நடிகைகள் பட விழாக்களுக்கு வரலேன்னா மட்டும் இவ்வளவு கெடுபிடி காட்டும் நீங்கள், பட விழாக்கள் பக்கமே வராத நடிகர் அஜீத் மற்றும் சந்தானத்துக்கு மட்டும் பொருந்தாதா என கேள்வி எழுப்பியுள்ளனர் முன்னணி நடிகைகள். தமிழ் சினிமாவில் தாங்கள் நடித்த படங்களின் இசை வெளியீடு மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட நாயகிகள் கலந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பிரதானமாக எழுந்துள்ளது. நாயகிகள் இல்லாததால் போதிய விளம்பரம் கிடைக்காமல் போவதால், அவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் படத்தில் நடிக்கத்தான் சம்பளமே தவிர, இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கல்ல. அந்த கால்ஷீட்டை நாங்கள் வேறு படத்துக்கு தரவேண்டியிருக்கிறது என நடிகைகள் தரப்பில் கூறிவந்தனர். இந்த நிலையில், விழாக்களில் கலந்து கொள்ளாத நடிகைகளின் சம்பளத்தில் 20 சதவீதத்தை பிடித்தம் செய்து கொள்வதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு நடிகைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க தனி சம்பளம் மற்றும் வந்து போக, தங்க ஆகும் செலவுகளை தயாரிப்பாளர்தான் ஏற்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் எங்களால் வரமுடியாது என்று கூறியுள்ளனர். இல்லாவிட்டால் தயாரிப்பாளர் பிடித்தம் செய்வதாகக் கூறும் 20 சதவீதத்தை தங்கள் சம்பளத்தில் ஏற்ற வேண்டிய நிலையை தயாரிப்பாளர் சங்கம் உருவாக்கியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத முன்னணி நடிகை ஒருவர் தெரிவித்தார். 'ஒரு கோடி சம்பளம் கேட்டதற்கு பதில் 1 கோடியே இருபது லட்சம் என சம்பளம் பேச வேண்டியதுதான்,' என சக நடிகைகள் கமெண்ட் அடித்ததாக அவர் தெரிவித்தார். அஜீத், சந்தானத்தையும் கூப்பிட வேண்டியதுதானே... "நடிகைகளிடம் மட்டும் இவ்வளவு கெடுபிடி காட்டும் தயாரிப்பாளர் சங்கம், பட விழாக்கள், பிரஸ் மீட்டுகள், விளம்பர நிகழ்ச்சிகள் என எதற்குமே எட்டிப் பார்க்காத அஜீத், சந்தானம் போன்றவர்களை மட்டும் விட்டுவிடுவது ஏன்? அவர்கள் மட்டும் விதிவிலக்கா... அவர்கள் சம்பளத்தில் 20 சதவீதம் குறைக்கத் தயாரா? இவர்களைப் போலத்தான் ஒரு நடிகை கலந்து கொள்ளாமல் போக ஆயிரம் காரணங்கள் உள்ளன", என்றும் குமுறியுள்ளனர் நடிகைகள். படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும்போதே, படத்தின் விழாக்கள், விளம்பர நிகழ்ச்சிகள் எதற்கும் தன்னை அழைக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்து, அதை எழுத்துப்பூர்வமாகவும் எழுதி வாங்கிக் கொண்டுதான் நடிக்கிறார் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதெல்லாம் சந்தானமும் அஜீத் வழியைத்தான் பின்பற்றுகிறாராம்.
27 அக்டோபர் 2013
19 அக்டோபர் 2013
இனி நடிக்கமாட்டாரம் திரிஷா!
தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேல் தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாகத் திகழும் த்ரிஷா, இனி புதிய படங்களில் நடிக்க மாட்டேன் என மறுப்பு தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திருமணம் செய்து கொண்டு செட்டிலாகத் திட்டமிட்டுள்ளதாலேயே இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக 'ஆயிரத்தோராவது முறையாக' கொளுத்திப் போட்டுள்ளனர் கோடம்பாக்கத்தில். 30 வயதைத் தாண்டிவிட்ட த்ரிஷா இப்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஒரு படம். கிட்டத்தட்ட இந்தப் படங்களின் ஷூட்டிங்குகள் முடியும் கட்டத்தில் உள்ளன. திரிஷாவுடன் சினிமாவுக்கு வந்த பல நடிகைகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் இப்போது வெளிப்படையாகவே நெருக்கம் காட்ட ஆரம்பித்துளளனர். இருவரும் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதால், த்ரிஷா புதுப்படங்களில் நடிக்க மறுத்து வருவதாகக் கூறுகிறார்கள். சமீபத்தில் அவரை ஒப்பந்தம் செய்யச் சென்ற தயாரிப்பாளருக்கு, 'இனி படம் நடிக்கிறதா இல்ல' என்று கூறிவிட்டாராம் த்ரிஷா.
16 அக்டோபர் 2013
எனக்கு இதுவெல்லாம் செய்தார் அஷ்மித்-வீணா
வீணா&அஷ்மித் |
09 அக்டோபர் 2013
நஸ்ரியா பகிரங்க மன்னிப்பு!
உண்மை தெரியாமல் இயக்குநர் சற்குணம் மீது புகார் கொடுத்துவிட்டேன். நான் ஆட்சேபித்த காட்சி எதுவுமே நய்யாண்டி படத்தில் இல்லாததால் சற்குணத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார் நஸ்ரியா. 'நய்யாண்டி' படத்தில் நஸ்ரியாவுக்கு பதிலாக பெண்ணை வைத்து அவரது தொப்புளை தனுஷ் தடவுவது மாதிரி காட்சி வைத்து விட்டதாக இயக்குநர் சற்குணம், தயாரிப்பாளர் கதிரேசன் மீது நஸ்ரியா புகார் கூறி வந்தார். முதலில் நடிகர் சங்கத்திலும் பின்னர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் அவர் புகார் கூறி பரபரப்பு கிளப்பினார். எனக்கு காட்டாமல் படத்தை வெளியிடக் கூடாது என்றும் அவர் கோரியிருந்தார். இந்த நிலையில் இன்று போர்பிரேம்ஸ் திரையரங்கில் நஸ்ரியா, அவரது அப்பா நசீம் , நஸ்ரியாவின் வழக்கறிஞர், தயாரிப்பாளர், சைபர் க்ரைம் அதிகாரிகள் 'நய்யாண்டி' படத்தை பார்த்திருக்கிறார்கள். சர்ச்சைக்குரியதாக சொல்லப்பட்ட அந்தக் காட்சி ஆபாசமாக, கவர்ச்சியாக இல்லை என்பதோடு, டூப் யாரையும் சற்குணம் பயன்படுத்தவில்லை என்பதும் தெளிவானதாம். அந்த தொப்புள் காட்சி ட்ரைலரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாம். இதனால், நஸ்ரியா தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்து சற்குணத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்டாராம். அவசரப்பட்டு சற்குணத்தை அவமானப்படுத்திய குற்றத்துக்காக தானே முன்வந்து பத்திரிகையாளர்கள் முன் தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோருவதாக நஸ்ரியா கூறியுள்ளாராம். நாளை மறுநாள் ரிலீசாகும் படத்துக்கு இதை விட ஹெவி பப்ளிசிட்டி வேறு கிடைக்குமா என்ன!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)