பக்கங்கள்

20 ஜூலை 2010

ஓய்வுக்காக இமயமலை செல்கிறார் ரஜனி.


எந்திரன் ரிலீசுக்குப் பிறகு 6 மாத கால ஓய்வை எடுக்க ரஜினி விரும்புகிறார். ரஜினியின் எந்திரன் படம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) இறுதியில் ரிலீசாகிறது. ஷங்கர் இயக்குவதாலும், ஐஸ்வர்யாராய் நாயகியாக நடித்துள்ளதாலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு வருடங்களாக இதில் நடித்ததால் ரஜினி நீண்ட ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். வழக்கமாக தனது படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் சில நாட்கள் இமயமலை சென்று ஓய்வெடுப்பது வழக்கம். இந்த முறை எந்திரன் வெளியானதும் 6 மாதம் இமயமலையில் ஓய்வெடுக்கச் செல்கிறார். அவரது பயணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இமயமலை பயணத்தின் போது ரிஷிகளை சந்திக்கிறார். ஆசிரமங்களில் தங்கி தியானத்திலும் ஈடுபடுகிறார்.
ரஜினியின் அடுத்த படம் பற்றி பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன. பாட்ஷா பாகம்-2 படத்தை தயாரிக்க சத்யா மூவிஸ் நிறுவனம் விரும்புகிறது. இதில் ரஜினியை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவோர் பட்டியலில் ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிக்குமார், ஹரி ஆகிய மூவரின் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன. முருகதாஸ் 7-ம் அறிவு படத்தையும், ரவிக்குமார் மன்மதன் அம்பு படத்தையும் இயக்கும் பணியில் உள்ளனர். இப்படங்கள் முடிந்ததும் மூவரில் யார் என்பது முடிவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக