புதுச்சேரியில் மும்முரமாக நடந்து வந்த பிரியாணி படத்துக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் அவரது படக்குழுவினர் தற்போது சற்று ஓய்வு எடுத்து வருகின்றனர்.
புதுச்சேரியில் சில கார் மோதல் சண்டைக் காட்சிகளும், ஒரு பாடலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதில் கார்த்தி இடம்பெறும் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதால் கார்த்தியின் வருகைக்காக படக்குழுவினர் காத்திருக்கின்றனர்.
பிரியாணி படத்தில் பிரேம்ஜி அமரன் கார்த்தியின் பள்ளிக் காலத்தில் இருந்து உடன் இருக்கும் நண்பனாக வருகிறார்.
அது பற்றி பிரேம்ஜி கூறுகையில், உண்மையிலேயே நானும் கார்த்தியும் பள்ளிக் கால நண்பர்கள்தான். அவரும் நானும் ஒரே பள்ளியில் தான் படித்தோம். ஆனால் அவர் வெளிநாடு சென்றுவிட்ட பிறகு, அவ்வளவாக எங்களுக்குள் தொடர்பில்லை. ஆனால் இந்தப் படம் மூலமாக எங்கள் நட்பு வளர்ந்துள்ளது. எங்களது நட்பு வளர்வது, படத்துக்கும் உதவிகரகமாக இருக்கிறது. நாங்கள் இருவரும் வரும் காட்சிகள் நன்றாக வந்துள்ளன என்கிறார் மகிழ்ச்சியோடு.
பிரியாணி படத்தில் கார்த்திக்கு ஹன்சிகா ஜோடியாக நடிக்கிறார்.
26 பிப்ரவரி 2013
17 பிப்ரவரி 2013
கைக்குழந்தையுடன் வந்த கோபிகா!
குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் முழு வேகத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார் கோபிகா. சமீபத்தில் தொடங்கிய மலையாளப் பட ஷூட்டிங்குக்கு தனது கைக்குழந்தையுடன் வந்து கலந்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார் கோபிகா. ஆனாலும் அவரைத் தேடி பல வாய்ப்புகள் வந்தன. குழந்தை பெற்ற பிறகு, மலையாளத்தில் ஜெயராம் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்துக்கு ‘பரயா அத்ரா போரா' என தலைப்பிட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் கொச்சியில் துவங்கியது. இதில் பங்கேற்க வந்த கோபிகா, தனது 2 வயது மகளையும் அழைத்துக் கொண்டு படப்பிடிப்புக்கு வந்தார். குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஒரு பெண் உடன் இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் தானே குழந்தையை கவனித்துக் கொண்டார். மீண்டும் படங்களில் நடிப்பதை தன் கணவரே ஆதரிப்பதால், நடிக்க ஆரம்பித்துவிட்டதாக கோபிகா தெரிவித்தார்.
05 பிப்ரவரி 2013
குணச்சித்திர நடிகை பானுமதி மரணம்!
குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த பழம்பெரும் நடிகை பானுமதி தன்னுடைய 67வயது வயதில் மரணம் அடைந்தார். காதல் ஜோதி என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பானுமதி. அவர் வியட்நாம் வீடு, திருநீலகண்டர், தில்லானா மோகனாம்பாள், கலாட்டா கல்யாணம் உள்பட 75க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவர் சின்னத்திரையில் மெகா தொடர்களில் நடித்து வந்தார். சென்னை தேனாம்பேட்டை போயஸ் ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வந்த அவரை மஞ்சள் காமாலை நோய் தாக்கியது. இதனால் அவர் கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவரது உடல் நிலை மோசமானது. உடனே அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 2.50 மணிக்கு காலமானார். அவருக்கு லட்சுமி என்ற மகள் உள்ளார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடக்கிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)