14 மார்ச் 2021
திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்!
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் எஸ்பி ஜனநாதன். தமிழ் சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றவர்;ஷியாம், அருண் விஜய், குட்டி ராதிகா ஆகியோர் நடிப்பில் உருவான இயற்கை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.இந்த படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றது. தொடர்ந்து ஜீவா, நயன்தாரா நடிப்பில் ஈ படத்தை இயக்கினார். பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் பேராண்மை படத்தை இயக்கினார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா நடிப்பில் புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்ற படத்தை இயக்கினார். எஸ்பி ஜனநாதனின் படங்கள் அனைத்திலும் அரசியலும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளும் பேசப்பட்டிருக்கும்.தற்போது விவசாயிகள் பிரச்சனையை பேசும் வகையில் லாபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் இயக்குநர் எஸ்பி ஜனநாதன் கடந்த வியாழக்கிழமை திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். எடிட்டிங் பணியில் இருந்த அவர், அன்று பகல் வீட்டிற்கு சென்றார். நீண்ட நேரமாகியும் மீண்டும் ஸ்டுடியோவுக்கு திரும்பாததால் அவரது உதவியாளர்கள் வீட்டில் சென்று பார்த்துள்ளனர்.அப்போது சுயநினைவின்றியும், உடலில் எந்த அசைவும் இன்றியும் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியான அவரது உதவியாளர்கள் உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் மூளைச்சாவு அடைந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சற்று கவலைக்கிடமான நிலையில் இருந்த எஸ்பி ஜனநாதனுக்கு ஐசியூவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் எஸ்பி ஜனநாதன் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். எஸ்பி ஜனநாதனின் மறைவு ரசிகர்களையும் திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எஸ்பி ஜனநாதன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இயக்குநர் விருமாண்டி பதிவிட்டுள்ள டிவிட்டில் அண்ணா எப்போதும் அன்பை மட்டும் கொடுத்துக்கொண்டே இருந்தே மனித தெய்வமே தெய்வமாகிவிட்டாய் அண்ணா இயக்குநர்கள் சங்கத்தில் ஆரம்பித்த அண்ணன் ,தம்பி என்ற பாசம் கடந்த 12 ஆண்டுகளாக இருந்து வந்தது படத்தை பார்த்துவிட்டு ஆனந்தமாக பேசிய வார்த்தைகளை என்னால் மறக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.
03 மார்ச் 2021
தயாரிப்பாளர் தவறாக நடக்க முற்பட்டார் என ரெஜினா புகார்!
நடிகை ரெஜினா சினிமாவில் நடிக்க ஆரம்பிக்கும்போது தயாரிப்பாளர் ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக சொல்லியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரெஜினா அதன் பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன் மற்றும் மாநகரம் ஆகிய படங்களின் மூலம் முன்னணி நடிகையாக மாறினார். தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார். இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் ஆரம்பகாலத்தில் தவறாக நடந்துகொள்ள முயன்றதாகக் கூறியுள்ளார். அதில் ‘எனக்கு 20 வயது இருக்கும்போது ஒரு தயாரிப்பாளர் கதையை பற்றி சொல்லும்போது சில அட்ஜெஸ்ட்மெண்ட்கள் செய்யவேண்டி இருக்கும் என கூறினார். எனக்கு அது புரியவில்லை. அதனால் என் மேனேஜரிடம் கேட்டேன். அவர் விளக்கி சொன்னதும் எனக்கு புரிந்தது. பின்னர் அவரின் போனை எடுக்கவே இல்லை’ எனக் கூறியுள்ளார்.
25 செப்டம்பர் 2020
16 மொழிகள்.. 40 ஆயிரம் பாடல்கள்..பாடும் நிலா கடந்து வந்த பாட்டுப் பாதை!
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் காலமானார். அவருக்கு வயது 74.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்பி பாலசுப்ரமணியம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று பகல் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்களையும் திரைத்துறையினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் இசை மேதையானது குறித்த ஓர் தொகுப்பு..எஸ்பி பாலசுப்ரமணியத்தின் குரலுக்கு மயங்காத மனிதர்களே கிடையாது என சொல்லலாம்.. அந்தளவுக்கு அற்புதமான குரல் வளத்தை கொண்டவர். ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியமான இவர் சுருக்கமாக எஸ்பி பாலசுப்ரிமணியம் என்றும், எஸ்பிபி, என்றும் பாலு என்றும் அழைக்கப்படுகிறார். இவர் 1946 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.சிறுவயதிலேயே இசை ஆர்வம் அதிகம் கொண்டவர் எஸ்பி பாலசுப்ரமணியம். காரணம் அவரின் தந்தை ஒரு ஹரிகதா கலைஞர் என்பதால் அப்போதே இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டார் எஸ்பி பாலசுப்ரமணியம்.மகனை எப்படியாவது பொறியாளர் ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அனந்த்பூர் ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட்டார் அவரது அப்பா. ஆனால் டைப்பாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எஸ்பி பாலசுப்பிரமணியம் பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்தார்.இசையில் பேரார்வம் கொண்ட எஸ்பிபி பாடகராக வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். ஆனால் அப்பாவுக்கோ மகனை இன்ஜினியராக பார்க்க வேண்டும் என்ற ஆசை. கல்லூரி நாட்களிலேயே பல பாட்டுப் போட்டிகளிலும் இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார் எஸ்பிபி.ஆரம்பத்தில் மெல்லிசைக் குழு ஒன்றை நடத்தி வந்த எஸ்பிபி அப்போதே பல இசையமைப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டு வந்தார். எஸ்பி பாலசுப்ரமணியம் முதல் பாடலாக தெலுங்கு திரைப்படமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ரமணா படத்தில் பாடினார். தமிழில் எம்எஸ்விதான் எஸ்பிபியை அறிமுகப்படுத்தினார்.சாந்தி நிலையம் படத்தில் இயற்கை எனும் இளைய கன்னி என்ற பாடலை பாடி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமனார். அன்று முதல் இன்று வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட 16க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.6 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். அதோடு ஏராளமான பிலிம் ஃபேர் விருதுகளையும் பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளார் எஸ் பி பாலசுப்பிரமணியன். பல வெளிநாட்டு விருதுகளையும் குவித்துள்ளார் அதுமட்டுமின்றி நாட்டின் மிக உயரிய விருதுகளான மத்திய அரசின் பத்மஸ்ரீ, பம்பூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.எஸ்பி பாலசுப்ரமணியம் சிறந்த பின்னணி பாடகராக மட்டுமின்றி சிறந்த டப்பிங் கலைஞரும் ஆவார். அதோடு மட்டுமல்லாமல் பல படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் முதன் முதலில் மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் நடிப்புக்கு அறிமுகமானார். எஸ்பி பாலசுப்ரமணியம். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் பல படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.இந்நிலையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தான் விரைவில் மீண்டு வருவேன் என வீடியோ வெளியிட்டார். ஆனால் சில நாட்களிலேயே வரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.ஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் பலரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து எஸ்பிபியின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. எஸ்பி பாலசுப்ரமணியம் விரைவில் வீட்டிற்கு வர ஆர்வமாக இருப்பதாக அவரது மகன் எஸ்பி சரண் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று எஸ்பிபியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்நிலையில் இன்று பகல் அவரது உயிர் பிரிந்தது.
30 ஆகஸ்ட் 2020
பேப்பரில் எழுதி லவ் யூ சொன்னார் எஸ்பிபி!
கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சுயநினைவுடன் இருக்கிறார். மருத்துவர்கள், நர்ஸ்கள், மக்கள் என்று எல்லோருக்காகவும் இவர் மூன்று வார்த்தைகளை தனது கைப்பட நேற்று எழுதி உள்ளார். பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனாவில் இருந்து மீண்டும் வர வேண்டும் என தமிழகமே பிரார்த்தனை செய்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி மொத்த இந்திய திரையுலகமே இவருக்காக பிரார்த்தனை மேற்கொண்டு வருகிறது. கடந்த 5ம் தேதி கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னையில் அமைந்தகரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் அவ்வப்போது முன்னேறி வந்தது. அதே சமயம் திடீர் என்று அவரின் உடல்நிலை நலிவடைந்தது. உடல் நிலை நிமிடத்திற்கு நிமிடம் மாறி வந்தது. இதனால் தொடர்ந்து ஐசியூவில் வைத்து அவர் கண்காணிக்கப்பட்டார்.கடந்த ஒரு வாரமாக அவரின் உடல்நிலை சீராக உள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ்.பி.பி உடல் கொஞ்சம் முன்னேறிய நிலையில் அவருக்கு சுயநினைவு திரும்பி உள்ளது. 95% சுயநினைவுடன் அவர் தற்போது சீரான உடல்நிலையுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.தற்போது சுயநினைவுடன் இருக்கும் எஸ்.பி.பி பேனா மூலம் சில விஷயங்களை சொல்ல வருகிறார். இதற்காக அவரிடம் நேற்று பேனா, பேப்பர் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ''லவ் யூ ஆல்'' என்று எஸ்.பி.பி எழுதி இருக்கிறார். லேசான கிறுக்கலுடன், தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மருத்துவர்கள், நர்ஸ்கள், தனக்காக பிரார்த்தனை செய்யும் மக்கள் என்று எல்லோருக்காகவும் இந்த மூன்று வார்த்தைகளை தனது கைப்பட எழுதி உள்ளார்.இவரின் இந்த எழுத்து குறிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது. ப்பா எவ்வளவு அன்பு இவருக்கு என்று எல்லோரும் இவரை பாராட்டி வருகிறார்கள். தற்போது எஸ்.பி.பி கொஞ்சம் கொஞ்சமாக பாடல் கேட்க தொடங்கி உள்ளார். தனக்கு பிடித்த பாடல்களை மொபைலில் அருகில் வைத்தால் அதை கேட்கிறார். அவரின் உடல் இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில் விரைவில் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.07 மார்ச் 2020
க.அன்பழகன் காலமானார்!
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98.மூச்சுத்திணறல் காரணமாக சுவாசிக்க சிரமப்பட்டு வந்த அன்பழகன் கடந்த 24-ம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.
கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக எந்த பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் வீட்டில் ஓய்வில் இருந்தபடியே அவர் சிகிச்சை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.திமுக பொதுச்செயலாளரும், திராவிட இயக்க மூத்த முன்னோடியுமான பேராசிரியர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98 ஆகும். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் வரை அதாவது தனது 96 வயது வரை மிக ஆக்டிவாக இயங்கி வந்த அவருக்கு வயது மூப்பு காரணமாக நடை குறைந்தது. பின்னர் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்த அவர் முழுவதும் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். அவரை கவனித்துக்கொள்வதற்காக சுழற்சி முறையில் செவிலியர்களை பணியமர்த்தியது பிரபல தனியார் மருத்துவமனை.திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உயிருடன் இருந்தவரை அவரை காணச் செல்பவர்களை எளிதாக அடையாளம் கண்டு அவர்களுக்கு சைகை செய்வார். நினைவுதப்பும் அளவுக்கு இதுவரை அவரது உடல்நிலை சென்றதில்லை. இந்நிலையில் கடந்த வாரம் அவருக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அந்த சிகிச்சை பலனின்றி மரணத்தை தழுவியுள்ளார்.அன்பழகனின் மறைவை பொறுத்தவரை திமுகவுக்கு பேரிழப்பு என்றே சொல்லலாம். கருணாநிதியால் அண்ணன் என அழைக்கப்பட்டவர், தொண்டர்களால் பேராசிரியர் என போற்றப்பட்டவர், யாரிடமும் அதிர்ந்து பேசாதவர், அமைதியின் இலக்கணமாக திகழ்ந்தவர், என இவரை பற்றி பெருமைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். காரணம் அந்தளவிற்கு சாந்த சொரூபியாக திகழ்ந்தவர் இவர். திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடியாக இருந்த இவரது மறைவு ஒட்டுமொத்த திராவிட இயக்க ஆதரவாளர்களுக்கு ஈடு சொல்ல முடியாத இழப்பாகவே கருதப்படுகிறது.இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இல்லாத ஒரு சிறப்பாக திமுகவில் அரைநூற்றாண்டு காலமாக அதிகாரமிக்க பதவியில் இருந்துள்ளார் அன்பழகன். திமுகவை பொறுத்தவரை ஒருவரை கட்சியில் சேர்ப்பதும், இணைப்பதும் பொதுச்செயலாளருக்கு உரிய உரிமையாகும். மிகவும் அதிகாரமிக்க ஒரு பொறுப்பு என்றுகூட சொல்லலாம். இந்தப் பொறுப்பில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தாமல் கருணாநிதிக்கு தோள் கொடுத்த தோழனாகவும், அவருக்கு அண்ணனாகவும் தன் வாழ்நாள் வரை வாழ்ந்து மறைந்துள்ளார் அன்பழகன்.19 பிப்ரவரி 2020
இந்தியன் -2 படப்பிடிப்பில் விபத்து மூவர் பலி!
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். இவ்விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை அருகே செம்பரம்பாக்கத்தில் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் - 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு சண்டை காட்சி படமாக்கப்பட்டது.அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்தது. இதில் கிரேனில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே 3 சண்டை கலைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.08 செப்டம்பர் 2019
பிரபல நடிகர் ராஜசேகர் காலமானார்!
தமிழ் திரைப்பட இயக்குநரும் பிரபல நடிகருமான ராஜசேகர் காலமானார். 'பாலைவனச் சோலை' படத்தை இயக்கிய இரட்டையர் இயக்குநர்களான ராபர்ட் - ராஜசேகரில் ஒருவர் இயக்குநர் ராஜசேகர். இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். பாரதிராஜாவின் 'நிழல்கள்' படத்தில் 4 ஹீரோக்களில் ஒருவராக நடித்துள்ளார் ராஜசேகர். இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலில் நடித்திருப்பார் ராஜசேகர். ராபர்ட்டுடன் இவர் இணைந்து, ரபார்ட் - ராஜசேகர் என்ற பெயரில், 'மனசுக்குள் மத்தாப்பூ', 'சின்னப்பூவே மெல்லப் பேசு', 'தூரம் அதிகமில்லை', 'பறவைகள் பலவிதம்', 'தூரத்துப் பச்சை', 'கல்யாணக் காலம்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார் ராஜசேகர். சினிமா மட்டுமின்றி பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களிலும் முக்கியமான வேடங்களில் நடித்து வந்தார். துண்டிக்கப்பட்டிருப்பது தொடர்பு மட்டும்தான்; நிலாவுமன்று.. எழுக நிலாவைத் தொடுக! வைரமுத்து ஆறுதல்! குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் இவரது கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. சின்னத்திரை சங்கங்களிலும் பொறுப்பு வகித்து வந்தார் ராஜசேகர். அண்மைக்காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ராஜசேகர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். ராஜசேகரின் திடீர் மரணம் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.10 ஜூன் 2019
கிரேஸி மோகன் காலமானார்!
தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் முத்திரை பதித்த கிரேஸி மோகன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 67. நாடக ஆசிரியரான இவர் பல மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். மெக்கானிக் எஞ்சினியரிங் படித்தவர். ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோதே, நடுநடுவே நாடகங்களை போடுவார். அப்படி இவரது நாடகத்தை பார்க்க வந்த, இயக்குனர் சிகரம் பாலசந்தர் பாராட்டி தள்ளி விட்டார். அதுதான் சினிமாவுக்குள் கிரேஸியை உள்ளே புகுத்தியது. பொய்க்கால் குதிரை படம் மூலம் சினிமா பயணம் தொடங்கியது. கமல்ஹாசன் "டேக் திங்ஸ் ஈஸி... லைஃப் இஸ் கிரேஸி.." இதுதான் கிரேஸி மோகனின் தாரக மந்திரம். அது அவரது பேச்சு, எழுத்து எல்லாவற்றிலும் பிரதிபலிக்கும். படங்களில் காமெடி இருக்கும். ஆனால் காமெடியையே ஒரு முழு படமாக எழுதும் திறமை கிரேஸிக்கு மட்டுமே உண்டு. இதனை மிக சரியாக பயன்படுத்தி கொண்டவர் கமல்ஹாசன்தான்! வசனகர்த்தா இதற்கு அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றியதே சாட்சி! ட்ரேட் மார்க் லட்சக்கணக்கானோர் மனதுக்கு பிடித்தமான கிரேஸி மோகன் அற்புதமான மனிதர் மட்டுமல்ல.. காயம்பட்ட இதயத்துக்கு மருந்தானவரும்கூட. ரொம்ப வேகமாக வேகமாக பேசுவார்.. எப்பவுமே இவரது பேச்சில் ஒரு ஸ்பிரிட் இருக்கும். வெத்திலை - பாக்கு - சீவல்தான் இவரது ட்ரேட் மார்க்!ஒரு காமெடியை பார்த்து சிரித்து முடிப்பதற்கு முன்பேயே இன்னொரு காமெடி வந்து நம்மை திக்குமுக்காட செய்வதுதான் கிரேஸியின் டச்&பஞ்ச்! கடந்த சில வருடங்களாக இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக சொல்லப்பட்டது. எனினும் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ளாமல் இருந்தார்,இந்நிலையில், தீவிர கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் கவலைக்கிடமான நிலையில் அவர் உள்ளதாகவும் தகவல்கள் பரவின. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபலங்களும், பொதுமக்களும் கிரேஸி மோகன் உடல்நலம் பெற்று வர வேண்டும் என்று இணையத்தில் ட்வீட்கள், கமெண்ட்கள் போட்டு பிரார்த்தனை செய்து வந்தனர். கமலஹாசன் கிரேஸி மோகன் சீரியஸ் என்ற தகவலை கேட்டதும் கமல்ஹாசன் நேரடியாக ஆஸ்பத்திரிக்கே சென்றுவிட்டார். அங்கு அவரது உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். எனினும், தீவிர சிகிச்சை அளித்தும் அது பலனின்றி கிரேஸி மோகன் காலமானார். இந்த தகவலை கேட்டதும், சினிமா, நாடக உலகமே பெரும் சோகம் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளது. மணம் வீசும் கிரேஸி மோகன்.. எத்தனையோ பேரின் மன பாரத்தை குறைத்தவர்.. தன் அசால்ட் வார்த்தைகளால் டென்ஷன், பிரஷரை தூக்கி தூக்கி எறிய செய்தவர். இது பலருக்கும் கிடைத்திராத ஒரு அரிய வரப்பிரசாதமே! அவரது நாடகங்கள், கமெடிகள், வசன தெறிப்புகள் எல்லாமே அவரது வெற்றிலை, பாக்கு, சீவல் போல காலங்காலத்துக்கும் நின்று மணம் வீசும்!02 ஏப்ரல் 2019
பிரபல இயக்குனரும் நடிகருமான மகேந்திரன் மறைந்தார்!
பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானார். அவருக்கு வயது 79. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் மகேந்திரன். காலம் கடந்தும் பெயர் சொல்லக்கூடிய பல்வேறு திரைப்படங்களை அவர் தமிழ் கூறும் நல் உலகிற்கு வழங்கியவர்.மகேந்திரனின் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, மெட்டி போன்ற திரைப்படங்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் பசுமையாக நிழலாட கூடியவை. அந்த காலகட்டத்தில் இவை புதிய பரிணாமத்தை வழங்கிய திரைப்படங்களாக பார்க்கப்பட்டன. சமீப காலத்தில் நடிகராகவும் அவர் ஜொலிக்க ஆரம்பித்து இருந்தார். விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த தெறி திரைப்படம், ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான பேட்ட, உதயநிதி நடித்துள்ள நிமிர் போன்ற திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மகேந்திரன் நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் மகேந்திரனுக்கு சிறுநீரகப் பிரச்சினை ஏற்பட்டதால், சென்னையில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் அவரது உயிர் பிரிந்தது. தமிழ் திரையுலகத்திற்கும், ரசிகர்களுக்கும் மகேந்திரனின் இறப்பு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.19 ஜூலை 2018
ராகவா லாரன்ஸ் பற்றி போட்டுடைத்த ஸ்ரீ ரெட்டி!
ராகவா லாரன்ஸ் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அவரை பற்றி நல்லவிதமாக கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் பட வாய்ப்பு வேண்டுமானால் என்னை படுக்கையில் திருப்திபடுத்த வேண்டும் என்று கூறினார். நானும் அவர் சொன்னபடியே செய்தும் பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றிவிட்டார். ஏழை மக்களுக்கு உதவி செய்து, போராட்டங்களில் கலந்து கொண்டு அவர் உங்களுக்கு நல்லவர் போன்று தெரியலாம். ஆனால் அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டது உண்மை தான். நான் பொய் சொல்லவில்லை என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.20 மார்ச் 2018
ஜெயலலிதா முதலமைச்சராக ம.நடராஜன் தான் காரணம்!
25 பிப்ரவரி 2018
நடிகை சிறீதேவி மாரடைப்பால் மரணம்!
நடிகை ஸ்ரீதேவி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரின் மரண செய்தி அறிந்து திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஸ்ரீதேவி ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்தவர்.துபாயில் திருமண நிகழ்ச்சியின்போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் ஸ்ரீதேவி. அது தான் அவர் பகிர்ந்த கடைசி புகைப்படங்கள்.ஸ்ரீதேவி இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தானும், அமிதாபும் சேர்ந்து நடித்த ஹுதா கவா படத்தில் வந்த விளையாட்டு பற்றிய ட்வீட்டை ரீ ட்வீட் செய்துள்ளார்.தன்ஷிகா நடித்துள்ள காத்தாடி படக்குழுவை வாழ்த்தி போட்ட ட்வீட் தான் ஸ்ரீதேவி கடைசியாக போட்ட ட்வீட் ஆகும். அதன் பிறகு அவர் இரண்டு ட்வீட்டுகளை ரீட்வீட் மட்டுமே செய்துள்ளார்.ஸ்ரீதேவியின் மரண செய்தி அறிந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். #sridevi என்ற ஹேஷ்டேக்குடன் பலர் ட்வீட்டுகிறார்கள்.
21 நவம்பர் 2017
சசிக்குமாரின் முகாமையாளர் தற்கொலை!பொலிசில் முறைப்பாடு!
சசிகுமாரின் மேனேஜர் அசோக் குமார் தற்கொலைக்குக் காரணமான பைனான்சியர் - தயாரிப்பாளர் மதுரை அன்புச் செழியனைக் கைது செய்யக் கோரி போலீசில் புகார் அளித்துள்ளனர் இயக்குநர்கள் சசிகுமார், அமீர் மற்றும் சமுத்திரக் கனி ஆகியோர். 40 வயதான அசோக்குமார் இன்று அபிராமபுரத்தில் உள்ள தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திரையுலகில் அவரை பெரும்பாலானோருக்கு நன்கு தெரியும் என்பதால், அசோக்கின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. சசிக்குமாரின் அத்தை மகன்தான் அசோக் குமார். சசிக்குமாருடன் இணைந்து செயல்பட்டு வந்தார். கந்து வட்டிக்கு அவர் தற்கொலை செய்திருப்பது திரையுலகை உலுக்கியுள்ளது.தனது தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் என்று பைனான்சியர் மதுரை அன்புச் செழியனைக் குறிப்பிட்டுள்ளார். அவரது சித்திரவதை தாங்காமல்தான், வேறு வழியின்றி தற்கொலை செய்து கொண்டதாக தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் தனது கடிதத்தில்.இதைத் தொடர்ந்து அன்புச் செழியனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று இயக்குநர்கள் சசிகுமார், அமீர், சமுத்திரக் கனி உள்ளிட்டோர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.தற்கொலை செய்து கொண்ட மேனேஜர் அசோக்குமார், கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மேனேஜர் மற்றும் இணை தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.அசோக்குமாரின் மரணத்தை தமிழ்த் திரையுலகம் எப்படி கையாளப் போகிறது என்பது தெரியவில்லை. மேலும் அன்புச் செழியன் மீது புகார்கள் வருவது முதல் முறையல்ல என்பதால் இந்தமுறையாக உறுதியான நடவடிக்கையில் அது இறங்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.15 அக்டோபர் 2017
மன அழுத்தத்தால் பாதிப்பு-தீபிகா படுகோனே!
பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன், தான் கடந்த காலத்தில் மன அழுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததாக சமீபத்தில் மனந்திறந்து சொல்லியிருந்தார்.
அவர் அந்த மனஅழுத்தத்தில் இருந்து மீண்டு விட்டாரா என்று கேட்டபோது, “நான் மன அழுத்தத்தில் இருந்து முழுமையாக மீண்டுவிட்டேன் என்று என்னால் சொல்ல முடியவில்லை. மன அழுத்தம் மீண்டும் என்னைத் தாக்குமோ என்ற பயம் இன்றும் மனதின் ஓரத்தில் இருந்துகொண்டிருக்கிறது. அவ்வளவு மோசமான அனுபவம் அது” என்கிறார்.
‘இப்படி நீங்கள் உங்களின் மனஅழுத்தம் பற்றி வெளிப்படையாகப் பேசுவதால் உங்களின் படவாய்ப்புகள் பாதிக்கப்படுமா?’ என்ற அடுத்த கேள்விக்கு தீபிகா, “எனக்கு மனஅழுத்தப் பிரச்சினை இருப்பதால் என்னால் நன்றாக நடிக்க முடியாது என்று சிலர் நினைக்கலாம். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. திரையுலகைப் பொறுத்தவரை தற்போது நான் நல்லநிலையில் இருக்கிறேன். நான் நடிக்க விரும்பும் படங்களை சரியாக தேர்வுசெய்ய என்னால் முடியும். ஆனால் எல்லோராலும் அவ்வளவு தெளிவாக முடி வெடுக்க முடியுமா என்பது எனக்கு தெரியாது..” என்கிறார்.
மனநலத்தை ஒரு பாடமாக பள்ளிகளில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதும் தீபிகாவின் விருப்பமாக இருக்கிறது.
“பள்ளிகளில் பாடங்களுக்கு அடுத்து, உடற்கல்வி பற்றித்தான் பேசப் படுகிறது. நான் படித்த பள்ளியிலும் உடற்கல்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் மனநலத்துக்காக எந்த வகுப்பும் நடத்தப்படவில்லை. அது நமது பாடத் திட்டத்திலேயே இல்லை. உடல் நலத்தைப் போல மனநலத்தின் முக்கியத்துவத்தையும் நாம் உணர்ந்து, பள்ளிகளில் அதை அறிமுகப்படுத்தி யிருந்தால், பல்வேறு பிரச்சினைகளில் இருந்து நம்மால் எளிதாக தப்பிவிடலாம்” என்று கூறுகிறார்.
‘தி லிவ் லவ் லாப்’ என்ற அறக்கட்டளையையும் நிறுவி நடத்திவருகிற தீபிகா, “அரசின் கொள்கை வகுப்பாளர்களும், முக்கியப் பொறுப்பு வகிப்பவர்களும் மனநலத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், பரவலாக நிலவும் மனஅழுத்தத்தைக் குறைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மனஅழுத்தம் இருப்பவர்கள் அதைப் பற்றி வெளிப் படையாகப் பேச முன்வருவார்கள். ‘எங்கே நமது மனநலப் பிரச்சினையைப் பற்றிக் கூறினால் வேலை போய்விடுமோ?’ என்ற பயத்தில் இருப்பவர்களும் அதிலிருந்து விடுபடுவார்கள்” என்று தீபிகா யோசனை சொல்கிறார்.
தனது மனநலப் பிரச்சினை போராட்டம் தொடர்பாக வெளிப்படையாகப் பேசியது குறித்து தீபிகா கூறுகையில், “மனஅழுத்தத்தின் தாக்கங்கள் குறித்துப் புலம்ப வேண்டும் என்பது எனது ஆசையில்லை. மாறாக, மனநலம் சார்ந்த விஷயங்கள் குறித்து இந்தியாவிலும், உலகத்திலும் மக்களின் பார்வை மாற வேண்டும் என்பதே எனது ஆசை” என்று சொல்லி முடிக் கிறார்.
பலரும் பேசத் தயங்கும் விஷயம் பற்றி பேச முன்வந்ததற்காகவே தீபிகா படுகோனை பாராட்டலாம்.30 செப்டம்பர் 2017
மனைவியை காரில் கட்டி சுற்றித்திரிந்த கணவன்!
காரின் முன் பக்கத்தில் மனைவியை கட்டிவைத்து கணவன் காரை வேகமாக ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரானில் கணவனுக்கும் மனைக்கும் ஏற்பட்ட சண்டையில் மனைவிக்கு தண்டனை கொடுக்கும் விதமாக கணவன் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன், மனைவி இருவருடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவன், மனைவிக்கு தண்டைனை கொடுக்கும் விதமாக வினோத செயலில் ஈடுபட்டார்.மனைவியை காரின் முன் பக்கத்தில் கட்டிவைத்து, காரை சாலையில் மிக வேகமாக ஓட்டிச் சென்றார். காரில் முன்பக்கத்தில் தொங்கியபடி இருந்த பெண் பாதியில் வழியில் கிழே விழுந்து படுகாயம் அடைந்தார். தற்போது அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணின் கணவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.27 ஜூலை 2017
நகம் கடித்தல் மனநோய்க்கான அறிகுறியா?
பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இதனை சாதாரணமான ஒன்றாகதான் நினைக்கிறோம் ஆனால் அது ஒரு வகையான மன நோய் எனக் கூறப்படுகிறது.நகம் கடிக்கும் பழக்கம் குழந்தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது. பின்னர் பருவ வயதில் இப்பழக்கம் தானாய் மறைந்து போகும். குறிப்பிட்ட சிலரால் இப்பழக்கத்திலிருந்து விடுபட முடிவதில்லை. காரணமில்லாத அச்சம், தவறான எண்ணங்கள் மனதில் எழுவதால் இவ்வாறு நகம் கடிக்கும் பழக்கம் ஒருவருக்கு தொடரலாம். நகம் கடித்தல் மன அழுத்தத்தின் வெளிப்பாடு என்றும் கூறப்படுகிறது. நகம் கடிப்பது மட்டுமல்ல, கையை அடிக்கடி கழுவுவது, முடியை பிடித்து இழுத்து கொண்டே இருப்பது ஆகியவையும் மனநல பாதிப்பின் வெளிப்பாடுதான் என்று கூறப்படுகிறது. மன ரீதியாக மட்டுமின்றி உடல் ரீதியாகவும் நகம் கடித்தல் கெடுதல் விளைவிக்கும். விரல் நுனிகளில் அழுக்குகள் இருக்கும். நகங்களைக் கடிக்கும் போது அவை வாய் வழியே உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும். இதனால் எளிதில் நோய்த் தொற்று ஏற்படும். எனவே நகம் கடிக்கும் பழக்கத்தை உடையவர்கள் அதிலிருந்து விடுபடுவது நன்மை தரும்.
28 ஏப்ரல் 2017
வாணி ராணி நடிகை போட்ட சண்டை!(வீடியோ)
நடிகை ராதிகா தயாரித்து நடித்து வரும் வாணி ராணி தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகையின், கள்ளக்காதல் அம்பலமாகியுள்ளது.அந்த தொடரில் ஒரு முக்கிய வில்லி வேடத்தில் நடித்து வருபவர் நடிகை சபீதாராய். அதேபோல், ராதிகாவின் ரேடான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மேனஜரான சுகுமாறன். இவர், சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிறுப்பில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அவரோடு, நடிகை சபீதாராய் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். என்னை நீதானே வர சொன்னாய்.. பணம் கொடுக்கிறேன் எனக்கூறினாயே.. கொடு..எனக்கூறி அவரிடம் சண்டை போட்டார். ஒரு கட்டத்தில் சுகுமாறனை தாக்கவும் செய்தார். அவரின் சட்டையை கிழித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சுகுமாறன், பதிலுக்கு அவரை தாக்கினார்.
அதாவது, சுகுமாறனின் மனைவி வெளியூர் சென்று விட்டதால், நடிகை சபீதாராயை வீட்டிற்கு வரவழைத்து கடந்த 2 நாட்களாக உல்லாசமாக இருந்துள்ளார். ஆனால், அவருக்கு கொடுப்பதாக கூறிய பணத்தை தரவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சபீதாராய், சுகுமாறனிடம் சண்டையிட்டது தெரிய வந்துள்ளது.
வாணி ராணி தொடரில் கூட இருந்தே குழி பறிப்பது, மற்றவர்களை பற்றி போட்டுக் கொடுப்பது, குழந்தை கடத்தலில் ஈடுபடுவது போன்ற கதாபாத்திரத்தில் சபீதாராய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் சின்னத்திரை நடிகர், நடிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.05 மார்ச் 2017
கைத்தொலைபேசிகளில் அதிகளவு கிருமிகள்!
நம் அன்றாட வாழ்வில் ஒன்றான ஸ்மார்ட்போன்களில் மூன்று விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் உயிர் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாம் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான கிருமிகள் மற்றும் பாக்டீரியா உள்ளிட்டவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கழிவறைகளில் காணப்படுவதை விட பலமடங்கு கிருமிகள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கழிவறைகளில் வழக்கமாக இரண்டு அல்லது மூன்று வகையான கிருமிகள் மட்டுமே இருக்கும். ஆனால் ஸ்மார்ட்போன்களில் சராசரியாக 10 முதல் 12 வகையான கிருமிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில கிருமிகள் எவ்வித கிருமி நாசினிகளாலும் அழிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
13 பிப்ரவரி 2017
சசிகலாவால் தனிமைச்சிறையில் கருணாஸ்?
கூவத்தூரில் அடைபட்டிருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்களில் பலர் கடும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் நடிகர் கருணாஸை தனியாக ஒரு அறையில் வைத்துள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூவத்தூர் ரிசார்ட்டில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏன் அங்கு அடைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களின் உறவினர்களுக்கும், குடும்பத்தினருக்குமே கூட என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. தொடர்ந்து மர்மமாகவே இருந்து வருகிறது.
அங்கு அது நடக்கிறது, இது நடக்கிறது என்ற செய்திகள்தான் வருகிறதே தவிர எம்.எல்.ஏக்களின் நிலை என்ன என்று யாருக்குமே தெரியவில்லை. இந்த நிலையில் இன்று ஒரு ஆம்புலன்ஸ் வேறு உள்ளே போயிருக்கிறது.இந்த நிலையில் நடிகர் கருணாஸ் கூவத்தூர் முகாமில் பெரும் குழப்ப மன நிலையில் உள்ளதாக ஒரு செய்தி உலா வருகிறது. அவர் கடும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாகவும், பெரும் குழப்பத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.கருணாஸ்தான் உள்ளே வந்தது முதல் பல்வேறு வகையான ஏற்பாடுகளை எம்.எல்.ஏக்களுக்கு செய்து வந்தார். பாட்டுப் பாடினார், டான்ஸும் ஆடினாராம். அவரது ஆட்டம் பலருக்கும் குஷியைக் கொடுத்து அவர்களையும் கூட ஆட வைத்ததாம்.ஆனால் இப்போது அவரை ஒதுக்கி ஓரம் கட்டி விட்டனராம் அதிமுக நிர்வாகிகள். அவரை தனியாக ஒரு இடத்தில் தங்க வைத்துள்ளனராம். அங்கிருந்து அவரை நகர அனுமதிப்பதில்லையாம். எந்த ஆலோசனைக்கும் அவரைக் கூப்பிடுவதில்லையாம்.கருணாஸ் மன நிலையில் மாற்றம் வந்து விட்டதாக சந்தேகம் வந்து விட்டதாம் மேலிடத்திற்கு. இதனால்தான் அவரை ஒதுக்கி விட்டனராம். மற்றவர்களுடன் அவரை கலந்து பேச விடுவதில்லையாம். எதிலும் கலந்து கொள்ள விடுவதில்லையாம். இதன் காரணமாக பெரும் மன வருத்தத்துடனும், குழப்பத்துடனும் உள்ளாராம் கருணாஸ்.14 ஆகஸ்ட் 2016
நா.முத்துக்குமார் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
![]() |
| நா.முத்துக்குமார் குடும்பம் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





