தனது கணவர் தனுஷை ஹீரோவாக்கி, கமல் மகள் ஸ்ருதிஹாசனை ஹீரோயினாக்கி முதன்முறையாக படம் ஒன்றை இயக்க போகிறார் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா. டைரக்டர் செல்வராகவனிடம் சிலகாலம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தனுஷ் ஐஸ்வர்யா. "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் கூட உதவி இயக்குநர் என்று இவரது பெயர் வந்தது. மேலும் பல தடவை தானே ஒரு படத்தை இயக்கபோவதாக ஐஸ்வர்யா தனுஷ் கூறிவந்தார். இதனை தனுஷூம் பலபேட்டிகளில் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவத்தை வைத்து ஒரு அருமையான காதல் கதை ஒன்றை ஐஸ்வர்யா தனுஷ் உருவாக்கியிருக்கிறாராம். அந்த கதைக்கு தானே கதை, வசனம் எழுதி இயக்கபோகிறார் ஐஸ்வர்யா தனுஷ். இந்தபடத்தில் ஹீரோவாக அவரது கணவர் தனுஷ் நடிக்க இருப்பதாகவும், அவருக்கு ஜோடியாக கமல் மகள் ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க ஐஸ்வர்யா முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தபடத்தை தயாரிக்கபோவது தனுஷின் சொந்த படநிறுவனம் என்பது கூடுதல் செய்தி.
29 ஜூன் 2011
27 ஜூன் 2011
மலையாளத்தில் பியா.
"கோ" படத்தின் மூலம் பிரபலமான பியா, முதன்முறையாக மலையாள படத்தில் நடிக்க போகிறார். மாடல் அழகியாக இருந்து சினிமாவிற்குள் நுழைந்தவர் பியா. டைரக்டர் விஜய்யின், பொய் சொல்ல போறோம் படத்தில் அறிமுகமாகி "கோவா", "ஏகன்" உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில், சமீபத்தில் வெளிவந்த "கோ" படத்தின் மூலம் பிரபலமானார். "கோ" படத்தில் துருதுரு என நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். இந்நிலையில் "கோ"வில் இவரது நடிப்பை பார்த்த மலையாள திரையுலகம், அவரை மலையாள படத்தில் நடிக்க வைக்க இருக்கிறது. டைரக்டர் ஜானி அந்தோணி என்பவர் இயக்கும் புதிய படம் ஒன்றில், ப்ருத்விராஜ் ஜோடியாக நடிக்கிறார் பியா. கூடவே இந்த படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் "சுப்ரமணியபுரம்" சசிகுமாரும் நடிக்க இருக்கிறார். பியாவுக்கும், சசிக்கும் மலையாளத்தில் இதுதான் முதல்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
23 ஜூன் 2011
மீரா ஜாஸ்மினுக்கு திருமணம்.
நடிகை மீரா ஜாஸ்மின் தனது காதலன் மாண்டலின் ராஜேசை விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாயின. ரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். சண்டைக்கோழி உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஏராளமான தெலுங்கு, கன்னட, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் தற்போது மம்பட்டியான் படத்தில் நடித்து வருகிறார். இதன் சூட்டிங் இறுதிகட்டத்தில் உள்ளது. இந்த படத்துக்கு பின் சினிமாவுக்கு அவர் முழுக்கு போட முடிவு செய்திருப்பதாக செய்திகள் பரவியுள்ளன.
இதற்காக புதுப்பட வாய்ப்புகளை ஒதுக்கிவிட்டாராம். மம்பட்டியான் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நிறைய படங்களில் நடிக்க அழைப்பு வந்தது என்றும் எதையும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. மலையாளத்தில் அவர் சமீபத்தில் நடித்து ரிலீசான மூன்று படங்கள் தோல்வி அடைந்து விட்டன. எனவே அங்கும் புதுப்படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. சினிமாவை விட்டு விலகுவதற்காகவே புதுப்படங்களில் நடிப்பதை தவிர்க்கிறார் என்று கூறப்படுகிறது. மீராஜாஸ்மினும் மாண்டலின் ராஜேசும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காகவே சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

20 ஜூன் 2011
மருத்துவமனையிலிருந்து ரஜனி வெளியேறினார்.
ரஜினி தனது வழக்கமான உற்சாகத்துக்குத் திரும்பிவிட்டார். அவர் வரும் ஜூலை மாதம் சென்னை திரும்புகிறார். இன்னும் 15 நாட்களில் அவர் வந்துவிடுவார், என்றார் நடிகர் தனுஷ்.
கடந்த ஏப்ரல் 29 முதல் உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட ரஜினி, சென்னை மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்தார். ஆனாலும் சிறுநீரகப் பிரச்சினை மட்டும் தொடர்ந்ததால், சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
கடந்த ஏப்ரல் 14-ம் தேதி சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் டிஸ்சார்ஜ் ஆனால். ஆனால் வழக்கமான சில பரிசோதனைகளுக்காக அவர் சிங்கப்பூரிலேயே ஒரு மாதம் தங்கியிருப்பதாக அறிவித்தார்.
ஜூலை முதல் அல்லது இரண்டாவது வாரம் அவர் சென்னை திரும்பக் கூடும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் திருப்பதி திருமலையில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினியின் மூத்த மருமகனும் நடிகருமான தனுஷ், "சூப்பர் ஸ்டார் ரஜினி சார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் ஆரோக்கியத்துடன் உள்ளார். வீட்டில் உடற்பயிற்சி செய்கிறார். யோகாவைத் தொடர்கிறார்.
சிங்கப்பூரில் உள்ள கடைகளுக்கு சென்று ஷாப்பிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். இன்னும் 15 நாளில் அவர் சென்னை திரும்பிவிடுவார். விரைவில் நானும் சிங்கப்பூர் செல்வேன்," என்றார்.

17 ஜூன் 2011
தமிழில் வாய்ப்புத்தாங்கப்பா!
தேசிய விருது வாங்கியதும், 'இப்படிப்பட்ட ரோல் வேண்டும், அப்படி நடிக்கமாட்டேன்' என்றெல்லாம் பிகு பண்ணிய ப்ரியாமணிக்கு தமிழில் இப்போது படங்களே இல்லை.
கடைசியாக நடித்த ராவணன், ரத்த சரித்திரம் படங்களில் அவர் நடித்திருக்கிறாரா என்று கேட்கும் அளவுக்கு 'தம்மாத்துண்டு' வேடங்கள்!
தெலுங்கு, கன்னடம் என்று போய்க் கொண்டிருக்கிறார். இன்டஸ்ட்ரியில் பெயர் ரிப்பேராகிவிட்டதால், நல்ல வாய்ப்புகள் வருவதும் நின்றுபோய், உப்புமா கம்பெனிகள்தான் அவரை அணுகுகின்றனவாம்.
சமீபத்தில் தனது பிறந்த நாளை பெங்களூரில் கொண்டாடிய பிரியாமணி, இப்போது நம்பிக்கொண்டிருப்பது 'ஷேத்திரம்' என்ற தெலுங்கு படத்தை. இது புராணப் படம்.
என்ன இப்படியாகிடுச்சே நிலைமை என்று துக்கம் விசாரித்த நிருபர்களிடம், "தமிழ்ல வாய்ப்பு அவ்ளோதானா என்று எல்லோரும் கேட்கிறார்கள். மீண்டும் தமிழில் நடிக்கணும். எந்த மாதிரி வேடமானாலும் ஓகே. நல்லமாதிரியா எழுதி கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க," என்கிறாராம்.எல்லாம் காலம்தான் பிரியா.

15 ஜூன் 2011
குளித்தேன் தடித்தேன்!
இந்தியில் "தி டர்ட்டி பிக்சர்ஸ்" என்ற படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்து வரும் வித்யாபாலனுக்கு ஒரு பெருத்த சோதனை. அம்மணி நடித்த குளியல் காட்சி ஒன்றில், அவர் குளித்த தண்ணீர் சரியில்லாததால் அவரது உடம்பில் தடிப்பு தடிப்பாக ஏற்பட்டது. 1980களில் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் கலக்கிய கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை இந்தியில் படமாக உருவாகி வருகிறது. "தி டர்ட்டி பிக்சர்ஸ்" என்ற பெயரில், ஏக்தா கபூர் தயாரிக்க, மிலன் லூதிரா இயக்கத்தில், பாலிவுட்டின் முன்னணி நாயகி வித்யாபாலன் சில்க் ஸ்மிதாவாக நடித்து வருகிறார்.
பொதுவாக சில்க் படம் என்றாலே குளியல் காட்சி இருக்கும். அதேபோல் இந்தபடத்திலும் குளியல் காட்சி ஒன்றை சமீபத்தில் படமாக்கினர். இந்தகாட்சியில் வித்யாபாலன் நடித்து விட்டு வந்த சில நிமிடங்களில், அவரது உடம்பில் லேசான நமநமப்பு போன்று உணர்ந்தார். ஆரம்பத்தில் இதை சாதரணமாக எடுத்துக்கொண்டு வித்யாபாலனுக்கு கொஞ்ச நேரத்தில் உடம்பெல்லாம் தடிப்பு தடிப்பாக மாறியது. இதனால் பதறிப்போன வித்யா, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் காண்பித்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடம்புக்கு ஒத்துக்கொள்ளாத சோப் அல்லது கெமிக்கல் கலந்த தண்ணீரால் தான் இந்த பிரச்சனை என்று கூறியிருக்கின்றனர். இதன்பின்னர் வித்யாபாலனுக்கு சிகிச்சை அளித்து அவரை அனுப்பி வைத்தனர்.
உடம்பில் ஏற்பட்ட இந்த திடீர் இன்பெக்ஷனால் சற்று கலங்கி போய் இருக்கும் வித்யபாலன், சில நாட்கள் ரெஸ்ட் எடுத்த பின்னர் மீண்டும் சூட்டிங்கில் கலந்து கொள்ள இருக்கிறாராம். மேலும் படத்தில் இன்னும் சில குளியல் காட்சிகள் இருக்கிறதாம். ஆகையால் இனி எடுக்கப்போகும் குளியல் காட்சிகளில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க மினரல் வாட்டரை பயன்படுத்தலாம் என்று திட்டமிட்டு இருக்கின்றனராம் படக்குழுவினர்.

12 ஜூன் 2011
அத்வைதாவின் டீசன்ட்.
அழகர்சாமியின் குதிரை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கும் அழகு குயில் அத்வைதா. பாவாடை தாவணி அணிந்து கிராமத்து பெண்ணாகவே மாறி விட்ட அத்வைதா முதன் முதலில் நடிக்க ஒப்பந்தமான படம் சகாக்கள். அழகர் சாமியின் குதிரை முதலில் வந்து அறிமுகப்படமாகி விட்டது. கீர்த்தி ரெட்டி என்ற நிஜப்பெயரை சினிமாவுக்காக அத்வைதா என்று அல்ட்ரா மாடர்னாக மாற்றியிருக்கும் அவர், சினிமாவுக்கு முன்பு நிறைய மேடை நாடகங்களில் நடித்திருக்கிறாராம். கேரள மோகினி ஆட்டத்தை முறைப்படி கற்றிருக்கும் அவர் 16 ஆண்டுகளாக நடனம் கற்று வருகிறாராம்.
அழகர் சாமியின் குதிரை படத்தில் தனது நடிப்பை பார்த்து நிறைய பேர் பாராட்டியதால் மகிழ்ச்சியில் இருக்கும் அத்வைதாவிடம் கிளாமராக நடிப்பீர்களா? என்று கேட்டால் கவர்ச்சி பற்றி பாடம் எடுக்கத் தொடங்கி விடுகிறார். என்னை பொறுத்தவரை கிளாமரில் இரண்டு விதங்கள் இருக்கின்றன. ஒன்று முகம் சுளிக்க வைக்கிற மாதிரியான கிளாமர், இன்னொன்று டீசன்டான கிளாமர். பாவாடை, தாவணியில், ஏன் புடவையில்கூட ஒரு பெண் கிளாமராக தெரிவார். அது டீசன்டான கிளாமர். அதுபோன்று நடிக்க ஆசைப்படுகிறேன். என்று கூறுகிறார் அத்வைதா.

09 ஜூன் 2011
தீபிகாவை குறிவைத்திருக்கும் தாதா.
'டான்' ஆக இருந்தாலும் 'ஆண்' தானே என்ற அடிப்படையில் பல தாதாக்கள் மீது மோகம் கொண்ட பெண்களை படத்தில் பார்த்திருக்கிறோம். ஏன் நிஜத்திலும் கூட நடிகை மோனிகா பேடியும், தாதா அபு சலேமும் காதல் கொண்ட கதையை நாம் பார்த்துள்ளோம்.
இந்த நிலையில் ஒரு டான், தனது மனதில் நடிகை தீபிகாவை வரித்துக் கொண்டிருப்பதை இப்போது போலீஸார் மூலம் வெளியுலகம் தெரிந்து கொண்டுள்ளது.
அந்த தாதாவின் பெயர் அபய் காந்தி. இவர் தலைமறைவாக இருப்பவர். இவரது வீட்டில் சமீபத்தில் போலீஸார் ஒரு அதிரடி ரெய்டை நடத்தினர். அப்போது அவர்களுக்கு பயங்கர தகவல் கிடைப்பதற்குப் பதில் ஒரு ரொமான்ஸ் விஷயம் சிக்கியது.
கஜினி படத்தில் புகைப்படத்திற்குக் கீழே குறிப்புகளை எழுதி வைத்திருக்கும் ஆமிர்கான் போல, இந்த தாதாவும், நடிகை தீபிகாவின் படத்திற்குக் கீழ் ஜூலை 5ம் தேதிக்குள் இவரை திருமணம் செய்ய வேண்டும் என்று எழுதி வைத்திருந்தார்.
தனது அடுத்த குறி தீபிகாதான் என்றும் அவர் புகைப்படத்தை ஒட்டி அதன் மீது எழுதி வைத்திருந்தார்.
இந்த விஷயம் போலீஸாரை ஆச்ச்ரியப்டுத்தியுள்ளது. அதேசமயம், இந்த தாதாவால் தீபிகாவுக்கு ஆபத்து ஏற்பட்டு விடக் கூடாதே என்ற கவலையும் பிறந்துள்ளதாம்.
பாலிவுட்டுக்கும், தாதாக்களுக்கும் இடையிலான தொடர்பு என்பது புதிய விஷயமில்லை. மோனிகா பேடி-அபுசலேம் போலவே, மந்தாகினியையும், தாவூத்தையும் இணைத்து ஒரு காலத்தில் பரபரப்பு செய்திகள் வெளியாகின.
1994ம் ஆண்டு தாவூத்துடன் கை கோர்த்துக் காணப்பட்டார் மந்தாகினி. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல இடங்களில் இருவரையும் சேர்த்துப் பார்த்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை மந்தாகினி பின்னர் மறுத்தார்.
அதேபோல நடிகை டிவிங்கிள் கண்ணாவையும், தாவூத் இப்ராகிமையும் இணைத்துப் பேச்சுக்கள் கிளம்பின.
இந்த நிலையில் கஜினி ஸ்டைலில் தீபிகாவின் படத்திற்குக் கீழ் எனது அடுத்த குறி என்று ஒரு டான் எழுதி வைத்துள்ள விஷயம் பாலிவுட்டில் லேசான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

07 ஜூன் 2011
ஊடகவியலாளராக பூனம்.
"கோ" படத்தில் பத்திரிகையாளர் வேடத்தில் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றவர் கார்த்திகா. அவரைத்தொடர்ந்து பூனம் பஜ்வாவும் "எதிரி எண்-3" படத்தில் பத்திரிகையாளாக நடிக்கிறார். சிக்ஸ்த்சென்ஸ் எனும் புதிய பட நிறுவனம் தயாரிப்பில், ஸ்ரீகாந்த் நடிக்கும் படம் "எதிரி எண் - 3". படத்தில் ஸ்ரீகாந்திற்கு ஜோடியாக பூனம் பஜ்வா நடிக்கிறார். இந்த ஜோடியுடன் பிரபு, சம்பத், ஜெய்பிரகாஷ், உமாபத்பநாபன், கிருஷ்ணமூர்த்தி, "கஜினி" ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
சாப்ட்வேர் என்ஜினியராக தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழும் ஸ்ரீகாந்த் சந்தர்ப்ப சூழ்நிலையில் குற்றவாளியாக்கப்படுகிறான். அவரை அதிலிருந்து மீட்டு காப்பாற்றுகிறார் பத்திரிகையாளராக வரும் பூனம் பஜ்வா. படத்தில் பத்திரிகையாளராக நடிப்பதால், இதற்காக பிரபல பத்திரிகையாளர் ஒருவரிடம் முறையாக பயிற்சி பெற்று வருகிறாராம். கூடவே தன்னுடைய வழக்கமான கவர்ச்சி மற்றும் குத்தாட்டத்தையும் ஆடி அசத்தி இருக்கிறார். இப்படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

04 ஜூன் 2011
துப்பாக்கிக்கு பயந்த ராப்ஷி.
டைரக்டர் கண்ணன் இயக்கும் 'வந்தான் வென்றான்' படத்திற்காக நாயகன் ஜீவாவுடன் நாயகி டாப்சீ நடித்து கொண்டிருக்கிறார்.
துப்பாக்கியை தூக்கி ஆட்களை நோக்கி குறிவைக்கும் காட்சி படப்பிடிப்பில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்கள்.
வந்தான் வென்றான் படத்தை இயக்கும் டைரக்டர் கண்ணன் சார் "நீங்க துப்பாக்கியை தூக்கிட்டு ஒரு ஆளை விரட்டறீங்க" என்றார். இதைக்கேட்ட உடனே எனக்கு படபடப்பு அதிகமானது.
என்னதான் துப்பாக்கியை பிடிக்க பயிற்சி எடுத்து கொண்டாலும், ஏதாவது எக்கு தப்பாக நடந்திடுமோன்னு பயந்தேன். இதில் பேச வேண்டிய 'வசனங்களை' வேறு மறக்காமல் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதால் பதட்டமாக இருந்தது.
வேகமாக அந்தக்காட்சியை எடுத்துள்ளார்கள் என்று பேசும் டாப்சீ தெலுங்கில் டைரக்டர் கிருஸ்னவம்சியின் படத்தில் நடிக்கிறார்.
படத்தில் என் கதாபாத்திரத்தை சுவாரஸ்யமாக டைரக்டர் கண்ணன் வடிவமைத்துள்ளார். நான் வரும் காட்சிகளில்தான் படத்தின் முக்கியமான திருப்புமுனை அமைந்துள்ளது.
இதை ரசிகர்கள் விரும்பி ரசிப்பார்கள் என்றும் கூறியுள்ளாராம் தயாரிப்பாளர். ஆடுகளம் படத்தில் நடித்த தனுஷ் இயக்குநர் வெற்றிமாறன் இருவருக்கும் விருது கிடைத்ததை நினைத்து பெருமை அடைந்துள்ளாராம் டாப்சீ.

02 ஜூன் 2011
அசினின் தவிப்பு!
துபாயில் நடக்கும் ரெடி படத்தின் பிரிமீயரில் அசின் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிகிறது. அவரது பாஸ்போர்ட் வேறு ஒரு இடத்தில் முடங்கியுள்ளதால் அசின் கலக்கத்தில் உள்ளார்.
சல்மான் கான்-அசின் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ரெடி. இந்த படம் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது. இதற்கிடையே இன்று துபாயில் ரெடி படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையடப்படுகிறது. இதில் சல்லுவுடன் ஜோடி போட்டுப் போகலாம் என்று அசின் கனவு கண்டு கொண்டிருந்தார். கனவு பலிக்காமல் போய்விடும் போலிருக்கிறது.
அசின் சஜித நாதியாத்வாலாவின் ஹவுஸ்புல் 2 என்ற படத்திற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதற்கான படபிடிப்பு லண்டனில் நடக்கவிருக்கிறது. லண்டன் செல்ல விசா வாங்குவதற்காக அசின் தனது பாஸ்போர்ட்டை தயாரிப்பு நிர்வாகிகளிடம் கொடுத்தார். ஆனால் அது இன்னும் அவர் கைக்கு வந்து சேரவில்லை.
இதற்கிடையே துபாயில் நடக்கும் பிரிமீயர் ஷோவுக்கு போக முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். கடைசி நிமிடத்தில் பாஸ்போர்ட் கிடைத்தாலும் துபாய்க்கு பறக்க தயாராக இருக்கிறார். தற்போது அவருடைய ஒரே பிரார்த்தனை பாஸ்போர்ட் கிடைக்க வேண்டும் என்பது தான்.
அய்யோ பாவம்!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)