|
அனுஷ்கா |
அனுஷ்கா குதிரையில் அமர்ந்தபடி வாள் சண்டை போடும் காட்சியில் எதிர்பாராமல் வாள் அவர் உடம்பில் பட்டு காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.ஒக்கடு (தமிழில் கில்லி)படத்தை இயக்கிய குணசேகர் பிரமாண்டமாக தயாரித்து இயக்கும் சரித்திரப் படம் ருத்ரம்மாதேவி.அனுஷ்கா ருத்ரம்மாதேவியாக நடிக்கிறார்.இந்தப் படத்துக்காக வாள் சண்டை, குதிரையேற்றம் என பல வித்தைகளில் பயிற்சி எடுத்தார் அனுஷ்கா. 150 நாட்கள் இந்தப் படத்துக்கு மட்டும் கால்ஷீட் தந்துள்ளார். ராணா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் மகேஷ்பாபு சின்ன கெஸ்ட் ரோல் ஒன்றில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.வாள் சண்டை போடும் காட்சியில் எதிர்பாராமல் வாள் அவர் உடம்பில் பட்டு காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.டம்மி வாள் என்பதால் சின்ன காயத்துடன் தப்பியிருக்கிறhர்.உடனே படப்பிடிப்பை நிறுத்தி காயத்துக்கு சிகிச்சையளித்திருக்கிறார்கள்.
அனுஷ்கா தற்போது நடித்து வரும் பாகுபலியும் சரித்திரப் படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக