பக்கங்கள்

20 ஜூன் 2014

உலகிலேயே கவர்ச்சியில் முதலிடத்தில் பிறேசில் பெண்கள்!

உலகிலேயே கவர்ச்சியான உடலமைப்பு கொண்ட பெண்கள் பிரேசில் நாட்டில்தான் வசிக்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதேபோல கவர்ச்சிகரமான கம்பீரமான ஆண்கள் ஆஸ்திரேலியாவில்தான் இருக்கின்றனர் என்று பெண்கள் கூறியுள்ளனர். கோடை காலம் வந்தாலே மிஸ் டிராவல் என்ற இணையதளம் இதுபோன்ற கருத்துக்கணிப்பை தொடங்கிவிடும். இந்த ஆண்டு அமெ­ரிக்கா முழு­வ­தும் 44,000 ஆட­வர்­கள், பெண்­களி­டம் நடத்­தப்­பட்­டது. அனைவருமே இளை­யர்­கள், திரு­ம­ணம் ஆகா­த­வர்­கள்.இந்த உலகில் கவர்ச்சியான உடலமைப்புக் கொண்ட பெண்கள் யார் என்று கேட்கப்பட்டது. இதில் பெரும்பாலான ஆண்கள், பிரேசில் பெண்கள்தான் உலகிலேயே கவர்ச்சியானவர்கள் என்று தெரிவித்துள்ளனர். உலக கால்பந்து போட்டி தற்போது பிரேசில் நாட்டில் நடைபெறுகிறது. இந்த தகவலைக் கேட்டு அவர்கள் மகிழ்ச்சியில் திளைக்கப் போகிறார்கள்.இவர்களுக்கு அடுத்தபடியாக ரஷ்யா, கொலம்பியா நாட்டுப் பெண்கள் இரண்டாவது, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.இங்கிலாந்து, பிலிப்பினா, ஸ்பானிஸ் பெண்களும் இந்த பட்டியலில் 4 வது, 5வது, 6வது இடத்தைப் பிடித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த படியாக, ஆஸ்திரேலியா, பல்கேரியன், தென்ஆப்ரிக்கா பெண்கள் உள்ளனர். கனடாவைச் சேர்ந்த பெண்கள் கவர்ச்சிப் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளனர்.இதேபோல கட்டழகான ஆண்கள் என்று பெண்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆஸ்திரேலியா ஆண்கள்தான் கட்டழகும், கவர்ச்சி, கம்பீரமும் கொண்டவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.இத்தாலி, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆண்கள் கம்பீர பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.இவர்களுக்கு அடுத்த படியாக ஸ்பானிஷ் ஆண்களும், அமெரிக்க ஆண்களும் உள்ளனர். ஐரீஷ், பிரேசில், கனடா, டச்சு நாட்டைச் சேர்ந்த ஆண்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.இந்தியாவைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் இந்தப்பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டு கொலம்பியா பெண்களும், இங்கிலாந்து ஆண்களும் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ரசனை மாறிவிட்டது.

14 ஜூன் 2014

வில்லி நடிகை சகுந்தலா மாரடைப்பில் மரணம்!

தூள் படத்தில் வில்லி சொர்ணாக்காவாக நடித்த சகுந்தலா, மாரடைப்பால் நேற்று காலமானார் தமிழில் விக்ரமின் தூள் படத்தில் சொர்ணாக்காவாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை சகுந்தலா ,நடிகர் விஜயின் சிவகாசி படத்தில் பிரகாஷ்ராஜ் மாமியாராக நடித்துள்ளார். 1981-ல் மா பூமி என்ற படத்தில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்துள்ளார் சகுந்தலா. தெலுங்கில் முன்னணி வில்லி நடிகையா இருந்தார். அங்கு இவரை தெலுங்கானா சகுந்தலா என்று அழைத்தனர். 2003-ல் வெளியான ஒக்கடு தெலுங்கு படம் சகுந்தலாவை பிரபல நடிகையாக்கியது. தொடர்ந்து முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் வில்லி, காமெடி, மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். ஹைதராபாத்தில் உள்ள கொம்பள்ளி பகுதியில் உள்ள தனது வீட்டில் சகுந்தலா வசித்து வந்தார். நேற்று நள்ளிரவு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார். சகுந்தலா உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப் பட்டு உள்ளது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். தெலுங்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

08 ஜூன் 2014

விஜய் - அமலாபால் நிச்சயதார்த்தம்!

இயக்குநர் விஜய்க்கும், நடிகை அமலாபாலுக்கும் நேற்று கொச்சியில் உள்ள சர்ச் ஒன்றில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திரைத்துறையில் உள்ளவர்கள் வீட்டு திருமணம் எப்போதுமே மக்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது சகஜமான ஒன்றுதான். அதிலும் நடிகைகள் திருமணம் என்றால் சொல்லவே வேண்டாம். அந்தவகையில், இயக்குநர் விஜய்க்கும், நடிகை அமலாபாலுக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததையடுத்து வரும் 12ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற உள்ளது.மதராசபட்டணம், தெய்வமகள், தலைவா உள்ளிட்ட வெற்றிப்படங்களைத் தந்தவர் இயக்குநர் விஜய். இவரது தெய்வமகள் மற்றும் தலைவா படத்தில் நாயகியாக நடித்தார் அமலாபால்.முதலில் நட்பாக ஆரம்பித்த இவர்களது பழக்கம், ஊடகங்களின் கிசுகிசுவால் நாளடைவில் காதலாக கனிந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமும் ஏற்பாடு செய்யப்பட்டது.அதன்படி, நேற்று கொச்சியில் உள்ள செயிண்ட் ஜூட் சர்ச்சில் விஜய் - அமலாபால் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கிறிஸ்தவ முறைப்படி இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள்.அதனைத் தொடர்ந்து வரும் 12ம் தேதி சென்னையில் மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது.விஜய் - அமலாபால் என இருவருமே திரைத்துறையில் முன்னணியில் உள்ளவர்களாதலால் இத்திருமணத்திற்கு பிரபலங்கள் பலர் நிச்சயம் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறதது.ஏற்கனவே, தங்களது திருமணத்திற்கு வருகை தருபவர்கள் அன்பளிப்பு எதுவும் தர வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு அப்பணத்தை அளித்து விடும்படி விஜய், அமலாபால் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

03 ஜூன் 2014

அமர்க்களப்படுத்திய ரிஹானா!

அமெரிக்காவில் நடந்த விருது விழா ஒன்றில் பிரபல பாப் பாடகி ரிஹானா அங்கமெல்லாம் பளிச்சென்று தெரியும்படி ஆடை அணிந்து வந்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திங்கட்கிழமை நடந்த விருது வழங்கும் விழாவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு பிரபல பாப் பாடகி ரிஹானாவும் வந்திருந்தார். அவர் வந்திருந்ததை நிச்சயம் தனியாக குறிப்பிட வேண்டும். அதற்கு காரணம் அவரின் ஆடை.ரிஹானா தரையை தொடும் அளவுக்கு ஒரு ஆடை அணிந்திருந்தார். ஆனால் அந்த ஆடை கண்ணாடியாக இருந்ததால் அவரது அங்கம் எல்லாம் பளிச்சென்று தெரிந்தது.ஆடை தான் லேசான துணி என்றால் ரிஹானா உள்ளாடை அணியாமல் மூடி மறைக்க வேண்டிய மேல் அழகை இப்படி பளிச்சென்று காட்டியுள்ளார்.ரிஹானா இப்படி ஆபாசமாக ஆடை அணிந்து வந்ததை பலரும் வாயை பிளந்து பார்த்தனர் அதிர்ச்சியில்.ஹாலிவுட் பிரபலங்கள் மேல் அழகையும், கீழ் அழகையும் மட்டுமாவது மறைத்துவிட்டு பிற பகுதிகள் பளிச்சென்று தெரியும் வகையில் ஆடை அணிந்தனர். ரிஹானா அதிலும் ஒருபடி மேலே சென்றுவிட்டார்.