பக்கங்கள்

10 டிசம்பர் 2010

புவனேஸ்வரியும் 'பாவத்தின் சம்பளமும்'!

கடந்த ஆண்டு தமிழ் சினிமா- பத்திரிகையுலம் கடுமையாக மோதிக்கொள்ளும் அளவுக்குப் போனதற்கு முக்கிய காரணம் நடிகை புவனேஸ்வரி.
விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட புவனேஸ்வரி பற்றிய செய்திகள் வெளியானபோது, கூடவே, மேலும் யார் யார் இந்தத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறார்கள் என படத்தோடு செய்தி வெளியாக பொங்கிவிட்டனர் திரையுலகினர். குறிப்பாக நடிகர்கள் சூர்யா, விவேக், சத்யராஜ், விஜயகுமார், அவர் மகன் அருண் விஜய் போன்றவர்கள் ஆபாசமாகத் திட்டினர். அலுவலகம் புகுந்து பத்திரிகையாளர்களைக் கொல்லுவோம் என்றெல்லாம் பேசினார்கள். ரஜினிகாந்த், விசி குகநாதன் முன்னிலையில் நடந்த பெரும் கூட்டத்தில் இதெல்லாம் நடந்தது.
ஆனால் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் வழக்கு தொடர்ந்தபோது, இப்படியொரு கூட்டமே நடக்கவில்லையே என்று போலீஸே எழுதிக் கொடுத்தது.
இந்த ரகளையில், பிரச்சினைக்கு மூல காரணமான புவனேஸ்வரியை மறந்துவிட்டனர் பலரும். அவரும் கொஞ்ச காலம் கோயில், குளம் என்று பக்தி காஸ்ட்யூமில் இருந்தார். பின்னர், சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் பிரிவு செயலாளர் ஆனார். இப்போது மீண்டும் நடிப்பைத் தொடர களத்தில் இறங்கிவிட்டார்.
இவர் நடிக்கவிருக்கும் டிவி தொடருக்குப் பெயர் 'பாவத்தின் சம்பளம்'!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக