பக்கங்கள்

28 ஜூலை 2010

தில்லாலங்கடி சிறப்பு பார்வை.


வழக்கம் போலவே தன்னுடைய 'ஈயடிச்சான் காப்பி' வேலையை ரொம்பவே சிறப்பா செய்துள்ளார் இயக்குநர் ராஜா. பணம் இருக்கிறவர்களிடம் கொள்ளையடித்து, இல்லாத ஏழைகளுக்கு கொடுக்கும் 'சிவாஜி' படத்தின் பிளாக் மணி மேட்டரை ஒட்டி வந்த தெலுங்கு படம் 'கிக்கு'. இப்படத்தை 'தில்லாலங்கடி'யாக தமிழில் ரீமேக் செய்துள்ளார்கள்.

எதுவும் ஈசியா கிடைத்துவிட்டால் அதில் கிக்கு இல்லை என்பதால் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு தில்லாலங்கடி வேலை செய்து அந்த பிரச்சனையை சமாளிப்பதில் 'கிக்கு' அனுபவிப்பவர் ஹீரோ கிருஷ்ணா(ஜெயம் ரவி).
இந்தத் தில்லாலங்கடி வேலைகள் அவர் செய்யும் இரண்டு முக்கியமான விஷயங்களிளும் தொடர்கிறது. ஒன்று மற்றவர்களுக்காக சமுதாயத்தில் அவர் செய்யும் பணி. மற்றொன்று நிஷாவுடன் (தமன்னா) அவர் செய்யும் காதல் பணி.
மலேசியாவில், நிஷாவும் போலீஸ் அதிகாரி கிருஷ்ண குமாரும் (ஷாம்) சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது. இருவரும் தங்களுக்கு நடந்த நிகழ்வுகளை மனம்விட்டு பகிர்ந்து கொள்கிறார்கள்.
தான் ஒருவனைக் காதலித்ததாகவும் அவன் பெரிய தில்லாலங்கடி என்றும் அவன் பல பொய்களை சொன்னதால் அந்த காதலை கைவிட்டதாகவும் சொல்கிறார் நிஷா.
இந்தக் கதை தெரிந்ததும் சைக்கிள் கேப்பில் தன்னுடைய காதலை நிஷாவிடம் போட்டு உடைக்கிறார் கிருஷ்ண குமார் . அதுமட்டும் இல்லாது, முக்கிய அரசியல் புள்ளிகள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை கொள்ளையடித்து தில்லாலங்கடி வேலை செய்யும் திருடனை கண்டுபிடிக்க மலேசியா வந்த அவசியத்தையும் சொல்கிறார்.
பிறகு தான் இரண்டு தில்லாலங்கடியும் ஒருவனே என தெரிகிறது.
விசாரிப்பில் ஹீரோ கொள்ளையடித்த பணத்தை எல்லாம் ஏழை குழந்தைகளின் மருத்துவ செலவிற்குத் தான் பயன்படுத்தியிருக்கிறார் என தெரியவர ஹீரோ ஜெயம் ரவி நல்லவராகிறார். தன்னொடு திருமணம் நிச்சயமான ஷாமை கழற்றி விட்டு ஜெயம் ரவியை கைப்பிடிக்கிறார் ஹீரோயின் தமன்னா.
ரசிகர்களின் விசில் சத்தங்களை அதிகம் அள்ளிக் கொள்பவர் வடிவேலு. ஜெயம் ரவியின் தில்லாலங்கடி வேலைகளில் மாட்டிக்கொண்டு ரகளை செய்கிறார். ஜாக்கி என்கிற ஜாக்ஸனாக வரும் வடிவேலு காட்சிக்கு காட்சி சிக்ஸர் அடிக்கிறார். அதுவும் தமன்னாவோடு 'என் நதியே என் கண்முன்னே வற்றிப்போனாய்...' என டூயட் பாடுவது அபாரம்.

படத்தில் அடுத்து ஸ்கோர் பண்ணியிருப்பது 'இளமை இசை' யுவன் ஷங்கர் ராஜா. படத்தை மட்டும் இல்லாது பாடல்களையும் தெலுங்கு படத்திலிருந்து போட்டோ காப்பி எடுப்பார் ரீமேக் ராஜா.
ஆனால், இந்தப் படத்தில் தான் பாடல் காட்சிகளில் கொஞ்சம் மற்றங்கள் செய்துள்ளார். அதற்கு காரணம் யுவன் ஷங்கர் ராஜா தான். சிம்பு பாடியிருக்கும் 'பட்டு பட்டு பட்டம் பூச்சி' பாடல் இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட்.
பொதுவாகவே ரீமேக் படங்களை எடுக்கும் ராஜா, ரிஸ்க் இல்லாமல் சின்ன கதாப்பாத்திரத்தில் கூட பெரிய நடிகர்களை நடிக்க வைப்பார். அது போல இந்தப் படத்திலும் பிரபு, சுஹாசினி, ராதாராவி, சந்தானம், கஞ்சா கருப்பு, மன்சூர் அலிகான், மனோபாலா என நடிகர் பட்டாளமே உள்ளது.
ஜெயம் ரவியை விட உயரம் குறைவு என்பதாலோ என்னவோ தமன்னாவை பல காட்சிகளில் தேட வேண்டியிருக்கிறது.
ஜெயம் ரவியின் துறு துறு நடிப்பு கொஞ்சம் புதுசு.
குடும்பத்தோடு கைதட்டி பார்க்க ஒரு வாய்ப்பாக தில்லாலங்கடி இருக்கும்.
தில்லாலங்கடி - செம 'கிக்கு'

25 ஜூலை 2010

கழுதையை பறக்கவிட்ட ரஷ்யர்கள்.


ரஷ்யாவின் கடற்கரை ஒன்றில் மோட்டார் மூலம் இயக்கப்படும் பாராசூட்டில் கழுதை விண்ணில் பறக்க விடப்பட்டது. இது விடுமுறையைக் கழிக்க சென்றவர்களிடையே பரபரப்பையும் பீதியையும் உண்டு பண்ணியது.

பாராசூட்டில் கழுதை கட்டித் தொங்க விடப்பட்ட நிலையில் ஒரு வேகமாக செல்லும் படகில் இணைக்கப்பட்டு பாராசூட் பறக்க விடப்பட்டதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். சுமார் 30 நிமிடங்களுக்கு கழுதை கனைத்தும் அது பறக்க விடப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளது.

இந்த முரட்டு தனமான கொடூர செயலைக் கண்டு கடற்கரையில் இருந்த குழந்தைகள் பலர் அழுததாகவும் , கடுமையான சோதனைக்குப் பின்னர் கழுதை கீழே இறக்கப்பட்ட போது பாதி உயிருடன் இருந்ததாகவும் ரஷ்ய செய்தி நிறுவனங்கள் சில தெரிவித்துள்ளன.

விலங்கினங்களை சித்திரவதை செய்வது ரஷ்யாவில் அதிகம் நடக்கும் ஒன்று. சிறிதும் யோசிக்காமல் விலங்குகள் கொடுமைப் படுத்தப்படுவதாக பிரித்தானிய சேவை அமைப்பை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த பொழுது போக்கு நிறுவனம் ஒன்றே விளம்பரத்துக்காக இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த தீவிரமான விசாரணைகளையும் போலீசார் முடுக்கி விட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

21 ஜூலை 2010

சம்பளத்தில் முரண்டு பிடித்ததால் படவாய்ப்பை இழந்த ஓவியா.


'களவாணி' படத்தில் நடித்த ஓவியா,​​ அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பு 'மாயாண்டி குடும்பத்தார்',​ 'கோரிப்பாளையம்' படங்களை இயக்கிய ராசு மதுரவனின் 'முத்துக்கு முத்தாக' படத்தில் நடிக்க ஒன்றரை லட்சம் ரூபாயை சம்பளமாகப் பேசி ஒரு தொகையை அட்வான்ஸôக வாங்கியிருந்தார்.​
'களவாணி' படம் ஹிட் ஆனவுடன்,​​ 15 லட்ச ரூபாய் சம்பளம் தந்தால்தான் நடிப்பேன் என அடம் பிடித்திருக்கிறார்.​ அதனால் அவரிடம் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி வாங்கிக்கொண்டு அவரை படத்திலிருந்து நீக்கிவிட்டார்.​
'களவாணி' படம் கதையை வைத்துதான் வெற்றி பெற்றது.​ ஓவியாவை வைத்து அல்ல என்று கூறும் இயக்குநர் தரப்பு,​​ அவர் கேட்ட தொகையில் மூன்று நாயகிகளை ஒப்பந்தம் செய்து 'முத்துக்கு முத்தாக' படத்தைத் தொடங்கிவிட்டது.

20 ஜூலை 2010

ஓய்வுக்காக இமயமலை செல்கிறார் ரஜனி.


எந்திரன் ரிலீசுக்குப் பிறகு 6 மாத கால ஓய்வை எடுக்க ரஜினி விரும்புகிறார். ரஜினியின் எந்திரன் படம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) இறுதியில் ரிலீசாகிறது. ஷங்கர் இயக்குவதாலும், ஐஸ்வர்யாராய் நாயகியாக நடித்துள்ளதாலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு வருடங்களாக இதில் நடித்ததால் ரஜினி நீண்ட ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். வழக்கமாக தனது படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் சில நாட்கள் இமயமலை சென்று ஓய்வெடுப்பது வழக்கம். இந்த முறை எந்திரன் வெளியானதும் 6 மாதம் இமயமலையில் ஓய்வெடுக்கச் செல்கிறார். அவரது பயணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இமயமலை பயணத்தின் போது ரிஷிகளை சந்திக்கிறார். ஆசிரமங்களில் தங்கி தியானத்திலும் ஈடுபடுகிறார்.
ரஜினியின் அடுத்த படம் பற்றி பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன. பாட்ஷா பாகம்-2 படத்தை தயாரிக்க சத்யா மூவிஸ் நிறுவனம் விரும்புகிறது. இதில் ரஜினியை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவோர் பட்டியலில் ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிக்குமார், ஹரி ஆகிய மூவரின் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன. முருகதாஸ் 7-ம் அறிவு படத்தையும், ரவிக்குமார் மன்மதன் அம்பு படத்தையும் இயக்கும் பணியில் உள்ளனர். இப்படங்கள் முடிந்ததும் மூவரில் யார் என்பது முடிவாகும்.

18 ஜூலை 2010

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நயன்தாரா.


ஆர்யாவுடன் நயன்தாரா நடிக்கும் `பாஸ் என்ற பாஸ்கரன்' படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தவேளையில் நடிகை நயன்தாரா திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சாலிகிராமத்தில் உள்ள பாலுமகேந்திரா அரங்கில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்று ஆர்யா, நயன்தாரா இருவரும் ஜோடியாக நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. மதியம் 2 மணி அளவில் சூட்டிங்கில் நயன்தாரா நடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்த அவருக்கு மயக்கம் தெளிவிக்கும் முயற்சியில் படப்பிடிப்பு குழுவினர் ஈடுபட்டார்கள். உடனடியாக டாக்டரும் வரவழைக்கப்பட்டார். நயன்தாராவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர், அவர் காலையில் இருந்தே சாப்பிடாமல் இருந்தது தெரியவந்தது. மிகவும் சோர்வாகவும், பலவீனமாகவும் இருந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரை நேரத்துக்கு சாப்பிடும்படியும், சில நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளும்படியும், டாக்டர்கள் அறிவுரை கூறினார்கள். சூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா மயங்கி விழுந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. நயந்தாரா பிரபுதேவாவை திருமணம் செய்ததாக இணையத்தில் செய்திகள் வந்ததையடுத்து இப்போது படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நயந்தாரா கர்ப்பமாக இருக்கிறாரா என கோடம்பாக்க வட்டாரத்தில் கிசுகிசு கிளம்புகின்றதாம்.

02 ஜூலை 2010

நமீதா தற்கொலையென வதந்தி,உயிருடன் உள்ளதாக நமீதா அறிவிப்பு!


நடிகை நமீதா இன்று ஹைதராபாத் ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. இது வெறும் வதந்தி என்று நமீதாவே மறுத்துள்ளார்.
மும்பை ஆம்பிவேலியில் உள்ள தனது வீட்டில் இருந்து செய்தியாளர்களை தொடர்பு கொண்ட அவர், ‘’நான் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அதற்கு சாட்சிதான் நான் இப்போது உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்’’ என்று அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும், ‘’நான் உயிருடன் இருக்கிறேன். நலமாக இருக்கிறேன். தற்கொலை செய்துகொண்டதாக ஏன் தான் இப்படி வதந்தி பரப்புகிறார்களோ தெரியவில்லை’’என்று கூறியுள்ளார்.