பக்கங்கள்

30 ஜூன் 2012

வதந்திகளை நம்பவேண்டாம் என்கிறார் ஓவியா!

Oviya Helenகேரள தொழிலதிபரை காதலிப்பதாக தன்னைப் பற்றி வரும் தகவல்கள் எதையும் நம்ப வேண்டாம் என்று நடிகை ஓவியா கூறியுள்ளார். களவானி படம் மூலம் பிரபலமான ஓவியா, கலகலப்பு மூலம் முன்னணி நடிகையாக உள்ளார். ஓவியா கேரளாவைச் சேர்ந்தவர். தமிழில் இப்போது பிஸி நடிகையாக மாறி வருகிறார். இவருக்கும் கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் என்று கிசுகிசு பரவ ஆரம்பித்துள்ளது. அனன்யா பாணியில் தன்னைவிட ரொம்ப வயதான ஒருவரை அவர் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் என்றும் கூறப்பட்டது. இப்போது இந்த செய்திக்கு அவசர அவசரமாக மறுப்பு தெரிவித்துள்ளார் ஓவியா. அவர் கூறுகையில், "சினிமாவில் இப்போதுதான் ஒரு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறேன். அதற்குள் காதல் என்று எழுதுவது தேவையற்றது. இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை. காதலிப்பதற்கெல்லாம் ஏது நேரம்... அவ்வளவு பிஸி. இப்போதைக்கு முழுக்கவனமும் சினிமாவில்தான். இன்னும் திருமணம் பற்றி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை", என்றார்.

29 ஜூன் 2012

நாயகிகள் 6தேவையாம் சிம்புவுக்கு!

nayantara-simbu-hotயங் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிக்கும் மன்மதன்-2 படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உட்பட 6 நாயகிகள் நடிக்க உள்ளனர். கடந்த 2004ம் ஆண்டு சிம்பு, ஜோதிகா நடித்த மன்மதன் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் யங் சூப்பர் ஸ்டார் சிம்பு. தற்போது சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் வாலு, வேட்டை மன்னன், போடா போடி படங்கள் முடிந்ததும் 'மன்மதன்2' படப்பிடிப்பு தொடங்குகிறது. இப்படத்தில் சிம்பு ஜோடியாக 6 கதாநாயகிகள் நடிக்கின்றனர். அவர்கள் த்ரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்ளிட்டோர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களுடன் மன்மதனில் நடித்த சிந்து துலானி, மந்த்ரா பேடி ஆகியோரும் நடிக்கக் கூடும் என்கிறார்கள். மேலும் சில நடிகைகளுடன் படக்குழுவினர் பேசி வருகிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளன.

20 ஜூன் 2012

பாண்டியராஜனின் மகன் படுகாயம்!

Pandiyarajan S Son Injured பைக் விபத்தில் நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரேம் ராஜன் (19) படுகாயமடைந்தார். பிரேம்ராஜன் பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன் படித்து வருகிறார். தனது நண்பர் பாரத் (18) என்பவடன் இன்று காலை மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்குப் புறப்பட்டனர். மத்திய கைலாஷ் பகுதியில் சென்றபோது அவரது பைக்கின் முன் பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விழுந்தது. இதில் பிரேம்ராஜன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பாரத்தின் கால் உடைந்தது. இருவரும் பெருங்குடி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பிரேம்ராஜன் தலையில் 18 தையல் போடப்பட்டது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

16 ஜூன் 2012

காசு வாங்கினேனா...?தமன்னா

சமீபத்தில் நடந்த ராம்சரண் தேஜா - உபாசனா திருமணத்தில் அனைவரையும் கவர்ந்த ஒரு விஷயம், தமன்னாவின் சூப்பர் ஆட்டம்! ராம் சரண் - உபாசனாவுக்கு திருமணத்துக்கு முன் நடந்த சங்கீத் நிகழ்ச்சியில்தான் அவர் அசத்தல் ஆட்டம் போட்டார். அவருடன் சேர்ந்து ஸ்ரேயாவும் ஆடினார். இப்படி நடனமாட அவர்களுக்கு பெரிய தொகை விலையாகத் தரப்பட்டது என ஆந்திரத் திரையுலகில் செய்தி பரவ கொதித்துப் போயுள்ளார் தமன்னா. "திருமண நிகழ்ச்சிகளில் காசு வாங்கிக் கொண்டு ஆடினேன் என்பது எத்தனை கேவலமான பிரச்சாரம்... நான் அந்த மாதிரி பொண்ணா? எங்க வீட்டில் இப்படி ஒரு விசேஷம் நடந்தா எப்படி சந்தோஷமா ஆடிப் பாடுவோமோ அப்படித்தான் ராம் சரண் திருமணத்திலும் ஆடினோம். இப்படியெல்லாம் அதை கொச்சைப்படுத்துவார்கள் என எதிர்ப்பார்க்கவில்லை," என்றார். அடுத்து பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பவன் கல்யாண் ஜோடியாக நடிக்கிறார் தமன்னா. தமிழில்? "கடவுள் அருள் இருந்தால் அது நடக்கும்?" என்றார். என்னடா இது... கடவுள் அருள் தமன்னாவுக்கு கிடைப்பதில் பெரிய சிக்கலா இருக்கும் போலிருக்கே!

15 ஜூன் 2012

காகா ராதாகிருஷ்ணன் மரணம்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரிய பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் நேற்று மாரடைப்பால் காலமானார். இவருக்கு கடந்த சில மாதங்களாக மூச்சுத்திணறல் இருந்தது. அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் ஓரளவு குணம் அடைந்து வீடு திரும்பினார். இருப்பினும் நேற்று மாலை மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாலை 3-30 மணிக்கு மரணம் அடைந்தார். காகா ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் 6 வயதில் இருந்து நாடகத்தில் நடித்தவர். நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் நாடகக்குழுவில் நீண்ட காலம் நடித்தார். மங்கையர்க்கரசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் நடித்தபோது ஒருமரத்தில் ஏறி காக்கா பிடித்தவாறு நடித்திருந்தார். அதில் இருந்து அவர் `காகா ராதாகிருஷ்ணன்' என்று அழைக்கப்பட்டார். இதுவரை 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிவாஜியுடன் நடித்த மனோகரா, கமலுடன் நடித்த குணா, தேவர்மகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அஜீத்துடன் நடித்த உன்னைத்தேடி, விஜய்யுடன் நடித்த காதலுக்கு மரியாதை ஆகியவை அவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தகுந்தவை. மாயி படத்தில் அவரும் வடிவேலுவும் நடித்த காமெடி காட்சிகள் மிகவும் பேசப்பட்டவை. அவரது சொந்த ஊர் திண்டுக்கல். ஆனால் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில்தான் வளர்ந்தார். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் விசாலாட்சி. இவருக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். 2-வது மனைவி பெயர் சாரதாம்பாள். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். 16 பேரன், பேத்திகள் உள்ளனர். இன்று உடல் தகனம் காகா ராதாகிருஷ்ணனின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தியாகராயநகர் சிங்காரம் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் தகனம் இன்று மாலை 3 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயானத்தில் நடைபெறுகிறது.

13 ஜூன் 2012

சிம்புவுக்கு விரைவில் திருமணம்!

எனது மகள் இலக்கியாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். அது முடிந்ததும் சிம்புவுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று இயக்குநர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார். விஜய டி.ராஜேந்தர்-உஷா தம்பதிக்கு சிலம்பரசன், குறளரசன் மற்றும் இலக்கியா என மூன்று பிள்ளைகள். இதில் மூத்தவரான சிமபு நடிகராகி விட்டார். குறளரசனும் விரைவில் நடிகராகப் போகிறார். மகள் இலக்கியா சினிமா பக்கமே திரும்பிப் பார்க்காமல் வளர்ந்தவர். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாம். இலக்கியா திருமணத்திற்குப் பின்னர் சிம்புவுக்குத் திருமணம் நடைபெறுமாம். ஆந்திர மாநிலம் காளஹஸ்திக்கு நேற்று தனது மனைவி, மகளுடன் வந்த ராஜேந்தர் அங்கு சாமி கும்பிட்டார். பின்னர் செய்தியாளர்கள் அவர்களை சுற்றிசத் சூழ்ந்தனர். அப்போது சிம்பு திருமணம் குறித்து கேட்டபோது, முதலில் இலக்கியா திருமணம் நடைபெறும்.அதன் பின்னர் சிம்பு திருமணம்தான்.சீக்கிரமே சிம்பு திருமணம் நடைபெறும் என்றார் ராஜேந்தர். உங்களது அடுத்த படம் என்ன என்ற கேள்விக்கு ஒரு தலை காதல் என்ற படத்தை இயக்கப் போகிறேன் என்றார். குறளரசன் எப்போது ஹீரோ ஆவார் என்ற கேள்விக்கு, இந்த ஆண்டு இறுதியில் குறளரசன் அறிமுகமாகும் படத்தை அறிவி்ப்போம் என்றார்.

10 ஜூன் 2012

அஞ்சலியின் உதடுகள்....!!!


Anjaliஅமலா பாலைத் தொடர்நது தற்போது அஞ்சலியின் உதடுகள், ஆர்யாவி்ன் கஸ்டடிக்குப் போகப் போகிறது. சேட்டை படத்திற்காக இருவரும் சேர்ந்து ஒரு லிப் லாக் காட்சியில் 'லைவ்லி'யாக க(ந)டிக்கப் போகிறார்களாம்.
டெல்லி பெல்லி இந்திப் படத்தை சேட்டை என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். கண்ணன் இயக்குகிறார். ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். பிரேம்ஜி, சந்தானம் காமெடியைக் கவனிக்கிறார்கள். நாயகியாக மசாலா கபே அஞ்சலி.
டெல்லி பெல்லியில் சூடான, சுவையான லிப்லாக் உண்டு. அதே போல சேட்டையிலும் இருக்கிறதாம். அஞ்சலி உதடுகளை ஆர்யா கவ்விக் கொள்வது போல காட்சி வைத்துள்ளனராம். இந்த லிப்லாக்கின் அவசியம், முக்கியத்துவம், கட்டாயம் குறித்து ஆர்யாவிடமும், அஞ்சலியிடமும் கண்ணன் விளக்கினாராம். இதை ஏற்று இருவரும் முத்தமிட்டுக் கொள்ள சம்மதித்து விட்டனராம்.
இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து காட்சியை வடிவமைத்து விட்ட கண்ணன், அக்காட்சியை மும்பையில் போய் ஷூட் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.
இதையடுத்து ஆர்யாவும், அஞ்சலியும் தங்களது உதடுகளுடன் மும்பை செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார்களாம். அதேசமயம், டெல்லி பெல்லியில் வருவது போன்ற படுக்கை அறைக் காட்சி சேட்டையில் இருக்காதாம்...
ஏற்கனவே அமலா பாலின் உதட்டில் விளையாடியுள்ளார் ஆர்யா. இப்போது அஞ்சலியிடம் வருகிறார்....!

09 ஜூன் 2012

ஓட்டலில் லட்சுமிராய் ரகளை!

லட்சுமிராய் தமிழில் நடித்த 'காஞ்சனா', 'மங்காத்தா' படங்கள் வெற்றிகரமாக ஓடின. ஆனாலும் தமிழில் படங்கள் இல்லை. இந்தி, கன்னடப் படங்களில் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் விக்ரமுடன் 'தாண்டவம்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதில் அனுஷ்காவும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். விஜய் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. லண்டனில் முக்கிய காட்சிகள் தற்போது படமாகி வருகின்றன. இதற்காக படக்குழுவினர் அங்கு முகாமிட்டு உள்ளனர். அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் லட்சுமி ராய்க்கு அறை ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த 'ரூம்' பிடிக்காமல் ஓட்டலில் லட்சுமிராய் ரகளையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓட்டல் 'ரூம்' வசதியாக இல்லை. அதில் தங்க மாட்டேன் என்று படக்குழுவினருடன் தகராறு செய்தாராம். படப்பிடிப்புக்கு செல்லவும் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதர நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் லட்சுமிராய்க்காக பல மணி நேரம் காத்து இருந்தனர். ஆனால் அவர் வரவில்லை. இதனால் இயக்குனர் விஜய் தவித்தார். 'ரூம்' பிடிக்காமல் லட்சுமிராய் தகராறு செய்யும் தகவல் விஜய்க்கு தெரிவிக்கப்பட்டது. உடனே லட்சுமி ராய்க்கு வேறு ரூம் மாற்றிக் கொடுக்க சொன்னாராம். புது ரூம் கிடைத்த பிறகே சமாதானமாகினாராம் லட்சுமிராய்.

07 ஜூன் 2012

நடிகரின் பின்புறத்தில் கடித்த ரசிகை!

Emran Hashmi S Fan Bites His Butt பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஷ்மியின் தீவிர ரசிகை ஒருவர் அவரது பின்புறத்தில் கடித்துள்ளார். பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஷ்மி படங்களில் முத்தக் காட்சி இல்லாமல் இருக்காது. சாதாரண முத்தம் அல்ல லிப் டூ லிப் காட்சிகள். அவர் தற்போது நடித்துள்ள ஷாங்காய் பட விளம்பர நிகழ்ச்சிக்காக குஜராத் வந்திருந்தார். ஒரு ஷாப்பிங் மாலில் அவர், அந்த படத்தில் அவருடன் நடித்த அபய் தியோல், கல்கி கொச்லின் ஆகியோர் ரசிகர்களை சந்தித்தனர். அப்போது ஒரு ரசிகை அத்தனை பாதுகாவலர்களையும் தாண்டி வந்து யாரும் எதிர்பாராவிதமாக இம்ரான் ஹஷ்மியின் பின்புறத்தில் கடித்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத இம்ரான் ஆடிப்போய் விட்டார். இருக்காதா பின்னே... படங்களில் முத்தக் காட்சி மூலம் ரசிகர்களை கலங்கவைக்கும் அவரை ஒரு ரசிகை கதிகலங்கவி்ட்டுவிட்டார். முன்பு ஒரு முறை ஜன்னத் 2 ஷூட்டிங்கிற்காக டெல்லி சென்றபோது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இம்ரான் ஹஷ்மியை பார்க்க முந்தியடித்ததால் படக்குழுவினர் படாதபாடு பட்டனர். ஒரு முறை வெர்ஜீனியா என்பவர் இம்ரானை பார்க்க ஜெர்மனியில் இருந்து இந்தியா வந்திருந்தார் என்றால் அவருக்கு இருக்கும் ரசிகைகளைப் பார்த்துக் கொள்ளுங்களேன்.

03 ஜூன் 2012

நட்சத்திரங்களை பச்சைகுத்திய நமீதா!

வாய்ப்புகள் வற்றிப்போன நடிகை நமீதா ஜோதிடர் ஒருவரின் அறிவுறைப்படி தனது முதுகில் பச்சைக் குத்தியுள்ளாராம். நடிகை நமீதாவுக்கு பட வாய்ப்புகள் வற்றிப்போய்விட்டன. இதனால் அவர் கடை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இந்தியா தவிர துபாய், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று கடைகளைத் திறந்து வைப்பதுடன் அங்கு நடக்கும் விழாக்களிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வருகிறார். இதன் மூலம் அவர் சினிமாவில் சம்பாதித்ததை விட அதிகமாகவே சம்பாதிக்கிறார். கடைதிறப்பு உள்ளிட்ட விழாக்களுக்கு அழைப்பவர்கள் பணத்தோடு, அன்பளிப்புகளையும் வாரி வழங்குகிறார்களாம். இதற்கிடையே சினிமாவில் வாய்ப்புகள் குறைந்துள்ளது பற்றி அவர் ஒரு ஜோதிடரை சென்று பார்த்துள்ளார். அதற்கு அந்த ஜோதிடர் உங்கள் முதுகில் 27 நட்சத்திரங்களை பச்சை குத்தினால் வாயப்புகள் வந்து குவியும் என்று கூறியுள்ளார். உடனே நமீதாவும் தனது முதுகில் 27 நட்சத்திரங்களைப் பச்சைக் குத்திவிட்டார். வாய்ப்புகள் வருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

01 ஜூன் 2012

சகுனியில் ரஜனி,கமல்!

சகுனி படத்தின் இசைவெளியீட்டுக்குத் தேதி குறித்து அழைப்பிதழும் வைத்துவிட்டார்கள். சிறுத்தைக்குப் பிறகு கொஞ்சம் இடைவெளிவிட்டு வரும் இந்தப் படத்தில் கார்த்தி ரஜினியாகவும், சந்தானம் கமலாகவும் வருகிறார்களாம். இதுகுறித்து ஹீரோ கார்த்தி கூறுகையில், "சகுனி எனக்கு ரொம்ப பிடிச்ச படமாக வந்திருக்கு. ஒரு பொதுவான பிரச்சினையை என் புத்திசாலித்தனத்தால தீர்த்து, கூடவே தன்னையும் காப்பாத்திக்கிற கேரக்டர். இது அரசியல் படமா என்பதை பார்த்துவிட்டு நீங்கள்தான் சொல்லணும். காரணம், எதுலதான் அரசியல் இல்லாம இருக்கு... அப்படி பார்த்தா இது அரசியல் படம்தான்... இந்தப் படத்தில் சந்தானம் என்னை ரஜினி என்று அழைப்பார், நான் அவரை கமல் என்று அழைப்பேன்," என்றார். ஜூன் 2-ம் தேதி படத்தின் இசை வெளியாகிறது. மொத்தம் 5 பாடல்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே கார்த்தி பிறந்த நாளான மே 25-ல் இரண்டு பாடல்களின் முன்னோட்டத்தை வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.