பக்கங்கள்

31 மே 2011

கமலின் ஜோடியாகிறார் ஸ்ரேயா.

விஸ்வரூபம் படத்தில் கமலின் புதிய ஜோடி ஸ்ரேயா என செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஜினியின் ஜோடியாக சிவாஜியில் நடித்ததன் மூலம் டாப் இடத்துக்குப் போனவர் ஸ்ரேயா. அதன்பிறகு கமல் ஜோடியாக அவர் நடிக்கப் போவதாகக் கூறப்பட்டது. அந்தப் படம் மர்மயோகி. ஆனால் அது அந்தப் படம் டிராப் ஆகிவிட்டது.
இப்போது அவர் கமல் எழுதி இயக்கும் விஸ்வரூபம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் முதல் நாயகியாக மும்பையைச் சேர்ந்த சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். இரண்டாவது நாயகி வேடம்தான் ஸ்ரேயாவுக்கு என்றாலும், கமலுடன் டூயட் பாடவிருப்பவர் ஸ்ரேயாதான் என்கிறார்கள்.
முதல் நாயகி, இரண்டாவது நாயகி என்ற பேதமெல்லாம் பார்க்காமல் கிடைத்த வேடத்தை ஒப்புக் கொள்ள ஸ்ரேயா தயாராகிவிட்டார். காரணம் அவர் கைவசம் தமிழில் படங்களில்லையே!!

28 மே 2011

பியா,விஜய் காதல்.

பியா,விஜய் காதல் என்று தலைப்பை பார்த்ததும் பயந்து விடாதீர்கள். விஜய் என்றதும் நமது இளைய தளபதி என்று நினைக்க வேண்டாம். டைரக்டர் விஜய்யும், பியாவும் காதலிப்பதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் ‌கோலிவுட்டில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
"பொய் சொல்ல போறோம்", "பலே பாண்டியா", "கோவா", "கோ" உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பியா. இதில் கடைசியாக நடித்த "கோ" படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. கூடவே "கோ" படம், தெலுங்கில் "ரங்கம்" என்ற பெயரில் ரிலீசாகியுள்ளது. அங்கும் இப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதனிடையே சமீபத்தில் "ரங்கம்" படத்தின் ஆடியோ ரிலீசுக்காக ஐதராபாத் சென்றிருந்தார் பியா. அங்கு டைரக்டர் விஜய்யுடன், பியா ஒன்றாக ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரித்தபோது, இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பியாவை பொய் சொல்ல போறோம் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவரே டைரக்டர் விஜய் தான். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் முதலில் நட்பாக வளர்ந்து இப்போது காதலாக மாறியிருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி இயக்குநராக இருக்கும் விஜய் கிரீடம், பொய் சொல்ல போறோம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

26 மே 2011

சிங்களப்படத்தில் பூஜா.

நான் கடவுள் படத்துக்கு பிறகு பூஜாவை கோலிவுட் பக்கம் பார்க்க முடியவில்லை. நடித்தது போதும். திருமணம் செய்துகொள் என்று அவரது அப்பா விதித்த தடைதான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அதற்கேற்ப பூஜாவும் அப்பாவின் பிசினஸில் உதவி செய்ய தொடங்கினார்.
இந்நிலையில் இலங்கை படமொன்றில் நடிக்க வந்த வாய்ப்பை பூஜாவால் மறுக்க முடியவில்லையாம். அப்பாவின் தடையை மீறி அப்படத்தில் நடிக்கிறார். இது பற்றி பூஜா கூறியது: எனக்கு திருமணம் செய்து வைக்கும் எண்ணத்தில் எனது அப்பா இருந்தார்.
அவரது விருப்பத்தை என்னால் மீற முடியவில்லை. இதற்கிடையில் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஏற்கவில்லை. இலங்கையில் 10 பிரபல தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரிக்கும் -குச ஃபாபா- என்ற சிங்கள மொழிப் படத்தில் நடிக்க என்னை கேட்டபோது மறுக்க முடியவில்லை.
புத்தமத கதையொன்றை தழுவி திஷா அபிஷேகரா எழுதிய ஸ்கிரிப்ட் இது. இளவரசன் வேடத்தில் இலங்கை நடிகர் ஜேக்ஸன் ஆன்டனி நடிக்கிறார். இளவரசி வேடத்தில் இந்திய பட ஹீரோயின்தான் நடிக்க வேண்டும் என்று கதாசிரியர் கூறினார். அதன்படி எனக்கு இந்த வாய்ப்பு வந்தது.
இந்திய ஹீரோயின்தான் நடிக்க வேண்டும் என்று கதாசிரியர் கூறியதற்கு காரணம் என்ன என்று கேட்கிறார்கள். அதை அவரிடம்தான் கேட்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை ஏற்றுக்கொண்ட வேடத்தில் 100 சதவீதம் ஈடுபாடுகாட்டுவேன்.

24 மே 2011

உயிரே போவதானாலும் அப்படி நடிக்கமாட்டேன்.

நிர்வாணமாக நடிக்கும் நிலை வந்தால் சினிமாவை விட்டே விலகுவேன் என்று பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார். நடிகை ஐஸ்வர்யாராய் ஹீரோயின் என்ற இந்தி படமொன்றில் நிர்வாணமாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாயின. இதனை ஐஸ்வர்யா ராய் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், நான் நிர்வாணமாக நடிக்கப் போவதாக வெளியான செய்தி பார்த்து மனம் உடைந்து போனேன். நான் குடும்ப பெண். ஒருவரின் மனைவியாகவும், ஒரு குடும்பத்தின் மருமகளாகவும் இருக்கிறேன். என் மாமியார் வீட்டுக்கென சில கவுரவம் இருக்கிறது. என் மாமனார் அமிதாப்பச்சன் புகழ்பெற்ற நடிகர். அவர்களுக்குகெல்லாம் பங்கம் ஏற்படுத்தும்படி எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன். மாமனார் குடும்பத்தினர் என்னை நன்றாக கவனித்துக் கொள்கின்றனர். எனக்குள்ள கலை ஆர்வத்தை புரிந்து கொண்டு திருமணத்துக்கு பிறகும் என்னை நடிக்க அனுமதித்து உள்ளனர். இது பெரிய விஷயம்.
இந்த நிலையில் நான் நிர்வாணமாக நடிக்கப் போகிறேன் என்று வெளியாகும் செய்திகள் அவர்களை எவ்வளவு சங்கடப்படுத்தும் என்பதை வதந்தி பரப்புவோர் உணர்ந்து கொள்ள வேண்டும். நிர்வாணமாக நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் சினிமாவை விட்டே நான் விலகி விடுவேன். என் உயிரே போனாலும் அது போன்று நடிக்க மாட்டேன், என்று கூறியுள்ளார்.

22 மே 2011

சின்ன சின்ன ரோல்களில் நடிப்பதில்லை.

ஐயாவில் அறிமுகப்படுத்திய நயன்தாரா போல் இன்னொரு நடிகை வேண்டும் என்று இயக்குனர் ஹ‌ரியால் தாமிரபரணியில் அறிமுகப்படுத்தப்பட்டவர் பானு. முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்துப் படங்கள் இல்லாமல் போனது சோகம். குடும்பப் பிரச்சனையால் படங்களில் நடிக்காமல் இருந்தவர் அழகர்மலை, சட்டப்படி குற்றம் என மீண்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். அவருடனான உரையாடலிலிருந்து.
அழகர்மலைக்குப் பிறகும் உங்களை அவ்வளவாகப் பார்க்க முடியவில்லையே...?
நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வரத்தான் செய்கின்றன. ஆனால் எல்லாம் சின்னச் சின்ன ரோல்கள். அதேபோல் ஒரு பாடலுக்கு ஆடச் சொல்லி கேட்கிறார்கள். அப்புறம் வீட்டிலும் சில பிரச்சனைகள். இப்போது எல்லாம் ச‌ரியாகிவிட்டது. தொடர்ந்து நீங்கள் என்னை திரையில் பார்க்கலாம்.
சட்டப்படி குற்றம் படத்தில் சிறிய வேடத்தில்தானே நடித்திருந்தீர்கள்...?
தமிழில் நான் நடித்த இரண்டுப் படங்களிலுமே குடும்பப்பாங்கான கேரக்டர்கள்தான். சட்டப்படி குற்றத்தில் அதிலிருந்து வித்தியாசமான வேடம். கொஞ்சம் காட்சிகளில் வந்தாலும் வித்தியாசமான துணிச்சலான வேடம். அதனால்தான் ஒப்புக் கொண்டேன்.
சட்டப்படி குற்றம் வாய்ப்பு எப்படி கிடைத்தது?
என்னுடைய ஃபோட்டோவைப் பார்த்துதான் இயக்குனர் சார் என்னை தேர்வு செய்தார். முன்பு குண்டாக இருப்பேன். இப்போது ஸ்லிம்மாகிவிட்டேன். அந்தப் ஃபோட்டைவைப் பார்த்துதான் வாய்ப்பு கிடைத்தது.
பொன்னர் சங்கர் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறீர்களே?
பேசிக்கலி நான் ஒரு கிளாசிக்கல் டான்ஸர். பொன்னர் சங்க‌ரில் கிளாசிக்கல் நடனம் என்பதால் ஒப்புக் கொண்டேன். மற்றபடி சின்னச் சின்ன வேடங்களில் நடிக்கவோ, ஒரு பாடலுக்கு ஆடவோ கண்டிப்பாக மாட்டேன். ஒரு படம் நடித்தாலும் அது பெயர் சொல்கிற மாதி‌ரி எத்தனை வருடங்களானாலும் ரசிகர்கள் மத்தியில் நிலைத்திருப்பதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட கேரக்டர்களில் நடிக்கவே நான் விரும்புகிறேன்.

19 மே 2011

காய்ச்சலில் தவிக்கும் இலியானா.

ஓய்வின்றி சூட்டிங்கில் பங்கேற்றதால் நடிகை இலியானாவுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. நண்பன் பட சூட்டிங் நெதர்லாந்தில் நடந்து வருகிறது. இப்படத்தின் சூட்டிங்கில் நடிகை இலியானா பங்கேற்றார். இதற்கு முன்பு கடந்த 20 நாட்களாக அந்தமானில் நடந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களாக நெதர்லாந்திலும் சூட்டிங் நடைபெற்றது. இதில் தொடர்ச்சியாக இலியானா பங்கேற்றார். ஒய்வின்றி சூட்டிங்கில் பங்கேற்றதால் இலியானாவுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து நெதர்லாந்தில் இருந்து கோவா திரும்பிய இலியானா அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 10 நாட்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அவருக்கு பரிந்துரைத்துள்ளனர்.

17 மே 2011

கதை நல்லா இருக்கணும்.

பாரதிராஜாவின் "கண்களால் கைது செய்" படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ப்ரியாமணி, "பருத்திவீரன்" படத்தில் முத்தழகு கேரக்டர் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். அதன்பின்னர் நிறைய படங்களில் நடித்த ப்ரியாமணி பரத்துடன் "ஆறுமுகம்" படத்திற்கு பிறகு காணாமல் போனார். தற்‌போது தெலுங்கு பக்கம் முகாமிட்டு இருக்கும் ப்ரியாமணி ‌"ஷேத்திரம்" என்ற படத்தில் ஜெகபதிபாபு, ஷாம் ஆகியோர் நடித்து வருகிறார்.
தமிழ் படங்களில் ஏன்..? உங்களை பார்க்கமுடியவில்லை என்று கேட்டபோது கொட்டி தீர்த்துவிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, வழக்கம்‌ போல ஒரு சினிமா என்றால், டூயட், ஆடி பாடி, அழுது நடிப்பதில் ஆர்வம் இல்ல, கதை நல்லா இருக்கனும், ஒரு பீல் வரனும் படத்தை பார்த்து மக்கள் ரசிக்கனும், இப்ப சமீபத்தில் வெளிவந்த யதார்த்தமான சில படங்கள் எல்லாம் நன்றாக ‌வந்துள்ளன. படம் ரொம்ப நல்லா இருக்கு, மக்களிடத்தில் நல்லா ரீச் ஆகிருக்கிறது என்றெல்லாம் செய்திகள் வெளிவருகின்றன. எனக்கும் அந்தமாதிரி படங்கள் எல்லாம் வந்தால் நான் ஏன்...? நோ சொல்லப் போறேன். தமிழ் சினிமாவில் இருக்கும் நல்ல நல்ல டைரக்டர்கள் இயக்கத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது. குறிப்பாக டைரக்டர் தரணி, முருகதாஸ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரது படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறது என்று கூறினார்.

14 மே 2011

இராமநாராயணன் பல கோடி மோசடி செய்துள்ளார்.

திமுகவின் கைக்கூலியாக செயல்பட்டு தயாரிப்பாளர் சங்கத்தை ரவுடிகள் சங்கமாக மாற்றி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்தார் ராம. நாராயணன். சங்க உறுப்பினர்களிடமிருந்து பல கோடி பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளார். ரூ. 15 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ள அவர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் தரப்படும் என தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஆட்சி மாறி விட்டது, காட்சிகளும் மாறத் தொடங்கியுள்ளன. திரையுலகிலிருந்து முதல் புயல் கிளம்பியுள்ளது. அதிமுக ஆட்சி வந்ததைத் தொடர்ந்து முதல் நபராக ராம.நாராயணன் தனது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல பெப்சி தலைவர் வி.சி.குகநாதனும் பதவியை விட்டு விலகிவிட்டார்.
திமுகவுக்கு மிகவும் நெருங்கியவர் ராம.நாராயணன். கலைஞர் டிவியில் அவரும் ஒரு முக்கியப் பொறுப்பில் இருந்து வருகிறார். தமிழ்த் திரையுலகத்தை கலைஞர் டிவி பக்கம் திருப்பி விட்டதில் இவருக்கு முக்கியப் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்ககத்தில் மூத்த உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இதில் முன்னாள் தலைவர் கேஆர்ஜி, கேயார், ராதாரவி, ஆர்.வி. உதயக்குமார், ஏ.எம்.ரத்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் தயாரிப்பாளர் சங்கத்தை ரவுடிகள் சங்கமாக மாற்றி விட்டார் ராம.நாராயணன்.
கட்டப் பஞ்சாயத்தில்தான் அவர் பெரும்பாலும் ஈடுபட்டார். திமுகவின் கைக்கூலியாக மாறி சங்கத்தின் பெயரைக் கெடுத்து விட்டார்.
உறுப்பினர்களுக்கு வீட்டு வசதி செய்து தருவதாக கூறி பெருமளவில் பணத்தைப் பெற்ற அவர் அதற்கு ரசீதே தரவில்லை. ரூ. 15 கோடி அளவுக்கு அவர் ஊழல் புரிந்துள்ளார். இதுகுறித்து போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் கொடுக்கவுள்ளோம் என்றார்.
பின்னர் கே.ஆர்.ஜி கூறுகையில், ரூ. 2 லட்சம் கொடுத்து தலைவராக்கப்பட்டவர் இந்த ராம.நாராயணன். தலைவர் பதவிக்கு வந்த பின்னர் சங்கத்தை திமுகவின் கைக்கூலியாக மாற்றி விட்டார். ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் பணம் அவர் வீடு தேடிப் போக வேண்டும் என்று உத்தரவிட்டு அதை பிடிவாதமாக செயல்படுத்தி வந்தவர்.
விரைவில் சங்கத்திற்கு தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது குறித்து நாளை மறு தினம் முடிவு செய்யவுள்ளோம் என்றார்.

10 மே 2011

என்னை ஏன் இன்னும் சீண்டுறார்?

சிம்புவே விரும்பாவிட்டாலும் வந்து சேரும் போலிருக்கிறது வம்பு.
ஒரே ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஓராயிரம் சிக்கல்களை கிளப்பிவிட்டு போனார் அவர். செய்தியாளர்களின் கேள்விக்கு போகிற போக்கில் பதில் சொன்னார்.
நயன்தாரா கல்யாணம் நடந்தால் பார்க்கலாம் என்பது தான் அந்த பதில். திரும்புகிற இடமெல்லாம் இதுதான் செய்தி. ஒருவேளை இருவருக்குள்ளும் பிரச்சினை வந்துவிட்டதோ, இந்த கல்யாணம் நடக்காமல் போய்விடுமோ என்றெல்லாம் ஆயிரம் சந்தேகங்கள்.
ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிற மாதிரி ஒரு தகவல் கசிந்திருக்கிறது இன்று. சென்னையில் இருக்கும் தனக்கு நெருக்கமாக சில தோழிகளை குறுந்தகவல்கள் மூலம் தொடர்பு கொண்ட நயன்தாரா, "நான் தான் ஒதுங்கி போய்விட்டேனே அப்புறமும் ஏன் சீண்டனும்" என்று கவலைப்பட்டாராம்.
நயன்தாரா விடயத்தில் இப்படி உசுப்பேற்றிவிட்டு போன சிம்பு, தனது ரசிகர்கள் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட விடயம் குறித்து பேசும் போது கூட, "அப்படியா, எனக்கொன்றும் தெரியாதே" என்று கூறிவிட்டார். சிம்புவுக்காக பொலிஸ் நிலையம் வரைக்கும் போன ரசிகர்களுக்கு இந்த பதில் பெரும் கவலையை வரவழைத்திருப்பதாக கேள்வி.

08 மே 2011

இலை,குழை ஆடையுடன் சம்மு.

தசாவதாரம் படத்தில் கெஸ்ட்ரோலில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, காஞ்சிவரம் மூலம் நாயகியாக பளிச்சிட்ட நடிகை ஷம்மு, சங்க கால படமொன்றில் வனப்பகுதி சூட்டிங்கில் ஆடையில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். டைரக்டர் கற்றது தமிழ் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்துடன் அறிமுக இயக்குனர் ம.செந்தமிழன் இயக்கும் புதிய படம் பாலை. வரலாற்றுப் படம் என்றாலே ‌மன்னர், அரண்மனை, போர்க்களம் என்ற நிலைமையை மாற்றும் வகையில் அதற்கும் முந்தைய காலத்தில் நடந்த சம்பவங்களை படமாக்கி, பதிய வைக்க வேண்டும் என்ற வித்தியாசமான எண்ணத்துடன் பாலை படத்தினை இயக்கி வருகிறார் செந்தமிழன்.
அந்தக் காலத்தில பயன்பட்ட வில்-அம்பு, ஈட்டி, கல் கத்திகளை உருவாக்கியிருக்கோம். போர்க் காட்சிகள் மிரட்டலா வந்துக்கிட்டிருக்கு. காதல், காமம், வீரத்தை மரபு மணம் மாறாமல் காட்டப் போறோம். இது பார்வையாளர்களுக்குப் புது அனுபவதைக் கொடுக்கும் என நினைக்கிறேன், என்று சொல்லும் செந்தமிழன், இந்த படம் தொல்குடி மக்களைப் பற்றியது என்பதால் இருளர் சமூகத்தை சேர்ந்த ஆண்கள், பெண்களை முக்கிய ரோல்ல நடிக்க வைத்திருக்கிறாராம்.
படத்தின் நாயகியாக நடிகை ஷம்மு நடிக்கிறார். நாயகனாக சுனில் என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர்கள் தவிர படத்தில் தோன்றும் பாத்திரங்களில் பல பேர் புதுமுகங்கள் என்பதையே ஹைலைட்டாக சொல்கிறது பாலை படக்குழு. கதைப்படி நடிகை ஷம்மு ஆடை எதுவும் அணிந்திருக்க மாட்டாராம். சங்க காலத்து ‌பெண்கள் மானத்தை காக்க அணிந்திருந்த இலை தழைகளையே ஷம்மு ஆடையாக அணிந்திருக்கிறார். தஞ்சை பகுதியில் இப்படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. சூர், கொடைக்கானல், பழனி, சத்தியமங்கலம், ஈரோடு, தஞ்சாவூர் என இன்றைய நாகரீகங்கள் போய் சேராத வனப்பகுதிகளைத் தேடித் தேடி கண்டுபிடித்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார் டைரக்டர் செந்தமிழன். நாட்டுப்புற பாடல், முதுமக்கள் தாழி, கல் கத்திகள் என பழங்குடி மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்பட்ட அத்தனை விஷயங்களையும் படத்தில் புகுத்தியிருக்கும் டைரக்டர் செந்தமிழ், இந்த படத்திற்காக கடந்த 6 ஆண்டுகளாக பழந்தமிழர்கள் வாழ்க்கை பற்றி ஆய்வு செய்திருக்கிறார் என்பதோடு, படத்தின் வசனங்களிலும் பல்வேறு தமிழ் இலக்கியங்களில் இருந்து தேடிப்பிடித்து வார்த்தைகளை கோர்த்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
வரலாற்றுப் படம் என்ற பெயரில் கோடி கோடியாய் பணம் செலவழித்து பிரமாண்ட செட் போட்டு எடுக்கப்படும் படங்களுக்கு மத்தியில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்குடி மக்களின் வாழ்கையை படமாக்க அந்த காலத்து கிராமத்தை நவீன யுத்தியுடன் செட் போட்டு படமெடுத்துக் கொண்டிருக்கும் புதுமுகம் செந்தமிழுக்கு உரிய மரியாதை பாலை ரீலிசுக்கு பிறகு கிடைக்கும் என நம்புவோம்.

05 மே 2011

பிரியங்காவின் காதல் சேஷ்டை.

வெயில் படத்தின் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா, தனது காதலனுடன் சேர்ந்து புதுப்பட இயக்குனருக்கு தண்ணி காட்டி வருகிறாராம். வெயில் படத்திற்கு பிறகு ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் வெயிலின் தாக்கம் மட்டும்தான் மனதில் நிலைத்திருக்கிறது. பிரியங்கா தற்போது நடித்து வரும் படம் செங்காத்து பூமியிலே. கிழக்கு சீமையிலே, கருத்தம்மா போன்ற ஹிட் படங்களின் வசனகர்த்தாவான ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் சூட்டிங், நொண்டிக் குதிரை போலதான் நகர்ந்து கொண்டிருக்கிறதாம். என்னவென்று விசாரித்தால், படத்தின் நாயகி பிரியங்கா காதல்வசப்பட்ட விவகாரத்தை வயிற்றெரிச்சலுடன்(?) பகிர்ந்து கொள்கிறார்கள்.
செங்காத்து பூமியிலே சூட்டிங்கின்போது டைரக்டர் ரத்னகுமாரிடம் உதவியாளராக பணியாற்றியவரிடம் மனதை பறிகொடுத்திருக்கிறார் பிரியங்கா. கள்ளப்பார்வை, கவனச்சிதறல் என ‌நீடித்த இந்த காதல் ரத்னகுமாரின் காதுகளை எட்டும்போது, காதல் சூடு உச்சத்தை தொட்டிருந்தது. பாதி படத்தை படமாக்கிய பிறகு நடிகையை தூக்க முடியாது என்பதா‌ல், உதவியாளரை தூரத்தி விட்டார் ரத்னகுமார்.
படத்தில் இருந்து உதவியாளர் வெளியேறினாலும், பிரியங்காவின் மனதில் இன்னமும் குடிகொண்டிருக்கிறார் என்பதை சமீபத்திய பிரியங்காவின் நடவடிக்கைகளே காட்டிக் கொடுத்து விடுகின்றன. காதலனை விரட்டி விட்ட டைரக்டரின் கண்ணில் விரலை விட்டு ஆட்ட முடியாவிட்டாலும் காதலனுடன் சேர்ந்து தண்ணி காட்ட ஆரம்பித்திருக்கிறாராம் பிரியங்கா. அடக்கொடுமையே!!!

03 மே 2011

மீண்டும் வருகிறார் மல்லிகா.

ஆட்டோகிராப் படத்தில் கம்மாபட்டி கமலாவாக அறிமுகமானவர் நடிகை மல்லிகா. அதன்பிறகு மகாநடிகன், திருப்பாச்சி, குண்டக்க மண்டக்க, உனக்கும் எனக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். வெள்ளித்திரையில் வாய்ப்பு குறைய சின்னத்திரையில் தலைகாட்டி வந்தார். பின்னர் சினிமாவை விட்டு காணாமல் போனார். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். முன்பை விட அழகாகவும், புதுபொலிவுடனும் காணப்படும் மல்லிகா, தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். கூடவே தமிழ்படங்களிலும் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். நல்ல கேரக்டர் அமைந்தால் நடிக்கத் தயார் என்று கூறி வருகிறார்.

01 மே 2011

பத்திரிகையாளர்களிடமும் கரன்ஷி கேட்கும் அனுஷ்கா.

ஒரு படம் நடித்து ஹிட்டாகிவிட்டாலே நடிகர், நடிகைகளின் அலட்டல் தாங்க முடியாது. அதிலும் நாலைந்து படங்கள் ஹிட்டாகிவிட்டால் சொல்லவா வேண்டும். அதுபோல நடிகை அனுஷ்காவின் அலட்டல் எல்லை மீறி போவதாக அவரின் மேலாளர் உட்பட பலரும் புலம்பி வருகின்றனர்.
ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை அனுஷ்கா. முதல்படம் அவருக்கு வெற்றியை தராவிட்டாலும் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். பின்னர் அருந்ததீ படத்தின் மூலம் பிரபலமான அவர் தொடர்ந்து வேட்டைக்காரன், சிங்கம் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட ஆரம்பித்து, இப்போது தமிழிலும், தெலுங்கிலும் நம்பர்-1 நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் அம்மணியை படபூஜை, ஆடியோ ரிலீஸ் போன்ற விழாக்களுக்கு சென்னை வரும்போது, சம்பிரதாயத்திற்காகவாது பத்ரிகையாளர்களை பார்த்து ஹாய்...ஹலோ என்றாவது சொல்லுங்கள் என்று கூறிவருகின்றனர். ஆனால் அம்மணியோ அதெல்லாம் முடியாது. ரசிகர்களுக்காக திரையில் மட்டுமே காட்சி கொடுப்பேன், பதிரிகையாளர்கள் முன் தோன்ற வேண்டும் என்றால் கூடுதல் பைசா ஆகும் பரவாயில்லையா? என்று அங்கும் கரன்சி பேசுகிறாராம். இதனால் அவரது மேனேஜர் உட்பட பலர், அனுஷ்காவின் அலட்டல் எல்லை மீறி போவதாக புலம்புகின்றனர்.
இருந்தாலும் அனுஷ்காவின் அலட்டல் கொஞ்சம் ஓவர் தான்!