ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் எனது இடுப்பை யாரும் கிள்ளவில்லை. என்னுடன் சேர்ந்து போட்டோ எடுக்க முண்டியவரைத்தான் நான் நிறுத்தி அறிவுரை கூறினேன் என்று விளக்கம் அளித்துள்ளார் நடிகை சினேகா.
சமீபத்தில் நிருபர்களைச் சந்தித்த அவர் கூறியது:
ஈரோட்டில் என் இடுப்பை யாரும் கிள்ளவில்லை. என்னுடன் போட்டோ எடுக்க பலர் ஆர்வப்பட்டனர். அந்த ரசிகரும் முண்டியடித்தார். அப்போது அவசரப்படாதீர்கள் என்று அறிவுரை சொன்னேன்.
என் இடுப்பை கிள்ளியதாகவும், நான் ஆவேசப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. இடுப்பை கிள்ளி இருந்தால் அந்த ரசிகர் ஓடியிருப்பார். நானும் அறிவுரை சொல்லி இருக்கமாட்டேன். அடித்திருப்பேன்.
நான் அரசியலில் குதிப்பதாகவும், பிரச்சாரத்துக்குப் போகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனக்கு அரசியல் பற்றி தெரியாது. எனவே அரசியலுக்கு வரமாட்டேன். தேர்தலில் ஏதேனும் கட்சி பிரசாரத்துக்கு அழைத்தாலும் போகமாட்டேன்.
ஆனால் அரசியலுக்கு வருபவர்கள் நல்ல அரசியல்வாதியாக இருக்க வேண்டும்.
இப்போது ஆக்ஷன் படத்தில் நடிக்கிறேன். இந்தப் படத்துக்காக நிஜமாகவே சண்டை போட்டேன். நிஜத்தில் நான் அடிக்க வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் பெயர்களை சொல்ல முடியாது.
அடுத்து நான் நடித்து வரும் ஒரு படத்தில் இப்படி ஒரு பஞ்ச் டயலாக் உள்ளது: ஆம்பளையா இருந்தாலும், பொம்பளையா இருந்தாலும் போலீஸ் போலீஸ் தாண்டா... பஞ்ச் டயலாக் பேச ஹீரோவாகத்தான் இருக்கணுமா... ஹீரோயின் பேசக்கூடாதா?, என்றார்.
பேசலாமே, நல்லாப் பேசலாமே...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக