23 செப்டம்பர் 2013
18 செப்டம்பர் 2013
அஞ்சலி ஜெர்மனியில் தலைமறைவு வாழ்க்கை?
நடிகை அஞ்சலி ஜெர்மனியில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் நடிகை அஞ்சலி திடீர் என்று தலைமறைவாகிவிட்டு பின்னர் அவராகவே வந்து காவல் நிலையத்தில் ஆஜரானார். அதன் பிறகு அவரை தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை. தெலுங்கு படங்களில் நடித்து வருவதாகக் கூறப்பட்டது. ஆனால் அப்படி நடிப்பதையும் உறுதிப்படுத்த முடியவில்லையாம். அஞ்சலி இந்நிலையில் அஞ்சலிக்கு திருமணமாகிவிட்டது என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை அஞ்சலி மறுத்தார். இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. அஞ்சலியை தங்கள் படங்களில் நடிக்க வைக்க தமிழ் இயக்குனர்கள் விரும்புகிறார்களாம். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லையாம். இந்நிலையில் அவர் ஜெர்மனியில் தலைமறைவாக இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
14 செப்டம்பர் 2013
பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம்!
இன்னும் இரு ஆண்டுகளில் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக நடிகை ப்ரியாமணி கூறியுள்ளார். பருத்தி வீரன் மூலம் பரபரப்பானவர் ப்ரியாமணி. அடுத்து ஓரிரு படங்களில் நடித்த அவர் படிப்படியாக தமிழ் சினிமாவில் காணாமல் போனார். சென்னை எக்ஸ்பிரஸ் இந்திப் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடினார். கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். ப்ரியாமணி தமிழில் நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருந்ததாகவும், ஆனால் எதுவும் திருப்தியாக அமையவில்லை என்றும் தெரிவித்த ப்ரியாமணி, இப்போது தனது திருமணம் குறித்து சீரியசா
க சிந்திக்க ஆரம்பித்துள்ளாராம். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "இன்னும் இரண்டு ஆண்டுகளில் எனக்குத் திருமணம் நடக்கலாம் . ஆனால் நிச்சயம் பெற்றோர்களின் சம்மதத்துடன் கூடிய காதல் திருமணமாக இருக்கும். முன்பின் தெரியாத ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டு பின்னர் வருத்தப்படுவதை விட அவரைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு திருமணத்தைப் பற்றி முடிவு செய்வதே பொருத்தமாக இருக்கும்," என்றார்.
க சிந்திக்க ஆரம்பித்துள்ளாராம். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "இன்னும் இரண்டு ஆண்டுகளில் எனக்குத் திருமணம் நடக்கலாம் . ஆனால் நிச்சயம் பெற்றோர்களின் சம்மதத்துடன் கூடிய காதல் திருமணமாக இருக்கும். முன்பின் தெரியாத ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டு பின்னர் வருத்தப்படுவதை விட அவரைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு திருமணத்தைப் பற்றி முடிவு செய்வதே பொருத்தமாக இருக்கும்," என்றார்.
08 செப்டம்பர் 2013
நடிகை சிந்து தற்கொலை முயற்சி!
அங்காடித்தெரு, போக்கிரி உள்ளிட்ட படங்களில் நடித்த சிந்து தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்தார். கடன் தொல்லை காரணமாக அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
காமெடி, குணச்சித்திரம் என அனைத்து வேடங்களிலும் நடிப்பவர் சிந்து. இவர் தற்போது சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார். நேற்று அவர் அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மயங்கி விழுந்தார். உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அவரை அனுமதித்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின் சிந்துவுக்கு நினைவு திரும்பியது.
விருகம்பாக்கம் போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை சிந்து கடந்த ஓராண்டாக கணவரிடமிருந்து பிரிந்து தனது மகளுடன் தனது அப்பா வீட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)