சிம்பு நடிக்கும் வேட்டை மன்னன் படத்தில் சிம்புவின் இரண்டாவது ஜோடியாக இணைகிறார் ஹன்சிகா மோத்வானி.
நிக் ஆர்ட்ஸ் தயாரிக்க, நெல்சன் இயக்க உருவாகும் படம் வேட்டை மன்னன். இப்படத்தில் ஜெய்யும் நடிக்கிறார். பக்கா ஆக்ஷன் படமாக உருவாகும் வேட்டை மன்னனுக்கு இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.
படத்தில் இரண்டு நாயகிகள். இதில் ஒருவரான ஹாட்டான தீக்ஷா ஷேத்தை ஏற்கனவே புக் செய்து விட்டனர். இன்னொரு நாயகிக்காக தீவிர வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். தற்போது அந்த வலையில் சிக்கியிருக்கிறார் ஹன்சிகா மோத்வானி.
மாப்பிள்ளை படத்திலும், பின்னர் எங்கேயும் காதல் படத்திலும் நடித்தவரான ஹன்சிகா தற்போது விஜய்யின் வேலாயுதம் படத்தை எதிர்பார்த்திருக்கிறார். ஆரம்பத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது ஹன்சிகாவுக்கு. ஆனால் அவர் நடித்த மாப்பிள்ளையும், எங்கேயும் காதலும் பெரும் தோல்விப் படங்களாகி விட்டதால் ராசியில்லாத நடிகையாக பார்க்கப்படுகிறார். இந்த நிலையை வேலாயுதம் மாற்றும் என்ற நம்பிக்கையில் இருக்கும் ஹன்சிகா தற்போது சிம்புவின் வட்டாரத்திற்குள் நுழைந்துள்ளார்.
வேலாயுதமும், வேட்ட்டை மன்னனும் ஹன்சிகாவை எப்படி தூக்கி விடப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக