பக்கங்கள்

08 ஜூன் 2014

விஜய் - அமலாபால் நிச்சயதார்த்தம்!

இயக்குநர் விஜய்க்கும், நடிகை அமலாபாலுக்கும் நேற்று கொச்சியில் உள்ள சர்ச் ஒன்றில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திரைத்துறையில் உள்ளவர்கள் வீட்டு திருமணம் எப்போதுமே மக்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது சகஜமான ஒன்றுதான். அதிலும் நடிகைகள் திருமணம் என்றால் சொல்லவே வேண்டாம். அந்தவகையில், இயக்குநர் விஜய்க்கும், நடிகை அமலாபாலுக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததையடுத்து வரும் 12ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற உள்ளது.மதராசபட்டணம், தெய்வமகள், தலைவா உள்ளிட்ட வெற்றிப்படங்களைத் தந்தவர் இயக்குநர் விஜய். இவரது தெய்வமகள் மற்றும் தலைவா படத்தில் நாயகியாக நடித்தார் அமலாபால்.முதலில் நட்பாக ஆரம்பித்த இவர்களது பழக்கம், ஊடகங்களின் கிசுகிசுவால் நாளடைவில் காதலாக கனிந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமும் ஏற்பாடு செய்யப்பட்டது.அதன்படி, நேற்று கொச்சியில் உள்ள செயிண்ட் ஜூட் சர்ச்சில் விஜய் - அமலாபால் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கிறிஸ்தவ முறைப்படி இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள்.அதனைத் தொடர்ந்து வரும் 12ம் தேதி சென்னையில் மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது.விஜய் - அமலாபால் என இருவருமே திரைத்துறையில் முன்னணியில் உள்ளவர்களாதலால் இத்திருமணத்திற்கு பிரபலங்கள் பலர் நிச்சயம் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறதது.ஏற்கனவே, தங்களது திருமணத்திற்கு வருகை தருபவர்கள் அன்பளிப்பு எதுவும் தர வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு அப்பணத்தை அளித்து விடும்படி விஜய், அமலாபால் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக