பக்கங்கள்

30 செப்டம்பர் 2011

நடிப்பாரா ஸ்ரீதேவியின் மகள்?

“படத்துக்கு படம் நடிகர், நடிகைகளின் வாரிசுகள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றனர். பிரபு சாலமன் இயக்கத்தில் ‘கும்கி’ படம் மூலமாக அறிமுகமாகிறார் நடிகர் பிரபு மகன் விக்ரம். மணிரத்னம் இயக்கும் படத்தில் கார்த்திக் மகன் கவுதம் நடிக்க பேச்சு நடக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தியில் கலக்கியவர் ஸ்ரீதேவி. அவரது மகள் ஜான்வி தெலுங்கு படத்தில் ராம்சரண் தேஜா ஜோடியாக நடிப்பார் என்று தகவல் பரவியது.
இதைக்கேட்டு கோபம் அடைந்த ஸ்ரீதேவி, எந்த துறையில் ஈடுபடுவது என்பது பற்றி இன்னும் ஜான்வி முடிவு செய்யவில்லை. இப்போது படித்துக்கொண்டிருக்கிறாள். இன்னும் சொல்லப்போனால் 18 வயதுக்கு பிறகுதான் அவளிடம் நடிக்க ஆர்வம் இருக்கிறதா என்றே கேட்பேன்” என்றார். மீடியாதான் என் மகள் நடிக்கிறாள் என்று கிளப்பிவிட்டிருக்கின்றன. நடிப்பாரா? இல்லையா? என்பதை சொல்வதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.
அப்படி நடிப்பதென்றால் அவரை பாலிவுட்டிலேயே என்னால் அறிமுகப்படுத்த முடியும். அதைவிட்டு ஏன் தெலுங்கு படத்தில் அறிமுகம் செய்ய வேண்டும் என்றார் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர்.
அம்மா ஒன்னு சொல்றாங்க; அப்பா ஒன்னு சொல்றாரு.. யாரு சொல்றதத்தான் நம்புறது…?

25 செப்டம்பர் 2011

சோனாவிற்கு மகளிர் அமைப்பு துணை!

மது விருந்தில் கலந்து கொண்ட தனக்கு எஸ்.பி. பி. சரண் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை சோனா அவர் மீது போலீசில் புகார் கொடுத்தார். சோனா சென்னை கமிஷனரை சந்தித்து வீடியோ ஆதாரம் ஒன்றையும் கொடுத்தார். இந்த வழக்கில் எஸ்.பி. பி. சரண் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
இந்நிலையில் நடிகை சோனாவுக்கு ஆதரவு தெரிவித்து எஸ். பி. பி. சரண் வீட்டுக்கு முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத் தலைவி கல்பனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சோனா ஒரு நடிகையாக இருக்கலாம். அதற்காக எஸ்.பி.பி. சரண் அவரை ஆபாசமாக திட்டி இருக்கக் கூடாது. சோனா ஒரு பெண். அவருக்கும் கவுரவம் உள்ளது. பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு பெண்கள் திரண்டு கறுப்புக் கொடியுடன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டம் நாளை தொடங்குகிறது. சோனாவுக்கு நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

22 செப்டம்பர் 2011

ஸ்ரேயா கோஷலும் நடிகையாகிறார்!

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், நடிப்பு சேவையை துவக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
பிரபல பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல், தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி என பல மொழிகளில் சினிமா பின்னணி பாடல்களை பாடி பிரபலமடைந்தவர். பல மொழிகளிலும் 180க்கும் மேற்பட்ட படங்களில் பின்னணி பாடி, 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
தமிழில் விண்ணை தாண்டி வருவாயா, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் பாடியதற்காக பல விருதுகளைக் குவித்தவர். கோஷல் பார்க்க சினிமா நடிகைகளைப் போலவே படு அழகாக இருப்பார். இதனால் அவரை நடிக்க வைக்க பலரும் முயன்றனர். ஆனால் அவர் ஜகா வாங்கிக் கொண்டே வந்தார்.
எல்லாருக்கும் 'நோ' என்ற பதிலை மட்டுமே கொடுத்து வந்த கோஷலும் இப்போது நடிப்பு வலையில் விழுந்து விட்டதாக தெரிகிறது. இயக்குநர் ஒருவர் கூறிய கதையைக் கேட்டு மெய்மறந்து போய் விட்டாராம். அந்தக் கதையில் நான் நடிக்கிறேன் என்று கூறியுள்ளாராம்.
ஏற்கனவே உள்ள ஒரு ஸ்ரேயா வழங்கும் 'நடிப்புச் சேவையில்' திளைத்து வரும் ரசிகர்களுக்கு கலை சேவையாற்ற இன்னோரு ஸ்ரேயா வருகிறார். 'டபுள் டிலைட்'தான். இனி நீங்க கவர்ச்சியா நடிப்பீங்களா, முத்தக் காட்சியில் நடிப்பீர்களா என்ற பழைய கேள்விகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு ஸ்ரேயா கோஷலும் தள்ளப்படுவார் என எதிர்பார்க்கலாம்.

18 செப்டம்பர் 2011

சேலை கட்ட இஷ்டமில்லை!

மைனா புகழ் அமலா பால் எந்த விழாக்களுக்கு வந்தாலும் மாடர்ன் டிரஸ்ஸில் தான் வருகிறார். அவரைப் புடவையில் பார்க்க வேண்டும் என்றால் திரையில் மட்டுமே அது சாத்தியம். காரணம் அவருக்கு சேலை கட்டுவதில் இஷ்டம் இல்லையாம், அது கஷ்டமான வேலை என்கிறார்.
அழகாக இருக்கிறீர்கள், லட்சணமாக தழையத் தழைய அழகாக புடவை அணிந்து வரலாமே என்று கேட்டால், விழாக்களுக்கு புடவையில் வருவது கஷ்டம். புடவை கட்ட நேரமாகும். அதனால் தான் விழாக்களுக்கு நான் புடவை கட்டி வருவதில்லை என்றார்.
யாராவது விழா ஏற்பாட்டாளர்கள் அம்மணியை புடவையில் வரச் சொன்னாலும் கூட ஸாரிங்க என்று 'சாரி' கட்ட மறுத்து விடுகிறாராம்.
தெய்வத் திருமகள் படத்தில் வண்ண வண்ண புடவைகளில் வந்து அசத்தினாரே, நிஜத்திலும் அப்படி வந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள்.
என்ன பண்றது, கொசுவம் வைத்து சேலை கட்ட அமலாவுக்கு கஷ்டமா இருக்குதாமே...!

14 செப்டம்பர் 2011

ரஜனியிடம் அடிவாங்க ஆசை!

ஒரு படத்திலாவது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாகி, அவர் கையால் அடிவாங்க வேண்டும். அன்றுதான் என் சினிமா பயணம் பூர்த்தியடையும், என்று நடிகர் அஜீத் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் மிகப்பெரிய ரசிகர், ரஜினியை கடவுளாகவே போற்றுபவர் நடிகர் அஜீத். ரஜினியைப் போலவே சினிமாவில் தனக்கென தனித்த கொள்கைகளை வைத்திருப்பவர்.
அவரது இந்த அணுகுமுறை புதிதாக ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளது, குறிப்பாக ரஜினி ரசிகர்களை. ரஜினிக்கு அடுத்து அஜீத்தை அவர்கள் அதிகம் விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அஜீத் அளித்துள்ள பேட்டி, அவர் எந்த அளவு ரஜினியை நேசிக்கிறார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
உங்கள் அடுத்த ஆசை என்ன அஜீத்திடம் கேட்டதற்கு அவர் இப்படிக் கூறியுள்ளார்:
எனக்கு நம்பர் ஒன், நம்பர் டூவில் ஈடுபாடில்லை. அந்த எண்ணங்களும் இப்போது மனதில் இல்லை. தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியாராகத்தான் ரஜினி சாரைப் பார்க்கிறேன். அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் கவலை இல்லை. நான் ஏகலைவன் போலவே இருக்க ஆசைப்படுகிறேன்.
சூப்பர் ஸ்டாரை நான் தூரத்திலிருந்து பார்த்து ரசித்தபடி படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன்.
ரஜினி சார் நடிக்க வேண்டும். அவர் படத்தில் நான் வில்லனாக நடிக்க வேண்டும். அவர் கையால் நான் அடி வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இது என்றைக்கு நடக்கிறதோ, அன்று என் சினிமா பயணம் ஒரு முழுமையடைந்ததாக சந்தோஷப்படுவேன். இதுதான் என் லட்சியம். மங்காத்தாவின் மாபெரும் வெற்றியை ரஜினி சாருக்கு சமர்ப்பிக்கிறேன்!"என்றார் அஜித்.

11 செப்டம்பர் 2011

த்ரிஷாவை கடுப்பாக்கிய லட்சுமி ராய்!

அஜீத் ஜோடி மற்றும் வில்லி கேரக்டரில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யுமாறு தன்னிடம் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியதாக லக்ஷ்மி ராய் தெரிவித்ததால் த்ரிஷா கடுப்பாகியுள்ளார். ராயைப் போட்டுத் தாக்கியுள்ளார்.
மங்காத்தாவில் த்ரிஷா நடித்த கேரடக்டருக்கு தன்னைத் தான் வெங்கட் பிரபு முதலில் அணுகினார் என்றும், அஜீத் ஜோடி, வில்லி கேரக்டரில் எது வேண்டுமானாலும் தேர்வு செய்யுமாறு கூறியதாகவும் நடிகை லட்சுமி ராய் தெரிவித்துள்ளார். ஆனால் இதை இயக்குனர் வெங்கட் பிரபு மறுத்துள்ளார். தான் த்ரிஷாவைத் தான் அஜீத் ஜோடியாக நடிக்கக் கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த த்ரிஷா கடுப்பாகிவிட்டாராம். என்ன இந்த லக்ஷ்மி ராய் இப்படி அல்பத்தனமாக நடந்து கொள்கிறாரே என்று எரிச்சல் அடைந்துள்ளாராம். அம்மாடி இப்படி பொய் சொல்கிறாரே லக்ஷ்மி ராய் என்று மங்காத்தா யூனிட்டும் கூட கடுப்பாகியுள்ளதாம்.
மங்காத்தா படத்தில் நடிக்கப் போய் இப்படி திரிஷாவை காஞ்சனா ரேஞ்சுக்கு மாற்றி விட்டாரே லக்ஷ்மி ராய்.

06 செப்டம்பர் 2011

முப்பொழுதும் உன் கற்பனைகள்.

முப்பொழுதும் உன் கற்பனைகள் மூலம் தெலுங்குக்கும் போகும் அமலா பால் நடிகை அமலா பாலின் டோலிவுட் ஆசை நிறைவேறியுள்ளது. இதனால் அவர் படு குஷியாக உள்ளார்.
மலையாள நடிகையான அமலா பாலுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது கோலிவுட் அதுவும் மைனா தான். கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிவிட்டார் அமலா. இந்நிலையில் டோலிவிட்டிலும் ஒரு ரவுண்ட் வர அவர் ஆசைப்பட்டார். அதற்காக நிறைய தெலுங்கு படங்களைப் பார்க்குமாறு தோழி அனுஷ்கா கூட அறிவுரை வழங்கியிருந்தார்.
அமலா தெலுங்கு படங்கள் பார்த்தாரோ, இல்லையோ தெரியவில்லை. ஆனால் அவரது ஆசை நிறைவேறியுள்ளது. எப்படி என்கிறீர்களா? முரளி மகன் அதர்வாவுடன் அமலா ஜோடி சோர்ந்த முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தை தெலுங்கிலும் எடுத்து வருகின்றனர். நிரந்தரம் நீ வூகாலே என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் அம்மணி தான் கதாநாயகி.
அமலா பால் காட்டில் மழை தான். இந்த படம் ஹிட்டானால் தெலுங்கிலும் ஒரு கை பார்க்க திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே மைனா, தெய்வத்திருமகள் வெற்றியால் பூரித்துள்ள அமலாவுக்கு இந்த செய்தி மேலும் பூரிப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

05 செப்டம்பர் 2011

பிரபுதேவாவின் வெடி!

பிரபாகரன் எனும் என் தலைப்பு பவர்புல்லானது. ஆனால் அதைப் பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியதால் வெடி என்ற தலைப்பை வைத்தேன், என இயக்குநர் பிரபு தேவா கூறினார்.
விஷால், சமீரா ரெட்டி ஜோடியாக நடிக்கும் படம் வெடி. பிரபு தேவா இயக்குகிறார். ஜிகே பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கிறது.
இப்படத்துக்கு முதலில் பிரபாகரன் என பெயர் வைத்தனர். ஒரு வணிக ரீதியான மசாலா படத்துக்கு விடுதலைப்புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரன் பெயரைச் சூட்டுவது, அந்த மாபெரும் தலைவரை இழிவுபடுத்துவதாக தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்புகள் தெரிவித்து அறிக்கைகள் விட்டனர்.
இதையடுத்து படத்தின் தலைப்பு வெடி என மாற்றிவிட்டார் பிரபுதேவா.
இதுகுறித்து நிருபர்களிடம் பிரபுதேவா கூறுகையில், "தெலுங்கில் ஹிட்டான 'சௌரியம்' படத்தின் தமிழ் ரீமேக்கே வெடி. இதில் விஷாலின் கேரக்டர் பெயர் பிரபாகரன்.
இதையே படத்தின் தலைப்பாக்கினோம். நல்ல பவர்புல் தலைப்பு. ஆனால் எதிர்ப்பு கிளம்பியதால் எதற்கு வீண் சர்ச்சை எனக் கருதி, வெடி என மாற்றி பெயர் வைத்தோம். இம் மாதம் இறுதியில் இப்படம் ரிலீசாகிறது.
விஷால், சமீரா ரெட்டி இருவரும் கேரக்டர்களுக்கு கச்சிதமாக பொருந்தி விட்டனர். அருமையாக வந்துள்ளது படம்," என்றார்.

02 செப்டம்பர் 2011

இதிலென்ன தப்பு?

கால் மேல் கால் போடுவதில் என்ன தவறு இருக்கிறது? நான் நார்த் இண்டியன் கல்ச்சரில் வளர்ந்தவள் என்பதால் அது எனக்கு பழகி விட்டது, என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான் எல்லோருக்கும் நல்ல பொண்ணாத்தான் இருக்கேன். மரியாதை தெரியாத பொண்ணுன்னு கூட சிலர் சொல்றாங்க. உதாரணத்துக்கு சில சினிமா ஃபங்ஷன்களில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தேன். அதுவும் நாகரிகமான ஆடையில்தான். ஆனால் அதைப் பெரிய பிரச்னையாக்கி விட்டார்கள். இந்தப் பொண்ணுக்கு "மேனர்ஸ் இல்லை; மேடையில் இருப்பவர்களை இன்சல்ட் செய்துவிட்டார் என்றெல்லாம் சொன்னார்கள். நான் நார்த் இண்டியன் கல்ச்சரில் வளர்ந்த பெண். அங்கு கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. அதனால் அப்படியே பழகிவிட்டேன். இருந்தாலும் தமிழ் சினிமா ஃபங்ஷன்களில் அதற்குப் பிறகு அதைத் தவிர்த்துவிட்டேன். ஆண்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் மேன்லினஸ்; பெண்கள் அப்படி அமர்ந்தால் தவறா? எங்கள் குடும்பம் படித்த குடும்பம். வீட்டில் பெரியவர்கள் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் எனக்கு நல்ல பண்புகளைத்தான் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள், என்று கூறியுள்ளார்.
காமெடி நடிகர் வடிவேலுவுடன் ஒரு பாட்டுக்கு அயிட்டம் டான்ஸ் ஆடியதால் தமிழில் பட வாய்ப்புகளை இழந்தீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் ஸ்ரேயா, வடிவேலு சார் படத்துல நான் ஆடிய அயிட்டம் ஸாங் நல்ல ரீச். ஸ்ரேயாவின் மார்க்கெட் உச்சத்தில் இருந்த சமயம் அது. இப்போ மார்க்கெட் குறைஞ்சு போனதால் உடனே அந்தப் பாட்டை குறைசொல்ல வந்துட்டாங்க. எந்த விஷயமும் என்னை குறைத்து விட முடியாது, என்று கூறியுள்ளார்.