பக்கங்கள்

24 பிப்ரவரி 2012

சினிமா பின்னணி இல்லாத தீபிகா படுகோன்

ரேஸ் 2 படத்தில் மீண்டும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் தீபிகா. சினிமாவில் எந்தப் பின்னணியும் இல்லாத தன்னால் யாரையும் எதிர்த்துக் கொள்ள முடியாது என்பதால் சுமூகமாக பிரச்சினையை முடித்துக் கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் கோச்சடையானிலிருந்து விலகக் கூடும் என்று வரும் செய்திகளையும் அவர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், "கோச்சடையான்' படத்தில் நடிப்பதற்காக நான் 'ரேஸ்-2' படத்திலிருந்து விலக வில்லை.
நான் பிஸியாக இருந்த காலகட்டத்தில் 'ரேஸ்-2' நடிக்க தேதிகள் கொடுத்திருந்தேன். ஆனால் அவர்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. படப்பிடிப்பு நடத்தாமல் ஒன்றரை ஆண்டுகள் இழுத்தடித்தனர்.
நானும் வேறு சில படங்களுக்கு தேதி கொடுத்ததால் நெருக்கடி ஏற்பட்டது. ரஜினி சார் படமும் வந்ததால் நான் ஒரு முடிவு எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.
ஆனால் ‘ரேஸ்-2′ படத்தின் சார்பாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்கள். இதற்கு நான் சங்கத்திற்கு நேரில் போய் விளக்கம் கூறிவிட்டேன். யோசித்துப் பார்த்தேன். எந்த பிரச்சினையும் வேண்டாம் என்பதால், மீண்டும் ரேஸ்-ல் நடிக்க சம்மதித்துவிட்டேன். எந்தப் பின்னணியும் இல்லாத பெண் நான்... வேறு வழியில்லை. அதற்காக 'கோச்சடையான்' படத்தில் நான் நடிப்பதில் எந்த மாற்றமும் இல்லை," என்றார்.

21 பிப்ரவரி 2012

இரும்பு வீராங்கனை எஸ்.என்.லட்சுமி!

பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி காலமானார். அவருக்கு வயது 80. திரையுலகின் நடிப்பு தாகத்தால் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர்,நேற்று முன்தினம்(19.02.2012) நள்ளிரவில் காலமானார்.
இவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இவரது சொந்த கிராமத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் வந்திருந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் சங்கம் சார்பில் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர், விஜயகுமார் உள்பட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
ஜெமினி பட நிறுவனம் தயாரித்த சந்திரலேகா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை எஸ்.என்.லட்சுமி. தொடர்ந்து எம்ஜிஆர் நடித்த பாக்தாத் திருடன், மாட்டுக்கார வேலன், விவசாயி, சங்கே முழங்கு, தாய்க்கு தலைமகன், இதய வீணை, சிவாஜி நடித்த பாபு, தேவன் மகன், ரஜினி நடித்த படையப்பா, கமல் நடித்த மைக்கேல் மதன காமராஜன், மகாநதி மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
பாக்தாத் திருடன் படத்தில் படைத் தளபதி வேடத்தில் நடித்தவர் டூப் போடாமல் நிஜப் புலியுடன் சண்டையிட்டு எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் இரும்பு வீராங்கனை என்ற பாராட்டும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏறத்தாழ 6 ஆயிரம் நாடகங்களுக்கு மேல் குறிப்பாக கலைவாணர் என்எஸ்கே நாடக மன்றத்திலும், கே.பாலச்சந்தர் நடத்திய நாடகத்திலும் நடித்து புகழ் பெற்ற எஸ்என் லட்சுமி, கார் ஓட்டுவதிலும் வல்லவராக இருந்தவர்.

18 பிப்ரவரி 2012

ஹன்ஸிகாவை உரசிப்பார்த்த ரசிகர்கள்!

கோவையில் ஆயிரக்கணக்கான ரசிகர்களிடம் சிக்கிக் கொண்டார் நடிகை ஹன்ஸிகா. அவரை தொட்டுப்பார்க்க ரசிகர்கள் பலர் முண்டியடித்ததால் கைகளிலும், இடுப்பிலும் லேசான சிராய்ப்பு ஏற்பட்டு அவதிக்குள்ளானார்.

நேற்று கோவை நகருக்கு வந்திருந்தார் ஹன்ஸிகா. அப்போது அவரைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டனர். அவரை மிக அருகில் பார்க்கவும், தொட்டுப் பார்க்கவும் முண்டியடித்தனர்.
இதனால் திணறிப் போனார் ஹன்ஸிகா. பலர் அவரைக் கிள்ளினர். வேகமாக அவரைப் பிடித்து இழுத்ததால் அவர் உடலில் பல இடங்களில் சிராய்ப்பு ஏற்பட்டது.இதனால் அலறித் துடித்த ஹன்ஸிகாவை பக்கத்திலிருந்த போலீசார் வந்து மீட்டனர்.இதுகுறித்து ஹன்ஸிகா கூறுகையில், "ரசிகர்கள் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டனர். நல்ல வேளை போலீசார் வந்து மீட்டனர். நிச்சயம் இனி செக்யூரிட்டியை பலப்படுத்தினால்தான் வெளியில் செல்ல முடியும்," என்றார்.ஏற்கெனவே சென்னையில் இதே அனுபவத்துக்குள்ளானார் ஹன்ஸிகா என்பது குறிப்பிடத்தக்கது.

17 பிப்ரவரி 2012

பூஜா காந்தியும் புது வீடும்.

மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான குமாரசாமி எனக்கு ஒரு வீடும் வாங்கிக் கொடுக்கவில்லை என்று கன்னட நடிகை பூஜா காந்தி தெரிவி்ததுள்ளார்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா காந்தி அண்மையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியின் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு மாவட்டம், மாவட்டமாகச் சென்று பொதுக் கூட்டங்களில் பேசினார். அப்போது அவர் குமாரண்ணா மூலம் தனக்கு புதிய வீடு கிடைத்துள்ளது என்று கூட்டந்தோறும் கூறி வந்தார். பூஜா கட்சித் தலைவர் குமாரசாமியை குமாரண்ணா என்று தான் அழைப்பார்.
அடடா, மறுபடியும் குமாரசாமிக்கு சிக்கல் வந்து விட்டதே என்று நினைத்த பத்திரிகைக்கார்கள் எங்கே அந்த வீடு என்று வலை வீசி லென்ஸ் கண்களோடு தேட ஆரம்பித்தனர். பாஜகவினருக்கும் கூட அந்தப் புது வீடு குறித்து 'ஆர்வம்' பிறந்தது. மக்களும் கூட மறுபடியுமா என்று குமாரசாமி குறித்த 'ரீவைண்ட்' சிந்தனைக்குப் போக ஆரம்பித்தனர்.
இந்த குழப்பமெல்லாம் பூஜா காதுக்கும் போனது. பதறிப் போன அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதாகப்பட்டது என்னவென்றால்,
ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி எனக்கு புதிய வீடு வாங்கிக் கொடுத்துள்ளதாக பத்திரிக்கையில் வெளியான செய்தியைப் பார்த்தேன். நான் வடநாட்டுப் பெண். எனக்கு அவ்வளவாக கன்னடம் வராது. ஜனதா தளம் என்னும் பெரிய குடும்பத்தில் இணைந்ததைத் தான் நான் அப்படி கூறினேன்.
அதாவது புது குடும்பம் கிடைத்திருக்கு என்பதற்குப் பதிலாக புது வீடு கிடைத்துள்ளது என்று பாஷை தெரியாமல் மாற்றிக் கூறிவிட்டேன். அதனாலேயே இத்தனை குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எங்கள் குடும்பத்திற்கென்று சொந்தமாக வீடு உள்ளது. அந்த வீட்டில் தான் நான் எனது பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் வசித்து வருகிறேன் என்றார்.
(அப்பாடா, குமாரசாமி தப்பித்தாரப்பா...!)

14 பிப்ரவரி 2012

அனன்யாவை ஏமாற்றிய தொழிலதிபர்!

நடிகை அனன்யாவுக்கு நிச்சயம் செய்துள்ள மாப்பிள்ளை ஆஞ்சநேயன் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதையடு்தது அனன்யாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். கேரளத் திரையுலகில் இந்த திடீர் திருப்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடோடிகள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை அனன்யாவுக்கும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடந்தது.
ஆனால் இந்த திருமணம் தற்போது பெரும் பிரளயத்தை சந்தித்துள்ளது. ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவராம். தனது முதல் திருமணத்தை மறைத்து விட்டார். இதையடுத்து அனன்யாவின் குடும்பம் பேரதிர்ச்சி அடைந்துள்ளது.
இதையடுத்து தனது மகளை ஏமாற்றிய ஆஞ்சநேயன் மீது அனன்யாவின் தந்தை பெரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனது மகள் அனன்யாவுக்கும், ஆஞ்சநேயனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற விவரம் இப்போது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. முதல் திருமணத்தை எங்களிடம் மறைத்து மோசடியாக அனன்யாவை 2வது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் ஆஞ்சநேயன் வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரித்தபோது தனக்கு ஏற்கனவே திருமணமானதை அவர் ஒப்புக் கொண்டார். மேலும் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
திருமணம் செய்து கொண்டால் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத் தான் மணப்பேன் என்றிருந்த அனன்யா மனமுடைந்து நொறுங்கிப் போயுள்ளாராம்.

10 பிப்ரவரி 2012

கோச்சடையானில் சினேகா இல்லை!

கால்ஷீட் பிரச்சினை காரணமாக, ரஜினியின் கோச்சடையான் படத்திலிருந்து நடிகை சினேகா நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் ருக்மணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'கோச்சடையான்' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்) தொடங்குகிறது. இந்த படத்தில், ரஜினிகாந்த் ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார்.
முக்கிய வேடங்களில் சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஆதி, நாசர், ஷோபனா ஆகியோரும் நடிக்கிறார்கள். ரஜினியின் தங்கை வேடத்தில் நடிக்க சினேகா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.
அவர் மே மாதத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த மாதம் அவருக்கும் பிரசன்னாவுடன் திருமணம் நடக்கும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே சினேகாவும் பிரசன்னாவும் மாறி மாறி இதனை பத்திரிகைப் பேட்டிகளில் கூறி வருகின்றனர்.
எனவே அந்த நேரத்தில் அவர் கோச்சடையானில் நடிக்க முடியாது என்பது தெரிந்து, அவருக்குப் பதில் ருக்மணியை ரஜினியின் தங்கை வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ருக்மணி சிறந்த நடனக் கலைஞர். பாரதிராஜா இயக்கத்தில் `பொம்மலாட்டம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். முக்கிய கலை நிகழ்ச்சிகளில் இவரது நடனம்தான் இப்போதெல்லாம் ஹைலைட். கோச்சடையானுக்காக நேற்று நடந்த 'போட்டோ சூட்'டிலும் (புகைப்பட ஷூட்டிங்) கலந்து கொண்டார்.
ரஜினியின் ஜோடியாக கத்ரீனா கைஃப் நடிக்கவிருந்து, திடீரென கடைசி நேரத்தில் அவருக்குப் பதில் தீபிகா படுகோன் ஒப்பந்தமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

05 பிப்ரவரி 2012

வாடா செல்லம் நாயகி கைதானார்!

வாடா செல்லம் உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்தவரான நடிகை கரோலின் மரியத், புனேவில் விபச்சாரம் செய்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புனேவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலி்ல வைத்து அவரை கையும் களவுமாக போலீஸார் பிடித்தனர்.
22 வயதான கரோலின் மரியத், 2 தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளாராம். இதுதவிர சில நகைக் கடை, துணிக்கடை விளம்பரங்களிலும் இவர் நடித்துள்ளாராம்.
இவருடன் ஒரு இரவை செலவிட ரூ. 3 லட்சம் வரை பணம் கொடுக்க வேண்டுமாம். இதுகுறித்து மூத்த இன்ஸ்பெக்டர் பானுபிரதாப் பார்கே கூறுகையில், வலை விரித்து இந்தப் பெண்ணை நாங்கள் பிடித்துள்ளோம். சென்னையில் இவர் பிரபலமானவர் என்று கூறப்படுகிறது. சில படங்களில் இவர் ஹீரோயினாக நடித்துள்ளாராம்.
மரியத்துடன் அவரது மேலாளர் ராஜ்குமார் என்பவரும் சிக்கியுள்ளார். மரியத் மீது விமான் நகர் போலீஸில் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது என்றார்.
வாடா செல்லம் என்ற தமிழ்ப் படத்தில் கரோலின் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் மகேந்திரன் நாயகனாக நடித்துள்ளார்.

02 பிப்ரவரி 2012

இரசிகர்களால் கசங்கிய அமலா!

காதலில் சொதப்புவது எப்படி படத்தின் தெலுங்குப் பதிப்பு பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அமலா பாலை ரசிகர்கள் கையைப் பிடித்து இழுத்து, இடுப்பைக் கிள்ளியதில் உடலில் நகக்கீறல்கள் ஏற்பட்டன.
இந்தப் படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிக்கிறார் அமலா. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் தயாராகிறது. சென்னையில் கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அவ்விழாவுக்கு அமலாபால் வரவில்லை.
பட விழாவை திட்டமிட்டு புறக்கணித்து விட்டதாக விமர்சனங்கள் கிளம்பின. அன்றைய தினம் பரீட்சை இருப்பதாக அவர் பொய் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஹைதராபாத்தில் நடந்த இப்படத்தின் தெலுங்கு பாடல் வெளியீட்டு விழாவில் அமலாபால் பங்கேற்றார்.
தெலுங்கில் ஏற்கெனவே அறிமுகமானவர் அமலா. மேலும் அவரது தமிழ்ப் படங்களும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீசாகியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் அவர் பிரபலம்.
எனவே அமலா பாலை காணபடவிழா நடந்த அரங்கம் எதிரில் தெலுங்கு ரசிகர்கள் குவிந்தனர். விழா முடிந்து அமலாபால் வெளியே வந்த போது ஆட்டோ கிராப் வாங்குவது போல் சுற்றி வளைத்தனர்.
இதனால் கூட்டத்தில் அவர் சிக்கிக் கொண்டார். சிலர் அமலாபாலின் கையை பிடித்து இழுத்தனர். இடுப்பில் கை போட்டனர். இதனால் அவர் உடம்பில் நகக்கீறல்கள் பட்டு காயமும் ஏற்பட்டது. சில நிமிடங்களுக்குப் பிறகு அங்கு நின்ற பாதுகாவலர்கள் விரைந்து சென்று ரசிகர்கள் பிடியில் இருந்து அமலாபாலை மீட்டு போலீஸ் வண்டியில் அனுப்பி வைத்தனர்!