பக்கங்கள்

29 ஏப்ரல் 2012

நான் ரெடி என்கிறார் நிகிதா!

Nikita Thukralகன்னட டர்ட்டி பிக்சர்ஸில் நடிக்க மறுத்து விட்ட கன்னட நடிகை நிகிதா துக்ரால், தற்போது தமிழில் எடுக்குப்படும் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடிக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்தியில் வித்யா பாலனின் எடுப்பான கவர்ச்சியால் பெரும் வெற்றி பெற்ற தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்டதாகும். இப்படத்தை தற்போது தமிழிலும், கன்னடத்திலும் ரீமேக் செய்யவுள்ளனர்.
தமிழில் அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படுகிறது. கன்னடத்தில் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் நடிக்கவுள்ளார்.
முதலில் இந்த வேடத்தில் நடிக்க பூஜா காந்தி மற்றும் நிகிதாவை அணுகினர். ஆனால் இருவரும் நடிக்க மறுத்து விட்டனர். இதுகுறித்து நிகிதா கூறுகையில், இது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறாக இருக்குமானால் நிச்சயம் நான் ஒப்புக் கொண்டிருப்பேன். ஆனால் இது ஒரு விபச்சாரியின் கதையாக உள்ளது. இதில் நான் நடித்தால் அது சில்க்கையும், கன்னட மக்களையும் அவமானப்படுத்தும் செயலாகும் என்பதால் நடிக்கவில்லை என்று கூறினார்.
இந்த நிலையில் தற்போது தமிழ் டர்ட்டி பிக்சர்ஸில் நடிக்க நான் தயார் என்று திடீரென கூறியுள்ளார் நிகிதா. சில்க் ஸ்மிதா தமிழில்தான் பிரபலமானார். தமிழ் நடிகையாகவே இருந்தவர் அவர். எனவே தமிழில் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நான் நடிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் நிகிதா.
ஆனால், கன்னடத்தில் படு கவர்ச்சியாக இப்படத்தை எடுக்கவிருப்பதால்தான் நிகிதா நடிக்க மறுத்து விட்டார் என்றும், தமிழில் அந்த அளவுக்கு கவர்ச்சி இருக்காது என்பதால்தான் தமிழில் நடிக்க விரும்புகிறார் என்றும் ஒரு டாக் உலவுகிறது.

24 ஏப்ரல் 2012

ஆசை ஆசையாய் கதை சொல்லலாம்..!

Nisha Aggarwalகாஜல் அகர்வால் காலம் போய் விட்டது. அடுத்து தங்கச்சி நிஷா அகர்வால் டர்ன். இஷ்டம் படத்தில் விமலுடன் ஜோடி போட்டு நடித்துள்ள நிஷா, தமிழ் சினிமாவில் நங்கூரம் பாய்ச்சி தனது இடத்தை பக்கவாக போட்டு விட துடிப்போடு இருக்கிறாராம்.

காஜல் அகர்வாலுக்கே தற்போது தமிழில் பெரிய அளவில் மார்க்கெட் இல்லைதான். இருந்தாலும் அவரது தங்கச்சியான நிஷா அகர்வாலையும் களத்தில் இறக்கி விட்டுள்ளார். தமிழிலும், தெலுங்கிலுமாக தற்போது நடித்து வரும் காஜல், தங்கச்சிக்கும் அவ்வப்போது ஏகப்பட்ட அட்வைஸ்களை அள்ளிக் கொடுத்து ஊக்கமளித்து வருகிறார்.
இருப்பினும் கைவசம் ஓரிரு படங்களே நிஷா வசம் இருக்கிறதாம். இதனால் என்ன செய்யலாம் என்று யோசித்துப் பார்த்துள்ளனர் அக்காவும், தங்கச்சியும். அப்போதுதான் நம்மைத் தேடி கதை சொல்ல வருவோருடன் அமர்ந்து 'டிஸ்கஸ் செய்து கதையை முடிவு செய்ய சரியான இடம்' இல்லை என்று அவர்களுக்குப் புரிந்ததாம்.
இதையடுத்து தற்போது கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு பங்களாவை - ஸ்விம்மிங் பூல் உள்ளிட்ட சகல வசதிகளுடன் கூடிய பங்களவாம் அது, வாடகை எவ்வளவு என்று தெரியவில்லை - வாடகைக்குப் பிடித்துள்ளாராம் நிஷா. இப்போது கதை சொல்ல வரும் இயக்குநர்களுக்கும், காசு போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் வசதியாக இந்த பங்களா அமைந்துள்ளதாம்.
இங்கிருந்தபடிதான் இனி இயங்கப் போகிறாராம் நிஷா. எனவே இனிமேல் நிஷாவிடம் கதை சொல்ல விரும்புவோருக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. பங்களாவுக்குப் போய் விட்டால் போதும் ஆற அமர கதை சொல்லி படத்திற்குப் 'புக்' செய்து விட்டு வர முடியும்.

20 ஏப்ரல் 2012

பூலோகத்தில் நயன்!

ஜெயம் ரவியின் அடுத்த படமான பூலோகத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

பிரபுதேவாவைப் பிரிந்த பிறகு நயன்தாராவுக்கு வாய்ப்புகள் கூரையைப் பிய்த்துக் கொண்டு வருகின்றன. இந்நிலையில் புதுமுக இயக்குனரின் பூலோகம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க நயன்தாராவைக் கேட்டார்களாம். கதையைக் கேட்ட அவர் எனக்கு ஸ்டோரி ரொம்ப பிடிச்சிருக்கு என்று கூறியுள்ளார்.
இதையடுத்து இந்த படத்தில் நயனை நடிக்க வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஜெயம் ரவி குத்துச் சண்டை வீரராக நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் மே மாதம் துவங்குகிறது. இதில் நயன் தான் ஹீரோயினா என்பது விரைவில் தெரிய வரும்.
அடடா அத்தனை இயக்குனர்களும் நயன் திரும்ப நடிக்க வரமாட்டாரா என்று காத்திருந்தார்கள் போலும். நயன் ரிட்டர்ன் ஆனவுடனேயே அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க போட்டி போடுகிறார்களே.
எதுவாக இருந்தால் என்ன, நயன் காட்டில் வாய்ப்பு மழை 'சோ'வென்று பெய்கிறது.