பக்கங்கள்

23 டிசம்பர் 2014

கே.பாலச்சந்தர் ஒரு பார்வை!

1930 ஜூலை 9ம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை கைலாசம், தாயார் காமாட்சியம்மள். நன்னிலத்தில் பள்ளியில் படிக்கும் போதே நாடகம் மற்றும் சினிமா மீது விருப்பம் கொண்டார். தியாகராஜ பாகவதரின் படங்களால் ஈர்க்கப்பட்ட அவர். சினிமா மற்றும் நாடகங்களுக்கு அடிக்கடி சென்றார். இதனால் அவர் மனதில் சினிமா ஆசை வளர்ந்தது. பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., (விலங்கியல்) படிப்பில் சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போதும் கதை எழுதுவது, நாடகங்களில் நடிப்பது போன்ற திறமைகளை வளர்த்துக் கொண்டார். 1949ல் பட்டப்படிப்பை முடித்ததும், முத்துப்பேட்டையில் உள்ள பள்ளியில் ஓராண்டு ஆசிரியராக பணியாற்றினார். அங்கும் மாணவர்களை வைத்து நாடகம் நடத்துவார். 1950ல் சென்னை வந்தார். அங்கு மத்திய அரசின் அக்கவுண்டண்ட் ஜென்ரல் அலுவலகத்தில் கிளார்க் பணியில் சேர்ந்தார். அங்கு இருக்கும்போதே கிடைக்கும் நேரத்தில் நாடக கம்பெனியில் சேர்ந்து நாடகம் இயக்கும் திறமையை வளர்த்துக்கொண்டார். ஆங்கிலத்தில் வெளியான "மேஜர் சந்திரகாந்த்' என்ற நாடகத்தை தமிழில் மொபெயர்த்து இயக்கினார். இந்நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பின் நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், மெழுகுவர்த்தி, நாணல், நவக்கிரகம் உள்ளிட்ட நாடகங்களையும் இயக்கினார். வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, 1965ல் எம்.ஜி.ஆர்., நடிக்கும் தெய்வத்தாய் என்ற படத்துக்கு வசனம் எழுத வாய்ப்பு வந்தது. பின்னர் சர்வர் சுந்தரம் படத்துக்கு வசனம் எழுதினார். அதே ஆண்டு 1965ல் நீர்க்குமிழி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக இயக்குநராக அறிமுகமானார். நடிகர் நாகேஷ் கதாநாயகனாக நடித்தார். இவருடைய பெரும்பாலான படங்களில், குடும்பு உறவுகளுக்கு இடையேயான பிரச்னை, சமூகப் பிரச்சினைகள் ஆகியவை மையக்கருத்தாக அமைந்தன. இதன் பின்னர் பல படங்களை இயக்கினார்.

24 அக்டோபர் 2014

மறைந்த எஸ்.எஸ்.ஆரின் தீவிர ரசிகை லதா ரஜனி!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்க அவரது மனைவி லதா ரஜினிகாந்த், பழம்பெறும் நடிகர் எஸ்.எஸ்.ஆரின் தீவிர ரசிகையாம். இதை அவரே எஸ்.எஸ்.ஆரிடம் கூறியுள்ளார். லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் வாழ்வில் சுவாரஸ்யங்களுக்கு குறைவிருக்காது. பெரியார், அண்ணாவின் சீடராக இருந்தது தொடங்கி இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் வரை அவரது வாழ்க்கையில் எண்ணற்ற சுவரஸ்ய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சில சம்பவங்களை எஸ்.எஸ்.ஆர் பிரபல ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் மறைந்தாலும் அவரது இனிய நினைவுகள் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறோம்.சிவலீலா' நாடகம் நடந்துட்டிருந்த சமயம் போய் "எனக்கு ஒரே வேடத்துல நடித்து அலுத்துவிட்டது. வேற பெரிய வேஷத்துல நடிக்க வையுங்க" என்று டி.கே.எஸ். சிடம் கேட்டாராம் எஸ்.எஸ்.ஆர். செண்பகப் பாண்டியனாக நடிக்க விரும்பம் என்று டி.கே.எஸ்.சிடம் சொன்ன உடன், ஆச்சரியப்பட்ட டி.கே.எஸ். அடுத்த நாடகத்துலேயே என்னை எஸ்.எஸ்.ஆரை ஹீரோவாக்கி மூணே முக்கால் ரூபாயிலயிருந்து 25 ரூபாய் சம்பளமாக உயர்த்தினாராம்.ரஜினி தன்னுடைய சஷ்டியப்தபூர்த்தி விழாவிற்கு எஸ்.எஸ்.ஆருக்கு அழைப்பு விடுத்துள்ளார். நீங்க ஃபங்ஷனுக்கு குடும்பத்தோடு வந்து என்னையும் லதாவையும் ஆசீர்வாதம் செய்யணும்' என்று கேட்டுக்கொண்டாராம். எஸ்.எஸ்.ஆர் தனது மனைவியுடன் ரஜினி மணிவிழாவுக்குப் போனபோது, ரஜினியும், லதாவும் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு நெகிழ்ந்து போனார்களாம். அப்போது ரஜினியின் கைகளில் 500 ரூபாயை கொடுத்தாராம் எஸ்.எஸ்.ஆர். அதை சந்தோஷமாக வாங்கிக் கொண்ட ரஜினி, 'இந்தப் பணத்தை செலவு பண்ணாம பத்திரமா உங்க ஞாபகமா வெச்சுப்பேன்...என்றாராம்.அப்போது, என் வீட்டுக்காரருக்கு எவ்வளவோ ரசிகர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் நான் உங்களுக்குத்தான் ரசிகை என்று கூறினாராம் லதா.கோபாலபுரத்தில் அடிக்கடி சென்று வந்த காலத்தில் சிறுவர்களாக இருந்த ஸ்டாலின், அழகிரி இடையே நடக்கும் சண்டையை விலக்கி விடுவாராம். சொல்வதை கேட்காவிட்டால் அழகிரியின் முதுகில் ஒரே போடாக போடுவாராம். இப்படி எத்தனையோ சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் எஸ்.எஸ்.ஆர்.

21 ஆகஸ்ட் 2014

சமீரா ரெட்டியுடன் மகிந்தவின் வாரிசு!

அது என்னமோ தெரியவில்லை… இந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச மகன் நாமல் ராஜபக்சவுக்கு இந்திய நடிகைகள், குறிப்பாக தமிழ் நடிகைகள் மீது அப்படி ஒரு ஆசை… நினைத்தால் டெல்லிக்கோ மும்பைக்கோ (இதுவரை சென்னைக்கு வரமுடியாத நிலை.. ஆனால் இனி அப்படியெல்லாம் சொல்வதற்கில்லை… ஓஎம்ஆரில் ஆடம்பர ஹோட்டலும் கோடம்பாக்கத்தில் அவருக்கான ஏஜென்டுகளும் தயார்!) சரி மேட்டருக்கு வருவோம்… இந்த நாமல் ராஜபக்சவும் பிரபல தமிழ் நடிகை ஒருவரும் ரொம்ப ரொம்ப நெருக்கமாக இருந்து டிஸ்கஸ் பண்ணிய சமாச்சாரத்தை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். அந்த நடிகையும் இந்த நாமலும் அந்தரங்கமாக உள்ள வீடியோ வேறு முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இன்னொரு பிரபல நடிகையுடன் நமல் ரொம்ப நெருக்கமாக, அணைத்தபடி உள்ள படம் ஒன்று இணையத்தில் வெளியானது. அந்த நடிகை சமீரா ரெட்டி. தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரபலமானவர். தமிழில் வாரணம் ஆயிரம், வேட்டை, வெடி போன்ற படங்களில் நடித்தவர். இந்தப் படம் எடுக்கப்பட்ட இடம் தெரியவரவில்லை.

08 ஆகஸ்ட் 2014

நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் மரணம்!

பிரபல சின்னத்திரை நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் நேற்று சென்னையில் மரணமடைந்தார். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தவர் சுருளி மனோகர். கடந்த ஆண்டு ' இயக்குனர்' என்ற திரைப்படத்தை இயக்கினார்.கிங்காங், போண்டாமணி, ஜாஸ்பர், மனோபாலா, பாலு ஆனந்த், குண்டு கல்யாணம், பாண்டு, அல்வா வாசு, குள்ளமணி, பாவா லட்சுமணன், தேவதர்ஷினி, ஜெய்கணேஷ், ஜெயமணி என தமிழ் சினிமாவில் உள்ள நகைச்சுவை பட்டாளத்தையே இந்தப் படத்தில் நடிக்க வைத்தார் சுருளி. இவர்களுடன் சுருளி மனோகர் ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்கவும் செய்தார். இந்நிலையில், சென்னையில் அவர் நேற்று மரணமடைந்தார். வெகு நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த சுருளி மனோகர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துவிட்டார். மறைந்த சுருளி மனோகருக்கு, மூன்று மகள்கள் உள்ளனர். சுருளி மனோகர் மறைவுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு தரப்பினரும், மற்றும் தொலைக்காட்சி நடிகர், நடிகைகளும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

20 ஜூலை 2014

பிரபல நடிகர் "காதல் தண்டபாணி"மாரடைப்பால் மரணம்!

காதல் படத்தில் நடிகை சந்தியாவின் தந்தையாக நடித்து பிரபலமான தண்டபாணி மாரடைப்பால் மரணம் அடைந்தார். கடந்த 2004ம் ஆண்டு பரத், சந்தியா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் காதல். அந்த படத்தில் சந்தியாவின் அப்பாவாக நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர் தண்டபாணி. அந்த படத்தை அடுத்து அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தன.காதல் படத்தை அடுத்து வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் 160 படங்களில் நடித்துள்ளார் தண்டபாணி.காதல் படம் மூலம் பிரபலமானதால் அவர் காதல் தண்டபாணி என்று அழைக்கப்பட்டார். முதல் படத்திலேயே நடிப்பில் மிரட்டியிருப்பார்.இன்று அதிகாலை உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.தண்டபாணி சரத்குமார் ஹீரோவாக நடித்து வரும் சண்டமாருதம் படத்தில் நடித்து வந்தார். நேற்று கூட அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.தண்டபாணிக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார், நடிகர்கள் சமுத்திரகனி, டெல்லி கணேஷ், இயக்குனர் வெங்கடேஷ், நடிகர் சங்க மேலாளர் நடேசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.தண்டபாணியின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான திண்டுக்கல்லில் நாளை நடைபெறுகிறது.71 வயதான தண்டபாணிக்கு 3 மகன்கள் மற்றும் 1 மகள் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஜூன் 2014

உலகிலேயே கவர்ச்சியில் முதலிடத்தில் பிறேசில் பெண்கள்!

உலகிலேயே கவர்ச்சியான உடலமைப்பு கொண்ட பெண்கள் பிரேசில் நாட்டில்தான் வசிக்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதேபோல கவர்ச்சிகரமான கம்பீரமான ஆண்கள் ஆஸ்திரேலியாவில்தான் இருக்கின்றனர் என்று பெண்கள் கூறியுள்ளனர். கோடை காலம் வந்தாலே மிஸ் டிராவல் என்ற இணையதளம் இதுபோன்ற கருத்துக்கணிப்பை தொடங்கிவிடும். இந்த ஆண்டு அமெ­ரிக்கா முழு­வ­தும் 44,000 ஆட­வர்­கள், பெண்­களி­டம் நடத்­தப்­பட்­டது. அனைவருமே இளை­யர்­கள், திரு­ம­ணம் ஆகா­த­வர்­கள்.இந்த உலகில் கவர்ச்சியான உடலமைப்புக் கொண்ட பெண்கள் யார் என்று கேட்கப்பட்டது. இதில் பெரும்பாலான ஆண்கள், பிரேசில் பெண்கள்தான் உலகிலேயே கவர்ச்சியானவர்கள் என்று தெரிவித்துள்ளனர். உலக கால்பந்து போட்டி தற்போது பிரேசில் நாட்டில் நடைபெறுகிறது. இந்த தகவலைக் கேட்டு அவர்கள் மகிழ்ச்சியில் திளைக்கப் போகிறார்கள்.இவர்களுக்கு அடுத்தபடியாக ரஷ்யா, கொலம்பியா நாட்டுப் பெண்கள் இரண்டாவது, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.இங்கிலாந்து, பிலிப்பினா, ஸ்பானிஸ் பெண்களும் இந்த பட்டியலில் 4 வது, 5வது, 6வது இடத்தைப் பிடித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த படியாக, ஆஸ்திரேலியா, பல்கேரியன், தென்ஆப்ரிக்கா பெண்கள் உள்ளனர். கனடாவைச் சேர்ந்த பெண்கள் கவர்ச்சிப் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளனர்.இதேபோல கட்டழகான ஆண்கள் என்று பெண்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆஸ்திரேலியா ஆண்கள்தான் கட்டழகும், கவர்ச்சி, கம்பீரமும் கொண்டவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.இத்தாலி, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆண்கள் கம்பீர பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.இவர்களுக்கு அடுத்த படியாக ஸ்பானிஷ் ஆண்களும், அமெரிக்க ஆண்களும் உள்ளனர். ஐரீஷ், பிரேசில், கனடா, டச்சு நாட்டைச் சேர்ந்த ஆண்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.இந்தியாவைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் இந்தப்பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டு கொலம்பியா பெண்களும், இங்கிலாந்து ஆண்களும் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ரசனை மாறிவிட்டது.

14 ஜூன் 2014

வில்லி நடிகை சகுந்தலா மாரடைப்பில் மரணம்!

தூள் படத்தில் வில்லி சொர்ணாக்காவாக நடித்த சகுந்தலா, மாரடைப்பால் நேற்று காலமானார் தமிழில் விக்ரமின் தூள் படத்தில் சொர்ணாக்காவாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை சகுந்தலா ,நடிகர் விஜயின் சிவகாசி படத்தில் பிரகாஷ்ராஜ் மாமியாராக நடித்துள்ளார். 1981-ல் மா பூமி என்ற படத்தில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்துள்ளார் சகுந்தலா. தெலுங்கில் முன்னணி வில்லி நடிகையா இருந்தார். அங்கு இவரை தெலுங்கானா சகுந்தலா என்று அழைத்தனர். 2003-ல் வெளியான ஒக்கடு தெலுங்கு படம் சகுந்தலாவை பிரபல நடிகையாக்கியது. தொடர்ந்து முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் வில்லி, காமெடி, மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். ஹைதராபாத்தில் உள்ள கொம்பள்ளி பகுதியில் உள்ள தனது வீட்டில் சகுந்தலா வசித்து வந்தார். நேற்று நள்ளிரவு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார். சகுந்தலா உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப் பட்டு உள்ளது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். தெலுங்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

08 ஜூன் 2014

விஜய் - அமலாபால் நிச்சயதார்த்தம்!

இயக்குநர் விஜய்க்கும், நடிகை அமலாபாலுக்கும் நேற்று கொச்சியில் உள்ள சர்ச் ஒன்றில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திரைத்துறையில் உள்ளவர்கள் வீட்டு திருமணம் எப்போதுமே மக்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது சகஜமான ஒன்றுதான். அதிலும் நடிகைகள் திருமணம் என்றால் சொல்லவே வேண்டாம். அந்தவகையில், இயக்குநர் விஜய்க்கும், நடிகை அமலாபாலுக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததையடுத்து வரும் 12ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற உள்ளது.மதராசபட்டணம், தெய்வமகள், தலைவா உள்ளிட்ட வெற்றிப்படங்களைத் தந்தவர் இயக்குநர் விஜய். இவரது தெய்வமகள் மற்றும் தலைவா படத்தில் நாயகியாக நடித்தார் அமலாபால்.முதலில் நட்பாக ஆரம்பித்த இவர்களது பழக்கம், ஊடகங்களின் கிசுகிசுவால் நாளடைவில் காதலாக கனிந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமும் ஏற்பாடு செய்யப்பட்டது.அதன்படி, நேற்று கொச்சியில் உள்ள செயிண்ட் ஜூட் சர்ச்சில் விஜய் - அமலாபால் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கிறிஸ்தவ முறைப்படி இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள்.அதனைத் தொடர்ந்து வரும் 12ம் தேதி சென்னையில் மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது.விஜய் - அமலாபால் என இருவருமே திரைத்துறையில் முன்னணியில் உள்ளவர்களாதலால் இத்திருமணத்திற்கு பிரபலங்கள் பலர் நிச்சயம் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறதது.ஏற்கனவே, தங்களது திருமணத்திற்கு வருகை தருபவர்கள் அன்பளிப்பு எதுவும் தர வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு அப்பணத்தை அளித்து விடும்படி விஜய், அமலாபால் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

03 ஜூன் 2014

அமர்க்களப்படுத்திய ரிஹானா!

அமெரிக்காவில் நடந்த விருது விழா ஒன்றில் பிரபல பாப் பாடகி ரிஹானா அங்கமெல்லாம் பளிச்சென்று தெரியும்படி ஆடை அணிந்து வந்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திங்கட்கிழமை நடந்த விருது வழங்கும் விழாவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு பிரபல பாப் பாடகி ரிஹானாவும் வந்திருந்தார். அவர் வந்திருந்ததை நிச்சயம் தனியாக குறிப்பிட வேண்டும். அதற்கு காரணம் அவரின் ஆடை.ரிஹானா தரையை தொடும் அளவுக்கு ஒரு ஆடை அணிந்திருந்தார். ஆனால் அந்த ஆடை கண்ணாடியாக இருந்ததால் அவரது அங்கம் எல்லாம் பளிச்சென்று தெரிந்தது.ஆடை தான் லேசான துணி என்றால் ரிஹானா உள்ளாடை அணியாமல் மூடி மறைக்க வேண்டிய மேல் அழகை இப்படி பளிச்சென்று காட்டியுள்ளார்.ரிஹானா இப்படி ஆபாசமாக ஆடை அணிந்து வந்ததை பலரும் வாயை பிளந்து பார்த்தனர் அதிர்ச்சியில்.ஹாலிவுட் பிரபலங்கள் மேல் அழகையும், கீழ் அழகையும் மட்டுமாவது மறைத்துவிட்டு பிற பகுதிகள் பளிச்சென்று தெரியும் வகையில் ஆடை அணிந்தனர். ரிஹானா அதிலும் ஒருபடி மேலே சென்றுவிட்டார்.

26 ஏப்ரல் 2014

இப்போதைக்கு திருமணமில்லை-விஜய்

நடிகை அமலா பாலும், நானும் சில பொறுப்புகளை முடிக்க வேண்டி இருப்பதால் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை என்று இயக்குனர் விஜய் தெரிவித்துள்ளார்.இயக்குனர் விஜய்யும், நடிகை அமலாபாலும் காதலித்து வருவதாகவும், இருவருக்கும் அடுத்தமாதம் 7ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.இந்நிலையில், இயக்குனர் விஜய் காதல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் கூறியிருப்பதாவது;"ஒருவராக இருந்து இருவராக மாற உள்ள எனது நிலையைப் பற்றி சொல்வதற்கு இதை ஒரு சிறந்த சந்தர்ப்பமாகக் கருதுகிறேன். எனது வாழ்க்கைத் துணையை தேடியது முடிவடைந்து, எனது மனம் கவர்ந்த காதலை அமலாவிடம் கண்டேன். அவர் ஒரு நல்ல மனம் கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். அவர் உண்மையாகவே ஒரு பொக்கிஷம். அதை கண்ணும் கருத்துமாக காதலுடன் பாதுகாப்பேன்.எங்களது திருமண திட்டத்தை கண்ணியமாகவும், முறையாகவும் நாங்களே அறிவிக்க வேண்டும் என்று இருந்தோம். ஆனால், எங்களுக்குத் தெரியாமலே அந்த செய்தி வெளியில் வந்து விட்டது. மீடியாக்களிடமும், நண்பர்களிடமும், எங்களுக்கு வேண்டப்பட்டவர்களிடமும் எங்களது திருமண திட்டத்தைப் பற்றி நாங்கள் மூடி மறைக்க வேண்டும் என்று நினைத்ததேயில்லை. மீடியாக்களையும், நண்பர்களையும் தனிப்பட்ட அழைப்புடன் எங்களது மரியாதையை வெளிப்படுத்தும் விதத்தில் சந்திப்போம்.அமலா பால் சில பொறுப்புக்களை முடிக்க வேண்டும். நானும் எனது மனதுக்கு நெருக்கமான ‘சைவம்' படத்தின் வெளியீட்டை விரைவில் எதிர்நோக்கியுள்ளேன். அதன் பின்தான் எங்களது வாழ்க்கையின் மிக முக்கியமான கொண்டாட்டத்திற்கு நேரம் ஒதுக்க முடியும். அதுவரை என்றென்றும் உங்களது வாழ்த்துகளையும், ஆசீர்வாதங்களையும், ஆதரவையும் வேண்டுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.விஜயை, கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி அமலாபால் வலியுறுத்தி வருவதால் திருமணம் தாமதமாகலாம் என்று செய்தி வெளியாகியிருந்தது.அதற்கேற்ப இந்த அறிக்கை வந்துள்ளது.

29 மார்ச் 2014

"நான்தான் ரொம்ப லேட்"இந்தி நடிகை நிகிதா

நான் இப்போது கன்னித்தன்மை இல்லாத பெண். எனது கன்னித்தன்மையை 23 வயதிலேயே இழந்து விட்டேன். அதற்காக வருத்தப்படவில்லை என்று கூறியுள்ளார் இந்தி கவர்ச்சி நடிகை நிகிதா கோகலே.மாடலிங்கும் செய்து வரும் நிகிதா கோகலே, தனது காதல் குறித்தும், செக்ஸ் உறவுகள் குறித்தும், கன்னித்தன்மையை இழந்தது குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.இதற்காக தான் வருத்தப்படவி்ல்லை என்றும் கல்லூரிப் படிப்பை முடித்ததுமே தான் கன்னித்தன்மையை இழந்ததாகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.கல்லூரிப் படிப்பை முடித்ததுமே நான் உறவில் ஈடுபட்டு விட்டேன். வேலையிலும் சேர்ந்தேன்.என்னுடன் உறவு வைத்துக் கொண்டவன் கல்லூரியில் எனக்கு சீனியர். ஆனால் வயதில் என்னை விட 3 மாதம் சிறியவன்.எப்போதுமே நான் மற்றவர்களிடம் அதிக பாசம் வைப்பேன். ஆனால் அவர்கள்தான் என்னை விட்டு சீக்கிரமே விலகிப் போய் விடுவார்கள். எனது இதயத்தை நேசித்தவர்களை விட நொறுக்கியவர்களே அதிகம்.ஆனால் இப்படிப்பட்ட அதிர்ச்சிகள்தான் என்னை பட்டை தீட்டியது. பக்குவப்படுத்தியது. நான் போல்ட் ஆக இருக்கவும் இதுவே காரணம் என்றார் நிகிதா.நிகிதா, பிளேபாய் பத்திரிக்கைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தவர். அதன் மூலம் பிரபலமானவர்.நிகிதா இந்தக் காலத்து இளசுகள் குறித்துக் கூறுகையில், இப்பெல்லாம் பெண்கள் ரொம்ப வேகமாக இருக்கிறார்கள். 18 வயதிலேயே பலர் கன்னித்தன்மையை இழந்து விடுகிறார்கள். நான் தான் ரொம்ப லேட் என்று நினைக்கிறேன் என்றார் சிரித்தபடி.

06 மார்ச் 2014

ஷகீலாவாக நடிக்கும் அவசியம் இல்லை!

ஷகிலா வேடத்தில் ஆபாசமாக நடித்து டாப் இடம் பிடிக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை என்றார் அஞ்சலி. அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு என தமிழில் வேகமாக முன்னேறிய நடிகை அஞ்சலி. சித்தியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். சீதம்மா வாகிட்லே சிறுமல்லே சிட்டு என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அப்படம் ஹிட் ஆனது. ஆனாலும் எதிர்பார்த்தளவுக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்தார். இந்நிலையில் கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை படத்தில் அஞ்சலி நடிக்க உள்ளதாக தகவல் பரவியது. இதுபற்றி அஞ்சலி கூறும்போது, ஷகிலா வாழ்க்கை படத்தில் நான் நடிப்பதாக கிசுகிசு வருகிறது. நிச்சயம் அந்த வேடத்தில் நடிக்க மாட்டேன். சினிமாவில் முன்னணி இடத்துக்கு வருவது எப்படி என்பது தெரியும். அதற்காக ஆபாசமாக நடித்து முன்னணி இடத்தைபிடிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை என அவர் கோபமாக கூறியுள்ளார்.

06 பிப்ரவரி 2014

விஜயின் ஜோடிக்கு காலில் காயம்!

நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.நடிகை பிரியங்கா சோப்ரா குண்டே இந்தி படத்தில் தன்னுடன் நடித்த ரன்வீர் சிங் மற்றும் அர்ஜுன் கபூர் ஆகியோருடன் காமெடி நைட்ஸ் வித் கபில் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது தான் அவருக்கு காயம் ஏற்பட்டிருந்து தெரிய வந்தது.காமெடி நைட்ஸ் வித் கபில் நிகழ்ச்சிக்கு வந்த பிரியங்காவின் வலது காலில் பேன்டேஜ் இருந்தது. அவர் காயத்தை பொருட்படுத்தாமல் குண்டே விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.காலில் அடிபட்டிருந்தபோதிலும் அவர் அந்த நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடினார். அதுவும் ஹை ஹீல்ஸ் அணிந்து ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.காயமடைந்த முழங்கால், காயமடைந்த மனம், ம்ம்ம்ம்ம்ம் என்று பிரியங்கா சோப்ரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.காயம் ஏற்பட்டதால் ஓய்வு எடுக்காமல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள பிரியங்கா டெல்லி சென்றார். ஐஸ் பையை முழங்காலில் வைத்துக் கொண்டே டெல்லி செல்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.விஜய் தான் என் முதல் ஹீரோ. அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளேன் என்று அண்மையில் ஒரு பேட்டியில் பிரியங்கா சோப்ரா தெரிவித்திருந்தார். அதன்படி மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.விஜய்யும் சரி, பிரியங்காவும் சரி நன்றாக பாடுவார்கள். சிம்புதேவன் படத்தில் அவர்கள் சொந்தக் குரலில் டூயட் பாடி ஆடுவார்களா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

13 ஜனவரி 2014

நடிகை அஞ்சலிதேவி காலமானார்!

பழம் பெரும் தமிழ்த் திரைப்பட நடிகை அஞ்சலிதேவி இன்று திங்கள் சென்னையில் காலமானார். அவர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு வயது 86. எம்.ஜி.ஆர்.,
சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன், என்.டி.ராமராவ், ஏ.நாகேஸ்வரராவ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து அவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள பெத்தாபுரம். நடன நாடகங்களில் புகழ் பெற்ற அஞ்சலிதேவி நாற்பதுகளில் முதலில் தெலுங்கிலும் பின்னர் தமிழ்த் திரைப் படங்களிலும் நடிக்கத் துவங்கினார். பி.யூ.சின்னப்பா, டி.ஆர்,மகாலிங்கம் போன்றவர்களுடன் தோன்றிய அஞ்சலிதேவிக்கு 1955-ல் ஜெமினி கணேசனுடன் இணைந்து நடித்த கணவனே கண்கண்ட தெய்வம் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. சிவாஜி கணேசனுடன் ‘முதல் தேதி’, ‘நான் சொல்லும் ரகசியம்’ படங்களிலும், எம்.ஜி.ஆருடன் ‘சக்ரவர்த்தி திருமகள்‘, ‘மன்னாதி மன்னன்’ ஆகிய படங்களிலும் நடித்தார் அவர். ஆனால் தமிழில், ஜெமினி கணேசனுடன்தான் அதிக படங்களில் நடித்தார் அஞ்சலிதேவி. அவருடன் நடித்த ‘காலம் மாறிப்போச்சு’ குறிப்பிடத்தக்க ஒரு வெற்றிப்படமாகும். அஞ்சலிதேவி, சொந்தப்படங்களைத் தயாரிப்பதிலும் வெற்றி பெற்றார். ஜெமினி கணேசனுடன் ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ படத்திலும், நாகேஸ்வரராவுடன் ‘அனார்கலி‘யிலும் நடித்தார். இந்தப் படங்களில் இடம் பெற்ற பாடல்கள், மிகவும் பிரபலமாயின. இசை அமைத்தவர் அவரது கணவர் ஆதிநாராயணராவ். அஞ்சலிதேவி தயாரித்து இன்னமும் இரசிகர்களை ஈர்க்கும் நகைச்சுவைப் படம் ‘அடுத்த வீட்டுப் பெண்’. தெலுங்கில், என்.டி.ராமராவுடன் பல படங்களில் அஞ்சலி தேவி நடித்துள்ளார். அவற்றில் முக்கியமானது ‘லவகுசா’. இப்படம் தமிழிலும் வெளிவந்தது. அஞ்சலிதேவியின் மறைவுக்கு பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.