பக்கங்கள்

20 ஜூலை 2014

பிரபல நடிகர் "காதல் தண்டபாணி"மாரடைப்பால் மரணம்!

காதல் படத்தில் நடிகை சந்தியாவின் தந்தையாக நடித்து பிரபலமான தண்டபாணி மாரடைப்பால் மரணம் அடைந்தார். கடந்த 2004ம் ஆண்டு பரத், சந்தியா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் காதல். அந்த படத்தில் சந்தியாவின் அப்பாவாக நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர் தண்டபாணி. அந்த படத்தை அடுத்து அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தன.காதல் படத்தை அடுத்து வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் 160 படங்களில் நடித்துள்ளார் தண்டபாணி.காதல் படம் மூலம் பிரபலமானதால் அவர் காதல் தண்டபாணி என்று அழைக்கப்பட்டார். முதல் படத்திலேயே நடிப்பில் மிரட்டியிருப்பார்.இன்று அதிகாலை உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.தண்டபாணி சரத்குமார் ஹீரோவாக நடித்து வரும் சண்டமாருதம் படத்தில் நடித்து வந்தார். நேற்று கூட அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.தண்டபாணிக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார், நடிகர்கள் சமுத்திரகனி, டெல்லி கணேஷ், இயக்குனர் வெங்கடேஷ், நடிகர் சங்க மேலாளர் நடேசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.தண்டபாணியின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான திண்டுக்கல்லில் நாளை நடைபெறுகிறது.71 வயதான தண்டபாணிக்கு 3 மகன்கள் மற்றும் 1 மகள் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக