29 மார்ச் 2011
கலங்கிப்போன அனுஷ்கா!
சில தினங்களுக்கு முன்னர் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி ரெய்டால் கலங்கி போய் இருக்கிறார் நடிகை அனுஷ்கா. இதனிடையே இந்த ரெய்டிற்கு தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர் ஒருவர் தான் காரணம் என்று கூறப்படுகிறது. "அருந்ததீ" படத்தின் மூலம் பிரபலமான நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் நம்பர்-1 நடிகையாக வரத்தொடங்கியுள்ளார். குறுகிய காலத்தில் இந்த இடத்தை பிடித்த நடிகை அனுஷ்கா மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை இவரது வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஏராளமான கணக்கில் வராத சொத்துக்கள், நகைகள் மற்றும் ரொக்க பணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால் மிகுந்த வருத்தத்தில் இருக்கும் அனுஷ்கா, மன ஆறுதலுக்காக சில நாட்கள் பெங்களூருவில் தங்க முடிவெடுத்துள்ளார். இதனிடையே இந்த ரெய்டிற்கு தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர் தான் காரணம் என்கிறார் அனுஷ்கா. விசாகப்பட்டிணம் கடற்கரை அருகே நிலம் வாங்க அந்த நடிகர் தான் தன்னை வற்புறுத்தியதாகவும், வாங்கும் போது பல பிரச்சனைகள் வந்ததாகவும் கூறுகிறார் அனுஷ்கார்.
27 மார்ச் 2011
மகாராஜாவின் நாயகி அஞ்சலி!
ஒரு கதாநாயகி என்றால் கண்டிப்பாக ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட வேண்டும். ஜிகினா டிரஸ்சில் ஹீரோவின் கனவில் நுழைந்து ஐஸ்லாந்தில் ஆட்டம் போட வேண்டும். ஈவ் டீசிங் பாடல் ஒன்றுக்கு முகம் கடுக்க மூவ்மென்ட் கொடுக்க வேண்டும். இப்படியெல்லாம் தொடர்கிற இலக்கணத்தை மீறி வருகிற ஒரே நாயகி அஞ்சலி மட்டும்தான்! அவருக்கும் குரூப் டான்ஸ் பாடல்கள் மீதும், முழு நீள கமர்ஷியல் படங்கள் மீதும், அரை ஸ்கர்ட் மீதும் ஆசை வரும்தானே? அந்த ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறது மகாராஜா திரைப்படம். ஆனால் கமர்ஷியல் அம்சங்களோடு எதார்த்தத்தையும் மிகைப்படுத்தாமல் சொல்லியிருக்கிறாராம் புதுமுக இயக்குனர் டி.மனோகரன். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சில பாடல்களை திரையிட்டார்கள். முந்தைய தலைமுறைக்கும், இளைய தலைமுறைக்கும் நடுவே இருக்கிற இடைவெளி பற்றி பேசுகிற படம் இது. என்னுடைய இருபத்தைந்து வருட சினிமா வாழ்க்கையில் நான் ரசித்து நடித்த படம் இது என்றார் நாசர். இப்படத்தின் நாயகனான சத்யா இதற்கு முன்பு சில படங்களில் நடித்திருந்தாலும், முதன் முறையாக ஒரு ஹீரோவாக முழுமையடைந்திருக்கிறார் என்று நம்ப வைத்தது அந்த பாடல் காட்சிகள். ட்யூன்களில் சதிராட்டம் போட்ட டி.இமானுக்கும் கூடை நிறைய பாராட்டுகள்!. சத்யாவை பார்க்கும் போது என் மகன் ஜெயம் ரவியை பார்க்கிற மாதிரியே இருக்கு. அவருக்கு பெரிய எதிர்காலம் அமையணும் என்று வாழ்த்தினார் விழாவில் பேசிய எடிட்டர் மோகன். ஒரு முன்னணி ஹீரோவின் அப்பா, தன் மகன் போலவே இருக்கிறார் என்று இன்னொரு ஹீரோவை வாழ்த்துவது அபூர்வம். இதை நினைத்து நாம் ஆச்சர்யப்படும் போதே, மேடையில் பேசிய அத்தனை பேரும் அதையே கூறினார்கள். சத்யாவை ஜெயம் ரவிக்கு தம்பியாக நடிக்க வைக்கும் எண்ணம் கூட இருக்கிறதாம் எடிட்டர் மோகனுக்கு. 'மகாராஜா' தானே அதையெல்லாம் முடிவு செய்ய வேண்டும்?
25 மார்ச் 2011
விவாகரத்து கோருகிறார் ஜோதி.
பத்து ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார் நடிகை ஜோதிர்மயி. தலைநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஜோதிர்மயி. நான் அவன் இல்லை, வெடிகுண்டு முருகேசன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் இவர், மலையாளத்திலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
சினிமா நடிகை ஆகி விட்டாலும், அவர் நிஷாந்த் என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயரை காதலித்து வந்தார். 10 ஆண்டுகளாக நீடித்த காதல் கடந்த ஆண்டு திருமணத்தில் முடிந்தது. திருமணமான புதிதில் புது கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த ஜோதிர்மயி, தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். கணவர் சம்மதத்துடன் திரையில் தோன்றுவதாக கூறி வந்த ஜோதிர் மயிக்கும், கணவர் நிஷாந்துக்கும் சில மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ஜோதிர்மயி, கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் காதல் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி எர்ணாகுளம் குடும்பநல கோர்ட்டில் ஜோதிர்மயி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

23 மார்ச் 2011
புகை பிடிப்பதுபோல் நடிக்கமாட்டேன்.
பாலிவுட்டில் நடிகர், நடிகைகள் புகைப் பிடிக்கும் காட்சிகளில் நடிப்பது புதிதல்ல.
இதுபோன்ற காட்சிகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பியும் படத்தின் கேரக்டருக்கு அது கட்டாயமாக இருக்கிறது என்பதே இயக்குனர்களின் கருத்து.
சமீபமாக பேஷன் என்ற படத்தில் கணக்கே இல்லாமல் சிகரெட்டுகளை ஊதித் தள்ளிய ப்ரியங்கா சோப்ரா அப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.
தற்போது நடிகை தீபிகா படுகோனே தும்மர தும் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் புகை பிடித்தப்படி நடிக்க வேண்டும் என வற்புறுத்தினார் இயக்குனர். ஆனால் அவர் மறுத்து விட்டார்.
இது பற்றி அவர் கூறும்போது புகை பிடிப்பது போல் நடிக்க விருப்பம் இல்லை. அது மாதிரி காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றார்.
இயக்குனர் ரோகன்சிப்பி கூறும்போது, தீபிகா படுகோனேவை புகை பிடிப்பதுபோல் நடிக்க கேட்டுக் கொண்டேன். அவர் முடியாது என்று மறுத்து விட்டார் என்றார்.
தீபிகா படுகோனே ரஜினியின் அடுத்தப் படமான ராணா படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

21 மார்ச் 2011
ஒன்பது பாடல்களுடன் மங்காத்தா.
டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடிக்கும் 50வது படம் மங்காத்தா. இப்படத்தில் அஜீத் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இவர்தவிர அர்ஜூன், அஞ்சலி, லக்ஷமி ராய், பிரேம்ஜி அமரன், அஸ்வின், வைபவ் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது.
மங்காத்தா படம் அஜீத்தின் 50வது படம் என்பதால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இப்படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் ஒன்பது பாடல்களில் 6பாடல்களை கம்போசிங்கும், 3பாடல்கள் ரெக்கார்டும் செய்துவிட்டார் யுவன். யுவனின் முந்தைய படங்கள் போலவே இந்தபட பாடலும் ஹிட்டாகும் என்று பேசப்படுகிறது.
இதனிடையே மே 1ம் தேதி, அஜீத் பிறந்தநாளன்று ரீலசாக இருந்த மங்காத்தா படம், ஜூன் மாதத்திற்கு தள்ளிபோனது ரசிகர்களை சிறிது வருத்தமடையச் செய்துள்ளது.

18 மார்ச் 2011
கமலுக்காக காத்திருக்கிறேன்.
கமலுக்காக காத்திருக்கிறேன் என்று பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா கூறியிருக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக பாலிவுட் நடிகை சோனாக்ஷி நடிக்கிறார். கமல்ஹாசனின் மகள் ஸ்ருதியை விட ஒரு வயது இளையவரான சோனாக்ஷி, ஏற்கனவே அளித்த பேட்டியொன்றில், வயது வித்தியாசம் பெரிய விஷயமே இல்லை, என்று கூறினார்.
இந்நிலையில் அவர் அளித்திருக்கும் புதிய பேட்டியில், கமல்ஹாசனை பார்க்க ஆசையுடன் காத்திருப்பதாக கூறியுள்ளார். கமல்ஹாசனுடனான புதிய படத்தின் சூட்டிங் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. கமல்ஹாசன் மிகப்பெரிய நடிகர். அவருடன் நடிப்பது பெருமையான விஷயம். அவரை இதுவரை நான் நேரில் பார்த்ததில்லை. அவருடன் நடிக்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன், என்று கூறியிருக்கிறார் சோனாக்ஷி.
நடிகை சோனாக்ஷி தமிழில் கமல்ஹாசனுடன் புதிய படத்தில் கமிட் ஆகியிருந்தாலும் பாலிவுட்டில்தான் அதிக அளவில் கவனம் செலுத்துவேன் என்றும் கூறியிருக்கிறார் அம்மணி.

16 மார்ச் 2011
அசின் நடித்த விளம்பரப்படத்தில் திரிஷா!
சினிமாவில் தான் நடிகர், நடிகையர் இடையே போட்டியென்றால் இப்போது விளம்பரங்களிலும் இந்த போட்டி அதிகமாகிவிட்டது. அதிலும் அசின், த்ரிஷா இடையேயான போட்டி சொல்லவே தேவையில்லை, அந்தளவிற்கு இருவருக்கும் கடுமையான போட்டி நடைபெறும். இதுவரை அசின் நடித்து வந்த விளம்பரம் ஒன்றில், இப்போது த்ரிஷா நடிக்க இருக்கிறார். இதனால் த்ரிஷா மீது மிகுந்த கடுப்பில் இருக்கிறார் அசின்.
பிரபல அழகு சாதன நிறுவனமான பேர்எவர் பேர்னஸ் க்ரீம் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிகை அசின் நடித்து வந்தார். இதற்காக பெருந்தொகையை அசின் சம்பளமாக பெற்று வந்தார். ஆனால் இப்போது திடீரென்று அந்த நிறுவனம் அசினை தூக்கிவிட்டு, அந்த இடத்தில் த்ரிஷாவை நியமித்துள்ளது. சிலதினங்களுக்கு முன்னர்தான் த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. இனிவரும் நாட்களில் பேர்எவர் விளம்பரத்தில் அசினுக்கு பதிலாக த்ரிஷா தான் தோன்றுவார்.
இதுவரை சினிமாவில் மட்டுமே போட்டியாக வந்த த்ரிஷா, இப்போது விளம்பர படங்களிலும் போட்டியாக வந்துவிட்டார் என்று த்ரிஷா மீது கோபத்தில் இருக்கிறார் அசின்.

15 மார்ச் 2011
அழகும்,கம்பீரமும் கொண்ட அனுஷ்கா!
இன்றைய தேதியில் அதிக ஆஃபர் உள்ள நடிகை அனுஷ்கா. அவரைப் பற்றி வரும் வதந்திகளே இதற்கு சான்று.
விக்ரமுடன் நடித்துவரும் அனுஷ்கா அஜீத்தின் பில்லா 2-வில் நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். கமல் படத்திலும் இவர்தான் ஹீரோயின் என்றார்கள். ஆனால் சோனாக்சி சின்காவை ஒப்பந்தம் செய்திருக்கிறார் செல்வராகவன்.
பொன்னியின் செல்வன் சரித்திரக் கதை. அதில் வரும் குந்தவை கேரக்டருக்கு அழகான கம்பீரமான பெண் தேவை. இன்டஸ்ட்ரியல் கம்பீரமும், கவர்ச்சியும் நிறைந்தவர் அனுஷ்காதானே. மணிரத்னம் அவரை ஒப்பந்தம் செய்திருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

14 மார்ச் 2011
சிம்பு கேட்ட சோனம்கபூர்!
இந்தியில் சல்மான் கான் நடித்த தபாங் படம், தமிழில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இதில் சல்மான் கேரக்டரில் சிம்பு நடிக்க இருக்கிறார். இந்நிலையில் சிம்புக்கு ஜோடியாக காஜல் அகர்வாலை நடிக்க வைக்கலாம் என்று பேசிய போது அவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் சிம்பு.
தமிழில் பொம்மலாட்டம், மோதி விளையாடு, நான்மகான் அல்ல, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை காஜல் அகர்வால். தற்போது தெலுங்கில் பிஸியாக நடித்து வரும் இவர் அடுத்து இந்தியில் அஜய் தேவ்கனுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இந்தியில் சல்மான் கான், நடித்த தபாங் படம் தமிழில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இதில் ஹீரோவாக சிம்பு நடிக்க இருக்கிறார். சிம்புக்கு ஜோடியாக காஜல் அகர்வாலை நடிக்க வைக்கலாம் என்று சிம்புவிடம் பேசியிருக்கின்றனர். ஆனால் சிம்புவோ, இது பெரிய ப்ராஜெக்ட், இதற்கு மும்பையை சேர்ந்த நடிகை தான் பொருத்தமானவராக இருப்பார். ஆகவே காஜல் அகர்வால் வேண்டாம், அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகை சோனம் கபூரை நடிக்க வைக்கலாம். இந்த கேரக்டருக்கு அவர்தான் பொருத்தமானவர் என்று கூறியிருக்கிறார்.
இதனிடையே இப்படத்தை டைரக்டர் சரவணன் இயக்குவதாக இருந்தது. ஆனால் இப்போது அந்த பொறுப்பை டைரக்டர் தரணி ஏற்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

11 மார்ச் 2011
சிம்புவின் எவன்டி ஒன்ன பெத்தான்.
வானம் படத்துக்காக சிம்பு பாடி இருக்கும் 'எவன்டி ஒன்ன பெத்தான்' பாடல்தான் அடுத்து காதல் இளைஞர்களின் தேசிய கீதம் என்று சூடம் அடிக்கிறது அந்தப் பட யூனிட் . பாடலை எழுதியது கூட எஸ் டி ஆர் என்று பெயர் மாற்றியும் -- எல்லோராலும் சிம்பு என்ற அழைக்கப் படும் - சிம்புதான் (பின்ன, வேற என்ன சொல்றது) அந்த தைரியத்திலோ என்னவோ அந்த ஒரு பாட்டை மட்டும் வெளியிட அது எப் எம் மை உண்டு இல்லை பண்ணிக் கொண்டிருக்கிறது . பாடலை இந்தியிலும் எடுத்துள்ளனராம் (எண்ணமோ திட்டம் இருக்கு )
மற்ற பாடல்களின் வெளியீட்டு விழா மார்ச் பதினைந்து அன்று நடைபெறுகிறது (அப்ப அது எல்லாம் சுமாரான பாட்டு தானோ?.)
இதற்கிடையில் எல்லோரும் பாரட்டும்படியான ஒரு காரியத்தை செய்துள்ளார் வானம் பட தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி . (இது அரசியல் நியூஸ் இல்லீங்கோ )
ஏ ஆர் ரகுமானை ஆஸ்கார் தமிழனாக அடையாளம் காட்டிய 'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்தில் நடித்த ரூபினா அலி என்ற குழந்தை நட்சத்திரத்தின் ( சரி .... இப்ப கொஞ்சம் வளந்துருச்சி !) வீடு.......அல்ல அல்ல குடிசை, மும்பை பாந்த்ரா பகுதியில் அண்மையில் தீப்பிடித்து எரிந்தது . படத்தில் நடித்ததற்காக ரூபினா அலிக்கு வழங்கப்பட்ட பல விருதுகள் கூட தீக்கிரையாயின .
அந்த குழந்தைக்கு ஐம்பதாயிரம் ரூபாய பண உதவி வழங்கியிருக்கிறார் தயாநிதி . வானம் பேருக்கு பொருத்தமான விஷயம் .
எரிந்த மனசு குளிரட்டும்!

10 மார்ச் 2011
சோனியா அகர்வால் மீண்டும் காதலில்!
நடிகை சோனியா அகர்வாலும் பிரபல கன்னட நடிகர் சுதீப்பும் மிகவும் நெருக்கமாகியுள்ளனர். இருவரும் கிட்டத்தட்ட இணைபிரியாத காதலர்களாக உலா வருகின்றனர்.
சமீபத்தில் பெங்களூர் நட்சத்திர ஹோட்டலில் இருவரும் ஒன்றாக இருந்தது பத்திரிகைகளில் வெளியானது.
அடுத்து சில தினங்களுக்கு முன் விசாகப்பட்டனத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி முழுவதும், சோனியாவும் சுதீப்பும் கைகளைக் கோர்த்தபடி இணைந்தே காணப்பட்டனர். போட்டியின் முடிவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் கூட இதே கோலத்தில் இருவரையும் பார்க்க முடிந்தது.
சுதீப் தன் மனைவி ப்ரியாவிடமிருந்தும், சோனியா அகர்வால் செல்வராகவனிடமிருந்தும் விவாகரத்து பெற்றவர்கள் என்பது நினைவிருக்கலாம். சோனியாவும் - சுதீப்பும் ஏற்கெனவே சாந்து என்ற படத்தில் காதல் ஜோடியாக நடித்துள்ளனர். சுமாராக ஓடியது அந்தப் படம்.
ஏற்கெனவே நடிகை மீனா கன்னடத்தில் பிஸாயாக இருந்தபோது, இதே சுதீப்புடன் மிக நெருக்கமா இருந்தார். இருவருக்கும் திருமணம் என்றெல்லாம் கூட பேசப்பட்டது. இருவருமே அதை மறுக்காமல் சிரித்தபடி போஸ் கொடுத்து வந்தனர் அப்போது!
இப்போது மீனா இடத்துக்கு சோனியா அகர்வால் வந்திருக்கிறார். இது திருமணம் வரை போகுமா... அல்லது நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்ற ஸ்டேட்மெண்டோடு முடியுமா...? பார்க்கலாம்!

09 மார்ச் 2011
மீண்டும் முகம் காட்டுகிறார் சார்மி!
நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் மீண்டும் ரீ-எண்டிரி ஆகுகிறார் சார்மி. கடைசியாக டைரக்டர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த "லாடம்" படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்திற்கு பின்னர் போதிய படவாய்ப்புகள் ஏதும் அமையாததால் தெலுங்கு சினிமாவுக்கு போனார். அங்கு ஓரளவுக்கு படவாய்ப்புகள் வந்ததால் அங்கேயே செட்டிலானார்.
இந்நிலையில் மீண்டும் தமிழுக்கு வருகிறார் சார்மி. சமீபத்தில் தெலுங்கில் இவர் நடித்து வெளிவந்த "மங்கலா" என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மிகவும் சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் படமாக வந்துள்ள இப்படத்தில் சார்மி பேய் கேரக்டரில் நடித்துள்ளார். இப்படம் தமிழிலும் ரீ-மேக் செய்யப்படுகிறது. சார்மி படத்தில் நடித்ததுடன் மட்டுமல்லாமல், தமிழ் படத்தின் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் அவதரித்துள்ளார். அத்துடன் நிச்சயம் இந்த அழகான பேய்யை தமிழ் மக்கள் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையிலும் இருக்கிறார் சார்மி.

07 மார்ச் 2011
தமிழ் நாட்டின் செல்லச்சீமாட்டி!
போகுமிடமெல்லாம் இவருக்குக் குவியும் ரசிகர் கூட்டம் நிச்சயம் அரசியல் கட்சிகளை யோசிக்க வைக்கும்!
ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த அனைத்துக் கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நமீதாவுக்கு, அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரு சேர, "தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி" என்ற பட்டத்தைச் சூட்டினர்!
சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான இசைவிழா நடந்தது.
இதில் சென்னை மற்றும் புறநகரில் உள்ள 23 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் பங்கேற்றனர். விதவிதமான கருத்துக்களைச் சொல்லும் நடனங்களை ஆடி அசத்தினர்.
இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பிரபல நடிகை நமீதா கலந்து கொண்டார். அவரை கல்லூரியின் நிறுவனர் டாக்டர் ஜேப்பியார், நிர்வாகி ரெஜினா ஜேப்பியார் ஆகியோர் வரவேற்று, திறந்த வெளியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர்.
நமீதாவைப் பார்த்ததும் மாணவர்களின் உற்சாகம் கரைபுரள ஆரம்பித்தது. அப்போது ஒரு மாணவர், 'தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி நமீதா' என குரல் எழுப்ப, அதை அப்படியே எதிரொலித்தனர் அனைத்து மாணவர்களும்.
திரும்பத் திரும்ப நமீதாவை இந்தப் பட்டப்பெயரிலேயே அழைக்க, மேடையேறிய நமீதா மாணவர்களின் தனக்கு சூட்டிய இந்தப் பட்டப் பெயரை மகிழ்ச்சியுடன் ஏற்பதாகக் கூறி, தனது அன்பு முத்தங்களை காற்றில் பறக்கவிட, ஆர்ப்பரித்தனர் மாணவர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களும்.
அதன் பிறகு நிகழ்ச்சியை வெகுநேரம் அமர்ந்து ரசித்தார் நமீதா. அங்கிருந்து கிளம்பும்போது மீண்டும் ஒரு முறை மேடையேறி, சிறப்பாக நடனமாடிய மாணவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார். அப்போதும், மாணவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி என பெரும் ஆரவாரத்தோடு குரல் எழுப்பி அவரை வழியனுப்பினர்!

04 மார்ச் 2011
அனுஷ்காவிற்காக காத்திருக்கும் படங்கள்!
அஜித் நடிக்கும் பில்லா 2, செல்வராகவன் - கமல் கூட்டணியில் உருவாகும் புதிய படம், மதராசபட்டினம் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் உள்ளிட்ட அரை டஜன் படங்கள் அனுஷ்காவின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறதாம். தற்போது வானம் படத்தில் சிம்புவுடன் நடித்துள்ள அனுஷ்கா, தமிழ்ப் படங்களை விட தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதால்தான் மேற்படி அரைடஜன் படங்கள் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்க வேண்டிய நிலை. இதுஒருபக்கம் என்றால் மற்றொரு பக்கம், இந்த நேரடி தமிழ் படங்களின் ரீலிசுக்குப் பின் ஏற்படப்போகும் அம்மணியின் தமிழ் மார்க்கெட்டை குறிவைத்து, அனுஷ்கா நடித்த அதரப் பழசான தெலுங்கு படங்களையும் அடுகடை படுகடையாக தமிழ்ப்படுத்தி வருகிறது ஒரு பெருங்கும்பல்!
02 மார்ச் 2011
உறக்கமின்றி தவித்த சமீராரெட்டி!
ரெட் அலர்ட் படத்தில் கற்பழிப்பு காட்சியில் நடிச்சதால பல நாள் தூக்கமே வரல என்று சமீரா ரெட்டி கூறியிருக்கிறார். பாலிவுட்டில் வெளியான ரெட் அலர்ட் படத்தில் நக்சலைட் பெண்ணாக நடித்திருப்பவர் நடிகை சமீரா ரெட்டி. இந்த படம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், நக்சலைட்டா நடிக்க ரொம்பவே தயங்கினேன்.
என் முகத்துல அப்படி ஒரு ரியாக்ஷனைக் காட்ட முடியுமான்னு தெரியல. அப்புறம் டைரக்டர் கொடுத்த தைரியத்துல நடிச்சேன். நிஜமான நக்சலைட் பிரச்னையைப் பற்றி நான் சொல்ல விரும்பல. ஒரு நடிகையா அந்த படத்துல என்னை கற்பழிப்பது போன்ற ஒரு காட்சியில், நடிச்சுட்டு பல நாள் தூக்கமே வரலை. தனிமையில் கண் கலங்கியிருக்கேன். ரெட் அலர்ட் படம் வேறு யாரும் நடிக்கத் தயங்குற நக்சலைட் வேடம். இதை ஏன் என்னை செய்யச் சொல்லணும். ஏதோஒரு விஷயத்துக்கு நான் ரொம்ப சரியா இருப்பேன்னு டைரக்டர்கள் நினைக்கிறாங்க. அதே சமயம் ரசிகர்களுக்கு கவர்ச்சி காட்டுறது ஒரு பெரிய குற்றமா நினைக்கல. கவர்ச்சியும் நடிப்பில் ஒரு பகுதிதான், என்று கூறியுள்ளார்.
ரெட் அலர்ட் படத்தில் லட்சுமி என்ற பெண்ணாக சமீரா ரெட்டியை, போலீஸ்காரர்கள் போலீஸ் நிலைய கழிவறையில் வைத்து கற்பழித்து விடுகிறார்கள். அதன் பின்னர் அவர் நக்சலைட் இயக்கத்தில் சேர்த்து பழிவாங்குவதுதான் படத்தின் மொத்த கதையும் என்பது கூடுதல் தகவல்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)