
கேடி மூலம் தமிழுக்கு வந்த தமன்னா கடும் முயற்சியின் விளைவாக தமிழில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தவர். வந்த வேகத்தில் முக்கிய நடிகர்களுடன் ஜோடி போட்டு விறுவிறுப்பான நிலைக்கு உயர்ந்தார்.
அண்ணன் சூர்யாவுடன் அயன் படத்தில் நடித்தவர் தம்பி கார்த்தியுடன் பையா படத்தில் ஜோடி சேர்ந்தார். அதையடுத்து மீண்டும் கார்த்தியுடன் சேர்ந்து சிறுத்தை படத்திலம் நடித்துள்ளார். அடுத்து தனுஷுடன் வேங்கை படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை தொடர்ந்து அவர் தெலுங்குக்குப் போகிறார். அங்கு 3 படங்களை ஏற்றுள்ளாராம். இதனால் தமிழில் படம் எதையும் ஒப்புக் கொள்ளவில்லையாம். 2011ம் ஆண்டு பிற்பகுதியில்தான் தமிழுக்கு வரத் திட்டமிட்டுள்ளாராம். அதுவரை தெலுங்கிலேயே இருப்பாராம்.
தான் நடித்த படங்கள் சில சரியாக ஓடாதது குறித்து தனக்கு வருத்தமில்லை என்று கூறும் தமன்னா, நான் நல்ல கதைகளைத் தேர்வு செய்துதான் நடிக்கிறேன். படங்கள் சரியாக போகவில்லை என்றால் அதற்கு நான் மட்டுமே பொறுப்பில்லை என்கிறார் பொறுப்புணர்ச்சியுடன்.
பையா படத்தைப் போல சிறுத்தையும் அனைவரையும் கவரும் என்று கூறும் தமன்னா, இப்படத்தை மற்றவர்களைப் போல தானும் அதிகம் எதிர்பார்த்திருப்பதாக கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக