பக்கங்கள்

28 ஏப்ரல் 2011

தமிழ் வெற்றியால் தெலுங்கில் கோ.

டைரக்டர் கேவி ஆனந்த் இயக்கத்தில், நடிகர் ஜீவா - நடிகை கார்த்திகா ஜோடி நடித்து தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கோ படத்தை தெலுங்கில் டப் செய்துள்ளனர். தமிழில் வெற்றி பெற்ற இப்படத்தை ஆந்திரபிரதேசத்திலும் வெளியிட்டு கல்லா கட்ட நினைத்த ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம், தெலுங்கு டப் படத்திற்கு ரங்கம் என பெயரிட்டுள்ளனர். ஆந்திராவில் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ள இந்நிறுவனம் அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.
ஏற்கனவே டைரக்டர் கேவி ஆனந்த் இயக்கிய அயன் படம் ஆந்திராவிலும் வசூலை வாரி குவித்தது என்பதாலும், நடிகர் ஜீவா, இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் உள்ளிட்டவர்கள் ஏற்கனவே தெலுங்கு ரசிகர்களுக்கு பரீட்சயமானவர்கள் என்பதாலும் கோ படம் தெலுங்கிலும் சாதிக்கும் என்று நம்புகிறது தயாரிப்பு தரப்பு!

24 ஏப்ரல் 2011

ஸ்ரீசாந்த் ரியா திருமணம் விரைவில்.

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், பிரபல நடிகை ரியா சென்-ஐ விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி உலககோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் ஸ்ரீசாந்த். அதுவும் பைனல் போட்டியின் போது அவரும் விளையாடினார். இந்த மகிழ்ச்சியுடன் ஸ்ரீசாந்த் வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய எண்ணியுள்ளனர். இதற்காக தீவிர பெண் வேட்டையிலும் இறங்கியுள்ளனர் அவரது பெற்றோர். இதனிடையே ஒரு விளம்பர நிகழ்ச்சியின்போது ஸ்ரீசாந்தும், நடிகை ரியா சென்னும் சந்தித்து கொண்டனர். அப்போது இவர்களுக்குள் ஆரம்பமான நட்பு இப்போது காதலில் போய் முடிந்து இருக்கிறதாம். தற்போது ஸ்ரீசாந்த் வீட்டிலும் பெண் தேடி வருவதால், ரியாவையே திருமணம் செய்யலாம் என்ற முடிவில் ஸ்ரீசாந்த் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவலை ஸ்ரீசாந்த் மறுத்துள்ளார்.
நான் திருமணம் செய்யப்போவது உண்மை தான். ஆனால் ரியா சென்னை அல்ல. அவர் என்னுடைய நல்ல நண்பர். எங்களுக்குள் காதல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறுகிறார் ஸ்ரீசாந்த். அதேபோல் ரியாவும், ஸ்ரீசாந்த் தன்னுடைய நண்பர் என்று கூறியிருக்கிறார்.
ஏற்கனவே இந்தியாவின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான், பாலிவுட் நடிகை இஷா சர்வானியை திருமணம் செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

22 ஏப்ரல் 2011

காஞ்ச்சனாவின் கதை படமாகிறது.

தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 70 களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் காஞ்சனா. தெலுங்கு,மலையாளம்கன்னட மொழிகளிலும் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினிகணேசன் போன்றோருடன் நடித்து இருக்கிறார். சிவாஜியுடன் சிவந்த மண்படத்தில் “பட்டத்து ராணி பார்க்கும் பார்வை” என அவர் பாடி ஆடியது ரசிகர்களை ஈர்த்தது.
“சாந்தி நிலையம்”, “நான் ஏன் பிறந்தேன்”, “அதே கண்கள்”, “காதலிக்க நேரமில்லை” என 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வசீகர அழகால் ரசிகர்களை உற்சாகப்படுத்திய காஞ்சனாவின் இன்னொரு புற வாழ்க்கை சோகம் நிறைந்தது. அவர் நடித்து சம்பாதித்த சொத்துக்களை உறவினர்கள் ஏமாற்றி பிடுங்கி விட்டனர். எல்லாவற்றையும் இழந்து வறுமைப் பிடியில் சிக்கினார்.
கர்நாடகாவில் ஒரு கோவிலில் பிரசாதம் வாங்கி சாப்பிட்டு வாழ் நாளை கழிப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்தன. கோர்ட்டு மூலம் சமீபத்தில் சில சொத்துக்களை மீட்டு திருப்பதி கோவிலுக்கு எழுதி வைத்தார். விமான பணிப்பெண்ணாக இருந்து நடிகையாகி தற்போது ஏழ்மையில் கஷ்டப்படும் காஞ்சனாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது. இப்படத்தை ராஜ்கிருஷ்ணா இயக்குகிறார்.
இவர் ராஜ்கிரண் நடித்த “பகடை” படத்தை டைரக்டு செய்தவர். “மௌனம் பேசியதே”, “காதல் கிசுகிசு”, “குண்டக்க மண்டக்க” படங்களை தயாரித்த கேசவன் இப்படத்தை தயாரிப்பார் என தெரிகிறது. காஞ்சனா வேடத்தில் நடிக்க பிரபல நடிகைகளுடன் பேசி வருகின்றனர். சோனியா அகர்வாலிடமும் பேச்சு வார்த்தை நடக்கிறது.

20 ஏப்ரல் 2011

போராளியில் திரிஷா.

இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து “போராளி” என்ற படம் தயாராகிறது. இதில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். இவர் சுப்பிரமணியபுரம் ஹிட் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். நாடோடிகள் படத்தில் நாயகனாக நடித்தார். போராளி படத்தை சமுத்திரக்கனி இயக்குகிறார்.
ஈழத் தமிழர்கள் மீதான அடக்குமுறை, விடுதலைப் புலிகள் போராட்டம் போன்றவை இப்படத்தில் காட்சிபடுத்தப்படுகின்றன. பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்துக்கு நாயகி தேர்வு நடக்கிறது. முதலில் அஞ்சலியை முடிவு செய்தனர். ஆனால் நாயகி கேரக்டருக்கு திரிஷா பொருத்தமாக இருப்பார் என சமுத்திரக்கனி விருப்பப்படுவதாக கூறப்படுகிறது.
அதையடுத்து அஞ்சலியை நீக்கி விட்டு திரிஷாவிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி திரிஷாவிடம் கேட்டபோது போராளி படத்தில் நடிக்க சசிகுமாரோ, சமுத்திரக்கனியோ இதுவரை என்னிடம் தொடர்பு கொண்டு பேசவில்லை என்றார்.
திரிஷா தற்போது இரு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அஜீத்துடன் மங்காத்தா படத்தில் நடிக்கிறார்.

17 ஏப்ரல் 2011

கோடிக்கும் மயங்கமாட்டேன்!

4கோடி ரூபாய் கொடுத்தாலும் வீட்டு விருந்து நிகழ்ச்சியில் ஆட மாட்டேன் என்று பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கூறியுள்ளார். சமீபத்தில் அம்மணியை விருந்து நிகழ்ச்சியொன்றில் ஆட ரூ.4 கோடி பேசி அழைத்துள்ளனர். ஆனால் தீபிகா முடியவே முடியாது என்று பிடிவாதமாக மறுத்து விட்டாராம். இதுபற்றி அவர் கூறுகையில், நடிகைகள் பணத்துக்காக எதையும் செய்வார்கள் என்று எதிர்பார்க்ககூடாது. லண்டனில் கோடீஸ்வரர் ஒருவர் வீட்டில் விருந்து நிகழ்ச்சியொன்றில் என்னை ஆட அழைத்தனர். அதற்கு ரூ.4 கோடி தருவதாக கூறினார்கள். தம்மரே தம் என்ற ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடினால் போதும் என்றனர். நான் தமாஷ் செய்கிறார்கள் என்று நினைத்தேன். அதன்பிறகு கடிதம் அனுப்பியும் வற்புறுத்தினார்கள். ஒரு பாட்டுக்கு ஆட ரூ.4 கோடி தருவார்களா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிறகு நான் அந்த அழைப்பை நிராகரித்து விட்டேன். சினிமாதான் எனக்கு முக்கியம். அதில்தான் ஆடுவேன். பணத்துக்காக வீட்டு விருந்துக்கெல்லாம் ஆடமாட்டேன் என்று மறுத்து விட்டேன், என்றார்.

15 ஏப்ரல் 2011

திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்!

பிரபல பின்னணி பாடகி சித்ராவின் மகளுக்கு திரையுலக பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பாடகி சித்ராவுக்கும் என்ஜினீயரான விஜயகிருஷ்ணர் என்பவருக்கும் 23 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 15 ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 2002 ல் சித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது நந்தனம் என்ற மலையாள படத்தில் சித்ரா பாடிய பாடலுக்கு கேரள அரசின் விருது கிடைத்தது. இதனால் குழந்தைக்கு நந்தனா என்ற பெயர் சூட்டினார். குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைவாக இருந்தது. குடும்பத்துடன் அவர் சென்னை விருகம்பாக்கம் ஏ.ஆர்.கே.தெருவில் வசித்து வந்தார். சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் நந்தனா ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள். ஏ.ஆர்.ரகுமான் வெளி நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் பங்கேற்பதற்காக சித்ரா தனது குழந்தையுடன் துபாய் சென்றார். அங்கு எமிரேட் ஹில்ஸ் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்தார். வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் நந்தனா குளிக்கச் சென்றாள். அப்போது எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினாள். அக்கம் பக்கத்தினர் நந்தனாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை இறந்து விட்டது. நந்தனா உடலை பார்த்து சித்ரா கதறி அழுதார். பிரேத பரிசோதனைக்கு பின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இன்று மாலை விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. பின்னர் சாலிகிராமத்தில் உள்ள சித்ராவின் வீட்டுக்கு உடலைக் கொண்டு வந்தனர். இதையடுத்து திரையுலகை சேர்ந்தவர்கள் குழந்தையின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னணி பாடகிகள் பி.சுசீலா, எஸ்.ஜானகி, பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ உள்ளிட்டோர் கண்ணீர் விட்டு அழுதபடி அஞ்சலி செலுத்தினர்.

13 ஏப்ரல் 2011

தமிழ் ரசிகர்களின் விருப்ப நாயகியாவேன்!

தமிழ் ரசிகர்களுக்கு நான் புதுசு என்றாலும், அவர்களை திருப்திபடுத்துவது மிகவும் சாவலான விஷயம் என்றும், இருந்தாலும் அவர்களின் விருப்ப நாயகியாக மாறுவேன் என்று ஆணித்தரமாக கூறுகிறார் மலையாளத்தில் இருந்து இறக்குமதியாகி இருக்கும் மற்றுமொரு நடிகை நித்யா மேனன். தமிழ் நடிகைகளை காட்டிலும் பிற மாநிலங்களில் இருந்து வந்த நடிகைகள் தான் ஜொலிக்கின்றனர். அதிலும் கேரளாவில் இருந்து வரும் நடிகைகள் முன்னணி நடிகையாக இருக்கின்றனர். அந்தவகையில் கேரளாவில் இருந்து நித்யா மேனன் என்ற நடிகை தமிழுக்கு வந்திருக்கிறார். தமிழில் வருவதற்கு முன்னர் மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து இருக்கிறார். இப்போது தமிழில் சத்யம் சினிமாஸ் தயாரிப்பில், ஜெயந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 180 என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இதில் சித்தார்த்துடன் ஜோடி போட்டு இருக்கிறார் நித்யா மேனன். தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாவது குறித்து நித்யா மேனன் கூறியதாவது, தமிழ் சினிமாவில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 180 படத்தின் கதையை கேட்டது மிகவும் பிடித்துவிட்டது. உடன் நடிக்க சம்மதித்து விட்டேன். படத்தில் நான் போட்டோ நிரூபராக நடித்திருக்கிறேன். உண்மையில் நான் போட்டோ நிரூபர் தான். ஆக‌வே இந்த வேடத்தில் நடிக்கும் போது கஷ்டமாக தெரியவில்லை. தமிழ் ரசிகர்களுக்கு நான் புதுசு. ரசிகர்களுக்கு ஏற்றவாறு அவர்களை திருப்தியளிப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். ஆனால் இவை அனைத்தையும் நான் பூர்த்தி செய்து, அவர்களின் விருப்ப நாயகியாக நிச்சயம் வலம் வருவேன். இதுவரை நடித்த மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளை காட்டிலும் தமிழில் நடிப்பது தான் மிகவும் பிடித்திருக்கிறது என்கிறார். ஏனென்று கேட்டால் தமிழில் தான் நல்ல படங்கள் எடுக்கப்படுகிறது. எனக்கு ஏற்ற கேரக்டரும் இங்குதான் கிடைக்கும் என்கிறார்.

11 ஏப்ரல் 2011

தொலைக்காட்சி நிகழ்வில் பரபரப்பு நாயகி பூனம்!

இந்திய அணி உலக கோப்பையை வென்றால் நிர்வாணமாக வலம் வருவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் மாடல் அழகி பூனம் பாண்டே. இந்திய அணியும் உலக கோப்பை வென்று வரலாற்று சா‌தனை படைத்தது. உலகம் முழுவது உள்ள இந்தியர்கள் இந்த வெற்றியை கொண்டாடினர். இதனையடுத்து அனைவரின் பார்வையும் பூனம் பாண்டேவை நோக்கி திரும்பியது. இந்நிலையில் பூனமின் இந்த கருத்துக்கு சிவசேனா அமைப்பிடமிருந்து பயங்கர எதிர்ப்பு கிளம்பியதால் அமைதியானார் பூனம் பாண்டே. இதனிடையே தனியார் டி.வி., ஒன்றில் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் ‌தோன்ற இருக்கிறார் பூனம் பாண்டே. இதனை அந்த டி.வி., நிறுவனமும் உறுதிபடுத்தி இருக்கிறது. விரைவில் டி.வி., நிகழ்ச்சியில் கலக்க இருக்கிறார் பூனம்.

09 ஏப்ரல் 2011

கவர்ச்சிக்கு தயாராகும் சுனேனா!

காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை சுனேனா, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தும், முதல் படத்தில் கிடைத்த பெயரை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். இப்போது பரத்துடன் திருத்தணி படத்தில் நடித்து வரும் அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழில் குடும்பப் பாங்கான பாத்திரங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கியுள்ளேன். இதுவரை எந்தப் படத்திலும் கவர்ச்சியாக நடித்ததி்‌ல்லை. அதற்காக நான் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். கிளாமரும் அழகாக இருக்க வேண்டும் என்‌பதே என் கருத்து. தமிழில் நடிப்பதற்கு முன் ஒரு தெலுங்குப் படத்தில் நடித்திருந்தேன். அதிலும் ஹோம்லியான கேரக்டர்தான். ஆனால் அந்த படத்தை சென்னையில் வெளியிட்டவர்கள், நான் கவர்ச்சி வேடத்தில் நடித்திருப்பதைப் போன்ற ஸ்டில்களை வெளியிட்டிருந்தார்கள். இதை பார்த்தபோது எனக்கு ரொம்பவும் வருத்தமாக இருந்தது. இது என் இமேஜை கெடுக்க நடந்த சதிதான். அவர்களுக்கு காலம் பதில் சொல்லும், என்று கூறியுள்ளார். தற்போது நடித்து வரும் திருத்தணியில் அம்மணிக்கு காமெடி கேரக்டராம். திருத்தணியைத் தொடர்ந்து கதிர்வேல் படம் ரீலிஸ் ஆகவிருக்கிறது. தமிழில் தனக்கு இருக்கும் நற்பெயறை கடைசி வரை காப்பாற்றுவேன், என்று சொல்லும் சுனேனா கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவிக்கிறார்.

07 ஏப்ரல் 2011

பிரபல நடிகை சுஜாதா காலமானார்!

அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் பிரபலமான நடிகை ‌சுஜாதா உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று(06.04.11) கா‌லமானார். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் "அவள் ஒரு தொடர்கதை" படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சுஜாதா. 1968ல் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய சுஜாதா தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் 300 படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர தமிழில் சிவாஜி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார் சுஜாதா. இவரது நடிப்பில் வெளிவந்த அந்தமான் காதலி, அண்ணக்களி, அவள் ஒரு தொடர் கதை, அவர்கள், விதி உட்பட பல படங்கள் பிரபலமானவை. நடிகையாக நடிக்க ஆரம்பித்து பின்னர் அம்மா மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்து வந்தார். இந்நிலையில் சிறிதுகாலம் நடிக்காமல் இருந்து வந்த சுஜாதா கடைசியாக 2004ம் ஆண்டு அஜீத்தின் வரலாறு படத்தில் நடித்தார். அதன்பின்னர் நடிப்பிற்கு முழுக்கு போட்டார் சுஜாதா. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகை சுஜாதா சென்னையில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சுஜாதாவின் உடல் நிலைமை மோசமடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட அவர் நேற்று(06.04.11) மரணம் அடைந்தார். மலையாளத்தை சேர்ந்தவரான சுஜாதா, 1952ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி இலங்கையில் பிறந்தவர். இவருக்கு திவ்யா என்ற மகளும், ஷாஜித் என்ற மகனும் உள்ளனர். சுஜாதாவின் கணவர் ஜெயகர் தொழிலதிபராக இருக்கிறார். சுஜாதாவின் மறைவிற்கு பல்வேறு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துளள்னர்.

04 ஏப்ரல் 2011

மனிஷாவின் கிக் கதாபாத்திரம்!

பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா புதிய படமொன்றில் விலைமாதுவாக நடிக்கப் ‌போகிறார். வித்தியாசமான ரோல்களில் நடித்து ரசிகர்களை கவர்கிறேன் பேர்வழியாக பாலிவுட்டில் பல நடிகைகள் வலம் வந்தாலும், மனிஷாவின் திறமைக்கு ஈடு மனிஷாவாகத்தான் இருக்க முடியும். பமபாய் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான மனிஷா, உயிரே, இந்தியன், முதல்வன், ஆளவந்தான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 40 வயதாகும் அவர், நேபாளத்தை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட பின்னர் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கப்போவதாக அறிவித்தார். இதையடுத்து மனிஷாவின் வயதுக்கும், அனுபவத்திற்கும் ஏற்ற கேரக்டருடன் நடிகை தீப்தி நாவல் புதிய படமொன்றிற்காக அழைப்பு விடுத்தார். படத்தின் கதையை கேட்ட மனிஷா, இது ரொம்பவே சேலஞ்ஜிங்கான கேரக்டர். நான் கண்டிப்பாக செய்கிறேன், என்று கூறி ஓ.கே. சொல்லி விட்டாராம். அப்படியென்ன சேலஞ்சிங் கேரக்டர்? படத்தில் மனிஷா விலைமாதுவாக நடிக்கிறார். தோ பைசே கி தூப் சார் ஆனே கி பாரிஷ் என ‌பெயரிடப்பட்டிருக்கும் அந்த படம் ஒரு செக்ஸ் தொழிலாளியின் வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவமாம். கதைப்படி, தனது ஊனமுற்ற மகனுக்காக வாழும் மனிஷா, ஒரு காலகட்டத்தில் விலைமாதுவாக மாறிவிடுகிறார். ஓரின சேர்க்கை பழக்கமுள்ள ஆண் பாடலாசிரியரை தனது வாடிக்கையாளராக சந்திக்கிறார் மனிஷா. அது பின்னாளில் இந்த மூன்று பேருக்கும் இடையில் ஒரு அன்பு பிணைப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதை சுற்றித்தான் இக்கதை பின்னப்பட்டுள்ளது, என்கிறார் டைரக்டர் தீப்தி நாவல்.

02 ஏப்ரல் 2011

ஒரு பாட்டுக்கு ஆடும் கீர்த்தி.

ஏவிஎம் நிறுவனத்தின் முதல் இடம் படத்தில் நடிகை கீர்த்தி சாவ்லா ஒரு பாட்டுக்கு ஆடுகிறார். ஏவிஎம்மின் 175வது படம் முதல் இடம். மைனா விதார்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கவிதா நாயர் நடிக்கிறார். படத்தில் இடம்பெறும் ஒரு குத்துப்பாட்டுக்கு நடிகை கீர்த்தி சாவ்லா ஆடவிருக்கிறார். இதுபற்றி கீர்த்தி கூறுகையில், "ஒரு பாடல் என்றாலும், மீண்டும் பிஸியான நடிகையாக என்னை மாற்றும் அளவு முக்கியமான படம் இது. பெருமைக்குரிய ஏவிஎம் நிறுவனத்தில் நடிப்பதே பெரிய விஷயம்தானே, என்றார். முதல் இடம் படத்தில் யோகி தேவராஜ், வீரமணிதாசன், கிஷோர், பொன்னம்பலம், அப்புக்குட்டி மற்றும் இளவரசு என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள். முதல் இடம் படத்தின் சூட்டிங், தஞ்சை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. டைரக்டர் குமரன் இயக்கும் இப்படத்தை எம்.சரவணன், எம்.எஸ்.குகன் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.