உன் ஞாபகம்
கலந்திருக்கும்ஞாபகங்கள் மழையாகும்
ஞாபகங்கள் குடையாகும்ஞாபகங்கள்
தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்ஏதோ
ஒரு பாட்டு என் காதில்
கேட்கும்கேட்கும்போதெல்லாம்
உன் ஞாபகம் தாலாட்டும்கவிதை
என்றாலே உன் பெயரின் ஞாபகமேகேட்கும்
இசையெல்லாம் நீ பேசும்
ஞாபகமேபூக்களின் மேலே
பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமேஅதிர்ஷ்டம்
என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்அழகு
என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்ஏதோ
ஒரு பாட்டு என் காதில்
கேட்கும்கேட்கும்போதெல்லாம்
உன் ஞாபகம் தாலாட்டும்தென்றல்
என்றாலே உன் வாசல் ஞாபகமேவசந்தம்
என்றாலே உன் வருகை ஞாபகமேதொட்டால்
சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம்
ஞாபகமேஅலைகள் போலவே மோதும்
உந்தன் ஞாபகம்மறந்துபோனதே
எனக்கு எந்தன் ஞாபகம்ஏதோ
ஒரு பாட்டு என் காதில்
கேட்கும்கேட்கும்போதெல்லாம்
உன் ஞாபகம் தாலாட்டும்.
என்னை+உங்களை கவர்ந்த பாடல்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtmI_qvP1YEuWWg4Mg4gPN1EqHaWKZz8novu21IzgT5mKqz0lcZYgX2xDcRatW22UptQRWrU-0r4tJKpH2HdoGiAAYBthmV7WqH2wrcg1FBM2UdvglbVo7AQH9pcid6QTvekxLb90qDtcY/s320/paiya_31_19201030045123.jpg)
படம்: பாண்டவர் பூமி,
பாடியவர்கள்:யுகேந்திரன்,சுஜாதா.
தோழா தோழா கனவுத் தோழா,
தோழா தோழா தோள்கொடு
கொஞ்சம் சாஞ்சிக்கணும்
நட்பைப்பற்றி பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கணும்
உன்னை நான் புரிஞ்சுக்கணும்,
ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்,
ஆணும்
பெண்ணும் பழகிக்கிட்டால் காதலாகுமா?
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்
நட்பு மாறுமா?நட்புக்குள் பொய்கள் கிடையாது,
நட்புக்குள் தவறுகள் நடக்காது,
நட்புக்குள்
தன்னலம் இருக்காது,
நட்புக்கு ஆண் பெண் தெரியாது,
நட்பு என்னும் நூலெடுத்துபூமியில் கட்டி நீ நிறுத்து,
நட்பு நட்புதான் காதல் காதல்தான்,
காதல் மாறலாம் நட்பு மாறுமா?
காதல் ஒன்றும் தவறே இல்லை,காதல் இன்றி மனிதன் இல்லை,
நண்பர்களும் காதலராகமாறிய பின் சொல்லியதுண்டு,
இப்போ நீயும் நானும் பழகுறோமே காதலாகுமா?
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும் நட்பு மாறுமா?
தோழா தோழா கனவுத் தோழா,
தோழா தோழா தோள்கொடு கொஞ்சம்
சாஞ்சிக்கணும்,நீயும் நானும் வெகுநேரம்
மனம்விட்டுப் பேசிச் சிரித்தாலும்,
பிரியும் பொழுதில் சில நொடிகள்
மெளனம் கொள்வது ஏன் தோழி
புரிதலில் காதல் இல்லையடி,
பிரிதலில் காதலைச் சொல்லி விடு,
காதல் காதல்தான் நட்பு நட்புதான்,
நட்பின் வழியிலே காதல் வளருமே!
பிரிந்து போன நட்பினைக் கேட்டால்,
பசுமையான கதைகளைச் சொல்லும்,
பிரியமான காதலும் கூடபிரிந்த பின்னே
ரணமாய்க் கொள்ளும்
ஆணும்
பெண்ணும் காதல் இல்லாமல்
பழகிக்கலாம்ஆ... இது correctஆயுள் முழுதும்
களங்கப்படாமல் பார்த்துக்கலாம்தோழா தோழா
கனவுத் தோழாதோழா தோழா தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்நட்பைபப் பற்றி
நாமும் பேசித் தீர்த்துக்கணும்.
உன்னை நான் புரிஞ்சுக்கணும்
ஒன்னொண்ணா தெரிஞ்சிக்கணும்ஆணும்
பெண்ணும் காதலில்லாமல் பழகிக்கலாம்
அது ஆயுள் முழுதும் களங்கப்படாமல் பார்த்துக்கலாம்.
03 மே 2010
நினைத்தேன் வலிக்கிறது!!!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfKezTEA83m8uQb0mKEQ4tZbaOVaeLEhSCBqjqhpC1oJHmeYBv5G8sUzKcE5kMppOmOzc9zphyphenhyphenH9YkZMmA98A9t56rPGuxcXQzsnoam34oQiV9ZXQH8OLtADKl1_FRKrEpYchsmB8UVotI/s320/27201_116883191662067_100000211605135_273464_3058439_n.jpg)
எங்கள் ஊர் அழகான சிறுகிராமம்,
விவசாயக்கிராமம்
என்பதால்தோட்டங்களும்
வயல்வெளிகளும் நிறையவே உண்டு,
மாரிகாலமென்றால்
வயல்வெளி எங்கும்
வெள்ளம் நிரம்பி ஓடும்,
மீன்கள் எல்லாம் ஓடிவிளையாடும்,
பறவைகளினதும்,
பூச்சிகளினதும் ரீங்காரம்ஒலி
எழுப்பிக்கொண்டேயிருக்கும்,
சிறுவர்களாகிய நாம்
ஓடி விளையாடி
வெள்ளங்களில் வெடி அடித்து
குதூகலித்துக்கொண்டிருப்போம்,
அப்பா,அம்மா,சகோதரங்கள்உறவினர்,
ஊரவரென எமதூரே ஒரு வீடு போல்தான் இருக்கும்,
அந்தவாழ்க்கையையும் சந்தோசத்தையும் இன்று நினைக்கத்தான்முடிகிறதேதவிர
அனுபவிக்க முடிவதில்லை,
வாழ்க்கையும்எப்படி
எப்படியெல்லாமோ ஆகிவிட்டது,
ஒவ்வொருவரும்ஒவ்வொரு
திக்காய் ஆகிவிட்ட அவலம்,
எந்த இனமுமே கண்டிராதமாபெரும்
கொடூரத்தை எம்மினம் சந்தித்தது,
எம்மை தாலாட்டி சீராட்டி
கண்போலகாத்த எம் தந்தையும்
எமை விட்டு பிரிந்து விட்ட மாதுயரம்,
கொள்ளியிடக்கூட செல்ல முடியாத
பாவியானேனே எனும் ஏக்கம்,
இப்படி இன்னுமின்னும்
எத்தனையோ
துன்பங்களுள் தவிக்கும் எம்மினம்,
எங்கே செல்ல யாரிடம் சொல்ல?.
கேள்விகளுடனே எமது பயணம்.
02 மே 2010
நிலா மறக்க முடியாதவள்!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvmHuBsK1T0NjH1UyOv-RLWwP_tmwk4F4DloTcsdzTermx6hydk_xxw1h62WYtYqdFLzwrYrJvT3w3epat58k9ZaQ58m3eFuML1oAPmvURDtZqK_cAUgmUBzsXLt1s9Nzycf_uBd8BkeQf/s320/anjali_31_109200755900123.jpg)
நிலா மறக்க முடியாதவள்,
வானத்திலிருந்து கொண்டே,
பூமியை சுற்றிவட்டமிடுகிறாளேஅந்த நிலா போல,
நிலா மறக்க முடியாதவள்,
நிலா மறக்க முடியாதவள்,
தக்காளிப்பழத்திற்கு உறைஅணிந்தது போல
அவள்எழில் மேனியை மூடி நிற்கும்வர்ண ஆடைகள்,
மின்சாரத்தில் இயங்கும்மின்குமிழ்கள் போலவிட்டு விட்டு
துடிக்கும்நீல நிறக்கண்கள்,
நிலா மறக்க முடியாதவள்,
நிலா மறக்க முடியாதவள்,
தங்கத்தில் முத்து பதித்ததுபோலகன்னங்களை
அலங்கரிக்கும்வட்டக் குழிகள்,
மொட்டு மலர்ந்தது போலேபுன்னகைக்கும் இதழ்கள்,
நிலா மறக்க முடியாதவள்,
வானத்திலிருந்து கொண்டேபூமியை சுற்றி வட்டமிடுகிறாளேஅந்த நிலா போலநிலா மறக்க முடியாதவள்.
நிலா மறக்க முடியாதவள்,
வானத்திலிருந்து கொண்டேபூமியை சுற்றி வட்டமிடுகிறாளேஅந்த நிலா போலநிலா மறக்க முடியாதவள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)