சசிகுமாரின் மேனேஜர் அசோக் குமார் தற்கொலைக்குக் காரணமான பைனான்சியர் - தயாரிப்பாளர் மதுரை அன்புச் செழியனைக் கைது செய்யக் கோரி போலீசில் புகார் அளித்துள்ளனர் இயக்குநர்கள் சசிகுமார், அமீர் மற்றும் சமுத்திரக் கனி ஆகியோர். 40 வயதான அசோக்குமார் இன்று அபிராமபுரத்தில் உள்ள தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திரையுலகில் அவரை பெரும்பாலானோருக்கு நன்கு தெரியும் என்பதால், அசோக்கின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. சசிக்குமாரின் அத்தை மகன்தான் அசோக் குமார். சசிக்குமாருடன் இணைந்து செயல்பட்டு வந்தார். கந்து வட்டிக்கு அவர் தற்கொலை செய்திருப்பது திரையுலகை உலுக்கியுள்ளது.தனது தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் என்று பைனான்சியர் மதுரை அன்புச் செழியனைக் குறிப்பிட்டுள்ளார். அவரது சித்திரவதை தாங்காமல்தான், வேறு வழியின்றி தற்கொலை செய்து கொண்டதாக தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் தனது கடிதத்தில்.இதைத் தொடர்ந்து அன்புச் செழியனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று இயக்குநர்கள் சசிகுமார், அமீர், சமுத்திரக் கனி உள்ளிட்டோர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.தற்கொலை செய்து கொண்ட மேனேஜர் அசோக்குமார், கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மேனேஜர் மற்றும் இணை தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.அசோக்குமாரின் மரணத்தை தமிழ்த் திரையுலகம் எப்படி கையாளப் போகிறது என்பது தெரியவில்லை. மேலும் அன்புச் செழியன் மீது புகார்கள் வருவது முதல் முறையல்ல என்பதால் இந்தமுறையாக உறுதியான நடவடிக்கையில் அது இறங்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.21 நவம்பர் 2017
சசிக்குமாரின் முகாமையாளர் தற்கொலை!பொலிசில் முறைப்பாடு!
சசிகுமாரின் மேனேஜர் அசோக் குமார் தற்கொலைக்குக் காரணமான பைனான்சியர் - தயாரிப்பாளர் மதுரை அன்புச் செழியனைக் கைது செய்யக் கோரி போலீசில் புகார் அளித்துள்ளனர் இயக்குநர்கள் சசிகுமார், அமீர் மற்றும் சமுத்திரக் கனி ஆகியோர். 40 வயதான அசோக்குமார் இன்று அபிராமபுரத்தில் உள்ள தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திரையுலகில் அவரை பெரும்பாலானோருக்கு நன்கு தெரியும் என்பதால், அசோக்கின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. சசிக்குமாரின் அத்தை மகன்தான் அசோக் குமார். சசிக்குமாருடன் இணைந்து செயல்பட்டு வந்தார். கந்து வட்டிக்கு அவர் தற்கொலை செய்திருப்பது திரையுலகை உலுக்கியுள்ளது.தனது தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் என்று பைனான்சியர் மதுரை அன்புச் செழியனைக் குறிப்பிட்டுள்ளார். அவரது சித்திரவதை தாங்காமல்தான், வேறு வழியின்றி தற்கொலை செய்து கொண்டதாக தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் தனது கடிதத்தில்.இதைத் தொடர்ந்து அன்புச் செழியனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று இயக்குநர்கள் சசிகுமார், அமீர், சமுத்திரக் கனி உள்ளிட்டோர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.தற்கொலை செய்து கொண்ட மேனேஜர் அசோக்குமார், கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மேனேஜர் மற்றும் இணை தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.அசோக்குமாரின் மரணத்தை தமிழ்த் திரையுலகம் எப்படி கையாளப் போகிறது என்பது தெரியவில்லை. மேலும் அன்புச் செழியன் மீது புகார்கள் வருவது முதல் முறையல்ல என்பதால் இந்தமுறையாக உறுதியான நடவடிக்கையில் அது இறங்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.15 அக்டோபர் 2017
மன அழுத்தத்தால் பாதிப்பு-தீபிகா படுகோனே!
பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன், தான் கடந்த காலத்தில் மன அழுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததாக சமீபத்தில் மனந்திறந்து சொல்லியிருந்தார்.
அவர் அந்த மனஅழுத்தத்தில் இருந்து மீண்டு விட்டாரா என்று கேட்டபோது, “நான் மன அழுத்தத்தில் இருந்து முழுமையாக மீண்டுவிட்டேன் என்று என்னால் சொல்ல முடியவில்லை. மன அழுத்தம் மீண்டும் என்னைத் தாக்குமோ என்ற பயம் இன்றும் மனதின் ஓரத்தில் இருந்துகொண்டிருக்கிறது. அவ்வளவு மோசமான அனுபவம் அது” என்கிறார்.
‘இப்படி நீங்கள் உங்களின் மனஅழுத்தம் பற்றி வெளிப்படையாகப் பேசுவதால் உங்களின் படவாய்ப்புகள் பாதிக்கப்படுமா?’ என்ற அடுத்த கேள்விக்கு தீபிகா, “எனக்கு மனஅழுத்தப் பிரச்சினை இருப்பதால் என்னால் நன்றாக நடிக்க முடியாது என்று சிலர் நினைக்கலாம். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. திரையுலகைப் பொறுத்தவரை தற்போது நான் நல்லநிலையில் இருக்கிறேன். நான் நடிக்க விரும்பும் படங்களை சரியாக தேர்வுசெய்ய என்னால் முடியும். ஆனால் எல்லோராலும் அவ்வளவு தெளிவாக முடி வெடுக்க முடியுமா என்பது எனக்கு தெரியாது..” என்கிறார்.
மனநலத்தை ஒரு பாடமாக பள்ளிகளில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதும் தீபிகாவின் விருப்பமாக இருக்கிறது.
“பள்ளிகளில் பாடங்களுக்கு அடுத்து, உடற்கல்வி பற்றித்தான் பேசப் படுகிறது. நான் படித்த பள்ளியிலும் உடற்கல்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் மனநலத்துக்காக எந்த வகுப்பும் நடத்தப்படவில்லை. அது நமது பாடத் திட்டத்திலேயே இல்லை. உடல் நலத்தைப் போல மனநலத்தின் முக்கியத்துவத்தையும் நாம் உணர்ந்து, பள்ளிகளில் அதை அறிமுகப்படுத்தி யிருந்தால், பல்வேறு பிரச்சினைகளில் இருந்து நம்மால் எளிதாக தப்பிவிடலாம்” என்று கூறுகிறார்.
‘தி லிவ் லவ் லாப்’ என்ற அறக்கட்டளையையும் நிறுவி நடத்திவருகிற தீபிகா, “அரசின் கொள்கை வகுப்பாளர்களும், முக்கியப் பொறுப்பு வகிப்பவர்களும் மனநலத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், பரவலாக நிலவும் மனஅழுத்தத்தைக் குறைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மனஅழுத்தம் இருப்பவர்கள் அதைப் பற்றி வெளிப் படையாகப் பேச முன்வருவார்கள். ‘எங்கே நமது மனநலப் பிரச்சினையைப் பற்றிக் கூறினால் வேலை போய்விடுமோ?’ என்ற பயத்தில் இருப்பவர்களும் அதிலிருந்து விடுபடுவார்கள்” என்று தீபிகா யோசனை சொல்கிறார்.
தனது மனநலப் பிரச்சினை போராட்டம் தொடர்பாக வெளிப்படையாகப் பேசியது குறித்து தீபிகா கூறுகையில், “மனஅழுத்தத்தின் தாக்கங்கள் குறித்துப் புலம்ப வேண்டும் என்பது எனது ஆசையில்லை. மாறாக, மனநலம் சார்ந்த விஷயங்கள் குறித்து இந்தியாவிலும், உலகத்திலும் மக்களின் பார்வை மாற வேண்டும் என்பதே எனது ஆசை” என்று சொல்லி முடிக் கிறார்.
பலரும் பேசத் தயங்கும் விஷயம் பற்றி பேச முன்வந்ததற்காகவே தீபிகா படுகோனை பாராட்டலாம்.30 செப்டம்பர் 2017
மனைவியை காரில் கட்டி சுற்றித்திரிந்த கணவன்!
காரின் முன் பக்கத்தில் மனைவியை கட்டிவைத்து கணவன் காரை வேகமாக ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரானில் கணவனுக்கும் மனைக்கும் ஏற்பட்ட சண்டையில் மனைவிக்கு தண்டனை கொடுக்கும் விதமாக கணவன் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன், மனைவி இருவருடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவன், மனைவிக்கு தண்டைனை கொடுக்கும் விதமாக வினோத செயலில் ஈடுபட்டார்.மனைவியை காரின் முன் பக்கத்தில் கட்டிவைத்து, காரை சாலையில் மிக வேகமாக ஓட்டிச் சென்றார். காரில் முன்பக்கத்தில் தொங்கியபடி இருந்த பெண் பாதியில் வழியில் கிழே விழுந்து படுகாயம் அடைந்தார். தற்போது அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணின் கணவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.27 ஜூலை 2017
நகம் கடித்தல் மனநோய்க்கான அறிகுறியா?
பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இதனை சாதாரணமான ஒன்றாகதான் நினைக்கிறோம் ஆனால் அது ஒரு வகையான மன நோய் எனக் கூறப்படுகிறது.நகம் கடிக்கும் பழக்கம் குழந்தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது. பின்னர் பருவ வயதில் இப்பழக்கம் தானாய் மறைந்து போகும். குறிப்பிட்ட சிலரால் இப்பழக்கத்திலிருந்து விடுபட முடிவதில்லை. காரணமில்லாத அச்சம், தவறான எண்ணங்கள் மனதில் எழுவதால் இவ்வாறு நகம் கடிக்கும் பழக்கம் ஒருவருக்கு தொடரலாம். நகம் கடித்தல் மன அழுத்தத்தின் வெளிப்பாடு என்றும் கூறப்படுகிறது. நகம் கடிப்பது மட்டுமல்ல, கையை அடிக்கடி கழுவுவது, முடியை பிடித்து இழுத்து கொண்டே இருப்பது ஆகியவையும் மனநல பாதிப்பின் வெளிப்பாடுதான் என்று கூறப்படுகிறது. மன ரீதியாக மட்டுமின்றி உடல் ரீதியாகவும் நகம் கடித்தல் கெடுதல் விளைவிக்கும். விரல் நுனிகளில் அழுக்குகள் இருக்கும். நகங்களைக் கடிக்கும் போது அவை வாய் வழியே உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும். இதனால் எளிதில் நோய்த் தொற்று ஏற்படும். எனவே நகம் கடிக்கும் பழக்கத்தை உடையவர்கள் அதிலிருந்து விடுபடுவது நன்மை தரும்.
28 ஏப்ரல் 2017
வாணி ராணி நடிகை போட்ட சண்டை!(வீடியோ)
நடிகை ராதிகா தயாரித்து நடித்து வரும் வாணி ராணி தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகையின், கள்ளக்காதல் அம்பலமாகியுள்ளது.அந்த தொடரில் ஒரு முக்கிய வில்லி வேடத்தில் நடித்து வருபவர் நடிகை சபீதாராய். அதேபோல், ராதிகாவின் ரேடான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மேனஜரான சுகுமாறன். இவர், சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிறுப்பில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அவரோடு, நடிகை சபீதாராய் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். என்னை நீதானே வர சொன்னாய்.. பணம் கொடுக்கிறேன் எனக்கூறினாயே.. கொடு..எனக்கூறி அவரிடம் சண்டை போட்டார். ஒரு கட்டத்தில் சுகுமாறனை தாக்கவும் செய்தார். அவரின் சட்டையை கிழித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சுகுமாறன், பதிலுக்கு அவரை தாக்கினார்.
அதாவது, சுகுமாறனின் மனைவி வெளியூர் சென்று விட்டதால், நடிகை சபீதாராயை வீட்டிற்கு வரவழைத்து கடந்த 2 நாட்களாக உல்லாசமாக இருந்துள்ளார். ஆனால், அவருக்கு கொடுப்பதாக கூறிய பணத்தை தரவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சபீதாராய், சுகுமாறனிடம் சண்டையிட்டது தெரிய வந்துள்ளது.
வாணி ராணி தொடரில் கூட இருந்தே குழி பறிப்பது, மற்றவர்களை பற்றி போட்டுக் கொடுப்பது, குழந்தை கடத்தலில் ஈடுபடுவது போன்ற கதாபாத்திரத்தில் சபீதாராய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் சின்னத்திரை நடிகர், நடிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.05 மார்ச் 2017
கைத்தொலைபேசிகளில் அதிகளவு கிருமிகள்!
நம் அன்றாட வாழ்வில் ஒன்றான ஸ்மார்ட்போன்களில் மூன்று விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் உயிர் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாம் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான கிருமிகள் மற்றும் பாக்டீரியா உள்ளிட்டவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கழிவறைகளில் காணப்படுவதை விட பலமடங்கு கிருமிகள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கழிவறைகளில் வழக்கமாக இரண்டு அல்லது மூன்று வகையான கிருமிகள் மட்டுமே இருக்கும். ஆனால் ஸ்மார்ட்போன்களில் சராசரியாக 10 முதல் 12 வகையான கிருமிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில கிருமிகள் எவ்வித கிருமி நாசினிகளாலும் அழிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
13 பிப்ரவரி 2017
சசிகலாவால் தனிமைச்சிறையில் கருணாஸ்?
கூவத்தூரில் அடைபட்டிருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்களில் பலர் கடும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் நடிகர் கருணாஸை தனியாக ஒரு அறையில் வைத்துள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூவத்தூர் ரிசார்ட்டில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏன் அங்கு அடைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களின் உறவினர்களுக்கும், குடும்பத்தினருக்குமே கூட என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. தொடர்ந்து மர்மமாகவே இருந்து வருகிறது.
அங்கு அது நடக்கிறது, இது நடக்கிறது என்ற செய்திகள்தான் வருகிறதே தவிர எம்.எல்.ஏக்களின் நிலை என்ன என்று யாருக்குமே தெரியவில்லை. இந்த நிலையில் இன்று ஒரு ஆம்புலன்ஸ் வேறு உள்ளே போயிருக்கிறது.இந்த நிலையில் நடிகர் கருணாஸ் கூவத்தூர் முகாமில் பெரும் குழப்ப மன நிலையில் உள்ளதாக ஒரு செய்தி உலா வருகிறது. அவர் கடும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாகவும், பெரும் குழப்பத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.கருணாஸ்தான் உள்ளே வந்தது முதல் பல்வேறு வகையான ஏற்பாடுகளை எம்.எல்.ஏக்களுக்கு செய்து வந்தார். பாட்டுப் பாடினார், டான்ஸும் ஆடினாராம். அவரது ஆட்டம் பலருக்கும் குஷியைக் கொடுத்து அவர்களையும் கூட ஆட வைத்ததாம்.ஆனால் இப்போது அவரை ஒதுக்கி ஓரம் கட்டி விட்டனராம் அதிமுக நிர்வாகிகள். அவரை தனியாக ஒரு இடத்தில் தங்க வைத்துள்ளனராம். அங்கிருந்து அவரை நகர அனுமதிப்பதில்லையாம். எந்த ஆலோசனைக்கும் அவரைக் கூப்பிடுவதில்லையாம்.கருணாஸ் மன நிலையில் மாற்றம் வந்து விட்டதாக சந்தேகம் வந்து விட்டதாம் மேலிடத்திற்கு. இதனால்தான் அவரை ஒதுக்கி விட்டனராம். மற்றவர்களுடன் அவரை கலந்து பேச விடுவதில்லையாம். எதிலும் கலந்து கொள்ள விடுவதில்லையாம். இதன் காரணமாக பெரும் மன வருத்தத்துடனும், குழப்பத்துடனும் உள்ளாராம் கருணாஸ்.14 ஆகஸ்ட் 2016
நா.முத்துக்குமார் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
![]() |
| நா.முத்துக்குமார் குடும்பம் |
06 ஆகஸ்ட் 2016
வியட்னாம் வீடு சுந்தரம் காலமானார்!
பழம்பெரும் திரைப்பட நடிகர் வியட்நாம் வீடு சுந்தரம் சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவால் தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. 1970-ம் ஆண்டு வியட்நாம் வீடு என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் சுந்தரம் அறிமுகம் ஆனார். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளார். இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் உள்ளிட்ட பரிமாணங்களை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. வியட்நாம் வீடு' படம் அனைத்துத் தரப்பினரையும், ரசிக்க வைத்த ஒரு வெற்றி படைப்பு. தமிழக அரசால் சிறந்த படம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்ட படம். வியட்நாம் மீது அமெரிக்கா படை எடுத்தது. அதனால் வியட்நாம், போர்களமாகக் காட்சியளித்தது. சண்டை தொடர்ந்து நடந்ததால், ஒரு போராட்டமான வாழ்க்கைச் சூழ்நிலை ஏற்பட்டது. அதைப் போல ஒரு பிராமணக் குடும்பத்தில் தினமும் எழும் சண்டை சச்சரவுகள் குழப்பம், ரகளை காரணமாக அந்த வீடே, தினம்தோறும் ஒரு வியட்நாம் போல இருப்பதால் அந்த வீட்டிற்கு அங்குள்ளவர்கள் தேர்வு செய்த பெயர்தான் "வியட்நாம் வீடு'.நாடகாசிரியர் கே. சுந்தரம் வியட்நாம் வீடு நாடகம் எழுதினார். நாடகம் பிரபலமானது. ஒரு வார இதழில் தொடராகவும் வெளிவந்தது. நாடக ஆசிரியர் சுந்தரம் வியட்நாம் வீடு சுந்தரமானார் இந்த நாடகத்தை திரைப்படமாக எடுத்தனர். தமிழின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் திரைக்கதை எழுதியுள்ள இவர் நடிகர் சிவாஜி கணேசனின் விருப்பமான கதையாசிரியர் ஆவார். கௌரவம் உள்ளிட்ட சுமார் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி டிவி சீரியலில் நடித்த வியட்நாம் வீடு சுந்தரம் தற்போது வள்ளி டிவி சீரியலில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.19 ஜூலை 2016
17வயதில் 2 மாணவர்கள்!சீரழிந்து போன மாணவியின் வாழ்க்கை!
நெல்லை அருகே 17 வயதுடைய 2 மாணவர்கள் சேர்ந்து, 10வது வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவியை கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்த செயல் அதிர வைத்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து அக்கிரமத்தில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் ஒருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இந்த அக்கிரமச் செயல் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவரான மோசஸ் (பெயர் மாற்றப்பட்டது) என்பவர் பாதிக்கப்பட்ட சிறுமியைக் காதலித்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சனிக்கிழமையன்று மெஸ்ஸாக்குக்குப் போன் செய்துள்ளார் அந்த சிறுமி. அப்போது தனது வீட்டுக்கு அருகே ஒரு இடத்தைக் கூறி அங்கு வருமாறு கூறியுள்ளார் மோசஸ்.மாணவியும் தனது வீட்டில் பொய் சொல்லி விட்டு அங்கு போயுள்ளார். அங்கு மோசஸுடன், மேலும் இருவர் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் நவீன், இவர் ஆட்டோ டிரைவர். இன்னொருவர் ஜான்சன் (பெயர் மாற்றப்பட்டது). பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். மோசஸ் மற்றும் ஜான்சனுக்கு வயது 17 ஆகிறது.
அவர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி அங்கிருந்து கிளம்ப முயன்றார். இதைப் பார்த்த மூவரும் அவரை மடக்கிப் பிடித்து தனியான இடத்திற்குக் கூட்டிச் சென்று மிரட்டி ஒருவர் பின் ஒருவராக பலாத்காரம் செய்தனர். அதிர்ச்சி, அவமானம், வேதனையுடன் வீடு திரும்பிய மாணவி தனது தாயாரிடம் நடந்ததைக் கூறி கதறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீஸுக்குப் போனால் அவமானமாகி விடுமே என்று பயந்து சொல்லாமல் விட்டு விட்டனர்.
ஆனால் அடுத்த நாள் காலையில் மனதை தேற்றிக் கொண்ட அவர்கள் மோசஸின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரைச் சந்தித்து நடந்ததைக் கூறினர். மோசஸை, தங்களது மகளுக்குக் கட்டி வைக்குமாறு கோரினர். ஆனால் மோசஸ் திருமணம் செய்ய முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.புகாரைப் பதிவு செய்த போலீஸார் உடனடியாக மோசஸைக் கைது செய்தனர். தொடர்ந்து ஜான்சும் கைது செய்யப்பட்டார். தலைமறைவாகி விட்ட ஆட்டோ டிரைவர் நவீனுக்கு வலை வீசப்பட்டுள்ளது.
15 ஜூன் 2016
பிரபல இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் காலமானார்!
![]() |
| திருலோகசந்தர்,எம்ஜிஆர் |
நன்றி:பிபிசி தமிழ்
29 மே 2016
நடிகை பிரியாமணி நிச்சயதார்த்தம்!
நடிகை பிரியாமணி-முஸ்தபா ராஜ் நிச்சயதார்த்தம் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றுள்ளது. பருத்திவீரன் உட்பட ஏராளமான படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் பிரியாமணி.இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் இவர் வென்றார்.ஒரு கிரிக்கெட் போட்டியில் தொழில் அதிபரான முஸ்தபா ராஜை சந்தித்த பிரியாமணி விரைவில் அவரின் காதலியாக மாறினார். இதுகுறித்து பிரியாமணி "நாங்கள் இருவரும் உயிருக்குயிராக காதலிக்கிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் எங்களது திருமணம் நடைபெறும்" என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரியாமணி-முஸ்தபாராஜ் நிச்சயதார்த்தம் கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரில் உள்ள பிரியாமணியின் வீட்டில் விமரிசையாக நடைபெற்றது.இதில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த வருட இறுதிக்குள் இருவரின் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ''நான் சினிமாவை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன். திருமணத்துக்கு பிறகும் நல்ல கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து நடிப்பேன்'' என்று சினிமா குறித்த கேள்விக்கு பிரியாமணி பதிலளித்திருக்கிறார். முன்னதாக மலையாள இளம் நடிகர்களில் ஒருவரான கோவிந்த் பத்ம சூர்யாவை, பிரியாமணி காதலிப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.20 மே 2016
காடையரை விரட்ட பேயாக மாறிய சிறுமி!
இந்தியாவின் டெல்லியில் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்க முயன்ற நபர்களிடமிருந்து சிறுமி மிக சாதுர்யமாக தப்பித்துள்ளார்.
இந்தியாவின் டெல்லியில் இரவு 10 மணியளவில் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி நடந்து சென்றுள்ளார்.
இவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு ஆண்கள், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு சிறுமியை கடத்தி சென்றுள்ளனர்.
நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்து சிறுமி திடீரென பயங்கரமான குரலில் பேசியும், சிரித்தும் பேயை போன்று நடித்துள்ளார்.
இதனால் பயந்து போன ஒருவன் ஓட்டமெடுத்துள்ளான், குழப்பத்தில் நின்ற மற்றொருவனை பயமுறுத்துவற்காக குறித்த சிறுமி தன்னுடைய ரத்தத்தை முகத்தில் பூசிக் கொண்டு மிரட்டியுள்ளார், இவனும் பயந்து போய் ஓட்டமெடுத்துள்ளான்.
இந்த சம்பவம் பற்றி குறித்து சிறுமியின் தோழி முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார் என சொல்லப்படுகின்றது.14 மார்ச் 2016
பிரபல நடிகர் சாய்பிரசாந்த் விஷம் குடித்து தற்கொலை!
![]() |
| சாய் பிரசாந்த் |
07 மார்ச் 2016
கலாபவன் மணி குறித்து மம்முட்டியின் குமுறல்!
![]() |
| கலாபவன் மணி |
23 ஜனவரி 2016
மீண்டும் கவுதம் கார்த்திக்குடன் ஜோடி சேரும் பிரியா ஆனந்த்!
கவுதம் கார்த்திக் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘வை ராஜா வை’. இதில் இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்திருந்தார். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது இந்த ஜோடி மீண்டும் ‘முத்துராமலிங்கம்’ படம் மூலம் இணைந்திருக்கிறது.
இவர்களுடன் இப்படத்தில் பிரபு, சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா, சிங்கம்புலி, சிங்கமுத்து என முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர். இப்படத்தை ராஜதுரை இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு பஞ்சு அருணாசலம் பாடல்கள் எழுதுகிறார். இப்படம் மூலம் மூன்று தலைமுறைகளுக்கு பாடல்கள் எழுதிய பெருமை அவருக்கு உண்டு.
மேலும் பஞ்சு அருணாசலமும் இளையராஜாவும் இணைந்து 40 ஆண்டு காலமாக திரையுலகில் பவனி வருகின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு மீண்டும் இவர்கள் இணைந்திருக்கிறார்கள்.11 அக்டோபர் 2015
நகைச்சுவை அரசியின் இறுதி நிகழ்வுகள் இன்று!
![]() |
| ஆச்சி மனோரமா(புளியங்கூடல்.கொம்) |
14 ஜூலை 2015
மெல்லிசை மன்னர் காலமானார்!
மெல்லிசை மன்னர் என தமிழ்ச் சமூகத்தால் அன்புடன் அழைக்கப்பட்ட பிரபல இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் இன்று அதிகாலை 4.15 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 87. மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன் என்ற இயற்பெயர் கொண்ட எம்எஸ் விஸ்வநாதன் பாலக்காட்டில் உள்ள எலப்புள்ளி கிராமத்தில் 1928-ல் பிறந்தவர். அவரது பெற்றோர் மனயங்கத் சுப்பிரமணியன் - நாராயணி குட்டி. MS Viswanathan passes away நான்கு வயதில் தந்தையை இழந்து வறுமையில் வாடிய எம்எஸ்வி, மிக இளம் வயதிலேயே நாடகக் குழுவில் சேர்ந்தார். நடிக்கவும், பாட்டுப் பாடவுமே அவரது விருப்பமாக இருந்தது. 13 வயதில் திருவனந்தபுரத்தில் தனது முதல் மேடைக் கச்சேரியை நடத்திய எம்எஸ்வி, 1950களில் எஸ்எம் சுப்பையா நாயுடு மற்றும் சிஆர் சுப்பாராமன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றினார். 1952-ல் சி ஆர் சுப்பாராமன் காலமாகிவிட, அந்த நேரத்தில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்த மருமகள், சண்டி ராணி, தேவதால் மற்றும் ஜெனோவா போன்ற படங்களை முடித்துக் கொடுத்தவர் எம்எஸ்விதான். பின்னர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் தயாரித்த பணம் படத்துக்கு இசையமைப்பாளர்களாக எம்எஸ்வியும் டிகே ராமமூர்த்தியும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். எம்எஸ்வி - டிகே ராமமூர்த்தி இரட்டை இசையமைப்பாளர்கள் முதன் முதலில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமான படம் பணம்-தான். அதன் பின்னர் இந்த இரட்டையர்கள் காலம்தான் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தது. 1952-லிருந்து 1965 வரை இந்த இருவரும் இணைந்து காலத்தால் மறக்க முடியாத பல காவியப் பாடல்களைப் படைத்தனர். இருவரும் இணைந்து 100-க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர். இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். டிகே ராமமூர்த்தியைப் பிரிந்த பிறகு, தனியாக 700-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்தார் எம்எஸ் விஸ்வநாதன். கடைசியாக அவர் இசையமைத்த படம் சுவடுகள். தமிழ் தவிர, மலையாளத்தில் 74 படங்களுக்கும், தெலுங்கில் 31 படங்களுக்கும் இசையமைத்துள்ளார் எம்எஸ்வி. கடந்த சில வாரங்களாகவே உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார். இவர் தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசு விருதும் பெற்றவர். காலத்தால் அழியாத பல காவியப் பாடல் தந்த எம்எஸ் விஸ்வநாதனின் மனைவி ஜானகி கடந்த 2012-ம் ஆண்டு மறைந்தார். எம்எஸ்வி - ஜானகி தம்பதிக்கு நான்கு மகன்கள், மூன்று மகள்கள். அவரது உடல் சென்னை சாந்தோமில் உள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறுகின்றன.
09 ஏப்ரல் 2015
நாகூர் ஹனீபா காலமானார்!
பிரபல இஸ்லாமிய பாடகரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசார பாடகராக கம்பீரக் குரலில் முழங்கியவருமான "இசைமுரசு" நாகூர் ஹனீபா (வயது 90) சென்னையில் இன்று காலமானார். இஸ்லாமிய பாடல்களை உலகம் முழுவதும் ஒலிக்கச் செய்தவர் நாகூர் ஹனீபா. குறிப்பாக இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் அனைவரையும் கொள்ளை கொண்ட பாடல். இஸ்லாமிய மத பாடல்களை உலகம் முழுவதும் ஒலிக்கச் செய்தவர் நாகூர் ஹனீபா. குறிப்பாக இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் அனைவரையும் கொள்ளை கொண்ட பாடல்.அதேபோல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசார பாடகராக ஹனீபா பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை. பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து தமது பாடல்கள் மூலம் தி.மு.க. வளர்ச்சிக்கு உரமாக இருந்தவர் ஹனீபா. அதுவும் அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா..... ஓடி வருகிறான் உதயசூரியன் போன்ற எண்ணற்ற பாடல்கள் தி.மு.க. கழகத்தின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாதவை. 90 வயதான நிலையில் முதுமை காரணமாக சென்னை கோட்டூர்புரத்தில் இன்று நாகூர் ஹனீபா காலமானார். அவரது உடலுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
24 ஜனவரி 2015
பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு!
வயிற்றுப் புற்றுநோய் காரணமாக தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் சிகிச்சைப் பலன் இன்றி இன்று மாலை 5.50 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 90.
1925ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் வெம்பாக்கத்தில் பிறந்தவர் வி.எஸ்.ராகவன். 1954-ஆம் ஆண்டு வெளிவந்த வைரமாலை என்ற தமிழ்ப்படத்தில் முதன்முறையாக அறிமுகம் ஆனார்.
முதலில் நாடகத்திலும் பிறகு சினிமாவிலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடித்து வந்த வி.எஸ்.ராகவன் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.
1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள வி.எஸ்.ராகவன் ஆல் இன் ஆல் அழகுராஜா, கலகலப்பு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
சாகும் வரையிலும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே வி.எஸ்.ராகவனின் ஆசையாக இருந்தது. இவர் கடைசியாக நடித்த காத்தாடி திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில், உடல் நலக் குறைவால் வி.எஸ்.ராகவன் காலமானார். வி.எஸ்.ராகவன் இல்லம் மந்தைவெளி ராமகிருஷ்ணா நகரில் உள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை பெசன்ட் நகர் மயானத்தில் மறைந்த பழம்பெரும் நடிகரின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)








