தூள் படத்தில் வில்லி சொர்ணாக்காவாக நடித்த சகுந்தலா, மாரடைப்பால் நேற்று காலமானார் தமிழில் விக்ரமின் தூள் படத்தில் சொர்ணாக்காவாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை சகுந்தலா ,நடிகர் விஜயின் சிவகாசி படத்தில் பிரகாஷ்ராஜ் மாமியாராக நடித்துள்ளார். 1981-ல் மா பூமி என்ற படத்தில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்துள்ளார் சகுந்தலா. தெலுங்கில் முன்னணி வில்லி நடிகையா இருந்தார். அங்கு இவரை தெலுங்கானா சகுந்தலா என்று அழைத்தனர். 2003-ல் வெளியான ஒக்கடு தெலுங்கு படம் சகுந்தலாவை பிரபல நடிகையாக்கியது. தொடர்ந்து முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் வில்லி, காமெடி, மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். ஹைதராபாத்தில் உள்ள கொம்பள்ளி பகுதியில் உள்ள தனது வீட்டில் சகுந்தலா வசித்து வந்தார். நேற்று நள்ளிரவு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார். சகுந்தலா உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப் பட்டு உள்ளது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். தெலுங்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக