நா.முத்துக்குமார் குடும்பம் |
14 ஆகஸ்ட் 2016
நா.முத்துக்குமார் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
06 ஆகஸ்ட் 2016
வியட்னாம் வீடு சுந்தரம் காலமானார்!
பழம்பெரும் திரைப்பட நடிகர் வியட்நாம் வீடு சுந்தரம் சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவால் தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. 1970-ம் ஆண்டு வியட்நாம் வீடு என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் சுந்தரம் அறிமுகம் ஆனார். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளார். இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் உள்ளிட்ட பரிமாணங்களை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. வியட்நாம் வீடு' படம் அனைத்துத் தரப்பினரையும், ரசிக்க வைத்த ஒரு வெற்றி படைப்பு. தமிழக அரசால் சிறந்த படம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்ட படம். வியட்நாம் மீது அமெரிக்கா படை எடுத்தது. அதனால் வியட்நாம், போர்களமாகக் காட்சியளித்தது. சண்டை தொடர்ந்து நடந்ததால், ஒரு போராட்டமான வாழ்க்கைச் சூழ்நிலை ஏற்பட்டது. அதைப் போல ஒரு பிராமணக் குடும்பத்தில் தினமும் எழும் சண்டை சச்சரவுகள் குழப்பம், ரகளை காரணமாக அந்த வீடே, தினம்தோறும் ஒரு வியட்நாம் போல இருப்பதால் அந்த வீட்டிற்கு அங்குள்ளவர்கள் தேர்வு செய்த பெயர்தான் "வியட்நாம் வீடு'.நாடகாசிரியர் கே. சுந்தரம் வியட்நாம் வீடு நாடகம் எழுதினார். நாடகம் பிரபலமானது. ஒரு வார இதழில் தொடராகவும் வெளிவந்தது. நாடக ஆசிரியர் சுந்தரம் வியட்நாம் வீடு சுந்தரமானார் இந்த நாடகத்தை திரைப்படமாக எடுத்தனர். தமிழின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் திரைக்கதை எழுதியுள்ள இவர் நடிகர் சிவாஜி கணேசனின் விருப்பமான கதையாசிரியர் ஆவார். கௌரவம் உள்ளிட்ட சுமார் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி டிவி சீரியலில் நடித்த வியட்நாம் வீடு சுந்தரம் தற்போது வள்ளி டிவி சீரியலில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
19 ஜூலை 2016
17வயதில் 2 மாணவர்கள்!சீரழிந்து போன மாணவியின் வாழ்க்கை!
நெல்லை அருகே 17 வயதுடைய 2 மாணவர்கள் சேர்ந்து, 10வது வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவியை கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்த செயல் அதிர வைத்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து அக்கிரமத்தில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் ஒருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இந்த அக்கிரமச் செயல் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவரான மோசஸ் (பெயர் மாற்றப்பட்டது) என்பவர் பாதிக்கப்பட்ட சிறுமியைக் காதலித்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சனிக்கிழமையன்று மெஸ்ஸாக்குக்குப் போன் செய்துள்ளார் அந்த சிறுமி. அப்போது தனது வீட்டுக்கு அருகே ஒரு இடத்தைக் கூறி அங்கு வருமாறு கூறியுள்ளார் மோசஸ்.மாணவியும் தனது வீட்டில் பொய் சொல்லி விட்டு அங்கு போயுள்ளார். அங்கு மோசஸுடன், மேலும் இருவர் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் நவீன், இவர் ஆட்டோ டிரைவர். இன்னொருவர் ஜான்சன் (பெயர் மாற்றப்பட்டது). பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். மோசஸ் மற்றும் ஜான்சனுக்கு வயது 17 ஆகிறது.
அவர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி அங்கிருந்து கிளம்ப முயன்றார். இதைப் பார்த்த மூவரும் அவரை மடக்கிப் பிடித்து தனியான இடத்திற்குக் கூட்டிச் சென்று மிரட்டி ஒருவர் பின் ஒருவராக பலாத்காரம் செய்தனர். அதிர்ச்சி, அவமானம், வேதனையுடன் வீடு திரும்பிய மாணவி தனது தாயாரிடம் நடந்ததைக் கூறி கதறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீஸுக்குப் போனால் அவமானமாகி விடுமே என்று பயந்து சொல்லாமல் விட்டு விட்டனர்.
ஆனால் அடுத்த நாள் காலையில் மனதை தேற்றிக் கொண்ட அவர்கள் மோசஸின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரைச் சந்தித்து நடந்ததைக் கூறினர். மோசஸை, தங்களது மகளுக்குக் கட்டி வைக்குமாறு கோரினர். ஆனால் மோசஸ் திருமணம் செய்ய முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.புகாரைப் பதிவு செய்த போலீஸார் உடனடியாக மோசஸைக் கைது செய்தனர். தொடர்ந்து ஜான்சும் கைது செய்யப்பட்டார். தலைமறைவாகி விட்ட ஆட்டோ டிரைவர் நவீனுக்கு வலை வீசப்பட்டுள்ளது.
15 ஜூன் 2016
பிரபல இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் காலமானார்!
திருலோகசந்தர்,எம்ஜிஆர் |
நன்றி:பிபிசி தமிழ்
29 மே 2016
நடிகை பிரியாமணி நிச்சயதார்த்தம்!
நடிகை பிரியாமணி-முஸ்தபா ராஜ் நிச்சயதார்த்தம் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றுள்ளது. பருத்திவீரன் உட்பட ஏராளமான படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் பிரியாமணி.இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் இவர் வென்றார்.ஒரு கிரிக்கெட் போட்டியில் தொழில் அதிபரான முஸ்தபா ராஜை சந்தித்த பிரியாமணி விரைவில் அவரின் காதலியாக மாறினார். இதுகுறித்து பிரியாமணி "நாங்கள் இருவரும் உயிருக்குயிராக காதலிக்கிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் எங்களது திருமணம் நடைபெறும்" என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரியாமணி-முஸ்தபாராஜ் நிச்சயதார்த்தம் கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரில் உள்ள பிரியாமணியின் வீட்டில் விமரிசையாக நடைபெற்றது.இதில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த வருட இறுதிக்குள் இருவரின் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ''நான் சினிமாவை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன். திருமணத்துக்கு பிறகும் நல்ல கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து நடிப்பேன்'' என்று சினிமா குறித்த கேள்விக்கு பிரியாமணி பதிலளித்திருக்கிறார். முன்னதாக மலையாள இளம் நடிகர்களில் ஒருவரான கோவிந்த் பத்ம சூர்யாவை, பிரியாமணி காதலிப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
20 மே 2016
காடையரை விரட்ட பேயாக மாறிய சிறுமி!
இந்தியாவின் டெல்லியில் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்க முயன்ற நபர்களிடமிருந்து சிறுமி மிக சாதுர்யமாக தப்பித்துள்ளார்.
இந்தியாவின் டெல்லியில் இரவு 10 மணியளவில் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி நடந்து சென்றுள்ளார்.
இவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு ஆண்கள், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு சிறுமியை கடத்தி சென்றுள்ளனர்.
நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்து சிறுமி திடீரென பயங்கரமான குரலில் பேசியும், சிரித்தும் பேயை போன்று நடித்துள்ளார்.
இதனால் பயந்து போன ஒருவன் ஓட்டமெடுத்துள்ளான், குழப்பத்தில் நின்ற மற்றொருவனை பயமுறுத்துவற்காக குறித்த சிறுமி தன்னுடைய ரத்தத்தை முகத்தில் பூசிக் கொண்டு மிரட்டியுள்ளார், இவனும் பயந்து போய் ஓட்டமெடுத்துள்ளான்.
இந்த சம்பவம் பற்றி குறித்து சிறுமியின் தோழி முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார் என சொல்லப்படுகின்றது.
14 மார்ச் 2016
பிரபல நடிகர் சாய்பிரசாந்த் விஷம் குடித்து தற்கொலை!
சாய் பிரசாந்த் |
07 மார்ச் 2016
கலாபவன் மணி குறித்து மம்முட்டியின் குமுறல்!
கலாபவன் மணி |
23 ஜனவரி 2016
மீண்டும் கவுதம் கார்த்திக்குடன் ஜோடி சேரும் பிரியா ஆனந்த்!
கவுதம் கார்த்திக் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘வை ராஜா வை’. இதில் இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்திருந்தார். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது இந்த ஜோடி மீண்டும் ‘முத்துராமலிங்கம்’ படம் மூலம் இணைந்திருக்கிறது.
இவர்களுடன் இப்படத்தில் பிரபு, சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா, சிங்கம்புலி, சிங்கமுத்து என முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர். இப்படத்தை ராஜதுரை இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு பஞ்சு அருணாசலம் பாடல்கள் எழுதுகிறார். இப்படம் மூலம் மூன்று தலைமுறைகளுக்கு பாடல்கள் எழுதிய பெருமை அவருக்கு உண்டு.
மேலும் பஞ்சு அருணாசலமும் இளையராஜாவும் இணைந்து 40 ஆண்டு காலமாக திரையுலகில் பவனி வருகின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு மீண்டும் இவர்கள் இணைந்திருக்கிறார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)