பக்கங்கள்

05 டிசம்பர் 2010

சிக்கு புக்கு ப்ரீத்திகா.

சினிமா செய்தியாளராக இருந்து இப்போது நடிகையாக அவதாரம் எடுத்துள்ளார் ப்ரீத்தீகா.
பத்திரிக்கை ஒன்றுக்கு சினிமா செய்திகளைக் கொடுக்கும் நிருபராக இருந்தவர்தான் இந்த ப்ரீத்திகா. இப்போது இவர் சிக்கு புக்கு படம் மூலம் நடிகையாகியுள்ளார். ஷ்ரியாவுடன் இணைந்து ஆர்யாவுடன் ஜோடி போட்டுள்ளார் ப்ரீத்திகா.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆர்வமாக இரு்நதேன். அதற்கேற்ப சிக்கு புக்கு பட வாய்ப்பு வந்ததும் கப்பென்று பிடித்துக் கொண்டேன். எனது புகைப்படத்தைப் பார்த்து இயக்குநர் மணிகண்டன் இந்த வாய்ப்பைக் கொடுத்தார்.
நான் நடித்த ரோலில் முதலில் வித்யா பாலன்தான் நடிப்பதாக இருந்தது. பின்னர் அவர் நடிக்கவில்லை. இதையடுத்து என்னை தேர்வு செய்தனர். படப்பிடிப்புக்காக பத்து நாட்கள் சென்னையில் தங்கியிருந்தேன்.
ஒரு நடிகையாக என்னை இந்தப் படம் சரியாக அடையாளம் காட்டியுள்ளதாக கருதுகிறேன். மேலும், நான் ஒரு மாடல் ஆக இருந்ததும் பெரும் உதவி புரிந்தது. அனைத்து ஷாட்களையும் ஒரே ஷாட்டில் முடித்துக் கொடுத்தேன்.
முதலில் எனக்குத் தமிழ் தெரியாது. இருந்தாலும் ஆர்யாவும், இயக்குநரும் உதவி செய்தனர். இதையடுத்து என்னால் தமிழ் உச்சரிப்பை சரியாக செய்ய முடிந்தது.
முதன் முதலில் நான் கேமராவுக்கு முன்பு தோன்றியது அமிதாப் பச்சனுடன் நடித்த காட்பரீஸ் சாக்லேட் விளம்பரப் படம்தான்.
படத்தில் நானும், ஷ்ரியாவும் சேர்ந்து வருவது போல காட்சி இல்லை. எனவே எங்களுக்குள் எந்த சண்டையும் நடக்கவில்லை என்கிறார் ப்ரீத்திகா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக