புதிய நாயகிகளில் இப்போது அதிக படங்களை வைத்திருப்பவர் அமலா பால் என்ற அனகா. முன்னணி நடிகர்களும் முதல் சாய்ஸ் அவர்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
கேரளத்தைச் சேர்ந்த அமலா நடித்த முதல் படம் சிந்து சமவெளி. மாமனாருடன் கள்ளத் தொடர்பு கொள்ளும் விவகாரமான பாத்திரம் அது. கொஞ்சம் பேர் பாராட்டினார்கள். நிறைய பேர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
அடுத்து வந்த படம் மைனா. முதல் படத்தில் வாங்கிக் கட்டியதற்கெல்லாம் சேர்த்து இந்தப் படத்தில் நல்ல பெயர் கிடைத்தது.
இதன் விளைவு, நயன்தாரா, த்ரிஷா ரேஞ்சுக்கு பேசுகிறார்கள் அமலாவை.
விக்ரமின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடி அமலாதான். லிங்குசாமி இயக்கும் படம், ஆர்யா - மாதவன் நடிக்கும் வேட்டை என பெரிய படங்கள் அமலாவின் கைவசம். மேலும் இரு பெரிய பட்ஜெட் படங்களிலும் நடிக்க பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இப்போதே பெரிய பட வாய்ப்புகள் வந்துவிட்டது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் நிச்சயம் பேரைக் காப்பாற்றிக் கொள்வேன்", என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக