பக்கங்கள்

30 ஆகஸ்ட் 2020

பேப்பரில் எழுதி லவ் யூ சொன்னார் எஸ்பிபி!

சொல்ல வருகிறார்கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சுயநினைவுடன் இருக்கிறார். மருத்துவர்கள், நர்ஸ்கள், மக்கள் என்று எல்லோருக்காகவும் இவர் மூன்று வார்த்தைகளை தனது கைப்பட நேற்று எழுதி உள்ளார். பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனாவில் இருந்து மீண்டும் வர வேண்டும் என தமிழகமே பிரார்த்தனை செய்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி மொத்த இந்திய திரையுலகமே இவருக்காக பிரார்த்தனை மேற்கொண்டு வருகிறது. கடந்த 5ம் தேதி கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னையில் அமைந்தகரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் அவ்வப்போது முன்னேறி வந்தது. அதே சமயம் திடீர் என்று அவரின் உடல்நிலை நலிவடைந்தது. உடல் நிலை நிமிடத்திற்கு நிமிடம் மாறி வந்தது. இதனால் தொடர்ந்து ஐசியூவில் வைத்து அவர் கண்காணிக்கப்பட்டார்.கடந்த ஒரு வாரமாக அவரின் உடல்நிலை சீராக உள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ்.பி.பி உடல் கொஞ்சம் முன்னேறிய நிலையில் அவருக்கு சுயநினைவு திரும்பி உள்ளது. 95% சுயநினைவுடன் அவர் தற்போது சீரான உடல்நிலையுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.தற்போது சுயநினைவுடன் இருக்கும் எஸ்.பி.பி பேனா மூலம் சில விஷயங்களை சொல்ல வருகிறார். இதற்காக அவரிடம் நேற்று பேனா, பேப்பர் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ''லவ் யூ ஆல்'' என்று எஸ்.பி.பி எழுதி இருக்கிறார். லேசான கிறுக்கலுடன், தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மருத்துவர்கள், நர்ஸ்கள், தனக்காக பிரார்த்தனை செய்யும் மக்கள் என்று எல்லோருக்காகவும் இந்த மூன்று வார்த்தைகளை தனது கைப்பட எழுதி உள்ளார்.இவரின் இந்த எழுத்து குறிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது. ப்பா எவ்வளவு அன்பு இவருக்கு என்று எல்லோரும் இவரை பாராட்டி வருகிறார்கள். தற்போது எஸ்.பி.பி கொஞ்சம் கொஞ்சமாக பாடல் கேட்க தொடங்கி உள்ளார். தனக்கு பிடித்த பாடல்களை மொபைலில் அருகில் வைத்தால் அதை கேட்கிறார். அவரின் உடல் இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில் விரைவில் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக