பக்கங்கள்

30 மே 2012

மாற்றம் செய்ததால் விலகிய கார்த்திகா!

இயக்குநர் சுந்தர் சி இயக்க விஷால் நடிக்கும் எம்ஜிஆர் (மத கஜ ராஜா) படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் நடிகை கார்த்திகா. இந்தப் படத்தின் கதையில் இயக்குநர் சுந்தர் சி செய்த மாறுதல் தனக்கு திருப்தியாக இல்லாததால் விலகுவதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "என்னிடம் இயக்குநர் சுந்தர் சொன்ன கதை ஒன்றாகவும், இப்போது அவர்கள் எடுக்கவிருப்பது வேறு கதை என்றும் தெரிய வந்தது. என்னை வெறும் கவர்ச்சிக்காக மட்டும்தான் பயன்படுத்தப் பார்க்கிறார்கள். மேலும் முதலில் சொன்ன கதையில் விஷால் மூன்று வேடங்களில் நடிப்பார் என்றார்கள். இப்போது அதிலும் மாறுதல். இரண்டு ஹீரோயின்கள் வேறு. எனவே எனக்கு பெரிய முக்கியத்துவம் இருக்காது. இந்தப் படத்தில் நான் விலகினாலும், சுந்தர் இயக்கும் ஏதாவது ஒரு படத்தில் நடிப்பேன் என நம்புகிறேன்," என்றார். ஏற்கெனவே இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் விலகிக் கொண்டார் ஹன்சிகா. இப்போது சரத்குமார் மகள் வரலட்சுமி இந்தப் படத்தின் நாயகியாக நடிக்கக் கூடும் என்கிறார்கள். இன்னும் வராத லட்சுமியாகவே இருக்கும் வரலட்சுமிக்கு இந்தப் படமாவது அமையுமா.. பார்க்கலாம்!

28 மே 2012

பெரிஷா கேட்கும் பிரணிதா!

நடித்தால் பெரிய நடிகர்களுடன் மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கிறாராம் பிரணீதா. முதல் படம் வெளியாகி ஓடி முடிப்பதற்குள்ளாகவே ஏகப்பட்ட பந்தாக்களைப் போட்டு சீன் காட்டும் நாயகிகளின் பட்டியல் இன்னும் கோடம்பாக்கத்தில் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆரம்பத்தில் சின்ன ஹீரோவுடன் ஜோடி சேருவார்கள். அந்தப் படம் எக்குத்தப்பாக ஓடி விட்டால், அடுத்து பெரிய ஹீரோக்களுடன் மட்டும்தான் ஜோடி போடுவேன், பெரிய பட்ஜெட் படமாக இருக்க வேண்டும். நல்ல கம்பெனியாக இருக்க வேண்டும் என்று பில்டப் செய்து பிலாக்காணம் பாடுவார்கள். இந்த நிலையில் சகுணி படம் மூ்லம் சினிமாவுக்கு வந்துள்ள பிரணீதாவும் அதேபோல ஏகப்பட்ட பில்டப், பிட்டப்புகளுடன் சினிமாக்காரர்களை மிரள வைக்கிறாராம். முதல் படத்தில் கார்த்தியுடன் ஜோடி போட்டு விட்ட இவர் இப்போது வெயிட்டாக பேச ஆரம்பித்துள்ளாராம். அதாவது நடித்தால் பெரிய ஹீரோக்களுடன் மட்டும்தான் நடிப்பாராம். சின்னச் சின்ன ஹீரோக்களையெல்லாம் சீண்டக்கூட மாட்டாராம். கழுகு படத்தில் ஹீரோவாக நடித்த இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் தம்பி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க இவரைக் கேட்டபோது மறுத்து விட்டாராம்.அப்போதுதான் இப்படிப் பதிலளித்தாராம். முதல் படமே இன்னும் வந்து போணியாகவில்லை, அதற்குள்ளாகவே இப்படி ஒரு சீனா என்று புலம்புகிறார்களாம் 'சின்ன நாயகர்களை கையில் வைத்துக் கொண்டு பெரிய நாயகிகளுக்காக காத்திருக்கும் இயக்குநர்கள் சங்கத்தைச்' சேர்ந்தவர்கள்...!

25 மே 2012

நடிகர் திலீப் மரணம்!

தமிழ் திரையுலகில் 1980களில் முன்னணி நடிகராக இருந்தவர் திலீப். கமலுடன் வறுமையின் நிறம் சிவப்பு, தூங்காதே தம்பி தூங்காதே படங்களில் நடித்தார். ரஜினியுடன் வள்ளி படத்தில் நடித்தார். விசு இயக்கிய பெரும்பான்மை படங்களில் திலீப் இருந்தார். சம்சாரம் அது மின்சாரம், பெண்மணி அவள் கண்மணி, மாப்பிள்ளை படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த திலீப் பின்னர் குடும்பத்தோடு மைசூருக்கு குடிபெயர்ந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரக கோளாறும் இருந்தது. உடனடியாக அவரை மைசூரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வந்தார்கள். 24.05.2012 அன்று உடல்நிலை மோசமானது. திடீர் மாரடைப்பும் ஏற்பட்டது. டாக்டர்கள் திலீப் உயிரை காப்பாற்ற தீவிரமாக போராடியும் பலனின்றி இன்று (25.05.2012) மரணம் அடைந்தார். அவருக்கு வயது 52. திலீப்புக்கு ஹேமா என்ற மனைவியும், பவ்யா (20) என்ற மகளும், மவுரியா (16) என்ற மகனும் உள்ளனர். திலீப் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக மைசூரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி சடங்கு மைசூரிலேயே நடக்கிறது.

23 மே 2012

மும்பையில் குடியேறும் ஸ்ருதி ஹாசன்!

Shruti Hassanநடிகை ஸ்ருதி ஹாசன் மும்பை பந்த்ரா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துள்ளார். அங்கு குடி போகப் போகிறாராம்.
நடிகை ஸ்ருதி ஹாசன் பாலிவுட் படமான லக்கில் தான் அறிமுகமானார். லக் அவருக்கு கை கொடுக்காவிட்டாலும் ஏழாம் அறிவு அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. இந்நிலையில் அவர் பவன் கல்யாணுடன் நடித்த தெலுங்கு படமான கப்பார் சிங் சக்கை போடு போடுகிறது. இந்நிலையில் ஸ்ருதிக்கு பாலிவுட்டில் இருந்து நல்ல வாய்ப்புகள் வருவதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் மும்பை பந்த்ரா பகுதியில் வாடகைக்கு வீடு பிடித்துள்ளார். அவரது தாய் சரிகா மற்றும் தங்கை அக்ஷரா தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் தான் இந்த வீடு உள்ளது. விரைவில் அவர் மும்பையில் குடியேறுகிறாராம்.
இது குறித்து அவர் கூறுகையில்,
மும்பையில் வீடு பார்த்திருக்கிறேன். மும்பைக்கும் எனக்கும் எப்பொழுதும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனது தாயும், தங்கையும் அங்கு தான் உள்ளனர். நான் கூட பந்த்ராவில் உள்ள புனித ஆண்ட்ரூஸ் கல்லூரியில் தான் படித்தேன். அதனால் மும்பை எனக்கு இரண்டாவது வீடு போன்றது. அதனால் நான் பந்த்ரா பெண்ணாகிவிட்டேன் என்றார்.

20 மே 2012

அழகி நானே"என்கிறார் ஸ்ரேயா!

Actress Shriya Saran Hot Picsஅழகில் தன்னை யாரும் மிஞ்ச முடியாது என்று நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கில் பிசியாக இருந்த நடிகை ஸ்ரேயா சரண் தற்போது வாய்ப்புகள் இன்றி உள்ளார். இந்நிலையி்ல அவருக்கு மாப்பிள்ளை தேடும் பணி நடந்து வருகிறது.
நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் என்பது மிகவும் முக்கியம். ஒரு காலத்தில் அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்ததால் நிறைய படங்களில் நடித்தேன். பெரிய, பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தேன். ஆனால் தற்போது எனக்கு நேரம் சாதகமாக இல்லை. இருப்பினும் அதிர்ஷ்டம் மீண்டும் வரும் என்று நம்புகிறேன். அழகில் என்னை மிஞ்ச யாராலும் முடியாது.
அண்மையில் சேலை உள்ளிட்ட பாரம்பரிய உடைகள் அணிந்து புகைப்படங்கள் எடுத்தேன். அந்த புகைப்படங்களைப் பார்த்து அடடா நான் இவ்வளவு அழகா என்று வியந்தேன். அந்த புகைப்படங்களைப் பார்த்த நிறைய பேர் இத்தனை அழகை எங்கே ஒளித்து வைத்திருந்தாய் என்று வியந்து கேட்டனர்.
கடந்த 2001ம் ஆண்டு இஷ்டம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானபோது எப்படி இருந்தேனோ தற்போதும் அப்படியே தான் உள்ளேன். அண்மையில் மும்பையில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டேன். மேடையில் நான் நடந்து வந்தபோது கிடைத்த கைதட்டல்களை என்னால் மறக்க முடியாது என்றார்.

16 மே 2012

குழந்தை நட்சத்திரம் பலி- இயக்குநர் உருக்கம்

Nepal Accident Victim Rasna Girl Movie Vetriselvan நேபாளத்தில் நடந்த விமான விபத்தில், 13 வயது குழந்தை நட்சத்திரம் தாருணி சச்தேவ் தன் தாயாருடன் பலியானார். அவர் ரஸ்னா விளம்பரத்திலும், அமிதாப்புடன் பா என்ற இந்திப் படத்திலும் நடித்துப் புகழ் பெற்றவர்.
அந்த குழந்தை நட்சத்திரம் வெற்றிச்செல்வன் என்ற தமிழ் படத்தில் நடித்து வந்தார்.
நேபாளத்தில் பக்தி சுற்றுலா சென்ற 21 பேர் பயணம் செய்த விமானம் மலையில் மோதி, விழுந்து நொறுங்கியது. அதில், 4 தமிழர்கள் உள்பட 15 பேர் பலியானார்கள். 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
பலியானவர்களில், 13 வயது குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவும் ஒருவர்.
ரஸ்னா விளம்பரம், பா இந்திப் படம் தவிர, 'வெள்ளி நட்சத்திரம்', சத்யம் போன்ற மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகர் ஷாருக்கானின் குரோர்பதி வினாடி வினா டி.வி. நிகழ்ச்சியிலும் தருணி பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படம் 'வெற்றிச் செல்வன்'
அதைத் தொடர்ந்து, `வெற்றிச் செல்வன்' என்ற தமிழ் படத்தில் கதாநாயகி ராதிகா ஆப்தேயின் தங்கையாக நடிக்க, தருணி சச்தேவ் ஒப்பந்தமானார். இந்த படத்தை ருத்ரன் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. தருணி சச்தேவ் 3 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார்.
இதுபற்றி படத்தின் இயக்குநர் ருத்ரன் கூறுகையில், "தருணி சச்தேவ், சிறிய குழந்தை நட்சத்திரமாக இருந்தபோதே எனக்கு தெரியும். என்னுடைய விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார். அதை வைத்துதான் 'வெற்றிச்செல்வன்' படத்தில், கதாநாயகிக்கு தங்கையாக அவரை ஒப்பந்தம் செய்தேன். மிக திறமையான குழந்தை நட்சத்திரம் அவர். எதிர்காலத்தில் அவர் மிகப்பெரிய நடிகையாக வருவார் என்று எதிர்பார்த்தேன்.
கோடை விடுமுறையை கழிப்பதற்காக தருணி சச்தேவ் தனது தாயாருடன் நேபாளம் போவதாக, என்னிடம் சொல்லி விட்டுத்தான் சென்றார். அவர் சம்பந்தப்பட்ட அடுத்த கட்ட படப்பிடிப்பு வருகிற 25-ந் தேதி முதல் ஊட்டியில் நடக்கவிருக்கிறது. அதற்குள் திரும்பி வந்து விடுகிறேன் என்று சொன்னார்.
ஆனால், தருணி சச்தேவ் தன் தாயாருடன் திரும்பி வர முடியாத இடத்துக்கு போய்விட்டார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படத்தில் இருந்து நீக்கப்போவதில்லை. அப்படியே பயன்படுத்தப் போகிறேன்,'' என்றார்.

அமிதாப்பச்சன் அதிர்ச்சி
நடிகை தருணி சச்தேவின் திடீர் மரணம் அமிதாப்பச்சனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. "கடவுளே இந்த துயரமான செய்தி உண்மையாக இருக்கக்கூடாது,'' என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
அவருடைய மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனும் தருணியின் மறைவுக்கு அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்து இருக்கிறார்.

காட்மாண்டில் உடல்கள்
விபத்தில் பலியான 15 பேரில், 13 இந்தியர்களின் உடல் விமானம் மூலம் நேபாள தலைநகர் காட்மாண்டு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள மணிபால் மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளன.
பிரேத பரிசோதனைக்குப்பின் இந்திய தூதரகத்தின் மேற்பார்வையில் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

15 மே 2012

விஸ்வநாதன் மனைவி மரணம்!

Ms Vishwananthan S Wife Janaki Passes Away பிரபல சினிமா இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி ஜானகி அம்மாள், சென்னையில் நேற்று மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.
ஜானகி அம்மாள் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார்.கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை 4 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.
அவருடைய உடல் தகனம் பெசன்ட்நகரில் உள்ள மின்சார மயானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
ஜானகி அம்மாள் உடலுக்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மரணம் அடைந்த ஜானகி அம்மாளுக்கு, கோபி, முரளி, பிரகாஷ், அரிதாஸ் ஆகிய 4 மகன்களும், லதா, மது, சாந்தி ஆகிய 3 மகள்களும் இருக்கிறார்கள்.

14 மே 2012

ஜெயம் ரவிக்காக அமலா விலகல்!

Amala Paul at South Scopeஒரு படத்தில் ஒப்பந்தமாகி விலகுவதில் குறுகிய காலத்தில் பெயர் பெற்ற நடிகையாகிவிட்டார் அமலா பால்.
தமிழ், தெலுங்கில் பிஸியாக உள்ள அவர், லேட்டஸ்டாக விலகியுள்ள படம் ரவி தேஜாவின் 'சார் ஒஸ்தாரா'!
காரணம், அதை விட பெரிய படமான, அதுவும் தமிழ் - தெலுங்கில் தயாராகும் ஜெயம் ரவியின் பூலோகம். ராம் சரண் படத்துக்கு வேறு தொடர்ச்சியாக கால்ஷீட் தர வேண்டியிருந்ததால், ரவி தேஜா படத்தை வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அமலா.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ராம் சரண் பட ஷூட்டிங் லண்டனில் நடக்கிறது. அதற்கு 20 நாட்கள். அதற்கடுத்து ஜெயம் ரவி படம். இதற்கு தொடர்ச்சியாக தேதிகள் கொடுத்தாக வேண்டும். அதான் ரவிதேஜா படத்தை கைவிட வேண்டியதாகிவிட்டது. வேறு பிரச்சினை இல்லை," என்றார்.
ஏற்கெனவே தனுஷின் 3 உள்பட மூன்று படங்களில் முதலில் நடிக்க ஒப்புக் கொண்டு பின் விலகிக் கொண்டது நினைவிருக்கலாம்.

11 மே 2012

சினேகா,பிரசன்னா திருமணம் இன்று விமரிசையாக சென்னையில் நடந்தது!

Sneha, Prasanna நடிகை சினேகாவின் திருமணம் இன்று விமரிசையாக சென்னையில் நடந்தது. அவருக்கு சினேகா வீட்டு முறைப்படியும், தன் பிராமண வீட்டு முறைப்படியும் இரு முறை தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார் நடிகர் பிரசன்னா.
நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தனர்.
நேற்று இருவருக்கும் நிச்சயதார்த்தமும், தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா பேலஸ் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடந்தது.
இன்று காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் திருமணம் என்று நேரம் குறிக்கப்பட்டிருந்தது. இருவரும் கலப்பு திருமணம் என்பதால், இருவர் சமூக வழக்கப்படியும் சடங்குகள் நடந்தன.Sneha, Prasanna
முதலில் சினேகா சார்ந்த நாயுடு வகுப்பு முறைப்படி திருமணச் சடங்குகள் நடந்தன. அப்போது மெரூன் நிற பட்டுப் புடவை அணிந்திருந்தார் சினேகா. மணமகன் பிரசன்னா சட்டை அணியாமல், சினேகாவுக்கு தாலிகட்டி மனைவியாக்கிக் கொண்டார். அடுத்து, பிரசன்னாவின் பிராமண வழக்கப்படி திருமணம் நடந்தது. இதற்கென தனி முகூர்த்தப் புடவை எடுத்திருந்தனர். மாம்பழ நிறத்தில் பட்டுப்புடவை அணிந்து வந்த சினேகாவை அவர் தந்தை ராஜாராமன் மடியில் வைத்து தாரைவார்க்க, மீண்டும் தாலி கட்டினார் பிரசன்னா.
திருமணத்துக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். சிவகுமார் குடும்பம், விஜயகுமார் குடும்பம், இயக்குநர்கள் ஹரி, சேரன், பி வாசு, நாசர், நடிகைகள் கே ஆர் விஜயா உள்ளிட்டோர் வந்திருந்து வாழ்த்தினர்.
ஆனால் தமிழ் சினிமாவின் முதல்நிலை நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட நடிகர் நடிகைகள் திருமணத்துக்கு வரவில்லை.

06 மே 2012

பரதேசியில் பூஜா இல்லை!

பாலாவின் பரதேசி படத்தில் இருந்து நடிகை பூஜா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அரவாண் புகழ் தன்ஷிகா நடிக்கிறார்.
இயக்குனர் பாலா இயக்கும் பரதேசி படத்தில் பூஜா தான் நாயகி என்று அறிவிப்பு வெளியானது. நீண்ட நாட்களாக கோலிவுட்டில் காணாமல் போன பூஜா இதன் மூலம் மறுபிரவேசம் செய்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. இந்நிலையில் அந்த படத்தில் இருந்து பூஜா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் அரவாண் புகழ் தன்ஷிகா நடிக்கிறாராம்.
படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பூஜா கூறுகையில்,
நான் வேறொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். அந்த பட ஷூட்டிங்கிற்காக ஆஸ்திரேலியா செல்கிறேன். கால்ஷீட் பிரச்சனையால் தான் பாலா படத்தில் நடிக்க முடியவில்லை என்றார்.
பாலாவின் நான் கடவுள் படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வாங்கினார் பூஜா. அதன் பிறகு கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த துரோகி படத்தில் கௌரவ வேடத்தில் வந்த பூஜாவை அடுத்து பார்க்கவே முடியவில்லை. இனி எப்பொழுது தான் கோலிவுட்டுக்கு வருவாரோ தெரியவில்லை.

04 மே 2012

ரஜினி, தீபிகா படுகோனே பரத நாட்டியம்!

Deepika Padukoneகோச்சடையான் படத்துக்காக சூப்பர் ஸ்டார் ரஜினியும் தீபிகாவும் பரத நாட்டியம் ஆடியுள்ளனர். இந்தக் காட்சி கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளது.
கோச்சடையான் படம், சரித்திரக் கதை. இதில் ஒரு பரதநாட்டியப் பாடல் இடம்பெற்றுள்ளது. சிவபெருமானின் ருத்ர தாண்டவத்துக்கு நிகரான ஒரு பாடல் இந்தப் படத்தில் இடம் பெறுகிறது.
இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கியுள்ள இந்த பாடலுக்கான படப்பிடிப்பு கேரளாவில் நடந்தது. இதில் ரஜினி, தீபிகா படுகோனே இருவரும் பரத நாட்டியம் ஆடினர்.
இந்தி நடன இயக்குனர் சரோஜ்கான் இதற்கான நடனத்தை அமைத்துள்ளார். ரஜினி, தீபிகா இருவருமே சில தினங்கள் ஒத்திகை செய்து பார்த்த பிறகே இந்த நடனக் காட்சியில் நடித்துள்ளனர்.
இது குறித்து டான்ஸ் மாஸ்டர் சரோஜ்கான் கூறுகையில், "தமிழில் நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பணி புரிகிறேன். அதுவும் ரஜினி படத்தில் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. ரஜினி, தீபிகா படுகோனே இருவரும் இந்த நடனத்துக்காக கடுமையாக உழைத்தனர். குறிப்பாக ரஜினி  இதற்கா தீவிரமாக ரிகர்சல் செய்து ஆடினார்," என்றார்.

01 மே 2012

சேலை கட்டினா பார்க்க மாட்டாங்க!

Rakhi Sawantஅடேங்கப்பா, சில்க் ஸ்மிதாவுக்கு வந்த கிராக்கியைப் பாருங்கள். உயிருடன் இருந்தபோதும் அவருக்கு கிராக்கி, இப்போது மறைந்து இத்தனை ஆண்டுகளாகியும் கூட கிராக்கி சற்றும் குறையவில்லை. நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு சில்க் ஸ்மிதாவின் கதையைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியில் வெளியான டர்ட்டி பிக்சர்ஸ் படம் ஓடிய ஓட்டம்தான் இத்தனைக்கும் காரணம். தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப் படத்தை ரீமேக் செய்யவுள்ள நிலையில் அடுத்து பெங்காலியிலும் டர்ட்டி பிக்சர்ஸை கொண்டு போகிறார்களாம்.
பெங்காலியில் உருவாகும் இந்தப் படத்தில் நாயகியாக அதாவது சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்கப் போவது கவர்ச்சி களேபர அழகி ராக்கி சாவந்த். சதாப்தி ராய் படத்தை இயக்குகிறார். தபஸ் பால் தயாரிக்கிறார்.
இந்தப் படம் குறித்து ராக்கி கூறுகையில், எங்க சமூகத்துப் பெண்களின் (அதாவது குத்துப் பாட்டுகளுக்கு ஆடும் அழகிகளாம்) பிரதிநிதியாக டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் வித்யா பாலன் நடித்திருந்தார். ஆனால் ஒரிஜினல் குத்தாட்ட அழகியே ஹீரோயினாக நடித்தால்தான் அது பொருத்தமாக அமையும். எனவே அந்த வகையில் வித்யாபாலனை நான் நிச்சயம் பீட் செய்வேன், கலக்கலாக நடிப்பேன் என்பதை இப்போதே சொல்லிக் கொள்கிறேன்.
போல்டான காட்சிகளிலும், படுக்கை அறைக் காட்சிகளிலும் நடிக்க ஆவலோடு காததுள்ளேன். அதற்கெல்லாம் நான் தயங்கவே மாட்டேன். அட நீண்ட நேரம் முத்தம் கொடுத்து நடிக்க வேண்டும் என்றாலும் கூட எனக்குக் கவலை இல்லை. காட்சி படு சூப்பராக வரும், பாருங்கள்.
டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் வித்யா பாலன் பெரிதாக எதையும் செய்து விடவில்லை, காட்டி விடவில்லை. ஆனால் சூடான காட்சிகளில் நான் சிறப்பாக செய்வதைப் பார்த்து ரசிகர்கள் அசந்து போகப் போகிறார்கள். வித்யா பாலனை விட சற்றே தூக்கலாக எனது கவர்ச்சி இதில் இருக்கும். அதைப் பார்த்து வித்யாவே கூட அசந்து போவார் பாருங்கள்.
சினிமாவில் சேலையைக் கட்டினால் அதை கழற்றிப் போட்டாக வேண்டும். அப்போதுதான் அந்தக் காட்சிக்கே தனி களை வரும். நடிகை சேலையில் வந்தால் அது பேசப்படாது, அந்த நடிகை, சேலையைக் கழற்றிப் போட்டால்தான் பேசுவார்கள். அதை நான் செய்வேன் என்று பேசிக் கொண்டே போகிறார் ராக்கி.
சென்சார் அதிகாரிங்களே எப்படிப்பா சமாளிக்கப் போறீங்க இந்த வங்கத்து சில்க்கை...!?!