ஆர்யாவுடன் நயன்தாரா நடிக்கும் `பாஸ் என்ற பாஸ்கரன்' படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தவேளையில் நடிகை நயன்தாரா திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சாலிகிராமத்தில் உள்ள பாலுமகேந்திரா அரங்கில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்று ஆர்யா, நயன்தாரா இருவரும் ஜோடியாக நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. மதியம் 2 மணி அளவில் சூட்டிங்கில் நயன்தாரா நடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்த அவருக்கு மயக்கம் தெளிவிக்கும் முயற்சியில் படப்பிடிப்பு குழுவினர் ஈடுபட்டார்கள். உடனடியாக டாக்டரும் வரவழைக்கப்பட்டார். நயன்தாராவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர், அவர் காலையில் இருந்தே சாப்பிடாமல் இருந்தது தெரியவந்தது. மிகவும் சோர்வாகவும், பலவீனமாகவும் இருந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரை நேரத்துக்கு சாப்பிடும்படியும், சில நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளும்படியும், டாக்டர்கள் அறிவுரை கூறினார்கள். சூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா மயங்கி விழுந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. நயந்தாரா பிரபுதேவாவை திருமணம் செய்ததாக இணையத்தில் செய்திகள் வந்ததையடுத்து இப்போது படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நயந்தாரா கர்ப்பமாக இருக்கிறாரா என கோடம்பாக்க வட்டாரத்தில் கிசுகிசு கிளம்புகின்றதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக