பக்கங்கள்

30 ஜனவரி 2013

இஸ்லாமிய சகோதரர்கள் பகடைக்காய் ஆகிவிட்டனர்!

'அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்கள் பகடைக்காய் ஆக்கி விட்டனர். இந்த அரசியல் விளையாட்டை ஆடுவது யார் என்பது எனக்குத் தெரியவில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான சர்ச்சை குறித்து இன்று தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் கமல்ஹாசன் இன்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியுள்ளதாவது, 'இந்த ஒரு திரைப்படம் எப்படி ஒட்டுமொத்த தேசத்தின் ஒற்றுமையையும் பாதிக்கும் என்று எனக்குப் புரியவில்லை. இப்போது நடந்து வருவது அரசியல் விளையாட்டு. இந்த அரசியல் விளையாட்டை நடத்துவது யார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த அரசியல் விளையாட்டில் எனது இஸ்லாமிய சகோதரர்களை பகடைக்காய் ஆக்கிவிட்டனர். யாருக்கும் நான் கடன் வைக்கவும் இல்லை, வரி ஏய்ப்பும் செய்யவில்லை, வரி பாக்கியும் இல்லை. கடன்காரர்களை நான் தவிக்க விட மாட்டேன். இந்த எனது வீட்டை அடமானம் வைத்துள்ளேன். வட்டிக்கடைக்காரர் 2 மாதமாக அமைதியாக உள்ளார். சென்னையில் உள்ள எல்லா சொத்துக்களையும் அடமானம் வைத்துள்ளேன். திரைப்படம் வெளியாகாவிட்டால் எல்லா சொத்துக்கும் என்னை விட்டு போய்விடும். நான் இடதுசாரியும் அல்ல, வலதுசாரியும் அல்ல. நடுநிலையானவன். எனது எல்லா சொத்துக்களையும் வைத்து படம் எடுத்தேன். படம் வெளியாகாவிட்டால் வீடு உட்பட எல்லா சொத்துக்களையும் இழக்கும் நிலை வரும். எனது விஸ்வரூபத்துக்கு எதற்கு தடை என்றே தெரியவில்லை' என்றார்.

12 ஜனவரி 2013

விஜய் புராணம் பாடும் காஜல்!

காஜல்(நண்பன்.கொம்)
இந்தியில் பிரபுதேவா இயக்கிய ரவுடி ரத்தோர் படத்திலேயே ஒரு பாடலில் பம்பரமாய் சுழன்று நடனமாடி அப்படத்தில் நாயகனாக நடித்த அக்ஷ்ய்குமாரை தலைசுற்ற வைத்தவர் விஜய். அதைப்பார்த்து இவர் என்ன டீன்ஏஜ் பாய் மாதிரி இத்தனை வேகமாக ஆடுகிறார் என்று தனது ஆச்சர்யத்தை ஸ்பாட்டிலேயே வெளிப்படுத்தியிருக்கிறார் அவர். அதனால் கோலிவுட் ஹீரோவான விஜய்யின் பெயர் பாலிவுட்டில் நன்றாக பரிட்சயமாகி விட்டது. இந்நிலையில், துப்பாக்கியில் விஜய்யுடன் ஜோடி போட்டு விட்டு மும்பை சென்ற காஜல் அகர்வாலும் அங்குள்ள சினிமா நண்பர்களிடம் சதா விஜய் புராணமே பாடிக்கொண்டிருக்கிறாராம். அதாவது, கோலிவுட்டில் முன்னணி ஹீரோ அவர். ஆனால் எந்தவித பந்தாவும் பண்ண மாட்டார். ஸ்பாட்டுக்கு வந்தால் அவர் இருக்கிற இடமே தெரியாது. அந்த அளவுக்கு தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். ஆனால் கேமரா முன்பு வந்து விட்டால் காட்சிக்கேற்ப பரபரப்பாகி விடுவார். அவருடன் நடிக்கும்போது நமக்கே எனர்ஜி வரும். அதோடு, துப்பர்க்கி படத்தில் நான அவருடன் நடித்த பிறகு சிம்ரனுக்குப்பிறகு அவருக்கு பொருத்தமான ஜோடியாக என்னைதான் சொல்கிறார்கள். இது எனக்கு ரொம்ப சந்தோசமாக உள்ளது. அதனால் தொடர்ந்து விஜ்யயுடன் அதிகப்படியான படங்களில் நடிப்பதற்கான முயற்சி எடுக்கப்போகிறேன் என்று மூச்சு விடாமல் சொல்லி புல்லரிக்க வைக்கிறாராம் காஜல்.

10 ஜனவரி 2013

தமிழர்களை கடுப்பேற்றும் மணிரத்தினம்!

Manirathnam Introduces Kadal Hero Heroines First Telugu கடல் படத்தின் டீஸர் என்ற பெயரில் சமீப காலமாக மணிரத்னம் அண்ட் கோ செய்து வந்த அழிச்சாட்டியத்தைப் பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் காட்டமாகிவிட்டிருக்கும் நேரத்தில், அவர் செய்துள்ள இன்னொரு வேலை, தமிழ் சினிமாவை அவரைப் போன்றவர்கள் எந்த அளவு கிள்ளுக் கீரையாக மதிக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு. மணிரத்னம் எடுத்துவரும் கடல் படத்தில் ஹீரோவாக கார்த்திக் மகனும், ஹீரோயினாக ராதாவின் இளையமகளும் அறிமுகமாகிறார்கள். தான் அறிமுகப்படுத்தும் இந்த இரு புதுமுகங்களின் படங்களைக் கூட யாருக்கும் காட்டாமல் ரகசியம் காத்த மணிரத்னம், ஒரு நாள் ஹீரோவின் தலைமுடி, அடுத்த நாள் ஹீரோவின் முதுகு, இன்னொரு நாள் ஹீரோவின் கால் என்று பிட் பிட்டாக டீஸர் காட்டி வெறுப்பேற்றி வந்தார். தண்ணீரில் ஒரு படகு சொய்ங் என்று நுழையும். அவ்வளவுதான்.. அதற்குப் பெயர் 'வீடியோ டீஸராம்'. கிட்டத்தட்ட மெரினாவைக் காட்டி இதான் கடல் என்று சொல்வது போலிருந்தது. ஹீரோயின் முகத்தையும் இதே லட்சணத்தில் 'பிட்' காட்டிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று ஹைதராபாதில் வைத்து தெலுங்கு ரசிகர்களுக்கு ஹீரோவையும் ஹீரோயினையும் அறிமுகம் செய்து வைத்து, தெலுங்கில் இவர்களை முதல் முறையாக அறிமுகம் செய்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் என்று அறிவித்துள்ளார். இதையே ஹீரோயினின் அம்மா ராதாவும் கூறியுள்ளார். அப்படியெனில் தமிழில் முதலில் அவர்கள் முகங்களைக் காட்டுவது அத்தனை கேவலமான விஷயமா? பணம் பார்ப்பது இங்கே... படம் காட்டுவது இங்கே... ஆனால் பெருமையும் மகிழ்ச்சியும் ஹைதராபாதில் வைத்து அறிமுகம் செய்தால்தான் வருமா? என கடுப்பாகக் கேட்கிறார்கள் தமிழ் சினிமா பத்திரிகையாளர்கள். இதே ராதா, தன் மூத்த மகள் கார்த்திகாவை இதே மாதிரிதான் தெலுங்கில் முதலில் அறிமுகம் செய்தார். அங்கே சூப்பர் டூப்பர் ப்ளாப் நாயகியாகி வெளியேறினார். அவருக்கு கடைசியில் கைகொடுத்தது தமிழ் சினிமாதான் என்பது மறந்துவிட்டது போலிருக்கிறது!