பக்கங்கள்

27 ஜூலை 2017

நகம் கடித்தல் மனநோய்க்கான அறிகுறியா?

Ähnliches Fotoபலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இதனை சாதாரணமான ஒன்றாகதான் நினைக்கிறோம் ஆனால் அது ஒரு வகையான மன நோய் எனக் கூறப்படுகிறது.
நகம் கடிக்கும் பழக்கம் குழந்தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது. பின்னர் பருவ வயதில் இப்பழக்கம் தானாய் மறைந்து போகும். குறிப்பிட்ட சிலரால் இப்பழக்கத்திலிருந்து விடுபட முடிவதில்லை. காரணமில்லாத அச்சம், தவறான எண்ணங்கள் மனதில் எழுவதால் இவ்வாறு நகம் கடிக்கும் பழக்கம் ஒருவருக்கு தொடரலாம். நகம் கடித்தல் மன அழுத்தத்தின் வெளிப்பாடு என்றும் கூறப்படுகிறது. நகம் கடிப்பது மட்டுமல்ல, கையை அடிக்கடி கழுவுவது, முடியை பிடித்து இழுத்து கொண்டே இருப்பது ஆகியவையும் மனநல பாதிப்பின் வெளிப்பாடுதான் என்று கூறப்படுகிறது. மன ரீதியாக மட்டுமின்றி உடல் ரீதியாகவும் நகம் கடித்தல் கெடுதல் விளைவிக்கும். விரல் நுனிகளில் அழுக்குகள் இருக்கும். நகங்களைக் கடிக்கும் போது அவை வாய் வழியே உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும். இதனால் எளிதில் நோய்த் தொற்று ஏற்படும். எனவே நகம் கடிக்கும் பழக்கத்தை உடையவர்கள் அதிலிருந்து விடுபடுவது நன்மை தரும்.

28 ஏப்ரல் 2017

வாணி ராணி நடிகை போட்ட சண்டை!(வீடியோ)

நடிகை ராதிகா தயாரித்து நடித்து வரும் வாணி ராணி தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகையின், கள்ளக்காதல் அம்பலமாகியுள்ளது.அந்த தொடரில் ஒரு முக்கிய வில்லி வேடத்தில் நடித்து வருபவர் நடிகை சபீதாராய். அதேபோல், ராதிகாவின் ரேடான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மேனஜரான சுகுமாறன். இவர், சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிறுப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அவரோடு, நடிகை சபீதாராய் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். என்னை நீதானே வர சொன்னாய்.. பணம் கொடுக்கிறேன் எனக்கூறினாயே.. கொடு..எனக்கூறி அவரிடம் சண்டை போட்டார். ஒரு கட்டத்தில் சுகுமாறனை தாக்கவும் செய்தார். அவரின் சட்டையை கிழித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சுகுமாறன், பதிலுக்கு அவரை தாக்கினார். அதாவது, சுகுமாறனின் மனைவி வெளியூர் சென்று விட்டதால், நடிகை சபீதாராயை வீட்டிற்கு வரவழைத்து கடந்த 2 நாட்களாக உல்லாசமாக இருந்துள்ளார். ஆனால், அவருக்கு கொடுப்பதாக கூறிய பணத்தை தரவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சபீதாராய், சுகுமாறனிடம் சண்டையிட்டது தெரிய வந்துள்ளது. வாணி ராணி தொடரில் கூட இருந்தே குழி பறிப்பது, மற்றவர்களை பற்றி போட்டுக் கொடுப்பது, குழந்தை கடத்தலில் ஈடுபடுவது போன்ற கதாபாத்திரத்தில் சபீதாராய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் சின்னத்திரை நடிகர், நடிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

05 மார்ச் 2017

கைத்தொலைபேசிகளில் அதிகளவு கிருமிகள்!

நம் அன்றாட வாழ்வில் ஒன்றான ஸ்மார்ட்போன்களில் மூன்று விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் உயிர் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாம் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான கிருமிகள் மற்றும் பாக்டீரியா உள்ளிட்டவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கழிவறைகளில் காணப்படுவதை விட பலமடங்கு கிருமிகள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கழிவறைகளில் வழக்கமாக இரண்டு அல்லது மூன்று வகையான கிருமிகள் மட்டுமே இருக்கும். ஆனால் ஸ்மார்ட்போன்களில் சராசரியாக 10 முதல் 12 வகையான கிருமிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    மேலும் சில கிருமிகள் எவ்வித கிருமி நாசினிகளாலும் அழிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

13 பிப்ரவரி 2017

சசிகலாவால் தனிமைச்சிறையில் கருணாஸ்?

என்னாச்சு இப்போ கூவத்தூரில் அடைபட்டிருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்களில் பலர் கடும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் நடிகர் கருணாஸை தனியாக ஒரு அறையில் வைத்துள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூவத்தூர் ரிசார்ட்டில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏன் அங்கு அடைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களின் உறவினர்களுக்கும், குடும்பத்தினருக்குமே கூட என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. தொடர்ந்து மர்மமாகவே இருந்து வருகிறது. அங்கு அது நடக்கிறது, இது நடக்கிறது என்ற செய்திகள்தான் வருகிறதே தவிர எம்.எல்.ஏக்களின் நிலை என்ன என்று யாருக்குமே தெரியவில்லை. இந்த நிலையில் இன்று ஒரு ஆம்புலன்ஸ் வேறு உள்ளே போயிருக்கிறது.இந்த நிலையில் நடிகர் கருணாஸ் கூவத்தூர் முகாமில் பெரும் குழப்ப மன நிலையில் உள்ளதாக ஒரு செய்தி உலா வருகிறது. அவர் கடும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாகவும், பெரும் குழப்பத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.கருணாஸ்தான் உள்ளே வந்தது முதல் பல்வேறு வகையான ஏற்பாடுகளை எம்.எல்.ஏக்களுக்கு செய்து வந்தார். பாட்டுப் பாடினார், டான்ஸும் ஆடினாராம். அவரது ஆட்டம் பலருக்கும் குஷியைக் கொடுத்து அவர்களையும் கூட ஆட வைத்ததாம்.ஆனால் இப்போது அவரை ஒதுக்கி ஓரம் கட்டி விட்டனராம் அதிமுக நிர்வாகிகள். அவரை தனியாக ஒரு இடத்தில் தங்க வைத்துள்ளனராம். அங்கிருந்து அவரை நகர அனுமதிப்பதில்லையாம். எந்த ஆலோசனைக்கும் அவரைக் கூப்பிடுவதில்லையாம்.கருணாஸ் மன நிலையில் மாற்றம் வந்து விட்டதாக சந்தேகம் வந்து விட்டதாம் மேலிடத்திற்கு. இதனால்தான் அவரை ஒதுக்கி விட்டனராம். மற்றவர்களுடன் அவரை கலந்து பேச விடுவதில்லையாம். எதிலும் கலந்து கொள்ள விடுவதில்லையாம். இதன் காரணமாக பெரும் மன வருத்தத்துடனும், குழப்பத்துடனும் உள்ளாராம் கருணாஸ்.

14 ஆகஸ்ட் 2016

நா.முத்துக்குமார் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

நா.முத்துக்குமார் குடும்பம்
தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியர் 41 வயதான நா. முத்துக்குமார் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். மஞ்சள் காமாலை நோயால் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் இயற்கை எய்தினார். 1975 ஆம் ஆண்டு பிறந்த நா. முத்துகுமாரின் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.இயக்குநர் சீமான் அவர்களின் வீர நடை திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமான நா.முத்துக்குமார் இரண்டுமுறை தேசிய விருது பெற்றவர். தங்க மீன்கள் மற்றும் சைவம் திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. அவர் ஆயிரத்திற்கு மேலாக திரைப்படங்களில் 1500-க்கு மேலான பாடல்களை எழுதியிருக்கிறார். அவரது மனைவியின் பெயர் தீபலக்ஷிமி. அவருக்கு ஆதவன் என்ற 9 வயது மகனும், யோகலக்ஸ்மி என்ற 8 மாத மகளும் உள்ளனர்.மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் உடல் தகனம் இன்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மின் மயானத்தில் உடல் தகனம் நடைபெறும் என்றும், மாலை 6 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.41 வயதில் சாவைச் சந்தித்துள்ள முத்துக்குமாரின் மரணத்தால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.முத்துக்குமாரின் உடல் தற்போது அவரது அண்ணா நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர், பல்துறைப் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குநர்கள் சீமான், சேரன், வெற்றி மாறன், எஸ்.பி. ஜனநாதன், விக்கிரமன், ஆர்.கே.செல்வமணி, ராஜு முருகன், கவிஞர் சினேகன், நடிகர்கள் விவேக், உதயநிதி ஸ்டாலின், நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். முத்துக்குமாரின் உடல் தகனம் இன்று மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது. அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மின் மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்படவுள்ளது.முன்னதாக அவரது உடலை சொந்த ஊரான காஞ்சிபுரம் அருகே உள்ள கன்னிகாபுரத்தில் தகனம் செய்ய வேண்டும் என்று அவரது பாட்டி கிருஷ்ணவேணி வேண்டுகோள் விடுத்திருந்தார். இருப்பினும் தற்போது உடல் தகனம் சென்னையிலேயே நடைபெறும் என அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.நா.முத்துக்குமார் என்ற தமிழ்ப் பெருங்கடலுக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் தனது அக வணக்கங்களை செலுத்தி நிற்கின்றது.

06 ஆகஸ்ட் 2016

வியட்னாம் வீடு சுந்தரம் காலமானார்!

http://www.thehindu.com/multimedia/dynamic/01079/11fr-_VIETNAM_VEED_1079718g.jpgபழம்பெரும் திரைப்பட நடிகர் வியட்நாம் வீடு சுந்தரம் சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவால் தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. 1970-ம் ஆண்டு வியட்நாம் வீடு என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் சுந்தரம் அறிமுகம் ஆனார். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளார். இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் உள்ளிட்ட பரிமாணங்களை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. வியட்நாம் வீடு' படம் அனைத்துத் தரப்பினரையும், ரசிக்க வைத்த ஒரு வெற்றி படைப்பு. தமிழக அரசால் சிறந்த படம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்ட படம். வியட்நாம் மீது அமெரிக்கா படை எடுத்தது. அதனால் வியட்நாம், போர்களமாகக் காட்சியளித்தது. சண்டை தொடர்ந்து நடந்ததால், ஒரு போராட்டமான வாழ்க்கைச் சூழ்நிலை ஏற்பட்டது. அதைப் போல ஒரு பிராமணக் குடும்பத்தில் தினமும் எழும் சண்டை சச்சரவுகள் குழப்பம், ரகளை காரணமாக அந்த வீடே, தினம்தோறும் ஒரு வியட்நாம் போல இருப்பதால் அந்த வீட்டிற்கு அங்குள்ளவர்கள் தேர்வு செய்த பெயர்தான் "வியட்நாம் வீடு'.நாடகாசிரியர் கே. சுந்தரம் வியட்நாம் வீடு நாடகம் எழுதினார். நாடகம் பிரபலமானது. ஒரு வார இதழில் தொடராகவும் வெளிவந்தது. நாடக ஆசிரியர் சுந்தரம் வியட்நாம் வீடு சுந்தரமானார் இந்த நாடகத்தை திரைப்படமாக எடுத்தனர். தமிழின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் திரைக்கதை எழுதியுள்ள இவர் நடிகர் சிவாஜி கணேசனின் விருப்பமான கதையாசிரியர் ஆவார். கௌரவம் உள்ளிட்ட சுமார் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி டிவி சீரியலில் நடித்த வியட்நாம் வீடு சுந்தரம் தற்போது வள்ளி டிவி சீரியலில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

19 ஜூலை 2016

17வயதில் 2 மாணவர்கள்!சீரழிந்து போன மாணவியின் வாழ்க்கை!

நெல்லை அருகே 17 வயதுடைய 2 மாணவர்கள் சேர்ந்து, 10வது வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவியை கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்த செயல் அதிர வைத்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து அக்கிரமத்தில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் ஒருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இந்த அக்கிரமச் செயல் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவரான மோசஸ் (பெயர் மாற்றப்பட்டது) என்பவர் பாதிக்கப்பட்ட சிறுமியைக் காதலித்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சனிக்கிழமையன்று மெஸ்ஸாக்குக்குப் போன் செய்துள்ளார் அந்த சிறுமி. அப்போது தனது வீட்டுக்கு அருகே ஒரு இடத்தைக் கூறி அங்கு வருமாறு கூறியுள்ளார் மோசஸ்.மாணவியும் தனது வீட்டில் பொய் சொல்லி விட்டு அங்கு போயுள்ளார். அங்கு மோசஸுடன், மேலும் இருவர் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் நவீன், இவர் ஆட்டோ டிரைவர். இன்னொருவர் ஜான்சன் (பெயர் மாற்றப்பட்டது). பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். மோசஸ் மற்றும் ஜான்சனுக்கு வயது 17 ஆகிறது. அவர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி அங்கிருந்து கிளம்ப முயன்றார். இதைப் பார்த்த மூவரும் அவரை மடக்கிப் பிடித்து தனியான இடத்திற்குக் கூட்டிச் சென்று மிரட்டி ஒருவர் பின் ஒருவராக பலாத்காரம் செய்தனர். அதிர்ச்சி, அவமானம், வேதனையுடன் வீடு திரும்பிய மாணவி தனது தாயாரிடம் நடந்ததைக் கூறி கதறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீஸுக்குப் போனால் அவமானமாகி விடுமே என்று பயந்து சொல்லாமல் விட்டு விட்டனர். ஆனால் அடுத்த நாள் காலையில் மனதை தேற்றிக் கொண்ட அவர்கள் மோசஸின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரைச் சந்தித்து நடந்ததைக் கூறினர். மோசஸை, தங்களது மகளுக்குக் கட்டி வைக்குமாறு கோரினர். ஆனால் மோசஸ் திருமணம் செய்ய முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.புகாரைப் பதிவு செய்த போலீஸார் உடனடியாக மோசஸைக் கைது செய்தனர். தொடர்ந்து ஜான்சும் கைது செய்யப்பட்டார். தலைமறைவாகி விட்ட ஆட்டோ டிரைவர் நவீனுக்கு வலை வீசப்பட்டுள்ளது.

15 ஜூன் 2016

பிரபல இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் காலமானார்!

திருலோகசந்தர்,எம்ஜிஆர் 
தமிழ் திரையுலகில், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களை இயக்கிய பிரபல இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தர், உடல் நலக்குறைவு காரணமாக புதன்கிழமை பிற்பகல் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 85.ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த வீரத்திருமகன் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் திருலோகசந்தர். எம்.ஜி.ஆர். நடித்த அன்பே வா திரைப்படத்தை இயக்கினார். சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான தங்கை, இருமலர்கள், தெய்வமகன், பாரத விலாஸ், எங்கிருந்தோ வந்தாள் உள்பட 25 திரைப்படங்களை இயக்கியுள்ளார். ரஜினிகாந்த் நடித்த, வணக்கத்துக்குரிய காதலியே படத்தை இயக்கியுள்ளார்.நடிகர் சிவகுமாரை, ஏ.வி.எம். நிறுவன தயாரிப்பில் வெளியான காக்கும் கரங்கள் மூலம் அறிமுகப்படுத்தினார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் 65 படங்களை இயக்கியுள்ளார் திருலோகசந்தர். தனியாக தயாரிப்பு நிறுவனம் துவக்கி, அதன் மூலம் 9 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். தமிழக அரசின், கலைமாமணி விருது, ஃபிலிம் ஃபேர் விருதுகளைப் பெற்றவர். திரைப்படக்கல்லூரி தலைவராக நான்கு முறை பொறுப்பு வகித்த திருலோகசந்தர், தமிழ்நாடு அரசின் சிறந்த படங்களுக்கான தேர்வுக் குழுவின் தலைவராக பல முறை பொறுப்பு வகித்துள்ளார். அவரது மனைவியும், ஒரு மகனும் ஏற்கெனவே காலமாகிவிட்டனர். ராஜ் என்ற மகனும், மல்லிகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.

நன்றி:பிபிசி தமிழ் 

29 மே 2016

நடிகை பிரியாமணி நிச்சயதார்த்தம்!

நடிகை பிரியாமணி-முஸ்தபா ராஜ் நிச்சயதார்த்தம் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றுள்ளது. பருத்திவீரன் உட்பட ஏராளமான படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் பிரியாமணி.இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் இவர் வென்றார்.ஒரு கிரிக்கெட் போட்டியில் தொழில் அதிபரான முஸ்தபா ராஜை சந்தித்த பிரியாமணி விரைவில் அவரின் காதலியாக மாறினார். இதுகுறித்து பிரியாமணி "நாங்கள் இருவரும் உயிருக்குயிராக காதலிக்கிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் எங்களது திருமணம் நடைபெறும்" என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரியாமணி-முஸ்தபாராஜ் நிச்சயதார்த்தம் கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரில் உள்ள பிரியாமணியின் வீட்டில் விமரிசையாக நடைபெற்றது.இதில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த வருட இறுதிக்குள் இருவரின் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ''நான் சினிமாவை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன். திருமணத்துக்கு பிறகும் நல்ல கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து நடிப்பேன்'' என்று சினிமா குறித்த கேள்விக்கு பிரியாமணி பதிலளித்திருக்கிறார். முன்னதாக மலையாள இளம் நடிகர்களில் ஒருவரான கோவிந்த் பத்ம சூர்யாவை, பிரியாமணி காதலிப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

20 மே 2016

காடையரை விரட்ட பேயாக மாறிய சிறுமி!

இந்தியாவின் டெல்லியில் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்க முயன்ற நபர்களிடமிருந்து சிறுமி மிக சாதுர்யமாக தப்பித்துள்ளார். இந்தியாவின் டெல்லியில் இரவு 10 மணியளவில் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி நடந்து சென்றுள்ளார். இவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு ஆண்கள், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு சிறுமியை கடத்தி சென்றுள்ளனர். நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்து சிறுமி திடீரென பயங்கரமான குரலில் பேசியும், சிரித்தும் பேயை போன்று நடித்துள்ளார். இதனால் பயந்து போன ஒருவன் ஓட்டமெடுத்துள்ளான், குழப்பத்தில் நின்ற மற்றொருவனை பயமுறுத்துவற்காக குறித்த சிறுமி தன்னுடைய ரத்தத்தை முகத்தில் பூசிக் கொண்டு மிரட்டியுள்ளார், இவனும் பயந்து போய் ஓட்டமெடுத்துள்ளான். இந்த சம்பவம் பற்றி குறித்து சிறுமியின் தோழி முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார் என சொல்லப்படுகின்றது.

14 மார்ச் 2016

பிரபல நடிகர் சாய்பிரசாந்த் விஷம் குடித்து தற்கொலை!

சாய் பிரசாந்த்
சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகரான சாய்பிரசாந்த் நேற்றிரவு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தமிழில் பல்வேறு சீரியல்களில் நடித்து வந்த சாய்பிரசாந்த் "நேரம்", "ஐந்தாம் படை" உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.இவர் ஒரு மிமிக்ரி கலைஞரும் ஆவார்.இவரது பெற்றோர்கள் பெங்களூரில் உள்ள நிலையில் நேற்று மாலை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக இருந்த இவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இவரது நண்பர்கள் மற்றும் போலீசார் கதவை உடைத்து இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முன், தன்னுடைய வாழ்வில் தொடர்ந்து வரும் தீராத மனவுளைச்சலே தனது தற்கொலைக்கு காரணமென கடிதம் எழுதிவைத்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகிய இவர் நிரஞ்சனா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவரது தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்துவருகின்றனர். அவரது உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி கோடம்பாக்கத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சமீபகாலமாக சீரியல் நடிகர்கள், இயக்குனர்கள் தற்கொலை செய்துவருவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இவரது மறைவுக்கு புளியங்கூடல் வலைப்பூ குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

07 மார்ச் 2016

கலாபவன் மணி குறித்து மம்முட்டியின் குமுறல்!

கலாபவன் மணி
மறைந்த நடிகர் கலாபவன் மணி மறைவு குறித்து நடிகர் மம்முட்டி தனது வலைப்பூவில் உருக்கமாக எழுதியுள்ளார். அந்தக் குமுறல் நம்மை அப்படியே உருகச் செய்கிறது. அதன் தமிழாக்கம் இங்கே... 'இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை. மணி இனிமேல் மாம்பழம், திராட்சைகள் அடங்கிய கூடைகளுடன் என் வீட்டுக்கு வரமாட்டான் என்று. பெங்களுருவில் ஒரு படபிடிப்பில் இருந்தேன். அப்போது தொலைக்காட்சிகளில் ஸ்குரோலிங் ஓடத் தொடங்கியது. மணி இறந்து விட்டார் என்று அதில் செய்தி. சகோதரர் போல பழகியவரின் ஒருவர் மறைவு நம்மை எப்படி பாதிக்கும்? அப்படித்தான் என்னையும் பாதித்தது. என்னால் என்னை தேற்றிக் கொள்ள முடியவில்லை.குனிந்த தலையுடன் கண்ணீர் சிந்திய கண்களுடன் என் வீட்டுக்கு வந்த நாளில் இருந்து எனது வீட்டையும் தனது வீடு போலத்தான் அவன் நினைத்திருந்தான். என்னை ஒரு சகோதரராகவேத்தான் அவன் பார்த்தான். சிகரேட் குடிப்பான். நான் அந்த இடத்துக்கு வந்து விட்டால், கைக்குள் அதனை மறைப்பான். அந்த அன்பை என்னவென்று சொல்வது?'மறுமலர்ச்சி' என்ற தமிழ் படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த படத்தில் காமெடி நடிகராக நடிக்க வேண்டிய ஒருவர், அவர் கொடுத்தபடி படபிடிப்புக்கு வர முடியவில்லை. அப்போதுதான் இயக்குனநரிடம் கலாபவன் மணி பற்றி நான் கூறினேன். அவரை கூப்பிட்டால், பின்னர் எந்த காரணத்தைக் கொண்டும் திருப்பி அனுப்பக் கூடாது என்ற உறுதி மொழியையும் வாங்கிக் கொண்டேன்.ஏனென்றால் மிகச்சிறந்த நடிகன் அவன். குழந்தை மனம் கொண்ட அவனை எந்தவிதத்திலும் நோக விடக் கூடாது என்பதில் நான் குறியாக இருப்பேன். அதனாலேயே அந்த உறுதி மொழியை நான் வாங்கினேன். மணியை அழைத்துள்ளனர். அவனோ எனக்கு தமிழ் தெரியாதே என்று மறுத்துள்ளான். இது எனக்கு தெரிய வர, மணி மீது கோபம் கோபமாக வந்தது. மணியை போனில் அழைத்து திட்டி தீர்த்து விட்டேன். எவ்வளவு பெரிய வாய்ப்பு மறுக்கிறீயே என்று கத்தினேன். எனது கோபத்தை பார்த்து பயந்த மணி நாளை காலையே அங்கே இருக்கேன் என்றான். இப்படிதான் மணியின் தமிழ் சினிமா பயணம் தொடங்கியது. கடைசி வரை தமிழ் சினிமாவில் டிமான்ட் உள்ள நடிகனாகவேத்தான் மணி இருந்தான். சாலக்குடி பக்கத்துல எனக்கு படபிடிப்பு இருந்தா மணி சூட்டிங் ஸ்பாட்டுக்கே சிக்கன், மட்டன் இன்னும் பல இத்யாதிகளுடன் ஆஜராகி விடுவான். அன்னைக்கு முழுக்க அவன் கையால்தான் சாப்பாடு. மணியே பிரமாதமாக சமைப்பான். எனக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதனை சூட்டிங் ஸ்பாட்டுலயே செஞ்சு போடுவான்.மணி கொஞ்சம் சேட்டைக்காரன். அது எனக்கும் தெரியும். அவ்வப்போது எனக்கு தகவல் வரும். அவனை கொஞ்சம் கண்டிச்சு வைனு. நான் போனில் கூப்பிட்டு சத்தம் போடுவேன். இனிமேல் அப்படி நடக்காது என்பான். அமைதியாக கேட்டுக் கொள்வான். கார்ல் லீவிஸ் அவனுக்கு பிடித்த வீரர். அவரது உடல் அமைப்பை பார்த்து மயங்கிய அவன், தன்னையும் கார்ர் லீவிஸ் என்றே அழைக்கும்படி கூறுவான். மணி மிகச்சிறந்த நாட்டுப்புறக் கலைஞன். 100க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளான். பாடியுள்ளான். நாட்டுப்புற பாடல்கள் குழுவை உருவாக்கி நடத்தியும் வந்தான். ஒரு முறை வளைகுடா நாடு ஒன்றில் நிகழ்ச்சி. மணி மலையாள மொழியில் நாட்டுப்புற பாடல் ஒன்றை மேடையில் பாடுகிறான். அந்த நிகழ்வில் இருந்த அரேபியர்களுக்கு மலையாளம் தெரியாது. ஆனால் அந்த மக்கள் தன்னை மறந்து மேடைக்கு கீழே ஆடிக் கொண்டே இருக்கின்றனர். அதனை பார்த்து எனக்கு வியப்பு ஏற்படவில்லை. ஏனென்றால் மணியின் உடல் மொழி பாஷைகளை கடந்தது!

23 ஜனவரி 2016

மீண்டும் கவுதம் கார்த்திக்குடன் ஜோடி சேரும் பிரியா ஆனந்த்!

கவுதம் கார்த்திக் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘வை ராஜா வை’. இதில் இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்திருந்தார். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது இந்த ஜோடி மீண்டும் ‘முத்துராமலிங்கம்’ படம் மூலம் இணைந்திருக்கிறது. இவர்களுடன் இப்படத்தில் பிரபு, சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா, சிங்கம்புலி, சிங்கமுத்து என முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர். இப்படத்தை ராஜதுரை இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு பஞ்சு அருணாசலம் பாடல்கள் எழுதுகிறார். இப்படம் மூலம் மூன்று தலைமுறைகளுக்கு பாடல்கள் எழுதிய பெருமை அவருக்கு உண்டு. மேலும் பஞ்சு அருணாசலமும் இளையராஜாவும் இணைந்து 40 ஆண்டு காலமாக திரையுலகில் பவனி வருகின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு மீண்டும் இவர்கள் இணைந்திருக்கிறார்கள்.

11 அக்டோபர் 2015

நகைச்சுவை அரசியின் இறுதி நிகழ்வுகள் இன்று!

ஆச்சி மனோரமா(புளியங்கூடல்.கொம்)
பழம்பெரும் நடிகை மனோரமா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார்.தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் ஆகியோருடன் இவர் நடித்திருந்ததால் இந்த பெருமையை பெற்றிருந்தார்.மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர்.இவரது இயற்பெயர் கோபி சாந்தா.பத்மஸ்ரீ,தமிழ்நாடு அரசின் கலைமாமணி,தேசிய திரைப்பட விருது போன்ற பல விருதுகளை பெற்றவர் மனோரமா. பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக,சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மனோரமா சனிக்கிழமை இரவு 11 மணியளவில் மரணமடைந்தார்.அவரது உடல் தகனம் இன்று மாலை(11.10.2015 ஞாயிறு) நடைபெறுகிறது. முதலில் கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மயிலாப்பூரில் உள்ள இடுகாட்டில் தகனம் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.4 மணியிலிருந்து இறுதிச் சடங்குகள் தொடங்கி 6 மணிக்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நகைச்சுவை அரசி,சரித்திர நாயகி ஆச்சி மனோரமாவிற்கு எமது புளியங்கூடல்.கொம் வலைக்குழுமத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.

14 ஜூலை 2015

மெல்லிசை மன்னர் காலமானார்!

மெல்லிசை மன்னர் என தமிழ்ச் சமூகத்தால் அன்புடன் அழைக்கப்பட்ட பிரபல இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் இன்று அதிகாலை 4.15 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 87. மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன் என்ற இயற்பெயர் கொண்ட எம்எஸ் விஸ்வநாதன் பாலக்காட்டில் உள்ள எலப்புள்ளி கிராமத்தில் 1928-ல் பிறந்தவர். அவரது பெற்றோர் மனயங்கத் சுப்பிரமணியன் - நாராயணி குட்டி. MS Viswanathan passes away நான்கு வயதில் தந்தையை இழந்து வறுமையில் வாடிய எம்எஸ்வி, மிக இளம் வயதிலேயே நாடகக் குழுவில் சேர்ந்தார். நடிக்கவும், பாட்டுப் பாடவுமே அவரது விருப்பமாக இருந்தது. 13 வயதில் திருவனந்தபுரத்தில் தனது முதல் மேடைக் கச்சேரியை நடத்திய எம்எஸ்வி, 1950களில் எஸ்எம் சுப்பையா நாயுடு மற்றும் சிஆர் சுப்பாராமன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றினார். 1952-ல் சி ஆர் சுப்பாராமன் காலமாகிவிட, அந்த நேரத்தில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்த மருமகள், சண்டி ராணி, தேவதால் மற்றும் ஜெனோவா போன்ற படங்களை முடித்துக் கொடுத்தவர் எம்எஸ்விதான். பின்னர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் தயாரித்த பணம் படத்துக்கு இசையமைப்பாளர்களாக எம்எஸ்வியும் டிகே ராமமூர்த்தியும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். எம்எஸ்வி - டிகே ராமமூர்த்தி இரட்டை இசையமைப்பாளர்கள் முதன் முதலில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமான படம் பணம்-தான். அதன் பின்னர் இந்த இரட்டையர்கள் காலம்தான் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தது. 1952-லிருந்து 1965 வரை இந்த இருவரும் இணைந்து காலத்தால் மறக்க முடியாத பல காவியப் பாடல்களைப் படைத்தனர். இருவரும் இணைந்து 100-க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர். இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். டிகே ராமமூர்த்தியைப் பிரிந்த பிறகு, தனியாக 700-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்தார் எம்எஸ் விஸ்வநாதன். கடைசியாக அவர் இசையமைத்த படம் சுவடுகள். தமிழ் தவிர, மலையாளத்தில் 74 படங்களுக்கும், தெலுங்கில் 31 படங்களுக்கும் இசையமைத்துள்ளார் எம்எஸ்வி. கடந்த சில வாரங்களாகவே உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார். இவர் தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசு விருதும் பெற்றவர். காலத்தால் அழியாத பல காவியப் பாடல் தந்த எம்எஸ் விஸ்வநாதனின் மனைவி ஜானகி கடந்த 2012-ம் ஆண்டு மறைந்தார். எம்எஸ்வி - ஜானகி தம்பதிக்கு நான்கு மகன்கள், மூன்று மகள்கள். அவரது உடல் சென்னை சாந்தோமில் உள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறுகின்றன.

09 ஏப்ரல் 2015

நாகூர் ஹனீபா காலமானார்!

பிரபல இஸ்லாமிய பாடகரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசார பாடகராக கம்பீரக் குரலில் முழங்கியவருமான "இசைமுரசு" நாகூர் ஹனீபா (வயது 90) சென்னையில் இன்று காலமானார். இஸ்லாமிய பாடல்களை உலகம் முழுவதும் ஒலிக்கச் செய்தவர் நாகூர் ஹனீபா. குறிப்பாக இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் அனைவரையும் கொள்ளை கொண்ட பாடல். இஸ்லாமிய மத பாடல்களை உலகம் முழுவதும் ஒலிக்கச் செய்தவர் நாகூர் ஹனீபா. குறிப்பாக இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் அனைவரையும் கொள்ளை கொண்ட பாடல்.அதேபோல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசார பாடகராக ஹனீபா பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை. பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து தமது பாடல்கள் மூலம் தி.மு.க. வளர்ச்சிக்கு உரமாக இருந்தவர் ஹனீபா. அதுவும் அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா..... ஓடி வருகிறான் உதயசூரியன் போன்ற எண்ணற்ற பாடல்கள் தி.மு.க. கழகத்தின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாதவை. 90 வயதான நிலையில் முதுமை காரணமாக சென்னை கோட்டூர்புரத்தில் இன்று நாகூர் ஹனீபா காலமானார். அவரது உடலுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

24 ஜனவரி 2015

பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு!

வயிற்றுப் புற்றுநோய் காரணமாக தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் சிகிச்சைப் பலன் இன்றி இன்று மாலை 5.50 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 90. 1925ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் வெம்பாக்கத்தில் பிறந்தவர் வி.எஸ்.ராகவன். 1954-ஆம் ஆண்டு வெளிவந்த வைரமாலை என்ற தமிழ்ப்படத்தில் முதன்முறையாக அறிமுகம் ஆனார். முதலில் நாடகத்திலும் பிறகு சினிமாவிலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடித்து வந்த வி.எஸ்.ராகவன் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள வி.எஸ்.ராகவன் ஆல் இன் ஆல் அழகுராஜா, கலகலப்பு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சாகும் வரையிலும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே வி.எஸ்.ராகவனின் ஆசையாக இருந்தது. இவர் கடைசியாக நடித்த காத்தாடி திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில், உடல் நலக் குறைவால் வி.எஸ்.ராகவன் காலமானார். வி.எஸ்.ராகவன் இல்லம் மந்தைவெளி ராமகிருஷ்ணா நகரில் உள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை பெசன்ட் நகர் மயானத்தில் மறைந்த பழம்பெரும் நடிகரின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

23 டிசம்பர் 2014

கே.பாலச்சந்தர் ஒரு பார்வை!

1930 ஜூலை 9ம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை கைலாசம், தாயார் காமாட்சியம்மள். நன்னிலத்தில் பள்ளியில் படிக்கும் போதே நாடகம் மற்றும் சினிமா மீது விருப்பம் கொண்டார். தியாகராஜ பாகவதரின் படங்களால் ஈர்க்கப்பட்ட அவர். சினிமா மற்றும் நாடகங்களுக்கு அடிக்கடி சென்றார். இதனால் அவர் மனதில் சினிமா ஆசை வளர்ந்தது. பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., (விலங்கியல்) படிப்பில் சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போதும் கதை எழுதுவது, நாடகங்களில் நடிப்பது போன்ற திறமைகளை வளர்த்துக் கொண்டார். 1949ல் பட்டப்படிப்பை முடித்ததும், முத்துப்பேட்டையில் உள்ள பள்ளியில் ஓராண்டு ஆசிரியராக பணியாற்றினார். அங்கும் மாணவர்களை வைத்து நாடகம் நடத்துவார். 1950ல் சென்னை வந்தார். அங்கு மத்திய அரசின் அக்கவுண்டண்ட் ஜென்ரல் அலுவலகத்தில் கிளார்க் பணியில் சேர்ந்தார். அங்கு இருக்கும்போதே கிடைக்கும் நேரத்தில் நாடக கம்பெனியில் சேர்ந்து நாடகம் இயக்கும் திறமையை வளர்த்துக்கொண்டார். ஆங்கிலத்தில் வெளியான "மேஜர் சந்திரகாந்த்' என்ற நாடகத்தை தமிழில் மொபெயர்த்து இயக்கினார். இந்நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பின் நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், மெழுகுவர்த்தி, நாணல், நவக்கிரகம் உள்ளிட்ட நாடகங்களையும் இயக்கினார். வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, 1965ல் எம்.ஜி.ஆர்., நடிக்கும் தெய்வத்தாய் என்ற படத்துக்கு வசனம் எழுத வாய்ப்பு வந்தது. பின்னர் சர்வர் சுந்தரம் படத்துக்கு வசனம் எழுதினார். அதே ஆண்டு 1965ல் நீர்க்குமிழி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக இயக்குநராக அறிமுகமானார். நடிகர் நாகேஷ் கதாநாயகனாக நடித்தார். இவருடைய பெரும்பாலான படங்களில், குடும்பு உறவுகளுக்கு இடையேயான பிரச்னை, சமூகப் பிரச்சினைகள் ஆகியவை மையக்கருத்தாக அமைந்தன. இதன் பின்னர் பல படங்களை இயக்கினார்.

24 அக்டோபர் 2014

மறைந்த எஸ்.எஸ்.ஆரின் தீவிர ரசிகை லதா ரஜனி!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்க அவரது மனைவி லதா ரஜினிகாந்த், பழம்பெறும் நடிகர் எஸ்.எஸ்.ஆரின் தீவிர ரசிகையாம். இதை அவரே எஸ்.எஸ்.ஆரிடம் கூறியுள்ளார். லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் வாழ்வில் சுவாரஸ்யங்களுக்கு குறைவிருக்காது. பெரியார், அண்ணாவின் சீடராக இருந்தது தொடங்கி இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் வரை அவரது வாழ்க்கையில் எண்ணற்ற சுவரஸ்ய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சில சம்பவங்களை எஸ்.எஸ்.ஆர் பிரபல ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் மறைந்தாலும் அவரது இனிய நினைவுகள் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறோம்.சிவலீலா' நாடகம் நடந்துட்டிருந்த சமயம் போய் "எனக்கு ஒரே வேடத்துல நடித்து அலுத்துவிட்டது. வேற பெரிய வேஷத்துல நடிக்க வையுங்க" என்று டி.கே.எஸ். சிடம் கேட்டாராம் எஸ்.எஸ்.ஆர். செண்பகப் பாண்டியனாக நடிக்க விரும்பம் என்று டி.கே.எஸ்.சிடம் சொன்ன உடன், ஆச்சரியப்பட்ட டி.கே.எஸ். அடுத்த நாடகத்துலேயே என்னை எஸ்.எஸ்.ஆரை ஹீரோவாக்கி மூணே முக்கால் ரூபாயிலயிருந்து 25 ரூபாய் சம்பளமாக உயர்த்தினாராம்.ரஜினி தன்னுடைய சஷ்டியப்தபூர்த்தி விழாவிற்கு எஸ்.எஸ்.ஆருக்கு அழைப்பு விடுத்துள்ளார். நீங்க ஃபங்ஷனுக்கு குடும்பத்தோடு வந்து என்னையும் லதாவையும் ஆசீர்வாதம் செய்யணும்' என்று கேட்டுக்கொண்டாராம். எஸ்.எஸ்.ஆர் தனது மனைவியுடன் ரஜினி மணிவிழாவுக்குப் போனபோது, ரஜினியும், லதாவும் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு நெகிழ்ந்து போனார்களாம். அப்போது ரஜினியின் கைகளில் 500 ரூபாயை கொடுத்தாராம் எஸ்.எஸ்.ஆர். அதை சந்தோஷமாக வாங்கிக் கொண்ட ரஜினி, 'இந்தப் பணத்தை செலவு பண்ணாம பத்திரமா உங்க ஞாபகமா வெச்சுப்பேன்...என்றாராம்.அப்போது, என் வீட்டுக்காரருக்கு எவ்வளவோ ரசிகர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் நான் உங்களுக்குத்தான் ரசிகை என்று கூறினாராம் லதா.கோபாலபுரத்தில் அடிக்கடி சென்று வந்த காலத்தில் சிறுவர்களாக இருந்த ஸ்டாலின், அழகிரி இடையே நடக்கும் சண்டையை விலக்கி விடுவாராம். சொல்வதை கேட்காவிட்டால் அழகிரியின் முதுகில் ஒரே போடாக போடுவாராம். இப்படி எத்தனையோ சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் எஸ்.எஸ்.ஆர்.

21 ஆகஸ்ட் 2014

சமீரா ரெட்டியுடன் மகிந்தவின் வாரிசு!

அது என்னமோ தெரியவில்லை… இந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச மகன் நாமல் ராஜபக்சவுக்கு இந்திய நடிகைகள், குறிப்பாக தமிழ் நடிகைகள் மீது அப்படி ஒரு ஆசை… நினைத்தால் டெல்லிக்கோ மும்பைக்கோ (இதுவரை சென்னைக்கு வரமுடியாத நிலை.. ஆனால் இனி அப்படியெல்லாம் சொல்வதற்கில்லை… ஓஎம்ஆரில் ஆடம்பர ஹோட்டலும் கோடம்பாக்கத்தில் அவருக்கான ஏஜென்டுகளும் தயார்!) சரி மேட்டருக்கு வருவோம்… இந்த நாமல் ராஜபக்சவும் பிரபல தமிழ் நடிகை ஒருவரும் ரொம்ப ரொம்ப நெருக்கமாக இருந்து டிஸ்கஸ் பண்ணிய சமாச்சாரத்தை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். அந்த நடிகையும் இந்த நாமலும் அந்தரங்கமாக உள்ள வீடியோ வேறு முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இன்னொரு பிரபல நடிகையுடன் நமல் ரொம்ப நெருக்கமாக, அணைத்தபடி உள்ள படம் ஒன்று இணையத்தில் வெளியானது. அந்த நடிகை சமீரா ரெட்டி. தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரபலமானவர். தமிழில் வாரணம் ஆயிரம், வேட்டை, வெடி போன்ற படங்களில் நடித்தவர். இந்தப் படம் எடுக்கப்பட்ட இடம் தெரியவரவில்லை.