பக்கங்கள்

25 மார்ச் 2012

அல்வா கொடுக்கிறார் திஷா!

Disha Pandeyவட இந்திய நடிகை திஷா பாண்டே படப்பிடிப்புக்கு வராமல் டேக்கா கொடுத்து வருவதால் ரூ. 20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தில், மயங்கினேன் தயங்கினேன் படத் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி வேந்தன் புகார் கொடுத்துள்ளார்.
தமிழ்ப் படம் மூலம் நடிக்க வந்தவர் திஷா பாண்டே. தற்போது மயங்கினேன் தயங்கினேன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தில் பெரும்பகுதியை முடித்து விட்டனராம். ஒரே ஒரு பாடல் மட்டும் பாக்கி உள்ளதாம். இந்த நிலையில் திஷா பாண்டே டேக்கா கொடுத்து வருகிறாராம். அதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்துக் கூட்டியுள்ளார் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி வேந்தன்.
தனது புகாரில், மயங்கினேன் தயங்கினேன் படத்தில் ஒரு பாடல் காட்சி தவிர மற்ற அனைத்து கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்தது. படத்தில் ஒரு முக்கியமான இடத்தில், கனவினில் நீயும் வந்து தோன்றிடாதே என்றே சொல்வேனே என்று தொடங்கும் பாடல் காட்சி இடம்பெற இருந்தது. இந்த பாடலை, யுகபாரதி எழுதினார்.
இந்த பாடல் காட்சியை படமாக்குவதற்காக, மிக பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டது. படப்பிடிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், திஷா பாண்டே மட்டும் படப்பிடிப்புக்கு வரவில்லை.
அவருக்கு போன் செய்து கேட்டபோது, மலேசியாவில் இருப்பதாகவும், சிங்கப்பூரில் இருப்பதாகவும் நாட்களை கடத்தி வந்தார். கடைசியாக கேட்டபோது, நான் பழைய மானேஜரை மாற்றி விட்டேன். புது மானேஜர் சொன்னால்தான் மும்பையில் இருந்து சென்னை வருவேன் என்று கூறிவிட்டார்.
அந்த புது மானேஜரை தொடர்புகொண்டபோது, அவர் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. கடைசி வரை திஷா பாண்டே வராததால், திட்டமிட்டபடி பாடல் காட்சியை படமாக்க முடியவில்லை. இதனால், எங்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார் ராஜேஸ்வரி.
விரைவில் பஞ்சாயத்தைக் கூட்டுவார்கள் என்று தெரிகிறது. ஏற்கனவே தயாரிப்பாளர்களுக்கும், பெப்சிகாரர்களுக்கும் இடையே பெரும் பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திஷா பாண்டேவால் புதுப் பிரச்சினை கிளம்பியுள்ளது.

24 மார்ச் 2012

தடையை விலக்கினார் ஸ்ரேயா!

Shriya Saranஸ்ரேயா தான் நடித்த மலையாளப் படமான போக்கிரி ராஜா படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுவதற்கு தடை செய்யக் கோரி நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.
மம்முட்டி, ப்ருத்விராஜ், ஸ்ரேயா நடித்த இப்படத்தை தமிழில் டப் செய்து ராஜா போக்கிரி ராஜா என்ற பெயரில் வெளியிட அதன் தயாரிப்பாளர் மலேசியா பாண்டியன் திட்டமிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஸ்ரேயா, நடிகர் சங்கத்திலும், ஸ்ரேயாவின் நடவடிக்கையைக் கண்டித்து மலேசியா பாண்டியன் தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்திருந்தனர்.
இந்த நிலையிலும், இருவரும் பேசி சமாதானமாகியுள்ளனர். இந்த படத்தை தடை செய்வதால் தனக்கு ஏற்படும் நஷ்டத்தை பாண்டியன் ஸ்ரேயாவிற்கு எடுத்துக் கூறியதை அடுத்து நடிகர் சங்கத்தில் ஸ்ரேயா அளித்திருந்த புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து ஸ்ரேயா-பிருத்விராஜ் நடித்துள்ள இப்படம் விரைவில் தமிழில் வெளியாக உள்ளது.

கோபப்படாத அசின்!

டாப்ஸி, காஜல் அகர்வால் போன்றவர்கள் இந்திக்கு வந்ததால் எனக்கு எந்த கோபமும் இல்லை என்றார் அசின்.
இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், "தமிழிலிருந்து என்னைப் போலவே நிறைய நடிகைகள் இந்திக்கு வருவதாகவும், இதனால் நான் கோபமடைந்திருப்பதாகவும் கூறப்படுவது உண்மையில்லை.
யாரும் யாருக்கும் போட்டியாளர்கள் இல்லை. திறமையான நடிப்பைக் காட்டினால் யாரும் எங்கும் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடியும்," என்று கூறியுள்ளார்.
'டர்ட்டி பிக்சர்' படத்தில் வித்யாபாலன் நடித்தது போல் நீங்களும் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, "டர்ட்டி பிக்சரில் வித்யா பாலன் நடித்ததைப் போல் என்னால் நடிக்க முடியாது. நான் இன்னும் அது போன்ற கேரக்டர்களில் நடிக்கும் அளவிற்கு தயாராகவில்லை," என்றார்.
தமிழில் யாரும் அணுகவில்லையா என்ற கேள்விக்கு, "அதற்கென்ன, நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நான் இன்னும் பாலிவுட்டில் என்னை நிரூபிக்க வேண்டியுள்ளது. அங்கு செட்டிலான பிறகு தமிழில் நல்ல கதை கிடைத்தால் நடிப்பேன்," என்றார்.

16 மார்ச் 2012

மீண்டும் வனிதா!



கடந்த ஆண்டு குடும்ப வாழ்க்கை சர்ச்சைகளை பொதுவில் வைத்து பெரும் பரபரப்பு கிளப்பிய வனிதா விஜயகுமார் இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
மாணிக்கம் படத்தில் ராஜ்கிரண் ஜோடியாக அறிமுகமானவர் வனிதா. பின்னர் அன்றைக்கு வளர்ந்து வரும் நடிகராக இருந்த விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகாவில் நடித்தார்.
ஆனால் பெரிதாக சோபிக்க முடியாமல் போனதால், டிவி நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டு ஒதுங்கினார்.
பின்னர் விவாகரத்து பெற்ற வனிதா, ராஜன் என்பவரை திருமணம் செய்தார். முதல் கணவருக்குப் பிறந்த குழந்தையை தருமாறு கோரி நீதிமன்றம் போனார் வனிதா. ஆனாலும் குழந்தயை தன்னிடம் கொடுக்க ஆகாஷும், தன் தந்தை விஜயகுமாரும் மறுப்பதாகக் கூறி போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் என போய் பரபரப்பு கிளப்பினார் வனிதா.
ஆனாலும் குழந்தைப் பிரச்சினை தீரவில்லை. வனிதாவின் மூத்த மகன் விஜயஸ்ரீஹரி வர மறுத்துவிட்டான். எனவே இரண்டாம் கணவரைப் பிரிந்த வனிதா, தற்போது குழந்தைக்காக மீண்டும் முதல் கணவருடனேயே சேர்ந்துள்ளார். தற்போது உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். சினிமாவில் நடிக்க கதைகள் கேட்டு வருகிறார்.
மீண்டும் நடிப்பது குறித்து வனிதா கூறுகையில், "குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டதாலும் சொந்த பிரச்சினைகளாலும் 11 வருடங்களாக சினிமா பற்றி சிந்திக்கவில்லை. இப்போது மீண்டும் நல்ல வேடங்களில் நடிக்கலாம் என முடிவெடுத்து சினிமாவுக்கு வருகிறேன். கதைகள் கேட்டு வருகிறேன். விரைவில் புதுப் படம் குறித்து அறிவிப்பேன்.
ஆறு மாதங்களாக கடும் உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்தேன். எந்த அறுவைச் சிகிச்சையும் செய்யவில்லை," என்றார்.