என் பையன் தங்கமானவன்யா... அவன் யாரை காதலிச்சாலும் ஏத்துக்குவேன்னுதான் சொன்னேனே தவிர ஹன்சிகாங்கிற பேரை நான் சொல்லவே இல்லை. இப்படிதான் நயன்தாரா கூடவும் என் பையனை இணைச்சி எழுதிட்டாங்க...
சமீபத்தில் நடந்த சினிமா விழாவில் டி.ஆர். புலம்பியதை கேட்டு அதிர்ந்தது கூட்டம். சிம்புவும், நயன்தாராவும் டைட்டா உதட்டை கடிச்சுகிட்ட போட்டோவை உலகமே பார்த்தது. அதுக்கப்புறமுமா இப்படியொரு பேசசு..? சிம்பு ஹன்சிகாவை இளவரசி என்று இணையத்தில் கொஞ்சிக் கொண்டிருக்கிறார். ஹன்சிகா ஒருபடி மேலே போய் இருவரும் பார்ட்டியில் கட்டிப் பிடித்து நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிட்டு தமிழகத்தின் காதில் புகை வர வைக்கிறார். டி.ஆர். பேப்பரே படிக்கிறதில்லையா. இல்லை தாடி வச்ச பச்சக் குழந்தையா...?
விசேஷத்துக்கு நாள் பார்க்கிறதை விட்டுட்டு இது என்ன பொய் புலம்பல் டி.ஆர். சார்...?
14 ஆகஸ்ட் 2013
07 ஆகஸ்ட் 2013
பள்ளி தாளாளர் வீட்டில் இயக்குனர் சேரன் மகள்!
காதல் விவகாரத்தில் சிக்கியுள்ள சேரனின் மகள் தாமினி தந்தையுடன் செல்ல விருப்பமிலை என்று கூறியதையடுத்து இரண்டு வாரங்களுக்கு பள்ளி தாளாளர் வீட்டில் தங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் சேரன் மகள் தாமினி, சினிமா டான்சர் சந்துருவை காதலித்தார். மகளின் காதலை மறுத்தார் சேரன். இதனால் சந்துருவின் வீட்டுக்கு தாமினி சென்றுவிட்டார்.
பின்னர் இந்த விஷயம் வெளி உலகுக்கு தெரிய வந்தது. சந்துருவின் நடவடிக்கைகள் சரியல்ல என்பதால் மகளின் காதலை மறுப்பதாக சேரன் அறிவித்தார். ஆனால், சந்துருவுடன்தான் வாழ்வேன் என்று தாமினி பிடிவாதமாக இருக்கிறார்.
இந்த காதல் விவகாரம் போலீஸ் வரை சென்றதால், தாமினியை அரசு இல்லத்தில் போலீசார் தங்க வைத்தனர். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் சந்துருவின் தாயார் ஈஸ்வரி அம்மாள் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதிகள் வி.தனபாலன், சி.டி.செல்வம் ஆகியோர் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது தாமினியை, நீதிபதிகள் மேடைக்கு அழைத்து பேசினர். சந்துருவுடன் செல்வதில் அவர் உறுதியாக இருந்தார்.
ஆனால் சேரனும், அவரது மனைவி செல்வராணியும் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர். எனவே ஒருநாள் மட்டும் வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத்தின் பாதுகாப்பில் தாமினியை அனுமதித்து நீதிபதிகள் நேற்று முன்தினம் உத்தரவிட்டனர்.
நேற்று பிற்பகல் நீதிபதி வி.தனபாலனின் அறையில் விசாரணை நடத்தப்பட்டது.
சேரன், செல்வராணி, உறவினர்கள் மற்றும் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் ஏராளமாக வந்திருந்தனர். சந்துருவின் தாயார் ஈஸ்வரி, சகோதரிகள் மற்றும் உறவினர்கள், வக்கீல் ஏ.ரமேசின் உதவியுடன் நீதிபதி அறைக்கு முன்பு வந்தனர்.
சந்துருவின் தாயார் மற்றும் சகோதரிகள் தாங்கள் கடுமையாக மிரட்டப்படுவதாகவும், கோர்ட்டுக்கு வரும் வரை தொடர்ந்து மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
முதலில் தாமினியை நீதிபதிகள் அழைத்து பேசினர். சுமார் 20 நிமிடங்கள் விசாரணை நடந்தது. அதன் பின்னர் மனுதாரர் ஈஸ்வரி அம்மாள் அழைக்கப்பட்டார். அவர் தெலுங்கு பேசுபவர், தமிழ் சரிவர தெரியாது என்பதால், மகள் பத்மாகவுரியை உடன் அழைத்து சென்றார். அவர்களிடம் 20 நிமிடங்கள் விசாரணை நடந்தது.
பின்னர் சேரன் தனியாக அழைக்கப்பட்டார். ஒரு மணி நேரம் அவர், நீதிபதிகளுடன் பேசினார். பின்னர் அனைத்து தரப்பினரின் வக்கீல்களையும் நீதிபதிகள் அழைத்து பேசினர். அதன் பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
இரண்டு தரப்பினரிடமும் நீண்ட நேரம் விசாரணை மேற்கொண்டோம். இப்படிப்பட்ட சூழ்நிலை வந்ததை ஒவ்வொருவரும் விவரித்தனர். தாமினியின் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதை இரண்டு தரப்பினரும் தெரிவித்தனர். அவர்கள் சொன்ன சில விஷயங்கள், இந்த வழக்கின் பிற்பகுதியில் விசாரிக்கப்படும்.
சமுதாயத்தில் பிரபலமானவர்கள் என்பதால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் பாதுகாப்பு கவனிக்கப்பட வேண்டும். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி வேறு யாரும் புகுந்து தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளக் கூடாது.
இரண்டு தரப்பினரும் கொடுத்துள்ள கருத்துகளை பரிசீலித்தோம். இரண்டு தரப்பினர் வீட்டிலும் எழுந்துள்ள தற்போதைய சூழ்நிலையின்படி, தாமினி நல்ல பாதுகாப்புடன் கூடிய வீட்டில் தங்குவதுதான் சிறந்தது என்று கருத்து தெரிவித்தனர்.
அதன்படி, தியாகராயநகரில் உள்ள ஸ்ரீ ஷெரைன் வேளாங்கண்ணி மேல் நிலைப்பள்ளியின் (தாமினி படித்த பள்ளி) தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் பி.கே.கே.பிள்ளையின் வீட்டில் இரண்டு வாரங்களுக்கு தங்குவதற்கு உத்தரவிடப்படுகிறது. இதற்கு தாமினியும், மற்ற தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர். 21-ந் தேதி கோர்ட்டில் தாமினி ஆஜராக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து தாமினியை பி.கே.கே.பிள்ளை அழைத்துச் சென்றார்.
26 ஜூலை 2013
வாள் சண்டையில் அனுஷ்கா காயம்!
![]() |
| அனுஷ்கா |
20 ஜூன் 2013
வருந்துகிறார் கவிதா வர்மா!
![]() |
| கவிதா வர்மா |
25 மே 2013
டி.எம்.செளந்தரராஜன் காலமானார்!
![]() |
| டி.எம்.செளந்தரராஜன் |
07 மே 2013
திரிஷாவிற்கு ஒன்று அம்மாவுக்கு ஒன்று!
![]() |
| திரிஷா |
03 மே 2013
மீண்டும் வருகிறார் சிம்ரன்!
![]() |
| சிம்ரன் |
27 ஏப்ரல் 2013
இனியாவின் முத்தக் கோபம்!
![]() |
| இனியா |
24 ஏப்ரல் 2013
தமிழில் நடிக்காமல் ஒதுங்கும் பிரணிதா!
![]() |
| பிரணிதா |
23 ஏப்ரல் 2013
லால்குடி ஜெயராமன் மறைந்தார்!
பிரபல வயலின் இசைக் கலைஞர் லால்குடி ஜெயராமன் நேற்று திங்கட்கிழமை சென்னையில் தமது 82 வது வயதில் காலமானார். பக்கவாத பாதிப்பு ஏற்பட்ட பிறகு சில காலம் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
திருச்சி மாவட்டம் லால்குடியில் பிறந்த அவர் பல இசை மேதைகளுக்கு பக்கவாத்தியம் வாசித்தும், தனியாகவும் சுமார் 70 ஆண்டுகள் இசை உலகில் பிரகாசித்து வந்தார்.
வயலின் வாசிப்பில் 'லால்குடி பாணி' எனும் முறையை ஏற்படுத்தியவர் என்கிற பெருமையும் அவருக்கு உண்டு. அவரது வயலின் வாசிப்பு ஏறத்தாழ பாடுவது போலவே இருக்கும் என்று இசை விமர்சகர்கள் கூறுவார்கள்.
அனைத்துவித இசைக்கருவிகளின் தனித்தன்மைகளையும் நன்குணர்ந்திருந்தவர் லால்குடி ஜெயராமன் என்று அவருடன் நெருக்கமாக இணைந்து இசையுலகில் பயணித்தவர்கள் சொல்வார்கள்.
கர்நாடக இசையில் பெரும் ஆளுமை செலுத்தி வந்த மதுரை மணி ஐயர், எம் எம் தண்டபாணி தேசிகர், முசிறி சுப்ரமணிய ஐயர், மதுரை சோமு, மகாராஜபுரம் சந்தானம் உட்பட புகழ்பெற்ற பல கலைஞர்களுடன் லால்குடி ஜெயராமன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
70 ஆண்டுகள் இசை வாழ்க்கை
எனினும் அவரது தந்தை கோபால ஐயரைப் போலவே எந்த ஒரு பெண் பாடகருக்கும் அவர் பக்கவாத்தியம் வாசித்தது இல்லை என்கிற விமர்சனமும் அவர் மீது இருந்தது.
லால்குடி ஜெயராமன் தனது 12 வது வயதில் ஒரு பக்கவாத்தியக்காரராக தனது இசைப் பயணத்தை தொடங்கினார்.
தனது 70 ஆண்டு கால இசை வாழ்க்கையில் ஒரு வயலின் கலைஞராக மட்டுமல்லாமால் ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் திகழ்ந்த அவர் பல வர்ணங்கள், பாடல்கள் மற்றும் தில்லானாக்களை அவர் இயற்றியுள்ளார்.
தனி வாசிப்பு, பக்கவாத்தியம் என்பதற்கு அப்பாற்பட்டு வயலின், வீணை, புல்லா
ங்குழல் ஆகிய வாத்தியங்களை ஒரே நேரத்தில் வாசிக்கும் வீனா-வேணு-வயலின் எனும் ஒரு புதிய கச்சேரி வகையையும் அவர் அறிமுகப்படுத்தினார். எடின்பரோ நகரில் நடைபெற்ற ஓர் இசை விழாவில் லால்குடி ஜெயராமன் வயலின் வாசிப்பை மிகவும் வியந்து புகழ்ந்த பிரபல மேற்கத்திய வயலின் கலைஞர் யஹூதி மெனுயின் தனது இத்தாலிய வயலினை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். இந்திய அரசின் பத்மவிபூஷன் விருது உட்பட பல உயரிய விருதுகளையும் கௌரவ டாக்டர் பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார். லால்குடி ஜெயராமன் இசை அமைத்த ஒரே தமிழ்த் திரைப்படமான சிருங்காரம் படத்திற்கு தேசிய விருது பெற்றார். அவரது மறைவுக்கு பல்தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நன்றி:பி.பி.சி
ங்குழல் ஆகிய வாத்தியங்களை ஒரே நேரத்தில் வாசிக்கும் வீனா-வேணு-வயலின் எனும் ஒரு புதிய கச்சேரி வகையையும் அவர் அறிமுகப்படுத்தினார். எடின்பரோ நகரில் நடைபெற்ற ஓர் இசை விழாவில் லால்குடி ஜெயராமன் வயலின் வாசிப்பை மிகவும் வியந்து புகழ்ந்த பிரபல மேற்கத்திய வயலின் கலைஞர் யஹூதி மெனுயின் தனது இத்தாலிய வயலினை அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். இந்திய அரசின் பத்மவிபூஷன் விருது உட்பட பல உயரிய விருதுகளையும் கௌரவ டாக்டர் பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார். லால்குடி ஜெயராமன் இசை அமைத்த ஒரே தமிழ்த் திரைப்படமான சிருங்காரம் படத்திற்கு தேசிய விருது பெற்றார். அவரது மறைவுக்கு பல்தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நன்றி:பி.பி.சி
21 ஏப்ரல் 2013
பிரபுதேவா படத்தில் சிங்கள நடிகை!
கோடம்பாக்கத்தில் இருந்து எந்தவொரு நடிகரோ, நடிகையோ படப்பிடிப்புக்காககூட இலங்கைக்கு செல்லக்கூடாது என்றொரு கட்டுப்பாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழில் பிசியாகி இந்திக்கு சென்ற அசின்கூட ஒரு பாலிவுட் படத்துக்காக இலங்கை சென்று வந்த ஒரே காரணத்துக்காக அவரை தமிழ்ப்படத்தில் நடிக்க வைக்கக்கூடாது என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தெலுங்கில் தான் இயக்கியுள்ள ராமைய்யா வாஸ்தவைய்யா என்ற படத்தில் ஒரு நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க வைத்துள்ள பிரபுதேவா, இன்னொரு வேடத்தில் நடிக்க ஜாக்குலின் பெர்ணான்டஸ் என்றொரு சிங்கள நடிகையை நடிக்க வைத்துள்ளாராம். இந்த விசயத்தை இதுவரை சீக்ரெட்டாகத்தான் வைத்திருந்தார். ஆனால் இப்போது படம் திரைக்கு வருவதால் வெளியில் கசிந்து விட்டது.
அதோடு, மேற்படி நடிகையும் ஆந்திர மீடியாக்களுக்கு தான் கொடுக்கும் பேட்டிகளில் தனது மொத்த புராணத்தையும் வாசித்து விட்டதால், இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கோலிவுட் கலைஞர்கள் கடும் ஆவேசமடைந்துள்ளனர். தமிழ் சினிமா நடிகரான பிரபுதேவா, எப்படி ஒரு சிங்கள நடிகையை தனது படத்தில் நடிக்க வைக்கலாம் என்று சொல்லிக்கொண்டு, அவர் அடுத்து தமிழ்நாட்டுப்பக்கம் வரட்டும் என்று போர்க்கொடி பிடிக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
17 ஏப்ரல் 2013
டி.கே.ராமமூர்த்தி காலமானார்!
பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது (92).
மூச்சுத்திணறல் காரணமாக டி.கே.ராமமூர்த்தி நேற்று தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் காலமானார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
திரையிசையில் மகத்தான சாதனை படைத்தவர்கள் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் -டிகே.ராமமூர்த்தி. இருவரும் இணைந்து 700க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளனர். ராமமூர்த்தி, தனியாகவும் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
15 ஏப்ரல் 2013
திரையுலகம் கண்ணீர் அஞ்சலி!
தமிழ் சினிமாவில் இசையில் தனக்கென ஒரு இடம் வகித்த பி.பி. ஸ்ரீனிவாஸ் நேற்று மரணமடைந்தார். அவர் உடல் இன்று சென்னையில் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி விடை கொடுத்தனர். 83 வயதான பி.பி.ஸ்ரீனிவாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், ரவிச்சந்திரன், என்.டி.ராமாராவ், ராஜ்குமார் படங்களில் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார். பி.பி.ஸ்ரீனிவாஸ் உடல் சி.ஐ.டி. நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. பி.பி.ஸ்ரீனிவாஸ் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். முதல்வர் சார்பில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேயர் சைதை துரைசாமி, இசையமைப்பாளர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், சங்கர் கணேஷ், தேவா, கவிஞர்கள் வாலி, வைரமுத்து, பின்னணி பாடகிகள் பி.சுசிலா, எஸ். ஜானகி, வாணிஜெயராம், மாலதி, எஸ்.பி.சைலஜா உள்பட திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திர சேகர் ஆகியோர் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில், "பி.பி.ஸ்ரீனிவாஸ் தேனிசை குரலாக ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி ரசிகர்கள் உள்ளங்களில் நிறைந்தார். தமிழக அரசு அவருக்கு இயல் இசை நாடக மன்றத்தில் பதவி அளித்து கவுரவித்தது. பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். பி.பி.ஸ்ரீனிவாஸ் உடல் இன்று பிற்பகல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
13 ஏப்ரல் 2013
ஆஜரானார் அஞ்சலி!
காணாமல் போய்விட்டதாக கடந்த ஒரு வார காலம் பரபரப்பாக பேசப்பட்ட அஞ்சலி, நேற்று இரவு ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஆஜரானார். தன் சித்தி பாரதி தேவியும் இயக்குநர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்துவதாக பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்த அஞ்சலி, ஹைதராபாத் ஓட்டலிலிருந்து கடந்த திங்கள் கிழமை மாயமானார். இதுகுறித்து அவரது சகோதரர் ஹைதராபாத் போலீசில் புகார் செய்தார். அவரது சித்தி பாரதி தேவி சென்னை போலீசில் புகார் செய்தார். சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஆட்கொணர்வு மனு அளித்திருந்தார். அஞ்சலி படங்கள் இந்நிலையில், 12.04.2013 வெள்ளிக்கிழமை இரவு நடிகை அஞ்சலி ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் போலீஸ் முன் ஆஜரானார். கடந்த 5 நாட்களாக அஞ்சலி எங்கு தங்கியிருந்தார்? அவருக்கு அடைக்கலம் தந்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். ஹைதராபாத் வடக்கு பகுதி துணை கமிஷனர் சுதீர் பாபு கூறுகையில், "மன உளைச்சல், தொடர்ச்சியான ஷூட்டிங் காரணமாக மும்பை சென்றிருந்ததாக அஞ்சலி கூறினார். அவரது வாக்குமூலத்தை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்," என்றார். ஹைதராபாத் போலீசாரின் விசாரணைக்குப் பிறகு நடிகை அஞ்சலி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் ஆஜராகி விளக்கமளிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
10 ஏப்ரல் 2013
நயன்தாரா நடித்துள்ள லவ் ஸ்டோரி!
நாகார்ஜூனாவுடன் நயன்தாரா நடித்துள்ள லவ் ஸ்டோரி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
தாசரி நாராயண ராவ் தயாரிப்பில், தெலுங்கு இயக்குநர் தசரத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில்தான் இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. தமாம் இசையில் உருவான இப்படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் அமெரிக்காவில் முடிந்து விட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.
அமெரிக்காவில் நாசா மையத்துக்கு அருகே இப்படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பது படத்தின் சிறப்பாகக் கூறப்படுகிறது.
நயன்தாராவின் மறுப்பிரவேசத்தை அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இப்படம் நிச்சயமாக நல்ல விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் பெயரிடப்படாத இப்படத்தை ஏப்ரல் 19ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
09 ஏப்ரல் 2013
அஞ்சலி ஹோட்டலில் இருந்து மாயம்!
ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நடிகை அஞ்சலி மாயமாகியுள்ளார். சித்தியுடன் ஏற்பட்ட தகராறுக்கு பிறகு நடிகை அஞ்சலி தனது சித்தப்பாவுடன் ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.
ஹோட்டலில் தங்கி அவர் ஷூட்டிங்கிற்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் இருந்து அவரைக் காணவில்லை. அவரது சித்தப்பா வெளியே சென்றபோது அஞ்சலி மாயமாகியுள்ளார். அவரது செல்போனுக்கு அழைத்தாலும் சுவிட்ச் ஆப் என்று வருகிறது. அஞ்சலி இந்தி படமான போல் பச்சன் தெலுங்கு ரீமேக்கில் அசின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த பட ஷூட்டிங்கிற்காக தான் அவர் ஹைதராபாத்தில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் மாயமாகியுள்ளதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. தனது சித்தியும், இயக்குனர் களஞ்சியமும் பணத்துக்காக தன்னை கொடுமைப்படுத்துவதாக அஞ்சலி புகார் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோட்டலில் தங்கி அவர் ஷூட்டிங்கிற்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் இருந்து அவரைக் காணவில்லை. அவரது சித்தப்பா வெளியே சென்றபோது அஞ்சலி மாயமாகியுள்ளார். அவரது செல்போனுக்கு அழைத்தாலும் சுவிட்ச் ஆப் என்று வருகிறது. அஞ்சலி இந்தி படமான போல் பச்சன் தெலுங்கு ரீமேக்கில் அசின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த பட ஷூட்டிங்கிற்காக தான் அவர் ஹைதராபாத்தில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் மாயமாகியுள்ளதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. தனது சித்தியும், இயக்குனர் களஞ்சியமும் பணத்துக்காக தன்னை கொடுமைப்படுத்துவதாக அஞ்சலி புகார் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
08 ஏப்ரல் 2013
அவுஸ்திரேலியாவில் சூதாடிய அமலா!
ஆஸ்திரேலியாவில் நடிகர் சுரேஷுடன் இணைந்து சூதாடி வெற்றி பெற்றிருக்கிறார் நடிகை அமலாபால்.
விஜய் நடிக்கும் 'தலைவா' படத்தின் படப்பிடிப்பு இப்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார் நடிகை அமலாபால்.
படப்படிப்பு முடிந்ததும் அமலாபாலுக்கு ரொம்பவே போரடித்து விட்டதாம். இதனால் வெளியே சுற்றிப் பார்க்க கிளம்பிய அவர் அன்றைய பொழுதை கழிக்க சூதாட்ட விடுதிக்குள் புகுந்து ஒரு ஆட்டம் ஆடினாராம். முதலில் தோல்வியை சந்தித்த அமலாபால் பின்னர் சுரேஷுடன் இணைந்து ஆடியிருக்கிறார். அதில் அமலாபாலுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
இதனை பெருமையாக சொன்ன அமலா பால், சூதாட்டத்தில் தனக்கு மிகவும் ராசியான ஜோடி சுரேஷ்தான். நானும் அவரும் ஒரு ஆட்டத்தில் வென்றோம் என்று கூறியுள்ளார்.
31 மார்ச் 2013
சில்க்காக சனா கான்!
சில்க் ஸ்மிதா கதையை தழுவி உருவாகியுள்ள நடிகையின் டைரி படம் விரைவில் திரைக்கு வருகிறது.இதில் சில்க் வேடத்தில் சனா கான் நடித்துள்ளார். மலையாளத்தில் சில்க் கதையை கிளைமாக்ஸ் என்ற பெயரில் அனில் இயக்குகிறார்.இதில் சனா கான் நடிக்கிறார்.அதே படம் தமிழில் Ôநடிகையின் டைரிÕ பெயரில் ரிலீசாக உள்ளது. டிஜிட்டல் என்டர்டெய்னர் ஹெச்.ஏ.கே. தயாரித்துள்ளார். இப்படத்தில் பாடல்களை எழுதி, நிர்வாக தயாரிப்பு பொறுப்பை Ôசிலந்தி¤Õஇயக்குனர் ஆதிராம் ஏற்றுள்ளார். அவர் கூறியதாவது, சில்க் கதை என்ற பெயரில் பலர் படம் எடுக்கிறார்கள். ஆனால் அவையெல்லாம் அவரது வாழ்க்கை கதை படங்கள் அல்ல. சில்க் ஸ்மிதா முதலில் மலையாளத்தில்தான் நடித்தார்.அவரை மலையாளத்தில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் ஈஸ்ட்மென் ஆண்டனி.சில்க் பற்றி அறிந்தவர்.அவரே இப்படத்துக்கு கதை எழுதியுள்ளார்.கேரளா,ஆந்திரா தவிர மற்ற இடங்களில் தமிழில் இப்படத்தை வெளியிடும் பொறுப்பை ஏற்றுள்ளேன்.வெறும் கவர்ச்சியை நம்பி இப்படம் எடுக்கப்படவில்லை.கனமான திரைக்கதை இதில் இருக்கும்.
28 மார்ச் 2013
நயன்தாராவுடனான என் நட்பு உண்மைதான்!
சினிமாவில் எந்த நடிகையுடனும் இல்லாத அளவுக்கு நெருக்கமாக நயன்தாராவுடன் பழகி வருவது உண்மைதான். ஆனால் அது திருமணமாக மாறுமா என்றெல்லாம் சொல்ல முடியாது என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார். கடந்த சில வாரங்களாக சினிமா உலகில் அதிகம் கிசுகிசுக்கப்படுவது நயன்தாரா - ஆர்யா நெருக்கம்தான். நயன்தாரா ஏற்கெனவே சிம்பு, தனுஷ், பிரபுதேவா ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர். சிம்பு - நயன் காதல் மற்றும் மோதல் ரொம்ப பிரபலம். அதேபோல, நயன்தாராவை திருமணம் செய்ய தன் மனைவியை விவாகரத்து செய்தவர் பிரபு தேவா. ஆனால் அந்தக் காதலும் முறிந்துவிட்டது. இப்போது நயன்தாராவின் புதிய காதலன், அதையும் தாண்டி திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் என ஆர்யாவைக் குறிப்பிடுகிறார்கள். இதுகுறித்து ஆர்யாவே இப்போது மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், "நானும் நயன்தாராவும் நெருங்கிப் பழகுவது உண்மைதான். இந்த இன்டஸ்ட்ரியில் எனக்கு ஏகப்பட்ட நடிகைகளுடன் நல்ல பழக்கம் உள்ளது. ஆனால் அதையெல்லாம் தாண்டி, நெருக்கமான உறவு நயன்தாராவுடன் உள்ளது. அவருடன் பல தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. எங்கள் உறவு பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கு எல்லாம் பதில் சொல்வது கஷ்டம்.எங்கள் நட்பின் அடுத்த கட்டம் என்ன என்பது குறித்தெல்லாம் இப்போது சொல்ல முடியாது,"என்றார்.
26 மார்ச் 2013
நடிகை சுகுமாரி மரணம்!
பிரபல திரைப்பட நடிகை சுகுமாரி சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74. நாகர்கோவிலில் கடந்த 1940 ஆம் ஆண்டு பிறந்த சுகுமாரி, தமிழில் ஓரிரவு என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.
மறைந்த பிரபல திரைப்பட இயக்குநர் ஏ பீம்சிங்கை திருமணம் செய்து கொண்ட சுகுமாரிக்கு சுரேஷ் என்ற மகன் உள்ளார். பாசமலர், பட்டிக்காடா பட்டணமா உள்ளிட்ட 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.
இதில் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்கள் அடங்கும். நடிப்பில் தனி முத்திரை பதித்துள்ள சுகுமாரிக்கு, கடந்த 2003 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இது தவிர தேசிய திரைப்பட விருது, கேரள மாநில அரசின் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். திரையுலகில் புகழுடன் வலம்வந்த லலிதா,பத்மினி, ராகினி சகோதரிகளின் உறவினராவார் சுகுமாரி.
தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்.மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். சுகுமாரியின் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















.jpg)


