உலகிலேயே கவர்ச்சியான உடலமைப்பு கொண்ட பெண்கள் பிரேசில் நாட்டில்தான் வசிக்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதேபோல கவர்ச்சிகரமான கம்பீரமான ஆண்கள் ஆஸ்திரேலியாவில்தான் இருக்கின்றனர் என்று பெண்கள் கூறியுள்ளனர். கோடை காலம் வந்தாலே மிஸ் டிராவல் என்ற இணையதளம் இதுபோன்ற கருத்துக்கணிப்பை தொடங்கிவிடும். இந்த ஆண்டு அமெரிக்கா முழுவதும் 44,000 ஆடவர்கள், பெண்களிடம் நடத்தப்பட்டது. அனைவருமே இளையர்கள், திருமணம் ஆகாதவர்கள்.இந்த உலகில் கவர்ச்சியான உடலமைப்புக் கொண்ட பெண்கள் யார் என்று கேட்கப்பட்டது. இதில் பெரும்பாலான ஆண்கள், பிரேசில் பெண்கள்தான் உலகிலேயே கவர்ச்சியானவர்கள் என்று தெரிவித்துள்ளனர். உலக கால்பந்து போட்டி தற்போது பிரேசில் நாட்டில் நடைபெறுகிறது. இந்த தகவலைக் கேட்டு அவர்கள் மகிழ்ச்சியில் திளைக்கப் போகிறார்கள்.இவர்களுக்கு அடுத்தபடியாக ரஷ்யா, கொலம்பியா நாட்டுப் பெண்கள் இரண்டாவது, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.இங்கிலாந்து, பிலிப்பினா, ஸ்பானிஸ் பெண்களும் இந்த பட்டியலில் 4 வது, 5வது, 6வது இடத்தைப் பிடித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த படியாக, ஆஸ்திரேலியா, பல்கேரியன், தென்ஆப்ரிக்கா பெண்கள் உள்ளனர். கனடாவைச் சேர்ந்த பெண்கள் கவர்ச்சிப் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளனர்.இதேபோல கட்டழகான ஆண்கள் என்று பெண்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆஸ்திரேலியா ஆண்கள்தான் கட்டழகும், கவர்ச்சி, கம்பீரமும் கொண்டவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.இத்தாலி, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆண்கள் கம்பீர பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.இவர்களுக்கு அடுத்த படியாக ஸ்பானிஷ் ஆண்களும், அமெரிக்க ஆண்களும் உள்ளனர். ஐரீஷ், பிரேசில், கனடா, டச்சு நாட்டைச் சேர்ந்த ஆண்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.இந்தியாவைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் இந்தப்பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டு கொலம்பியா பெண்களும், இங்கிலாந்து ஆண்களும் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ரசனை மாறிவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக