'யோகா டீச்சர்' அனுஷ்காவிற்கும் தெலுங்கு இயக்குநர் கிரிஷுக்கும் இடையிலான காதல் புட்டுக் கொண்டு விட்டதாம். இதற்குக் காரணம் நயனதாரா மற்றும் ஆர்யா என்று சூடான பேச்சு அடிபடுகிறது.இந்த கிரிஷ் வேறு யாருமல்ல வானம் படத்தை இயக்கியவர்தான். அதில் கிரிஷ் கேட்டுக் கொண்டதால்தான் விலைமாது கேரக்டரில் நடித்துக் கலக்கினார் அனுஷ்கா. இவர்களுக்கிடையே ஏற்பட்ட நெருக்கமான நட்பு கல்யாணப் பேச்சு வரை வந்து விட்டதாம். விரைவில் டும்டும்தான் என்றும் தெலுங்குத் திரையுலகில் பேசி வந்தனர்.இந்த நிலையில்தான் திடீரென இவர்களது உறவில் விரிசல் விழுந்து விட்டதாம். அனுஷ்கா இரண்டாம் உலகம், அலெக்ஸ் பாண்டியன் படங்களில் பிஸியாக இருக்கிறார். ஜார்ஜியாவில் இரண்டாம் உலகம் சூட்டிங் முடித்துவிட்டு காதலர் கிரிஷை ஆசையாய் பார்க்கபோன இடத்தில் சரியான ரெஸ்பான்ஸ் இல்லையாம். கிரிஷ் இப்போது ராணா, நயன்தாராவை வைத்து கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் அனுஷ்காவின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டாராம்.கிரிஷ் திடீரென இப்படி பாராமுகம் காட்டுதவற்குக் காரணம் நயனதாரா என்கிறார்கள். கிரிஷுக்கும், நயனதாராவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு விட்டதாம். இதனால்தான் அனுஷ்காவை கண்டுகொள்ளவில்லையாம் கிரிஷ்.அதேசமயம், ஜார்ஜியா போன இடத்தில் அனுஷ்காவுடன் ஆர்யா நெருக்கமாகி விட்டதால்தான் கிரிஷ் அப்செட்டாகி விட்டதாக இன்னொரு காரணத்தைக் கூறுகிறார்கள். இருவரும் சேர்ந்து ஜார்ஜியாவையே சுற்றித் தீர்த்து விட்டதாகவும் கிரிஷுக்கு அவரது நலம் விரும்பிகள் போட்டுக் கொடுத்து விட்டனராம்.அப்படியானால் இவர்களுக்கிடையே என்ன உறவுதான் உள்ளது என்று சிலர் மண்டையைப் பிய்த்துக் கொண்டு வருகின்றனர். அது குறித்துக் கேட்டால், ஆர்யா, அனுஷ்கா இடையே என்ன நட்போ அதேதான் கிரிஷ், நயனதாராவுக்கும் என்று ரொம்பத் தெளிவாக குழப்புகிறார்கள்.வில்லு படப்பிடிப்பு சமயத்தில்தான் பிரபுதேவாவுடன் நெருங்கினார், நெருக்கம், காட்டினார், காதலிலும் வீழ்த்தினார் நயனதாரா. தற்போது அது கிரிஷ் விவகாரத்திலும் நடந்து விடுமோ என்று நிறையப் பேர் எதிர்பார்க்கிறார்களாம்.
29 அக்டோபர் 2012
19 அக்டோபர் 2012
த்ரிஷாவின் தந்தை கிருஷ்ணன் மரணம்!
நடிகை த்ரிஷாவின் தந்தை கிருஷ்ணன் மாரடைப்பால் நேற்று காலமானார்.
ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மேனேஜராக வேலை பார்த்து வந்த அவருக்கு வயது 68.
நடிகை த்ரிஷாவின் தாய் உமாவும் தந்தை கிருஷ்ணனும் நீண்ட காலமாக பிரிந்து வசிக்கின்றனர். ஆரம்பத்தில் சென்னையில் உள்ள ஓட்டலில் மேனேஜராக இருந்த கிருஷ்ணன், மகளின் இமேஜ் பாதிக்குமே என்பதற்காகவே ஹைதராபாதுக்குப் போய்விட்டார்.
ஆழ்வார்பேட்டையில் தனது தாயுடன் தனியாக வசித்து வந்தார் த்ரிஷா.
த்ரிஷாவும் அவரது அம்மா உமாவும் எவ்வளவோ முறை அழைத்தும் கிருஷ்ணன் இவர்களோடு வசிக்கவில்லை. தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று கூறி அவர் தனியே வசித்து வந்தாராம்.
தான் வேலை பார்க்கும் ஹைதராபாத் நட்சத்திர ஓட்டலுக்கு த்ரிஷா வந்தால் கூட, அவரை தன் மகள் என்று காட்டிக் கொள்ள மாட்டாராம்.
இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் ஹைதராபாதில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்படவே ஹோட்டல் ஊழியர்கள் அவரை அவசர அவசரமாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
18 அக்டோபர் 2012
எங்கிருந்தாலும் வாழ்க!
பாலிவுட் பிரபலங்களான, சயீப் அலி கானுக்கும், கரீனா கபூருக்கும், தடபுடலாக திருமணம் நடந்து முடிந்து விட்டது. புதுமணத் தம்பதி, தேனிலவுக்காக விரைவில் வெளிநாட்டுக்கு பறக்க தயாராகி வருகின்றனர். கரீனாவின் மாஜி காதலரும், ஜாப் வி மீட் நாயகனுமான, ஷாகித் கபூர் இதுகுறித்து என்ன நினைக்கிறார் என கேட்டபோது, கரீனாவும், சயீப்பும், பாலிவுட்டின் பொக்கிஷங்கள். பொருத்தமான ஜோடிகள் கூட. கரீனாவுக்கு என் வாழ்த்துக்கள் என, வாய் நிறைய வாழ்த்துகிறார். அதெல்லாம் சரி, உங்களுக்கு எப்போது திருமணம் என, கேட்டால்,திருமணம் பற்றி, இன்னும் நினைத்து பார்க்கவில்லை. ஆனால், மனதுக்கு பிடித்த பெண், கண்ணில் பட்டு, என் தலையைச் சுற்றி, பட்டாம் பூச்சிகள் பறந்தால், உடனடியாக திருமணம் தான் என, உற்சாகத்துடன் கூறுகிறார்.
இதேபோல் பிரபல நடிகையும், நடிகர் அஜய் தேவ்கனின் மனைவியுமான கஜோல் வாழ்த்து தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் இதுபற்றி பேசிய கஜோல், அவர்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். சைப் ஒரு சிறந்த மனிதர். இருவரும் நீண்டகாலம் சந்தோஷமாகவும், திருப்தியாகவும் வாழ வாழ்த்துகிறேன், என்றார்.
14 அக்டோபர் 2012
குத்துப் பாட்டுக்கு ஆடினால் தனி கெளரவம்!
குத்துப் பாட்டுக்கு ஆடினால் தனி கெளரவம் கிடைக்கிறது என்று கூறியுள்ளார் நடிகை சமீரா ரெட்டி.
பிரகாஷ் ஜா உருவாக்கத்தில் தயாராகி வரும் சக்ரவியூக் என்ற இந்திப் படத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார் சமீரா. இதுகுறித்து அவர் கூறுகையில், குத்துப் பாடல்களுக்கு ஆடுவது என்று பெருமையான ஒன்றாக மாறியுள்ளது. அதில் ஆடும்போது தனி கெளரவம் கிடைக்கிறது. உரிய அங்கீகாரமும் கிடைக்கிறது.
எனவே குத்துப்பாடல்களுக்கு ஆடுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஒரு படத்தில் குத்துப் பாட்டு இருக்கிறதா என்று மக்களே கேட்கும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. இது வரவேற்புக்குரியது. மேலும் ஒரு படத்தை தள்ளிக் கொண்டு போகும் சக்தி குத்துப்பாட்டுகளுக்கு மட்டுமே உண்டு என்று கூறியுள்ளார் சமீரா ரெட்டி.
ஹீரோயின் வரிசையில்தான் கெட்டியாக இல்லை சமீரா ரெட்டி, குத்துப் பாட்டிலாவது கொடி கட்டிப் பறக்கட்டும்....
12 அக்டோபர் 2012
தன்மானம் இருந்தால்....?
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான அணியினர் பதவியேற்று ஓர் ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் அவரது நிர்வாக திறமை சரியாக இல்லை என்று கூறி அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர் முக்தா சீனிவாசன் தலைமையிலான எதிர் அணியினர். அதன் விவரம் வருமாறு...
சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்க கட்டடத்தில் தயாரிப்பாளரும், இயக்குநருமான முக்தா சீனிவாசன் தலைமையில், பஞ்சு அருணாசலம், கேயார், ஜி.சேகர் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். முக்தா சீனிவாசன் பேசும்போது, இந்த சங்கம் 1971-ல் ஆரம்பிக்கப்பட்டது. அதில் இருந்த ஏழு பேரில் நான் மட்டுமே உயிரோடு இருக்கிறேன். 83வயதாகிவிட்டது. 40 படங்களுக்கு மேல் செய்துவிட்டேன். எத்தனையோ அனுபவம் இருந்தாலும் இப்படி ஒரு சங்கத்தில் இருப்பது மிக வருத்தமாக உள்ளது. எஸ்.ஏ.சி., மீது எனக்கு எந்த தனிப்பட்ட விரோதமும் கிடையாது. ஆனால் அவர் ஒரு சங்கத்துக்கு தலைவராக எந்த தகுதியும் இல்லை என்றே நினைக்கிறேன். இந்த சங்கத்திற்கு ஏற்ற தகுதியும், திறமையும், பேச்சாற்றல், நிர்வாக திறமை, அனுசரித்து செல்லும் பாங்கு இப்படி ஏதேனும் ஒன்றாவது இருக்கனும். இதில் எதுவுமே அவரிடம் கிடையாது. நலிந்த தயாரிப்பாளர்களுக்கு என்ன செய்ய வேண்டியது என்பது அவருக்கு சுத்தமாக தெரியவில்லை. அந்தகாலத்தில் சங்கம் ரொம்பவே பொறுப்புடன் செயல்பட்டது. காரணம் தலைவர்கள் அப்படி அமைந்தனர். வாசன், ரெட்டி போன்றவர்கள் தலைமை வகித்த இடம் இது. இவர் யாருக்கும் ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை. சங்கம் பக்கம் வருவதே இல்லை. பழைய உறுப்பினர்களை மதிப்பது இல்லை. எதற்கு எடுத்தாலும் போலீஸ்க்கு போகிறார். மொத்தத்தில் அவரது பணி சங்கத்திற்கு பூஜ்யம்.
இவர் இந்த இடத்தை பிடித்துக்கொண்டு செய்ய முடியாத விஷயங்களை அடுத்தவர்களுக்காவது அந்த வாய்ப்பை கொடுக்கலாம். அதுவும் செய்யமாட்டார். தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு ஒரு சுற்றறிக்கை கூட அனுப்புவது இல்லை. சங்கத்தின் செயல்பாடுகள் என்னவென்று தெரிவது இல்லை. என்னால் இந்த சங்கத்தை விட்டு விலகி புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடங்க முடியும். அது நன்றாக இருக்காது. முடிவாக எஸ்.ஏ.சி.க்கு ஒன்று சொல்கிறேன். தன்மானம் இருந்தால் நீங்கள் இந்த பதவியை விட்டு விலகுங்கள், அடுத்தவர்களுக்கு வழிவிடுங்கள் என்றார்.
மேலும் எஸ்.ஏ.சி., அவரது மகன், அதாவது விஜய் அரசியலில் வரவேண்டும் என்பதற்காக தனது பதவியை தவறாக பயன்படுத்துகிறார். இதுவரை தயாரிப்பாளர் சங்கத்தின் கணக்கு வழக்கு சரியாக காட்டவில்லை, முறையாக பொதுக்குழு கூட்டவில்லை என்றும், வருகிற 28ம் தேதி பொதுக்குழு கூட்டி அடுத்த தலைவர் யார் என்பதை முடிவு செய்யபோவதாக கேயார், சேகர் உள்ளிட்டோர் கூறினர்.
08 அக்டோபர் 2012
மயங்கிவிழுந்த நடிகை!
வீட்டில் கொடுமை தாங்காமல் வெளியேறிய தெலுங்கு நடிகை திவ்யா, ரயில் நிலையத்தில் உணவு தண்ணீரின்றி மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தெலுங்கில் ஒக ரொமான்டிக் க்ரைம் கதா படத்தில் கவர்ச்சியாக நடித்தவர் திவ்யா. இந்தப் ப டம் அங்கே பெரிய வெற்றியைப் பெற்றது.
சினிமாவில் ஜெயித்தாலும் வீட்டில் பல தொல்லைகளுக்கு ஆளாகிவந்தார் திவ்யா. அவர் சொத்துக்களை உறவினர்கள் அபகரித்துக் கொள்ள, சொந்த சித்தப்பாவே ஏகப்பட்ட கொடுமைகளை செய்து வந்தாராம். இதையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாமல், வீட்டை விட்டே ஓடிவிட்டாராம் திவ்யா.
அப்படி ஓடியவர், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் தங்கியிருக்கிறார். அங்கே சாப்பாடு தண்ணீர் கூட வாங்க முடியாமல் அவதிப்பட்டவர், ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்தார்.
அவரைப் பின்னர் அடையாளம் தெரிந்து கொண்ட சிலர், மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உடனிருக்கும் திவ்யாவின் அம்மா, "இனி என் மகள் மனசு கெடாமல் பாத்துக்கறோம்...," என்று சொல்லி வருகிறாராம்.
05 அக்டோபர் 2012
சிவகார்த்திகேயன் ஜோடி நந்திதா!
நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார் அட்டகத்தி ஹீரோயின் நந்திதா.
அட்டகத்தி படத்தின் நாயகிகளுள் பளிச்சென்று வெளியில் தெரிந்தவர் இந்த நந்திதாதான்.
பெங்களூரைச் சேர்ந்த இந்த இளம் நடிகை இப்போது தனுஷ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் இந்த வேடத்தில் ப்ரியா ஆனந்த் நடிப்பதாகக் கூறப்பட்டது.
எதிர்நீச்சல் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை வெற்றிமாறனின் உதவியாளர் செந்தில் இயக்குகிறார்.
கொலவெறி புகழ் அனிருத் இசையமைக்கிறார்.
நந்திதாவுக்கு மேலும் ஒரு வாய்ப்பும் வந்துள்ளது. அது வெங்கட்பிரபுவின் உதவியாளர் இயக்கும் நளனும் நந்தினியும் பட ஹீரோயினாக அவர் நடிப்பதுதான்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)