எனக்கும், ராணாவுக்கும் நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார் திரிஷா.
திரிஷாவும், அவரது திருமண செய்திகளும் என்று தனியாக ஒரு புக்கே போடலாம். அந்த அளவுக்கு அவருடைய திருமணம் குறித்து ஏகப்பட்ட செய்திகள் வந்து விட்டன.
கட்டக் கடைசியாக தெலுங்கு நடிகர் ராணா டகுபதியுடன் திரிஷா நெருக்கமாக பழகி வருகிறார். அவர்கள் திருமணம் செய்து கொள்வது உறுதி என்று செய்தி வந்தது.
இந்த நிலையில், இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும், அதில் இரு வீட்டாரும் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதுதொடர்பான புகைப்படங்களும் கூட வெளியாகியுள்ளன. நிச்சயதார்த்தத்தையொட்டி திரிஷாவுக்கு, ராணா, பிளாட்டினம் மோதிரமும், நகைகளையும் கொடுத்தார் என்றும் செய்திகள் கூறுகின்றன. ஆனால் இதை அப்படியே மறுத்துள்ளார் திரிஷா.
இதுகுறித்து திரிஷா சொல்லும்போது, இது அடிப்படையே இல்லாத செய்தி. நானும், ராணாவும் நல்ல நண்பர்களாகவே இருக்கிறோம். எங்களைப் போய் சேர்த்து வைத்துப் பேசுவது... சேச்சே... நல்லாவே இல்லை.
மேலும் எங்களுக்கு நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை. நான் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறேன். திருமணத்தைப் பற்றி நினைத்துக் கூட பார்க்கவில்லை. இப்போது 3 தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
31 ஆகஸ்ட் 2012
25 ஆகஸ்ட் 2012
அருந்ததி, நந்தகியுடன் ஏழு ஹீரோக்கள்!
அம்முவாகிய நான் படத்துக்குப் பிறகு பத்மா மகன் இயக்கும் புதிய படத்துக்கு கூத்து என்று பெயரிட்டுள்ளனர்.
அடர்ந்த காட்டுப் பகுதி பயணத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாகும் த்ரில்லர் இது.
'26699 சினிமா' எனும் நிறுவனம் சார்பில் எஸ். மாலதி தயாரிக்கும் இந்தப் படத்தில் விமல், பிரசன்னா, ரிச்சர்ட், ஹரீஷ், பரணி, நிதிஷ், ஜெமினி பாலாஜி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள்.
அருந்ததி, நந்தகி ஹீரோயின்கள். தினேஷ் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை - ரெஹான் இசை. பாடல்கள், யுகபாரதி.
அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் நடக்கும் பயணத்தை மையமாக வைத்து இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு, கேரளா, ஆந்திர, கர்நாடக வனப்பகுதிகளில் சிறப்பு அனுமதி பெற்று 160 கிமீ பயணித்து காட்சிகளைப் படமாக்கினார்களாம்.
கேரள காடுகளில் இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகிறது.
21 ஆகஸ்ட் 2012
தமன்னாவை மிரட்டும் தயாரிப்பாளர்!
ரொம்ப வருடங்களுக்கு முன் ரஜினி நடித்த ப்ரியா படத்தில், நடிகை ஸ்ரீதேவியுடன் ஆண்டு கணக்கில் ஒப்பந்தம் போட்டு பணம் கறப்பார் மேஜர் சுந்தரராஜன். கிட்டத்தட்ட அதே போன்ற சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளார் முன்னணி நடிகை தமன்னா.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட்டில் சாந்து ஷா ரோஷன் செஹ்ரா என்ற படத்தில் தமன்னா அறிமுகமானார்.
அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சலீம் அக்தர் என்பவர் அப்போது தமன்னாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம், 2005 முதல் 2010 வரை தமன்னா நடிக்கும் படங்களில் அவர் வாங்கும் சம்பளத்தில் 25 சதவீதத்தை தனக்கு தரவேண்டும் என்பது. இதுகுறித்த எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தில் தமன்னா கையெழுத்திட்டுள்ளாராம்.
இப்போது அந்த ஒப்பந்தத்தை தமன்னா மீறி விட்டதாக அவர் மீது வழக்கு தொடர இருப்பதாகவும் சலீம் அக்தர் கூறியுள்ளார்.
"தமன்னாவுக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்ததுடன் மேற்கண்ட ஒப்பந்தமும் செய்து கொண்டோம். பின்னர் தமன்னா தென்னிந்திய சினிமாவுக்கு சென்று விட்டார். ஒப்பந்தம் பேசிய நான் அவரை தொடர்பு கொண்டபோதிலும் அவர் கண்டுகொள்ளவில்லை. ஒப்பந்தப்படி எனக்கு பணமும் தரவில்லை. தனது பெயரில் எழுத்துக்களையும் திருத்தம் செய்து கொண்டார்.
அவரது குடும்பப் பெயரான ‘பாட்டியா' வை விலக்கிவிட்டு வெறும் தமன்னா என கூறிக்கொள்கிறார். தற்போது இந்தியில் ‘ஹிம்மத்வாலா' என்னும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். என்னோடு ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கு தமன்னா பதில் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது நான் வழக்கு தொடர முடிவு செய்திருக்கிறேன்," என்று மிரட்டியுள்ளார்.
தமன்னா கேடி படத்தில் நடிக்க வந்தபோது தனக்கு 16 வயதுதான் என்று கூறியது நினைவிருக்கலாம். அப்படியெனில் இந்திப் படத்தில் இன்னும் முன்பாகவே அறிமுகமாகியிருப்பார். அப்போது அவர் வயது 14 அல்லது 15 இருக்கும்.
இந்த வயதில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது செல்லுமா...?
16 ஆகஸ்ட் 2012
'இப்படிக்கு தோழர் செங்கொடி'
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி உயிர் நீத்த செங்கொடியின் நினைவாக 'இப்படிக்கு தோழர் செங்கொடி' ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் உணர்வாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த ஆவணப்படம் ஆகஸ்ட் 19 அன்று வெளியிடப்படுகின்றது.
ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டும் எனக்கோரி கடந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தைத் சேர்ந்த செங்கொடி என்ற இளம் பெண் மூவரின் தண்டனை செய்ய வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த பெண்ணின் வாழ்க்கை வரலாறு "இப்படிக்கு தோழர் செங்கொடி" என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் உணர்வாளர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ஏஸ் சினிமாஸ் என்ற நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் "பொன்னுசாமி" என்ற புனை பெயரில் எழுதி வரும் வெற்றிவேல் சந்திரசேகர் என்பவர் இந்த ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இவர், இயக்குநர் "பாலை" ம.செந்தமிழனிடம் துணை இயக்குநராக பணியாற்றிவருகிறார்.
இப்படத்தின் வெளியீட்டு விழா, வரும் 19 அன்று சென்னை கீழ்ப்பாகத்தில் அமைந்துள்ள டான் போஸ்கோ அரங்கில், மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவில் திரைப்பட நடிகர் சத்யராஜ் படத்தை வெளியிட, பேரறிவாளின் தாயார் அற்புதம் அம்மையார் முதல் சிடியினை பெற்றுக் கொள்கிறார். விழாவின் போது, படம் திரையிடப்பட உள்ளது.
08 ஆகஸ்ட் 2012
என்னத்தே கண்ணையா மரணம்!
பிரபல நகைச்சுவை நடிகர் என்னத்தே கண்ணையா நேற்று மாலை திடீர் மரணமடைந்தார். அவருக்கு வயது 87.
1950ம் ஆண்டில் வெளியான நாகையா நடித்த 'ஏழைபடும் பாடு' படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் என்னத்தே கண்ணையா. தொடர்ந்து எம்ஜிஆருடன் நம்நாடு படத்தில் ரங்காராவின் உதவியாளராக நடித்திருந்தார்.
நான், முன்றெழுத்து உட்பட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவருக்கு, பெரும் புகழ் கிடைத்தது ரஜினியின் தம்பிக்கு எந்த ஊரு படத்தில். யானைப்பாகனாக அவர் நடித்த காட்சிகள் எண்பதுகளில் பிரபலம்.
தொடர்ந்து ரஜினி, கவுண்டமனியுடன் மன்னன் படத்தில் நடித்தார்.
வடிவேலுவுடன் அவர் நடித்த தொட்டால் பூ மலரும் படத்தின் 'வரூம் ஆனா வராது' நகைச்சுவை காட்சி மிகப் பிரபலமானது.
'தம்பி நீங்க எம்ஜிஆர் மாதிரியே தகதகன்னு மின்றீங்க', என அவர் வடிவேலுவைப் பார்த்து சொல்லும் வசனம் இன்றும் பலரால் பல அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது.
வயதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உழைத்து வந்தார் கண்ணையா. தனது தள்ளாத வயதிலும் கூட, பல படங்களில் நடித்து வந்தார். சமீப வருடங்களில் வந்த வேதம், படிக்காதவன், எம்டன் மகன் போன்ற படங்களிலும் அவர் நடித்திருந்தார்.
வசனம் பேசும்போது, அடிக்கடி என்னத்தே என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது இவரது பாணி. அதனால் இவர் பெயருடன் அந்த என்னத்தே-வும் ஒட்டிக் கொண்டது.
இந்த வயதிலும் நகைச்சுவையாக பேசி சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். செவ்வாய்க்கிழமை பிற்பகல் சாப்பிட்டு படுத்தவர் மாலை 4 மணிக்கு காலமாகிவிட்டார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.
கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு அவரது மனைவி ராஜம் காலமானார். இவர்களுக்கு அசோகன், சாய்கணேஷ் என இரு மகன்களும், அமுதா, தனலட்சுமி, மகேஸ்வரி, சண்முகப்பிரியா என நான்கு மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டார்.
ராயப்பேட்டை ராயிட் காலனியில் உள்ள அவர் வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை மாலை 4 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.
மேலும் விபரங்களுக்கு அவரது மகன் சாய்கணேஷ் அலைபேசி எண் - 80156 15535
05 ஆகஸ்ட் 2012
விஜயுடன் சேரத் துடிக்கும் ஆன்ட்ரியா!
நடிகை ஆன்ட்ரியாவுக்கு விஜய் படத்தில் நடிக்க ஆசை வந்துள்ளது.
பச்சைக்கிளி முத்துச்சரம் மூலம் பிரபலமானவர் ஆன்ட்ரியா ஜெரிமியா. நடிகையாக மட்டுமின்றி தன்னை ஒரு பாடகியாகவும் நிலை நிறுத்தியுள்ளார். கமல் ஹாசனுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட மாட்டோமா என்று முன்னணி நடிகைகள் எல்லாம் ஏங்க அந்த வாய்ப்பு ஆன்ட்ரியா வீட்டு வாசலுக்கே வந்தது. இதையடுத்து அவர் கமலின் விஸ்வரூபம் படத்தில் நடித்துள்ளார்.
ஏற்கனவே அவர் கமலின் மன்மதன் அம்பு படத்தில் நாயகன் அறிமுகமாகும் பாடலை பாடியுள்ளார். இந்நிலையில் விஜயின் துப்பாக்கி படத்தில் அவருடன் சேர்ந்து ஒரு பாடலை பாட அழைத்துள்ளனர். ஆன்ட்ரியாவும் சென்று பாட்டை பாடிக் கொடுத்துவிட்டு, விஜயுடன் நடிக்கை ஒரு வாய்ப்பு கொடுங்களேன் என்று வாய்விட்டே கேட்டுவிட்டராம்.
இப்படித் தான் லக்ஷ்மி ராய் இயக்குனர் விஜயிடம் நடிகர் விஜயுடன் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை தெரிவித்தார். அதற்கு அவரும் தான் விஜயை வைத்து எடுக்கும் படத்தில் நடிக்கை வைக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் ஆன்ட்ரியாவுக்கு அப்படி யாரும் வாக்கு கொடுத்தது போன்று தெரியவில்லை.
01 ஆகஸ்ட் 2012
அடடா!கதை அப்படிப்போகுதோ!!!
தூத்துக்குடி, ஆடுபுலி ஆட்டம், வீரமும் ஈரமும் பொன்ற கொடூரமான ஆக்ஷன் காட்சிகள் கொண்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்தவர் இயக்குனர் சஞ்சய்ராம். ‘ரோசா’ என்ற படத்தை பாதியிலேயே நிருத்திவிட்டிருந்த சஞ்சய்ராம், ரோசா படத்தை மறுபடியும் ‘குற்றாலம்’ என்ற பெயரில் குற்றால அருவியின் மழைச்சாரல்களுக்கிடையே எடுத்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ‘படப்பிடிப்புத் தளத்தில் நடிகையை சூழ்ந்த ரசிகர்கள்’ என்ற பரபரப்பான செய்தி குற்றாலம் படப்பிடிப்பில் நடந்தது தான். படப்பிடிப்புக் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் தவறாக நினைத்துக் கொண்டு அங்கு வந்து கலாட்டா செய்ததாகவும் பேசிக்கொள்கின்றனர். ஏனென்றால் படத்தின் கதைக்கருவே ஒரு விதமானதாம். புதுமுக நடிகர் வாலியின் மனைவி சௌகந்தி. சஞ்சய்ராமின் மனைவி மீனுகார்த்திகா. சௌகந்தியும், மீனு கார்த்திகாவும் சகோதரிகள். மீனுகார்த்திகா தனது தங்கை கணவருடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற காட்சியை படமாகிக்கொண்டிருப்பதை பார்த்து என்ன சார் இது’ என யூனிட் மெம்பர்கள் கேட்க, இவர்களின் சந்தேகத்தை உண்மையாக்கும் விதத்தில் தலை ஆட்டிவிட்டு “நடைமுறையில் நடக்கும் விஷயங்கள் தான் கதைக்கரு. ஆங்காங்கே நடக்கும் விஷயங்கள் தான் அலசப்பட்டு கோடம்பாக்கத்தில் படமாக எடுக்கப்படுகிறது. காம உண்ர்வு அதிகமாக உள்ளவர்கள் பெண்கள் தான். அதைத்தான் படமாக்கிக்கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)